Tuesday, November 23, 2010

நடுநிலைனா என்ன?


             உங்களில் எத்தனை பேர் தி.மு.க? எத்தனை பேர் அதி.மு.க? புரியிற மாதிரி கேக்குறேன். எத்தனை பேர் ரஜினி ரசிகர்கள், எத்தனை பேரு கமல் ரசிகர்கள்? சரி இதையும் விடுங்க. இன்னும் கேவலமா கேக்குறேன். எத்தனை பேரு விஜய் ரசிகர்கள், எத்தனை பேரு அஜித் ரசிகர்கள்?!!! சரி. இதெல்லாம் விடுங்க. நடுநிலைனு ஒன்னு இருக்கா? நடுநிலை வாக்குகள்னா என்ன? அட.. இந்த நடுநிலையாளர்கள்னு ஒன்னு இருக்கே அப்படின்னா யாரு? நானும் எவ்வளவோ கட்டுரை எழுதிருக்கேன், எங்கெங்கயோ விவாதம் பண்ணிருக்கேன். விவாதங்களின் போது “நடுநிலையா பேசுங்கப்பா”னு அறிவுரை பன்ணிருக்கேன். ஆனா இத்தனை நாள் கழிச்சு கண்ணமூடி பத்து நிமிஷம் யோசிச்சா நான் என் வாழ்க்கைல நடுநிலையா பேசுனதோ, நினைச்சதோ இல்லனு நல்லாவே தெரியுது!!! அட நம்மதான் இப்படி, நடுநிலையாளய்ங்க எவனாச்சும் நடுநிலையா இருக்கானானு தேடுனா அவய்ங்க நமக்கு மேல இருக்காய்ங்க. “எது? நடுநிலையா? இந்த ஓரத்துல இருக்கா, அந்த ஓரத்துல இருக்கா?”னு கேக்குறாய்ங்க. எவனாலயுமே நடுநிலையா இருக்க முடியாதா?னு தேடிப் பார்த்தா அப்பதான் ஒரு உண்மை தெரியுது.
    
 உலகத்துல வாழ்க்கை ஆரம்பிச்ச காலத்துல இருந்தே ‘நடுநிலை’ன்ற தன்மை இருந்ததே இல்ல. சில பொருள் இருக்கும். அதுக்கான ‘வார்த்தை’ நமக்கு தெரியாது. அதாவது அதை என்ன பேரு சொல்லி கூப்பிடுறதுனு தெரியாது. இது வழக்கமா நடக்குறது. ஆனா ‘நடுநிலை’ விசயத்துல மட்டும் தான் வார்த்த இருக்கு, பொருள் இல்ல.
  
அதெப்படி ஒருவன் நடுநிலையா இருக்க முடியும்? உலகத்துல உள்ள பெற்றோர்களால கூட  இரண்டு பிள்ளை இருந்தா அவங்களால அதுங்ககிட்ட நடுநிலையா இருக்க முடியாது. வெளிப்படையா பார்த்தா அம்மாக்கு அவளின் எல்லா பிள்ளையுமே சமம்ன்ற மாதிரி நமக்கு தெரியும். ஆனா நிஜத்தில அப்படி கிடையாது. பிள்ளைகள் கிட்ட அம்மாக்கோ, அப்பாக்கோ உள்ள ஓட்டுதலுக்கான காரணம், பிள்ளையின் தோல் நிறத்தில் இருந்து பிள்ளைகளின் பாலினம் வரை போகுது. அம்மாக்கு பையன்கிட்டயும், அப்பாக்கு மகள் கிட்டயும் ஓட்டுதல் அதிகமா இருக்கும்னு sigmend freud சொல்றாரு. ஆனால் இந்த பாச வித்தியாசம் ரொம்ப கொஞ்சூண்டு தான். நம்மால சுலபமா கண்டுபிடிக்கமுடியாத அளவுல இருக்கும்.

இப்படி இயற்கையே, பெத்த புள்ளைங்ககிட்ட கூட ஒரே அளவில் நடுநிலையா நடந்துக்க முடியாதபடி நம்மள படைச்சிருக்கும் போது, கட்சி சம்பந்தமாகவோ, நடிகர்களை ரசிப்பதிலோ, எதோ ஒரு கருத்துலயோ, ஒரு தொலைக்காட்சி பேட்டிலயோ எப்படி நடுநிலையாய் இருக்க முடியும்? “நான் நடுநிலையாளன். இரண்டு விஷயங்களையும் (அல்லது நபர்களையும்) சமமாக நினைக்கிறேன்”னு யாராச்சும் சொன்னா அது பச்சைப்பொய். அப்படி இருக்கவே முடியாது.
 

