Tuesday, November 16, 2010

அழகிரி குடும்ப விஷயமும் வாக்காள நல்லவர்களும்..

          எப்போதுமே, தமிழ் மக்கள் என்றில்லை, இந்திய மக்களின் 'தன்மை'யானது அடிமையாய் வாழ்வதற்கும், மேலைநாட்டுமக்களின் வாழ்வு தரத்தை பார்த்து நித்தமும் பெருமூச்சு விடுவதற்கும், ஒருமுறை அமெரிக்கா சென்றாலே உலகத்தை சுத்தி வந்ததாய் எண்ணி பெருமை கொள்ள மட்டுமே தகுந்த ஒரு தன்மையோ என்ற எண்ணம் உள்ளது எனக்கு. ஒருமுறை கொடுக்கப்படவேண்டிய 500ரூபாய் கொடுக்கப்படாததால், ஓட்டுரிமையை விட ஓட்டுக்காக கொடுக்கப்படும் 500 ரூபாயையே தங்கள் உரிமையாக எண்ணி தெருவில் இறங்கி போராடிய மக்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் நடுத்தரவர்க்க மக்களும் உண்டு. வறுமைகோட்டுக்குக் கீழே இருக்கும் மக்கள்தான் 500 ரூபாயை பெரிதாய் மதிக்கிறார்கள், விசுவாசமாய் ஓட்டளிக்கிறார்கள். அவர்களின் நிலைமை அது. அந்த அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஓபாமா ஒண்ணுக்கு போகும் கதையை CNNல் பார்க்கும் தகுதியோ, அறிவோ, மேதைமையோ கிடையாது. உலக அரசியல் பேசவோ, ஸ்பெக்ட்ரம் ஊழலை விவாதிக்கும் அளவிற்கோ உலக அறிவு கிடையாது. அவர்கள் அறிவு முழுதும் 500ரூபாயில் தேர்தலுக்கு முந்தைய நாள் தாங்கள் வாங்க முடிந்த பொருட்களின் முகம் தான் நிரம்பி நிற்கும். நாம் இந்த விளிம்புநிலை மக்களை சொல்லி குற்றமேயில்லை.

  சரி. இவர்கள் தான் இப்படியென்றால் பிற நிலை மக்களின் மனநிலைமை அதைவிட கேவலம். என்ன கருமத்துக்காக ஓட்டு போடுகிறோம் என்ற அறிவு கொஞ்சமும் கிடையாது. முதலிலேயே நேரடியாக கேட்கிறேன், எந்த ஆட்சியையாவது சரியான காரணத்திற்காக ஆட்சிபீடத்தில் ஏற்றியோ, அல்லது இறக்கியோ வைத்திருக்கிறோமா?? டி.விக்காக ஆட்சியில் ஏற்றிவிட்டு, இப்போது அழகிரி அவரது மகனுக்கு ஆடம்பர கல்யாணம் பண்ணுகிறார் என்று செய்தித்தாள்களில் வந்தவுடன் தி.மு.கவை தேர்தலில் தண்டிக்க வேண்டுமென சில அறிவாளிகள் கிளம்பியிருக்கிறார்கள். இதெல்லாம் காரணமா? இன்னும் கொஞ்சம் நாட்களில் "அந்த அமைச்சர் ஜாக்கி ஜட்டி போடுறாராமே!! விலையுயர்ந்த ஜட்டியாச்சே!!!"னு பொறாமைப் பட்டு கூட தேர்தலில் எதிர்ப்பலை கிளம்பினாலும் ஆச்சரியமில்லை. என்னடா இவன் "பொறாமை" என்கிறானே என்று நினைக்காதீர்கள். சராசரி மனிதனுக்கு தன் எதிர் வீட்டில் புது கார் வாங்கினால் வயிறு எரிகிறது. பின்னொரு நாளில் எதிர்வீட்டுக்கு வரும் முக்கியமான கூரியரை வாங்க மறுத்து, தன் பொறாமைக் குணத்தை வெளிப்படுத்துகிறான். இதற்கும் தேர்தல் எதிர்ப்பலைகளுக்கும் என்ன வித்தியாசம்?

 ஊரெங்கும் மின்சாரம் இல்லை. அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 2 மணி நேரமென்றால் அறிவிக்கப்படாமல் 3 மணி நேர வெட்டு உள்ளது. இதற்கெல்லாம் எதிர்ப்பு அலையை கிளப்பாதவர்கள் ஆடம்பர திருமணம் செய்வதற்கு எதிர்ப்பலை கிளப்பினால் இந்த கேவலம் பிடித்த குணத்துக்கு பொறாமை என்பதைத் தவிர வேறென்ன பெயர் வைப்பது? சாதாரணமாக நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த ஒருவரே தன் வீட்டு திருமணத்தை தன் பொருளாதார தகுதிக்கு மீறி செய்ய நினைக்கும் போது, ஒரு மத்திய அமைச்சர் தன் மகனுக்கு ஆடம்பரமாய் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

