Tuesday, November 9, 2010

பூணூல் நரம்புகள்


இந்தக் கட்டுரையின் உட்பகுதிக்குள் செல்லும் முன், இந்த பதிவுக்கு சிறிதளவே சம்பந்தம் உடைய ஒரு சிறிய சம்பவம். திருப்பத்தூரில் ஒரு புகழ்பெற்ற உணவுவிடுதி ஒன்று இருந்தது.(இருக்கிறது). சாதி ஒழிப்பு போராட்டங்கள் தி.கவினரால் வெகு சுறுசுறுப்பாக நடத்தப்பட்ட காலகட்டம் அது. கடை, வீதி, பள்ளி என எல்லா பெயர்ப்பலகைகளிலும், உரிமையாளர்களின் பெயருக்குப் பின்னால் இணைக்கப்பட்டிருந்த சாதிப் பெயர்கள் தார் கொண்டு அழிக்கப்படுவதும், உடனடியாக பெயர் மாற்றம் செய்யுமாறு முதலாளிகள் மிரட்டப்படுவதுமாக பரபரப்பு பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், திருப்பத்தூரில் இருந்த 'மதகுபட்டி ஐயர் ஹோட்டல்' என்ற விடுதியின் பெயரை மாற்றுமாறு தி.கவினர் அந்த விடுதியின் அப்போதைய முதலாளியை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டனர். முதலாளிக்கோ மிகுந்த தர்மசங்கடமான நிலைமை. அந்த உணவு விடுதியின் 'brand name' அது. 'மதகுபட்டி ஐயர்'யில் ஐயரை எடுத்துவிட்டால் பெயரும் முழுமை பெறாது, வாடிக்கையாளர்களும் கணிசமாக குறைவார்களோ என்ற அச்சம் அவருக்கு. நியாயமான கவலைதான். இருந்தாலும் இப்போது செட்டியார், நாடார் என அனைத்து சாதிகளும் பெயர்பலகையில் இருந்து அழிக்கப்பட்டுவரும் அந்த நேரத்தில் முதலாளிக்கு பெயரை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. சிறிது நேரம் கண்ணை மூடி யோசித்தார். பின் எழுந்து, தி.கவினர் கையில் கொண்டு வந்திருந்த தாரை எடுத்துக்கொண்டு கடை வாசலுக்கு சென்றார். தி.க போராளிகள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு 'ஐயர்' என்ன செய்யப்போகிறார் எனப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, பலகையில் உள்ள 'ஐயர்'ல் 'ர்'ன் புள்ளியை அழித்தார். 'மதகுபட்டி ஐயா ஓட்டல்' எனப் பெயர் மாறியது. 

விசயத்திற்கு வருகிறேன். சிலநாட்களுக்கு முன் என் கல்லூரித்தோழன், பார்ப்பன சாதியைச் சேர்ந்தவன், Facebookல் என்னிடம் "எதற்காக இன்னும் "பார்ப்பான் பார்ப்பான்" என எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறீர்கள்? இந்த காலகட்டத்தில் அதற்கான தேவை என்ன? நான் பார்ப்பான் எனத் தெரிந்ததும் என் சகநண்பர்களுள் எத்தனைப் பேர் என்னை வேற்றுகிரகவாசி போல பார்த்திருக்கிறார்கள் தெரியுமா? எதற்காக ஒரு சாதியை குறி வைத்து தாக்குகிறீர்கள்?" என்றெல்லாம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான். என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. மனம் பதில் சொல்ல உந்துவதற்க்கு முன் சில விஷயங்களை என்னுள் ஓட்டியது. முதல் விஷயம் அவன் என் தோழன், முகநூலில் கொடுக்கப்பட்டிருக்கும் அரை அங்குல இடத்தில் எதையோ நான் சொல்லி அதை அவன் தவறாகப் புரிய எந்த நிலையிலும் இடம் கொடுக்கக்கூடாது. இரண்டாவது அவன் கேட்ட கேள்விகளை படித்தபோது அவைகள் மிகவும் விளக்கமாக பதிலுரைக்கப்பட வேண்டியவை. அவசரகதியில் எதையோ செய்ய நான் விரும்பவில்லை. இவையிரணிடினும் மேலாக, எந்த நிலையிலும் அவனுடன் ஒரு வாக்குவாதத்தை நிகழ்த்த மனம் ஒப்பவில்லை. தோழன் என்பதால் இருக்கலாம். (இந்த கடைசி விசயத்தை பற்றி என் மனதில் தனி சிந்தனைக்கிளை (track) ஒன்று ஓடிற்று. அதைப் பற்றி தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன்) இதெல்லாம் மீறியும் பதில் சொல்லவேண்டிய கடமையும் கண்டிப்பாக எனக்குண்டு என்பதையும் உணர்ந்தே இருந்தேன்.

