Wednesday, November 17, 2010

சவுக்கு தளத்தில் ஆடும் சாதிப் பேயும், ராசா விவகாரமும்.

எத்தனையோ வேறான இணையங்களையும், பதிவுகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால் சவுக்கு போன்றதொரு 10ஆம் தர இணையதளத்தை இதுவரைக் கண்டதில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைப் பற்றிய தனது சமீபத்திய பதிவில் அவரது குடும்பத்தாரை ஆபாசமாக வம்புக்கிலுத்துள்ளது இந்தத் தளம். "அன்றிரவு ஆண்டியப்பர் இரவுக்காட்சிக்கு சென்றிருந்தால்" என்ற தலைப்பில் ஆரம்பிக்கிறது மட்டரகமான அந்தக் கட்டுரை. ஆண்டியப்பர், ராசாவின் தந்தை. எவ்வளவு பெரிய குற்றமாகவே இருந்தாலும், அதுவும் அந்தக் குற்றம் நிரூபிக்கப்படும் முன்பு, அந்த ஒருவரைப் பற்றி தரக்குரைவாக விமர்சிப்பதே தவறு எனும்போது அவரின் குடும்பத்தாரை இவ்வளவு அசிங்கமாக ஏசியுள்ள இந்த இணையஅழுக்கின் உள்நோக்கம் எதுவாக இருக்கும் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை!!

 கூட்டம் கூட்டமாக மக்கள் ஈழத்தில் செத்த போது தான் பெரிய தமிழுணர்வு பொங்கும் கடல் எனக் காட்டிக்கொண்ட சவுக்கு,  அந்த கொலைகளுக்கு காரணமாய் இருந்தவர்களை இந்த அளவிற்கு திட்டவில்லையே, ஆபாசமாக விமர்சிக்கவில்லையே. இதே போன்றதொரு தலைப்பை ஈழப்பிரச்சினையில் சோனியா மீதோ, அயோத்தி பிரச்சினையில் அத்வானி மீதோ, ஊழல் பிரச்சினைகளில் ஜெயலலிதா மீதோ செலுத்தி கட்டுரை எழுதட்டுமே பார்ப்போம்! 

ராசா மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றமானது 'வருவாய் இழப்பு' என்பதாகும். அதை சவுக்கு போன்ற 10ஆம் தர இணையங்களும், பிற சாதிவெறி கொண்ட ஊடக வெறிநாய்களும் "ஊழல் குற்றம்" போல் திரித்து செய்தி வெளியிடுவதில் இருந்தே தெளிவாய் தெரியும் ராசா மீது எதாவது பழி வராதா அதை ஏகபோகமாக திரித்துக்கூற் வாய்ப்பு கிடைக்காதா என எங்கோ மிளகாய் வைத்ததைப் போல் காத்திருந்தவர்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் செய்தி ஐஸ் வைத்ததைப் போல் இருக்கவும் தங்கள் வேலையை துவக்கிவிட்டார்கள்.

 பிரச்சினையை சுலபமாய் சவுக்கின் பாணியிலேயே சொல்வதானால், உங்கள் தந்தை உங்களிடம் இரண்டு வீடுகளை விற்கச் சொல்கிறார். ஒன்று பழமையான வீடு (2G சேவை). மற்றொன்று புதிய வீடு(3G  சேவை). பழையவீட்டை எவன் தலையிலாவது கட்டினால் போதுமென வந்த விலையான 1லட்சம் ரூபாய்க்கு (ஒரு எடுத்துக்காட்டுக்கு) விற்றுவிட்டீர்கள். புதியவீட்டை சரியாக பேரம் பேசி 2லட்ச ரூபாய்க்கு (ஒரு எடுத்துக்காட்டுக்கு) விற்றுவிட்டீர்கள். இப்போது உங்கள் தம்பி வந்து "அய்யயோ போச்சே. பழைய வீட்டை குறைந்த விலைக்கு வித்துட்டானே! 1லட்ச ரூபாய் நஷ்டமாச்சே" என புலம்புகிறான். அதாவது உங்கள் தந்தைக்கு உங்களால் 1லட்சம் வருவாய் இழப்பு என குற்றம் சாட்டப்படுகிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருக்கும் செயல்களைப் பார்க்கும் போது, இந்த நிலையில் தான் ராசா இருக்கிறார். 