         ரஜினி தன் மகள் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்காததை ஏதோ உலக குற்றம் போல் சித்தரித்த ஊடக விஷமிகள், அமைச்சர் அழகிரி வீட்டு திருமணத்திற்கு அவர் ஊரையே அழைத்துள்ளதில் என்ன குற்றம் காண்கிறது? இத்தனை லட்சம் பேர் பங்குபெறும் ஒரு திருமணவிழாவில், பல மண்டமங்களை வாடகைக்கு பிடித்து விருந்திடுவதில் என்ன வயிற்றெரிச்சல் இவர்களுக்கு? இத்தனை ல்ட்சம் பேரையும் என்ன ஒரு 10க்கு 10 அரங்கிலா அமர வைக்க முடியும். தமுக்கம் மைதானத்தில் நடந்தால் அதற்கு ஒரு பொறுமல்!!! மேலும் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல் ஜெயலலிதா தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு (பின் கஞ்சா வழக்கு போட்டு உள்ளே தள்ளியது வேறு விஷயம்) செய்த திருமண ஏற்பாடுகளில் ஒரு சதவிகிதம் கூட இந்த திருமணத்திற்கு செய்யப்படவில்லையென மதுரையில் இருப்போர்க்கு தெரியும்.

      என்னை வெகுநாட்களாய் உறுத்தும் ஒரு விஷயத்தை இந்தப் பதிவில் சொல்ல வாய்ப்பு வந்துள்ளது. அரசியல்வாதிகளின் ஊழலை விமர்சிக்கும் குப்பன் சுப்பன்களிடமெல்லாம் கேட்கிறேன், அரசு அலுவலர்களை தவிர்த்து இங்கு எத்தனைப் பேர் ஒழுங்கான வரி கட்டுகிறீர்கள்? நிலம் பதியும் போது வாங்கிய விலையை சரியாய் குறிப்பிட்ட ஒருவனைக் காட்டுங்கள்! நீங்கள் உங்கள் தகுதிக்கான ஊழல்களையும், முறைகேடுகளையும் செய்யும் போது அரசியல்வாதிகள் தங்கள் தகுதிக்கு என்ன முடியுமோ அதை செய்யத்தானே செய்வார்கள். அவர்கள் குடும்ப் திருமணங்கள் ஊழல் காசு என நீங்கள் விமர்சித்தால், உங்கள் வீட்டுத் திருமணங்கள் என்ன காசு??!!!! (உணவிர்கே கஷ்டப்பட்டு கடன் வாங்கி திருமணம்செய்யும் அன்றாடங்காய்ச்சிகளை நான் குறிப்பிடவில்லை. ஊரையும், அரசியல்வாதிகளையும் குறை சொல்வதே தங்கள் தகுதிக்கான அளவுகோல் என நினைக்கும் மேதவிகளைச் சொல்கிறேன்)

இதை எந்த வகையில் ஒரு கட்சியின் சார்புநிலை எடுத்தும் நான் எழுதவில்லை. ஒரு வீட்டின் திருமண விழாவை வயிற்றெரிச்சலுடன் facebookல் போடுவதும், அதைப்பற்றி கிண்டல்கள் செய்வதும் மிகவும் மூன்றாம் தரமான காரியமாக தெரிகிறது. அதனாலேயே எழுதுகிறேன். மேலும் இதுவரை நடந்த தேர்தல்களில் வந்த எதிர்ப்பலைகளை எல்லாம் கணக்கிட்டுப் பாருங்கள். எல்லாமே இந்த வகையறா தான். என்றைக்கு சரியான காரணங்களுக்காக மக்கள் ஒரு ஆட்சியை எதிர்க்கிறார்களோ அல்லது ஆதரிக்கிறார்களோ அன்றுதான் சனநாயகம் தளைக்கும். இல்லை கடைசி வரை பொறாமைப்ப்ட்டே செத்தொழிய வேண்டியதுதான்.

8 comments:

முத்துசிவா said...

Me the first... :-)

super machi...

கக்கு - மாணிக்கம் said...

நல்ல ஒரு சிந்தனை.

jegan said...

Well said Ila... Marriage is a personal thing,, They shud not use this event for their politics.... N they shud also ensure there is no public disturbances for organizing such huge level personal events... Rest left to thoughts of individuals....

Amudhan paramesh said...

The best of your articles. Hats off.

Dr.முத்துவேல் ராஜன் said...

இந்த கோணத்துல நான் யோசிச்சதே இல்ல. அருமை நண்பா. கலக்குங்க.

Anonymous said...

ya its ok....politics should not interfere with personal things both dmk and admk should be pushed out, but dmk is the most worst politic party....
thandai periyar , aringar anna , karunanidhi , m.g.r these were the four legends for thravida kalagam but now karunanidhi his sons stalin , alagiri , his nephew maran brothers , his daughter kanimozhi her rasa....chuma typing in net and making blog will never lead to proper judgement get into field then u know ,as i m into building construction field , this dmk is asking rs 15 per cement bag for there money bank for next election....u can calculate...no of cement bag used in one day in tamilnadu.......i am very happy about ur writings but i am not ok with ur oneside writings becausei think any of ur family members can be in dmk.....am i right mr.illavarason , i think ur father is from dmk.. i know that pls here after be common to all parties or u should like gnani..the best writer....

Anonymous said...

@anonymou

எனக்கு தெரிந்த மனிதர்களில் ஒருவர் நீங்களெனத் தெரிகிறது. இதே பதிவில்தான் மின்சாரம் இன்றி தவிப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். மேலும் என்னை திமுக சார்பானவன் எனக் காட்ட பிரம்மப்பிரயத்தனம் செய்கிறீர்கள்!! தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Related Posts Plugin for WordPress, Blogger...