  சிறிது விரிவாகவே பார்க்கவேண்டிய விசயம் இது. தாழ்த்தப்பட்டவர்களிடமும் கணிணி உள்ளது, இந்து சமவெளி நாகரீக காலம் தொட்டு கடவுளுக்கு அடுத்த பிறவியாய் தன்னை தானே முத்திரை குத்திக்கொண்ட பார்ப்பனர்களிடமும் கணிணி உள்ளது. அவ்வளவுதானே.. சமதர்ம சமுதாயம் அல்லவா இது? விசயம் முடிந்துவிட்டதல்லவா? இன்னும் எதற்கு பார்ப்பனீயம் பற்றியும், பார்ப்பனத்தன்மை பற்றியும் பேசியும், எழுதியும் வரவேண்டும்? என்ற கேள்வி சாதாரணமாக எழலாம். இந்தக் கேள்வியின் மேல் தோலைப் (மேலோட்டமாகப்) பார்த்தால் கேள்வி மிக நியாயம் என்றுதான் தோன்றும். ஆனால் அப்படி இதை விட்டுவிட முடியாது. இந்தக் கேள்வியின் வெளித்தோலில் அல்லாமல், வியாதி தோலின் அடியில் ஒளிந்துள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் சில காலம் முன்பு ஒரு நிகழ்ச்சி. அதில் ஒரு இளையதலைமுறை பார்ப்பன பெண் பேச வந்திருந்தார். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியை நடத்துபவரிடம் அந்தப் பெண் "நான் ஒரு ஐயங்கார் சார். எனக்கு அது ரொம்ப பெருமையாவும் கர்வமாவும் இருக்கு"எனச் சொல்லிற்று. ஐயங்காராய் இருப்பதில் என்ன கவுரம் இருக்க முடியும்? என்ன சாதித்தால் பார்ப்பான் என்ற 'உயர்வான' சாதியில் பிறக்கலாம்??? எவ்வளவு இழிவான பேச்சை அந்தப் பெண் பேசியிருக்கிறது? இது ஒரு வகை. பார்ப்பனர்களில் 99% இப்படித்தான் இருக்கிறார்கள், குறிப்பாக ஊடக வெளிச்சத்தில் உள்ள பார்ப்பனர்கள். இப்படி ஒரு மடத்தனமான, மிருகத்தனமான ஆணவம், கணிணியை இயக்கும் ஒரு இளைய தலைமுறை பெண்ணுக்கு எப்படி வருகிறது? "மீன் குட்டிக்கு நீந்தக்கற்று தரவேண்டுமா?" என்ற பழமொழியைத் தவிர வேறு பதில் இல்லை.
இப்படியானதொரு, தாங்களே தங்களை உயர்வாய் நினைத்துக்கொள்ளும் மேன்மைத்தனம், நம் ஆட்கள் அவர்களை 'சாமி சாமி' என விளிப்பதில் இருந்து, அவர்கள் நம்மிடையே இருந்து வித்தியாசப்படுத்திக்கொள்ள அணியும் பூணூல் வரையில் நீள்கிறது. என் தோழன் சொன்னதைப் போல் அவனை எல்லாரும் வேற்றுகிரகவாசி போல பார்க்கிறார்கள் என்ற விசயத்தில் உண்மை இருக்கவே செய்கிறது. உதாரணமாக, திருநெல்வேலி தமிழ், மதுரை தமிழ், நாகர்கோயில் தமிழ், சென்னை தமிழ் என இருக்கும் vernacular dialects போல பார்ப்பனத் தமிழ் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அவாள் மட்டும் எந்த ஊரில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அந்த ஊரின் vernacular dialectஐ பிடித்துக்கொள்ளாது தங்கள் வீட்டில் 'சமஸ்கிருத தமிழ்' தானே பேசுகிறார்கள். சாதாரணமாக என் அறையில் ஒரு கிறித்தவனும், பிற சாதி இந்துவான நானும், ஒரு பார்ப்பனனும் இருந்தால், பழக்க வழக்கங்களில் கிறித்தவன்தானே எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான். சட்டையை கழட்டிவிட்டு காற்றாட இருக்கும் போது கூட கிறித்தவன் தானே என் உருவில் இருக்கிறான். எனக்கும் அந்த கிறித்தவனுக்கு எங்களிடம் இருந்து வித்தியாசமாக அவன் அணியும் பூணூல் ஒரு வேற்றுமை தன்மையை தருமா தராதா?
இப்படி மொழியில் இருந்து, உணவில் இருந்து, வெற்று உடம்பில் இருந்து, பல விஷயங்களில் மற்றவரை விட தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளும் பார்ப்பனர்களை மற்றவர்கள் வித்தியாசமாய் பார்க்கத்தானே செய்வார்கள்! ஆனால் இங்கே வித்தியாசம் என்பது பல இடங்களில் 'உயர்வாக' எனவும் சில இடங்களில் 'தாழ்வாக' எனவும் அர்த்தம் கொள்ளலாம். பல பிறசாதி இந்துக்கள் இன்னமும் பார்ப்பனர்களை தங்களைவிட உயர்வாக பார்ப்பதும் இந்த 'வித்தியாச' பார்வைக்கு காரணம். விஜய் டிவியில் வந்த பெண் போன்ற நரம்பை பூணூலாய் உடுத்திய பார்ப்பனர்களுக்கு இந்த வித்தியாசம் கர்வத்தையும், ஆணவத்தையும் தரும் அதே வேளையில் என் தோழன் போன்ற சில பார்ப்பனர்கள் வருத்தப்படுகிறார்கள்! ஆனால் பிரச்சினை என்னவென்றால் என் தோழன் போன்ற பார்ப்பனர்கள் 1% மட்டுமே உண்டு. அதுவும் நம் நட்பு வட்டத்தில், ஊடகத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் இருக்கிறார்கள்.