 2G என்ற சேவை இன்னும் சிலநாட்களில் 3G சேவையால் முழுவதுமாக overtake செய்யப்படப்போகும், அல்லது மக்களாலேயே காலாவதி ஆக்கப்படப்போகும் ஒரு தொழில்நுட்பம். அப்படியானதை 3G சேவை அலைவரிசைக்கு நிகரான விலையில் வாங்க முதலாளிகள் என்ன மூடர்களா???!! சரி, ஒரு பேச்சுக்கு இரண்டும் ஒரே விலைதான் என வைத்துக்கொள்வோம், இப்போது பெரிய நேர்மையின் மனித பிறப்புகள் போல் பேசும் அதிகாரியும், மன்மோகன் சிங்கும் அப்போது என்ன ஒருவர் மாற்றி ஒருவர் முதுகை சொறிந்துகொண்டிருந்தார்களா??  கிட்டத்தட்ட 1லட்சத்தி76ஆயிரம் கோடி நஷ்டம் என இப்போதுதான் சொல்லமுடிகிறதா??!! இவ்வளவு பெரிய தொகைக்கு அலைவரிசை வியாபாரம் குறைத்து நடக்கும் போது தடுக்கவேண்டியது பிரதமர் பொறுப்பில்லையா? அவர் அல்லவா முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்!!?? அப்படியே குறைத்து விற்றிருந்தால் கூட அது 'வருவாய் இழப்பு' தானே? அதை 'ஊழல்' என ஊடகங்களை கூச்சமின்றி பொய் புழுக ஊக்கம் எங்கிருந்து வருகிறது? இதையெல்லாம் நாம் கவனிக்க வேண்டாமா? தொகையின் அளப்பெரிய பரிமாணத்தைப் பார்த்தவுடனே உணர்ச்சிவசப்பட்டு ஆட்டுமந்தைகள் போல செயல்படுவதில் என்ன அறிவு இருக்க முடியும்??

ராசா மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாய் இருந்தால், பிரதமர் மீது மேலே நான் வைத்த குற்றச்சாட்டுக்கள் உண்மைதானே?!!! மேலும் 1லட்சத்து76ஆயிரம் கோடி என்பது குத்துமதிப்பான தொகை. நிர்ணையிக்கப்பட்ட விலை இல்லை. புதிய பைக் (3G) ஒன்றின் விற்பனை விலைக்கு சரிசமமாக பழைய பைக்கின்(2G) விலையை சொல்வது போன்ற ஒரு முட்டாள் தனமான நிர்ணயம் இது. ஒருவேளை இழப்பாக சொல்லப்படும் 1லட்சத்து76கோடியை விற்பனை விலையில் சேர்த்து விற்றிருந்தால் (எந்த நெட்வொர்க்கும் வாங்கியிருக்காது, ஒருவேளை வாங்கியிருந்தால்) நீங்களும் நானும் மிஸ்ட் காலிலேயே (missed call) பிழைப்பை ஓட்ட வேண்டியதுதன். ஒரு ரிங் என்றால் "வா". இரண்டு ரிங் என்றால் "இப்போ வராதே" என புதிய மொழியே உருவாகும் அளவிற்கு அழைப்புக் கட்டணங்கள் எகிடுதகிடாக எகிறியிருக்கும். பின் அதற்கும் தென்மாநிலத்தைச் சேர்ந்த, அதிலும் தமிழனான, அதிலும் தலித்தான ராசாவையே பலியாக்கியிருப்பார்கள் இந்த ஊடக விஷமிகள். (கண்டிப்பாய் நெட்வொர்க்குகளிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு குறைந்தவிலைக்கு விற்றிருக்க வாய்ப்புள்ளதை நான் மறுக்கவில்லை. ஆனால் 1லட்சத்து76கோடியை குறைத்து விற்றால் கையும்களவுமாக மாட்டுவோம் என்பது கூட அறியாத சிறுபிள்ளைகள் அல்ல இப்போது குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்)

