Tuesday, November 9, 2010

கோவையில் என்கவுண்டர் செய்யப்பட்ட நீதித்துறை

என்கவுண்டர் என்றால் என்ன? திருப்பி சுடுவது என்பது மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு, ஓடவிட்டு சுடுவது என்றாகி விட்டது. சினிமாவில் கூட என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என கதாநாயகனை காண்பிக்கிறார்கள். எவ்வளவு மடத்தனமான உருவாக்கம் இந்த வார்த்தை. இன்று கோவையில் நடந்திருக்கும் என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட கொலை என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவன் ஏதோ ஓடியதாகவும், அதனால் சுட்டதாகவும் கதை சொல்கின்றன செய்திதாள்களும், தொலைக்காட்சிகளும். சுடப்பட்ட குற்றவாளி மிகவும் மோசமான செயலை செய்தவன் தான். அவன் மரணசெய்தி என்னையும் உட்பட நம் அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சி தருவதாய்தான் அமைந்துள்ளது. ஆனாலும் இந்த செய்தியை இப்படியே விட்டு விடுவதும் நல்லதல்ல. என்கவுண்டர்கள் பொதுவாக அரசியல்வாதிகளின் லாபத்திற்காக நடத்தப்படுவன. அல்லது சில ரவுடிகள் போலீசின் கைமீறி நடந்துகொள்ளும் போது அவர்களை என்கவுண்டர் எனச் சொல்லி கொன்றுவிடும் நிகழ்வுகள் பல உண்டு. அ.தி.மு.கவிற்காக தி.மு.க தொண்டர்களிஅ ஓட ஓட வெட்டிய அயோத்திகுப்பம் மணியை அ.தி.மு.க ஆட்சியிலேயே என்கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். ஆனால் இன்று நடந்துள்ள என்கவுண்டர் இந்த கொலைகளில் சேர்க்க முடியாது. ஏனெனில் இது முழுக்க முழுக்க மக்களுக்காக நடத்தப்பட்ட ஒன்று. குற்றவாளியின் கொடூர கொலை போலீசாரையே நடுங்கவைத்ததுதான் இந்த என்கவுண்டருக்கு காரணம். இன்னொன்று, சில குற்றவாளிகளை மக்களே கோபப்பட்டு அடித்துக்கொன்ற சம்பவம் கூட உண்டு. அதற்கு காரணம் நம் இந்திய சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை. மக்கள் அடித்துக் கொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் போலீசே, இத்தகைய கொடூர குற்றவாளிக்கு இந்திய நீதிமன்றத்தால் சரியான தண்டனை கொடுக்க முடியாது எனக் கருதி அவனை கொன்றுள்ளது நம்மை சிந்திக்க வைக்கிறது. இந்திய நீதித்துறையை காப்பாற்ற வேண்டிய போலீசுக்கே இந்திய நீதியின் மேல் நம்பிக்கை போய், தர்மத்தை காப்பாற்ற வேண்டி ஒரு கொலை செய்துள்ளது, இந்திய நீதித்துறையின் கையாலாகாதனத்தை வெட்டவெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த என்கவுண்டர் கொலையை நாம் ஆதரித்தாலும், இத்தகைய தண்டனைகள் போலீசால் வழங்கப்படுவது என்றைக்குமே நல்லதல்ல. நம் நீதித்துறையே இத்தகைய துரித-சரியான தண்டனைகளை வழங்குவதற்கு தேவைப்படும் மாற்றங்களை ஆவன செய்தால்தான் குற்றங்கள் குறையும்.

10 comments:

பிரியமுடன் ரமேஷ் said...

நீங்கள் சொல்லும் மற்ற அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால்..

//இந்திய நீதியின் மேல் நம்பிக்கை போய், தர்மத்தை காப்பாற்ற வேண்டி ஒரு கொலை செய்துள்ளது,

இதை வன்மையாக கண்டிக்கிறேன்..

தர்மத்தை காப்பாற்ற போலீஸ் என்கவுண்டர் செய்ததா.. என்னங்க அசோக் காமெடி பன்றீங்க.. கொலை நடந்து அடுத்த நாளே குற்றவாளிய புடிக்கறாங்க.. அடுத்த வாரமே விசாரனை.. என்கவுண்டர் எல்லாம் ஒரு அவசரகதியில நடக்குது.. இதுக்கு பின்னாடி வேற எதோ மேட்டர் இருக்கு.. உண்மை நமக்கு மறைக்கப் படுதுன்னு உங்களுக்குப் புரியலையா..

Anonymous said...

@ரமேஷ்
ஆஹா.. இந்த கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை ரமேஷ். நன்றி.

Sai Gokulakrishna said...

Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.

So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)

So Kalignar adichaar, "ore kallil irandu maangaa"- proverb.

ungoyyaala! yaro sonnaanga! CBE- enga Kottai!
Ha HA HA!

CBE- kootamellam summa bussssss!-nnu ayaiduchaa!

ippo theriyuthaa???
arasiyal sanakkiya thanam-nna ennannu????

purinjikitta sari!

Anonymous said...

@sai
ohoh... adhaana paathen... good info.. Thanks

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

any more pic of him? please share...

பிரியமுடன் ரமேஷ் said...

@சாய் கோகுல கிருஷ்ணா..

அதான் மேட்டரா.. என்னமோ இருக்குதே என்னவா இருக்கும்னு நினைச்சிட்டே இருந்தேன்..

deesuresh said...

@sai..
அடக்கொக்கமக்கா..!! ஒரு கொலையில் இம்புட்டு மேட்டரா?? நான் சேட்டு வீட்டுக் குழந்தையைக் கொன்னதால், சேட்டுமாரெல்லாம் சேர்ந்து போலிசுக் காரங்களைக் கவனிச்சி, மேட்டரை முடிச்சிட்டாய்ங்கன்னு கனக்குப் போட்டேன்..!! ஆனால் கணக்கு எல்லாம் கலைஞர் கணக்குன்னு இப்பதான் புரியுது..!!
டாங்க்ஸ் தல..!!

ஆனந்தி.. said...

ம்ம்...அரசியலில் எதுவும் சாத்தியம்...:(

Anonymous said...

according to me both ayothikupam mani and this encounter falls in same....what illavarson ayothi kuppam mani veduthalai porata verara...neenga yenama athumathri ithu illai yendru solirukringa...avan oru kepmari ivan oru molla mari....so both are same....but during dmk period now lot of things is happening...all the parents are very afraid this will make a major impact in next election....wait and watch.... oru kolandai schooluku pogamudiyala aan pillai yendral kidnap,pen endral rape....athuvillamal neenga illavrason poi nera pathingala coimbatorla poi .....karpani kalaingarkaluku irukalam....oru nadunilaiyalanuku iruka koodathu ...illai yendral neengal "nan dmk sarntha eluthalan yendru potukollungal".....

Anonymous said...

@anonymous
நீங்க சொல்லியிருப்பதையெல்லாம் நான் எங்க சொல்லியிருக்கேன்? உங்களின் மேற்கண்ட கமெண்ட் கோமாளித்தனமாக உள்ளது. தயவு செய்து படித்துவிட்டு comment போடவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...