சரி. பார்ப்பனர்கள் மட்டுமா இப்படி செய்கிறார்கள்? ஆதிக்க சாதிக்காரன் தன்னை உயர்த்திப் பேசுவதில்லையா? அவர்களை ஏன் குறிப்பிடுவதில்லை? ஒவ்வொரு சாதியாக சொல்லி பேசாமல், பார்ப்பனீயம் என்பது எல்லா ஆதிக்க சாதியையும் ஒரு சொல்லில் அடக்கும் வார்த்தையே அன்றி, பூணூல் அணிந்த சாதியை மட்டும் குறிப்பதன்று. பார்ப்பனீயம் என்பது மனுவின் மூலம் ஒரு சாதியை மற்றொரு சாதி ஆதிக்கம் செய்வதற்கான வழிவகையை செவ்வனே செய்து கொடுப்பது. உதாரணமாக யாரேனும் கொடுமையான செயல்களை செய்தால் "ஏன் காட்டுமிராண்டித்தனமாக (barbaric) செய்கிறாய்?" என்கிறோம். இப்படி நாம் ஒருவனை சொல்வதற்கு அவன் காட்டுமிராண்டியாக (barbarian) இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்தகைய செயல்களை செய்தாலே போதும். இது 'பார்ப்பனர்' என்ற சொல்லுக்கும் பொருந்தும். ஆதிகாலம் தொட்டே சாதியத்தின் பேரால் அடக்கி ஆளுதல் என்னும் செயலை செய்து வந்த பார்ப்பனரின் தன்மையானது இந்த காலத்திலும் அதைச் செய்யும் ஆதிக்க சாதியினருக்கும் பொருத்தப்படுகிறது. காட்டுமிராண்டித்தனம்-பார்ப்பனீயம்! அதனால் பார்ப்பனராய் பிறந்தும் சாதியை எதிர்க்கும் சிலரை நான் பார்த்ததுண்டு, அத்தகைய பார்ப்பன தன்மை இல்லாத பார்ப்பனர்கள், இணையத்திலோ அல்லது வேறு எங்கோ பார்ப்பனத்தன்மைக்கெதிரான எழுத்துக்களைப் படிக்கும் போது வருத்தப்படவேண்டிய அவசியம் முற்றிலும் கிடையாது. ஆதிக்க சாதியினர் இன்னும் வெளிப்படையாக சாதியை கையிலெடுத்து அலையும்போது, பார்ப்பனர்கள் எதிர்மறை பார்ப்பனர்கள் ஆகி பார்ப்பனீயத்தை பரப்பியே வருகின்றனர். அதாவது பார்ப்பனீயத்தில் நம்பிக்கையில்லாதிருத்தல் போல் வெளிக்கட்டிக்கொண்டு, எல்லாரும் சம-இந்துக்களே என காட்டிக்கொண்டும் பார்ப்பனீயத்தை பரப்புதல். இதனைச் செய்ய அவர்களின் கையில் இருக்கும் ஊடகங்கள் அவர்களுக்கு பெருந்துணையாகவே இருக்கிறது. மேலும் இந்துமதத்தை காப்பாற்றினால்தான், அதன் மூல தன்மையான பார்ப்பனீயத்தை காப்பாற்ற முடியும் என்பதில் மிக தெளிவாய் இருக்கிறார்கள். அதை நோக்கியே அத்வானியில் இருந்து சோ வரை தினமலர், இந்து போன்ற mediumகளின் வாயிலாக மக்களின் மனத்தில் விஷத்தை பரப்ப முடிகிறது. இட ஒதுக்கீட்டைப் பற்றிய மிகத் தவறான செய்திகளை பரப்பி, இடஒதுக்கீட்டின் மூலம் பயன்பெற்றவர்களைக் கூட இடஒதுக்கீட்டை எதிர்த்து கருத்து தெரிவிக்க தூண்டுகிறது. ஆதிக்க சாதியினர் சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவனின் வாயில் மலம் திணித்துக்கொண்டிருக்கும் போது, அமைதியாக ஊடகங்கள் மலம் போன்ற செய்திகளை மக்கள் மனத்தில் திணிக்கமுடிகிறது. இதனால் தான் கணிணி காலத்திலும் 'பார்ப்பனீய எதிர்ப்பு' வேலையை செய்யவேண்டிய தேவை உள்ளது. இது எந்த வகையிலும் individual brahminsஐ அவமானப்படுத்தவோ, அல்லது ஒதுக்கி வைக்கவோ செய்யும் காரியம் கிடையாது.