சவுக்கின் விஷ கக்கலில் கவனித்தாலே முதல் பத்திக்கும் கடைசி பத்திக்கும் உள்ள முரண் தெள்ள தெளிவாக தெரியும். ராசா விவகாரம் காங்கிரஸ் ஆடிய அரசியல் சதுரங்கம் போல சித்தரித்து பின் கடையில் அசாத் ஜெயலலிதாவுக்கு தெரிவித்த மறுப்பையும், முறைகேடு நடக்கவில்லை என மத்திய அரசு இப்போது சமர்ப்பித்திருக்கும் அறிக்கைக்குமான காரணத்தை விளக்கவில்லையே இந்த எல்லாம் தெரிந்த அறிவுஜீவிகள்!!!

   ராசா மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம், எடுத்தேன் கவிழ்த்தேன் என மக்கள் முடிவு செய்யக்கூடிய ஒன்றில்லை. சவுக்கு போன்ற சாதி வெறியில் அலையும் ஊடகங்களின் செய்தியை அப்படியே ஆராயாமல் எடுத்துக்கொள்வது தெளிவான அறிவிற்கு திரை போடுவதைப் போல் ஆகும். எது எப்படியோ, இதுவரை தமிழ்தேசிய, தமிழ்பற்று, சாதிமறுப்பு போர்வை போர்த்திக் கொண்டிருந்த பல சாதிவேறி பிடித்த ஓநாய்களின் முகம் ராசா விவகாரத்தில் வெளியாகி இருப்பது நல்லதெனவே படுகிறது.

22 comments:

smart said...

ஐயா அந்த பழைய வீட்டை ஒரு லட்சத்திற்கு விற்று அது நேரடியாக மக்களுக்கு வந்தால் பரவாயில்லை அதை பல ஆயிரங் கோடிக்கு (4,500 கோடி மற்றும் `6,200 கோடி) அந்த தனியார் நிறுவனங்கள் விற்றதால் தான் இந்தப் பிரச்சனை. அந்த கோடிகளுக்கு விற்பனையாகும் வீட்டை ஒரு லட்சத்திற்கு விற்கவா ஒருவரை மந்திரியாக்கவேண்டும்?

smart said...

//ஈழப்பிரச்சினையில் சோனியா மீதோ, அயோத்தி பிரச்சினையில் அத்வானி மீதோ, ஊழல் பிரச்சினைகளில் ஜெயலலிதா மீதோ செலுத்தி கட்டுரை எழுதட்டுமே //
என்று உங்கள் சாதி வெறியையும் சேர்த்துக் காட்டியதற்கு மிக்க நன்றிகள்.

smart said...

//1லட்சத்து76கோடியை குறைத்து விற்றால் கையும்களவுமாக மாட்டுவோம் என்பது கூட அறியாத சிறுபிள்ளைகள் அல்ல இப்போது குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்//
அப்புறம் எதற்கு ஐயா இப்படி போஸ்ட் போட்டு நேரத்தை வீணடிக்கிறீர்கள். ராசா நல்லவர் -மேலே கேட்டுள்ள கேள்விக்கு பதில் சொல்லவும்.

smart said...

sir,
Please publish my commentooooooooooooooo

saathi very pidiththu enathu commentai delete cheyathinga

Anonymous said...

உங்களின் பழைய வீடு புதிய வீடு கதையில் ஒரு சிக்கல் இருக்கு, ஒரு பழைய வீட்டை விக்கிறதா இருந்தாலும், வந்த விலைக்கு விற்பீங்களா? இல்ல அதை விட கூட விலைக்கு யாராச்சும் கேட்டா அவங்களுக்கு விற்பீங்களா?

ஊழல் இல்லை வருமான இழப்பு என்கிறீங்க, 100 ரூவா பெறுமதியான உங்கட ஒரு பொருளை,நான் 50 ரூவாக்கு வேறொருவருக்கு விக்கிறன் எண்டு வையுங்கோவன், இதால வாங்குறவனுக்கு மகா இலாபம். இந்த லாபத்தில வாங்கிறவன் எனக்கு பங்கு தரலாமிலையா? இங்க தான் ஊழல் இருக்கு.