 
 எவ்வளவுதான் தி.மு.க அராஜகம் பண்ணாலும், நடுநிலையாளர்கள்னு சொல்லப்படுற சில பேரு தி.மு.கவின் அராஜகங்களை ஏற்றுகொண்டாலும் அ.தி.மு.கவின் அராஜகங்களை ஒப்பிட்டுக்காட்டி தி.மு.கவை ஆதரிக்கதான் வழி தேடுவாங்க. இவங்க தி.மு.க நடுநிலையாளர்கள். இதே மாதிரி ‘சோ’ போன்ற அதிமுக நடுநிலையாளர்களும் உண்டு.
 
நீதிபதிகள் கூட இதற்கு விதிவிலக்கு இல்ல. சின்ன உதாரணம். அதெப்படி ஒரு இசுலாமிய நீதிபதி இசுலாமியர்களுக்கு சார்பாகவும், இரண்டு இந்து நீதிபதிகள் இந்துக்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு கொடுத்தாங்க அயோத்தி வழக்குல? ஒருவேளை அந்த நீதிபதி பென்ச்சுல இன்னும் இரண்டு முஸ்லீம் நீதிபதிகளை போட்டு ‘ஐந்து நீதிபதிகள் கொண்ட பென்ச்’சா ஆக்கிருந்தா முஸ்லிம்களுக்கு ஆதரவான தீர்ர்பு தானே வந்திருக்கும்னு தோணுது! இன்னும் நடுநிலை எங்க போச்சு?

 தேர்தல் நேரத்துல இந்த ‘நடுநிலை பசங்க’ பெரிய அறிவாளிங்க மாதிரியும் நம்மல்லாம் ஏதோ முட்டாள் மாதிரியும் விசமத்தனமா பேசி நடுநிலை மாதிரி காட்டி அவன் யாருக்கு ஆதரவோ அவனுக்கு ஆதரவா நம்மளையும் ஆக்க பிரம்மபிரயத்தனம் பண்ணுவாங்க! சோ போன்றவங்கள நடுநிலையாளர்கள்னு நம்புற எத்தனையோ அப்பாவிங்க இன்னும் இருக்காங்க!! அதுனால இந்த நடுநிலையாள பசங்கள உதாசீனப்படுத்திட்டு, நம்ம நடுநிலை எதை சொல்லுதோ அதை செய்வோம்னு தோணுது!! மொத்ததுல நடுநிலையாய் இல்லாதிருத்தல் என்பதுல மட்டும் தான் நம்ம எல்லாராலயும் நடுநிலையா இருக்கமுடியும்! என்ன சொல்றீங்க?!!!!!!

6 comments:

பிரியமுடன் ரமேஷ் said...

கரெக்ட்தான்..நீங்க சொல்றது..

ஹரிஸ் said...

ஆகா..பாஸ் உக்காந்து யோசிச்சிருப்பீங்க போல ..எங்களையும் யோசிக்க வச்சிருக்கீங்க..

ம.தி.சுதா said...

அட.. இதுவும் நல்லாயிருக்கே...

எஸ்.கே said...

ரொம்ப நல்ல சொல்லியிருக்கீங்க!

நாகசுப்ரமணியம் said...