உதாரணமாக அயோத்தி தீர்ப்பு வந்த அன்று தினமலர் செய்தி "சர்ச்சைக்குரிய இடம் மூன்றாக பிரித்து பங்கீடு. இந்துக்களுக்கு ஒரு பங்கும், இசுலாமியர்களுக்கு ஒரு பங்கும், நிர்மோகி அகரா அமைப்புக்கும் சமமாக பிரிக்கப்பட்டது என்று". இதில் மூன்றாவதாய் இருக்கும் நிர்மோகி அகரா அமைப்பு என்ன கிறித்தவ அமைப்பா? இந்து அமைப்பு தானே. இந்த விசதன்மை அனைத்து இந்துக்களிடம் அல்லாது பார்ப்பன ஊடகங்களிடம் மட்டுமே உள்ளதை யாராலும் மறுக்க முடியுமா? அதனால் தான் நம்மிடம் கணிணி வந்தாலும், பல உரிமைகள் வந்தாலும் இந்த விசத்தன்மையை எதிர்க்க விளைந்தே 'பார்ப்பானியம்' என்ற சொல்லை பயன்படுத்த வேண்டியுள்ளது. மற்றபடி இது பார்ப்பனர்களுடனான நேரடி மோதலோ அல்லது வெறுப்புணர்வோ அல்ல.