அதவிட 2ஜி அல்லது 3ஜி என்பது அரசு/ மக்கள் சொத்து. இதனால் வரும் வருமானம் முழுக்க மக்களுக்கானது. இந்த பணத்தை வைத்து அரசு ஏழை மக்களுக்கு நல்லது செய்யலாம். ஆக அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்துவது ஏழை மக்களின் வயித்தில அடிப்பதுதான்.

இனிமே தேவைப்படாத ஒரு தொழில்நுட்பமாக 2ஜி இருந்தால் அதை ஏன் அரசு விக்கவேண்டும். பேசாம 3ஜி யை மட்டுமே விக்கலாமே!

ஆக இங்க நிறைய "விளையாட்டு" நடந்திருக்குது.

nanpan said...

migavum nerthiyaana purithaludan koodiya katturai.congratulations

தமிழன்பன் said...

சவுக்கின் தலைப்பு எவ்வளவு அருவருப்பானதோ அவ்வளவு அருவருப்பானது ராஜாவை பாதுகாக்க சாதியை காரணம் காட்டுவது.
...ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முதலில் பெரிது படித்தியவர்கள் மாறன் சகோதரர்கள்தான் அதற்கு காரணம் சாதியா? கண்கள் பணித்தது இதயம் இனித்தது எப்பொழுது என்று கொஞ்சம் யோசித்து பார்த்தால் நல்லது.
ஸ்பெக்ட்ரம் 2G அலை ஒதுக்கீட்டை பழைய வீடு புதிய வீடு என்று மிகச்சாதாரண ஒப்பீட்டில் முடித்துவிட்டீர்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகச்சிறிய நிறுவனங்கள் அலை ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டு (Swan & Unitech ) பெரியளவில் லாபத்திற்கு தங்களது பங்குகளை விற்றதும் ராஜாவின் ரியல் எஸ்டேட் கம்பனிகளில் (Green House Promoters ) பங்குகளை பெற்றுகொண்டு பணபரிவர்த்தனை நிகழ்ந்தது குறித்து விளக்கமாக பல நாளேடுகள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்துள்ளன. தெகல்கா இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறது.

முல்லை பெரியாறு குறித்த போராட்ட அறிவிப்பை கருணாநிதி அறிவித்ததும் ராசாவின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது உடனே கருணாநிதி அறிவித்த போராட்டம் புஷ்வானமானது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் பல சூழல்களில் திமுகவை வழிக்கு கொண்டுவர காங்கிரஸ் பயன்படுத்தியதை நடப்புகளை கூர்ந்து கவனிப்பவர்களால் அவதானிக்க முடியும்.

ஆனால் "ஐயோ, ஒருலட்ச்சத்தி எழுபதாயிரம் கோடி போச்சே!" என்று புலம்புவது அர்த்தமற்றது அப்படியே அவர்கள் சொல்லும் தொகை வருவாய் கிடைத்திருந்தாலும் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

Anonymous said...

நீங்கள் சொல்வதெல்லாம் சரி. இப்போது கூட மாறன் சகோதரர்களின் பங்கு இருக்கவே செய்கிறது. ஆனால் நாம் கவனிக்கத் தவருவது, வருவாய் இழப்பாக பார்க்கப்பட வேண்டியதை இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழல் இது என மக்களிடம் பரப்பி ஏமாற்றும் வேலை எதற்...காக நடக்கிறது என. மேலும் அப்படியே 1கோடியெ76லட்சத்தை ராசா குறைத்து விற்றிறுந்தால் கூட, உடனே முதலாளிகள் என்ன 1லட்சத்து 76ஆயிரம் கோடியை ராசாவிடம் கொடுத்தா இருப்பார்கள்? அதற்கு அவர்கள் அரசிடமே கொடுத்திருப்பார்களே!! ஆனால் மெத்த படித்தவர்கள் கூட ராசா 1லட்சத்து76ஆயிரம் கோடி பணத்தை ஊழல் செய்து பதுக்கியது போல் பேசிக்கொண்டிருப்பதற்கு காரணம் ஊடகங்கள் ஆரம்பத்திலிருந்தே பத்தோடு பதினொன்றான விஷயத்தை முதல் விஷயம் போல ஊதியதுதான்.

Anonymous said...