நான் இந்த கருத்தை துளியும் ஒத்துக்கொள்ளமாட்டேன். உங்களுக்கு நடுநிலை என்ற வார்த்தையின் மீது இன்னும் புரிதல் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இருவர் உள்ள பொழுது நடுநிலை என்பது எவரையும் ஆதரிக்காமல் இருப்பது நடுநிலை என்று நீர் எடுத்துகொண்டால் அது தவறு. எந்த பக்கம் ஞாயம் இருக்கிறது என்று பார்த்து அவர்களை ஆதரிப்பது தான் நடுநிலை. இதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். ஒருவர் தவறு செய்யும் பொழுது அதை சுட்டிக்கட்டமல் அவரை ஆதரிப்பது என்பது நடுநிலை ஆகாது. அந்த சமயத்தில் அது சம்பந்தமான வேறு ஒருவரை ஆதரிப்பது என்று ஒரு நிலை தவறு செய்பவரின் தன்மையை பொருத்தது. நீங்கள் கூறியது போல் சோ என்பவர் ஆ.தி.மு.க. ஆதரிப்பாளர் என்று நீங்கள் இப்பொழுது கூறுவதை நான் மறுக்கிறேன். இதே சோ 1996ஆம் ஆண்டு இதே ஆ.தி.மு.க.விற்கு எதிர்ப்பு பிரசாரம் செய்தார். அதற்கு காரணம் அப்பொழுது அவர் ஆட்சியில் நடந்த பல தவறுகள். ஏன் ரஜினிகாந்த் கூட அன்று தி.மு.க.விற்கு ஆதரவாக இருந்து வெற்றிக்கு காரணமானார். ஆனால் இவர்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற போக்கில் தி.மு.க. ஆட்சியில் இன்னும் பல தவறுகள் ஊழல்கள் என்று லஞ்ச லாவண்யம் தலை விரித்து ஆடியது. அப்பொழுதும் தி.மு.க.வை ஆதரித்தால் நடுநிலை தவறியவர் ஆவார். இன்றைய பொழுது இரண்டு கட்சிகளில் சிறந்தது எது என்று அவருக்கு புரிந்துவிட்டது என்ற எண்ணத்தில் அவர் ஆ.தி.மு.க.வை ஆதரிக்கலாம். மேலும் அவர் எப்பொழுதும் தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறாரே தவிர அதை நாம் மறுக்கும் பொழுது அதை அவர் தவறாக எண்ணுவது இல்லை. இது துக்ளக் புத்தகத்தை ஒரு முறை படித்தால் புரியும். நான் படித்த ஒரு புத்தகத்தில் சோ எழுதியதற்கு மாற்று கருத்தை வேறு இருவர் அந்த இதழிலேயே எழுதினர். இது வேறு எந்த புத்தகத்திலும் நடவாத ஒன்று. அதை பிரசுரிக்க அவர் அனுமதித்தார் என்று தான் அர்த்தம். Because he is the editor of the Magazine. அதற்காக அவர் சொல்வது அனைத்தும் சரி என்று ஆகாது. அவர் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு துக்ளக் என்னும் புத்தகத்தை பயன்படுத்துகிறார். Publisherகு Problem இல்லை என்றால் அது தவறு இல்லை. Final suggestion I would like to tell you is that, Neutral doesn't mean not supporting anyone. But it is supporting the correct person and opposing wrong person. கொலை செய்தவன் மீது கொலையுண்டவன் உறவினர் குற்றம் சுமத்தும் பொது அவர்களை ஆதரிப்பது என்பது நடுநிலை என்பது என் கருத்து. இல்லை என்று நீங்கள் கூறினால் அதை என்னால் வாதமாக ஏற்க இயலாது. விதண்டாவாதமாக தான் கருதுவேன்.

இரா.இளவரசன் said...

@நாகசுப்ரமணியம்

சோ ஒரு இந்துத்துவவாதி. இதை ஒத்துக்குவீங்கனு நினைக்கிறேன். பாஜ மற்றும் அ.தி.மு.கவின் ஆதரவு நிலை அவர் எடுத்திருப்பதன் காரணம் அதுதான். மேலும் 1996ல சோ, சிதம்பரம் எல்லாம் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதித்த போது ப.சிதம்பரம், சோ போன்றோர் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்றே நினைத்தார்கள். (ரஜினி பயங்கர தேசிய மற்றும் ஆன்மீகவாதி என்பதையும் கருத்தில் கொள்க)ஆனால் நடந்தது வேறு. வெறும் 'குரல்' கொடுத்துவிட்டு அடங்கிவிட்டாட் ரஜினி. இருந்தாலும் அவர் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்ற செய்தி உயிருடன் தான் இருந்தது. அதானால் மேலும் சோ ஜெவை ஆதரிக்க காரணமே ஜெவின் இந்துமதபற்றே ஒழிய ஜெ மீதான பாசம் அல்ல. அதனால் அதைவிட சிறந்த இந்துவான ரஜினி கிடைக்கும் போது,சோ ரஜினியை எந்தவிதத்திலும் பகைக்க விரும்பவில்லை! அதனால் அமைதி காத்தார்! மற்றபடி அவர் தி.மு.கவை ஆதரித்தார் என்பதெல்லாம் உங்கள் கற்பனை! மேலும் நடுநிலை என்பதற்கு நான் எந்த அர்த்தமும் கர்ப்பிக்கவில்லை. சராசரியான ஒரு மனிதன் தன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட சமுதாயத்தில் நடுநிலையாக இருக்க முடியாது! உதாரணம் அயோத்தி தீர்ப்பு!!

Related Posts Plugin for WordPress, Blogger...