//ஈழப்பிரச்சினையில் சோனியா மீதோ, அயோத்தி பிரச்சினையில் அத்வானி மீதோ, ஊழல் பிரச்சினைகளில் ஜெயலலிதா மீதோ செலுத்தி கட்டுரை எழுதட்டுமே //
என்று உங்கள் சாதி வெறியையும் சேர்த்துக் காட்டியதற்கு மிக்க நன்றிகள். ////

ஹாஹா.. சோனியாகாந்தி என்ன சாதி தம்பி???? சாதி வெறி இல்லாத மகராசா... சொல்லுப்பா..

Anonymous said...

இந்த லாபத்தில வாங்கிறவன் எனக்கு பங்கு தரலாமிலையா? இங்க தான் ஊழல் இருக்கு.//
இருக்கலாம். ராசா கமிஷன் வாங்கியிருக்கலாம். ஆனால் 1லட்சத்து76ஆயிரம் கோடியும் ராசாவிடம் இருப்பது போல் ஊடகங்கள் சித்தரிக்கும் நோக்கம் என்ன??????????!!!!!!!

Anonymous said...

அந்த கோடிகளுக்கு விற்பனையாகும் வீட்டை ஒரு லட்சத்திற்கு விற்கவா ஒருவரை மந்திரியாக்கவேண்டும்? ///

எல்லா முதலாளிகளி மூடிக்க சொல்லிவிட்டு போக்குவரத்து போல அரசே நடத்தலாம்னு சொல்றீங்களா ஸ்மார்ட்டு!!????

sadda_1964 said...

மிகவும் அருமையன பதிவு அசோக். ஒவ்வொருத்தனும் ஒவ்வொன்னு சொல்றானுவளே என்னனு யோசிச்சேன். மிகத் தெளிவா விளக்கிருக்கீங்கோ. உங்க கட்டுரை எல்லாம் மிக பயனுள்ள, எழுத்துநடை அழகானவை. வீரியமிக்கவை. உங்கள போன்றவன்ங்கோ பத்திரிக்கைகளில் இருந்தால் ஊடக துறை உருப்படும். ஜாக்கி பத்துன பிராபளம்ல கழுகு படிக்கிற தம்பிங்கோ உங்கள அவ்ளோ திட்டியும் நீங்க செஞ்ச தப்ப ஏத்துகிட்டு கழுகுட்ட மன்னிப்பு கேட்டது எனக்கு ரொம்ப புடிச்சது. வாழ்த்துக்கள் தம்பி.
-பாசமுடன் அண்ணன் சடகோபன்.

Anonymous said...

தேர்ந்த விளக்கம். வாழ்க வளர்க. வாழ்த்துகள்.

Bala said...

ஸ்பெக்ட்ரம் ஊழலும் உண்மை. சவுக்கின் சாதிவெறியும் உண்மை..
இந்த கட்டுரை பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது.
அந்த 22 நிறுவனங்களின் பெயர்களைக் கூட எந்த பத்திரிக்கையும் வெளியிடக் காணோம். ராசா குற்றவாளி என்றால் பிரதமரும், அந்த 22 நிறுவனங்களும் கூட குற்றவாளிகள் தான். 1.75 லட்சம் கோடியையும் ராசாவே ஊழல் செய்தார் என்பது மாறன்கள், ஜெயலலிதா மற்றும் பாஜகவின் விஷமப் பிரச்சாரத்திற்கான வெற்றியே. அந்த 22 நிறுவங்களில் ஒன்றான ரிலையன்சிடமிருந்து இந்த காங்கிரஸ், பாஜக‌ முதல் ஜெயலலிதாவரை அத்தனை பேருமே இதே விவகாரத்தில் காசு வாங்கியிருக்கலாம். அதனால் தான் ராசாவைத் தவிர வேறு எந்த பெயரும் வெளியே வரவில்லை.

Anonymous said...

mela sollirukeratha partha rajavuku vaila verala vacha kooda kadika theriyathu pola!!!

Anonymous said...

It's old house now, but when this happened at 2008, it was new house..:)

Ganessin said...

Dear Ila sir,

You stooped too low to protect A. Raja due to his cast. If Raja would have been from higher caste then I think you will be the first one undermine him. I salute Savukku for exposing Raja.

Note: Today only I thought you were very good writer since I read your article that you were condemning JayaMohan for his comments on Arundhati Roy.

But within an hour, I saw your support for A.Raja in this article.
Caste is not important. Corrupted person should not be protected by caste.

Ganessin said...

//நீங்கள் சொல்வதெல்லாம் சரி. இப்போது கூட மாறன் சகோதரர்களின் பங்கு இருக்கவே செய்கிறது. ஆனால் நாம் கவனிக்கத் தவருவது, வருவாய் இழப்பாக பார்க்கப்பட வேண்டியதை இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழல் இது என மக்களிடம் பரப்பி ஏமாற்றும் வேலை எதற்...காக நடக்கிறது என. மேலும் அப்படியே 1கோடியெ76லட்சத்தை ராசா குறைத்து விற்றிறுந்தால் கூட, உடனே முதலாளிகள் என்ன 1லட்சத்து 76ஆயிரம் கோடியை ராசாவிடம் கொடுத்தா இருப்பார்கள்? அதற்கு அவர்கள் அரசிடமே கொடுத்திருப்பார்களே!! ஆனால் மெத்த படித்தவர்கள் கூட ராசா 1லட்சத்து76ஆயிரம் கோடி பணத்தை ஊழல் செய்து பதுக்கியது போல் பேசிக்கொண்டிருப்பதற்கு காரணம் ஊடகங்கள் ஆரம்பத்திலிருந்தே பத்தோடு பதினொன்றான விஷயத்தை முதல் விஷயம் போல ஊதியதுதான்.//

Ila sir,

Rs.1.76 lac crore is a loss to the govt. How much was looted by Raja & co, will come out in the investigation(or as usual they will hide). Raja had caused huge loss to the govt of about 1.76 lac crore and for that he got huge amount of money in the scam.

Never ever support a corrupt person even if he is from lower caste. That is the message all I can tell you here.

Ganessin said...

//சவுக்கு தளத்தில் ஆடும் சாதிப் பேயும், ராசா விவகாரமும்.//
எனக்கென்னமோ உங்ககிட்டதான் சாதி வெறி இருக்கிற மாதிரி தெரியுது. ஒரு ஊழல் வாதிக்கு வக்காலத்து வாங்கி உங்க சாதி வெறிய நிரூபிச்சிட்டீங்க.

இரா.இளவரசன் said...

Never ever support a corrupt person even if he is from lower caste. That is the message all I can tell you here. ///

@ganeshan
உங்கள் கோபம் புரிகிறது. மேலும் நானும் ராசாவும் ஒரே சாதியும் கிடையாது. இந்தக் கட்டுரை எப்போது எழுதப்பட்டது என்பதையும் கவனியுங்கள். அதுமட்டுமல்லாமல் இந்தக் கட்டுரை ராசாவை காப்பாற்றுவதற்காக எழுதப்பட்டதல்ல. இவ்வளவு பெரிய ஊழலை ஒரு மனிதனே செய்திருப்பதாக கட்டம் கட்டிவிட்டு, சோனியா, மன்மோகன் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை உணர்த்தத்தான். தப்பு செய்தவன் எவனாய் இருந்தாலும் தண்டிக்கப்படதான் வேண்டும். ஆனால் ஒருவன் மட்டும் பலியாக்கப் படுவதுதான் குற்றம் என்கிறேன் நான். மேலும் எவ்வளவுதான் நீங்கள் தப்பு செய்திருந்தாலும் திடீரென நான் உங்கள் குடும்பத்தை ஆபாசமாக வர்ணித்தால் தாங்குவீர்களா? நாகரீகமா அது? அந்த கோபத்தில் எழுதப்பட்ட கட்டுரையே இது. புரிவீர்களென நம்புகிறேன். உணர்ச்சிவசப்பட்டு என் எழுத்தைக் குறை சொல்லாதீர்கள். தொடர்ந்து கவனியுங்கள். நன்றி.

Arun Robo said...

Ingu comment sona yelarum yenga poitinga? ipa vandu solunga papom raja dan lose ku karanamnu?

Arun Robo said...

Ingu comment sona yelarum yenga poitinga? ipa vandu solunga papom raja dan loss ku karanamnu?

Related Posts Plugin for WordPress, Blogger...