 சமீபத்தில் நண்பர் பிரதீப்புடன் பேசியபோது "இளா. பார்ப்பனர்னு போட்டா என் பார்ப்பன நண்பர்கள் எல்லாம் வருத்தப்படுறாங்க. என்ன செய்யலாம்?" என்று கேட்டார். நான் "அது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லையே. அப்படியே போடுங்கள். வருத்தப்படுவோருக்கு விளக்கிக்கொள்ளலாம்" என்றே. பின் அடுத்த நாள், பார்ப்பனன் என போடுவதற்கு பதிலாக 'பா*****ன்' என அவர்து google buzz updatesஇல் போட்டிருந்தார். இது எதோ ரொம்ப பெரிய கெட்ட வார்த்தைபோல் தோற்றமளித்தது. பின் அவரும் அதை மாற்றிவிட்டார்.  பார்ப்பனீயம் என்ற ஒரு தன்மையால் நம்மிடம் தோன்றிய சாதியத்தை எவெரெல்லாம் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்கள் அனைவருமே 'பார்ப்பனர்' தான். அதனால் தான் அந்த காட்டுமிராண்டி உதாரணத்தை மேலே மேற்கோள் காட்டியிருந்தேன். உடலில் பூணூல் அணிந்து பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிக்கும் பார்ப்பனரை விடவும், நரம்புகளையே பூணூலாய் கொண்ட ஆதிக்க சாதி வெறியர்களும், எதிர்மறை-பார்ப்பனர்களும் மிகவும் சமூகத்துக்கு கேடுவிளைவிப்பவர்கள் என்பதும், அவர்கள் செயல்-சக்தியாய் கொண்டு இயங்கும் 'பார்ப்பனீயத்தையும்' அழிக்க வேண்டுமென்பதும், அதற்கு பார்ப்பன தன்மை இல்லாத பார்ப்பனர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்பதே என் கருத்து.  ஓரளவிற்கேனும் என் நண்பனுக்கு பதில் அளித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

(குறிப்பு: திருப்பத்தூரில் 'மதகுபட்டி ஐயா ஓட்டல்' எனப் பெயர் மாற்றப்பட்ட உணவுவிடுதி, மீண்டும் சில காலம் சென்று அவருக்குப்பின் வந்தவர்களால் 'மதகுபட்டி ஐயர் ஓட்டல்' என்று மீண்டும் பெயர் மாற்றப்பட்டுவிட்டது :-))
  

14 comments:

thathachariyar said...

click and read


இந்து மதம் எங்கே போகிறது?


........

சரவணன் சுப்பு said...

ரொம்ப நாளாக என் மனசில் இருந்த கேள்வி இது. இப்படி ஒரு சாதியை மட்டும் திட்டுகிறார்களே அவங்க வருதப்படமாட்டாங்களா என்று. அருமையா விளக்கீட்டீங்க. வாழ்த்துகள்

ஒசை. said...

மிக சரி. நடை உடை பாவனை பேச்சு பழக்கம் என்று ஒவ்வொன்றிலும் ஒரு வித அகங்காரத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

guna said...

wrong thinking wrong thought

Anonymous said...

Good post. I will comment in a message in detail if possible. What I understood was u mean to say whom ever trying to establish themselves as superior over others in terms of caste or other reasons, the term used is parpanism. But not everyone have the understanding u ve got. As u ve mentioned, I understand that even ur friend who is a fellow blogger has this understanding. Thats the reason Y he has mentioned that work as P***ism similar to an uncultured word(on the same lines of f**k). If he had the understanding y had, he would not have mentioned like that. This is the case with 90% of people who speak about Parpanism. They often relate only Brahmins with this word. So I appreciate ur understanding and thoughts in this concept. I would appreciate more people read this blog and understand how to differentiate Brahmins from Parpanism.
I agree that Brahmins and Upper caste(Aathikka Jaadi) people dominated a lot. But I would also say that what amount of development that our forefathers have seen in 500 years, our generation has seen in 5 years. And 50 years of domination over brahmins is more than enough for the thing that has been done earlier by them. I have seen SC people who threaten Brahmins saying they will register a complaint against them on charges based on caste when u go and ask them Y they are not working properly eventhough u r his manager(A Scheduled caste person can raise a complaint against any one when he has been addressed with his caste name which is being misused in 90% of the registered complaints). Apart from this, I have seen brahmin people who abondon country saying they are deprived of rights. And I have also seen people reuniting with fellow Brahmins saying when govt and country is not ready to do good to our sect, then we should help our people. The same applies to a 3 letter word company based in Madurai. Hence there is no point in scolding those people unless the system is changed enough to give rights based on economic situations of people and not based on caste alone. So hereby I would like to draw ur attention that there is a tail side of the coin which u need to look into.
I read the blog in first comment. But I don understand Y people get "Theetu" when they speak in Tamil. Do they feel sanskrit is better than tamil or what. This is heights of stupidity. I feel that tamil is oldest of Indian Languages and rich enough(My mother tongue is telugu FYI) unlike few North Indian people who still feel Sanskrit is older than tamil as their language is somewhat related to tamil(Even this can be related to Parpanism as per ur meaning). Language is medium of communication. If he is not ready to communicate to people in a language which he knows we should ask him to consult a psychiatrist.

Shankar said...

@Above,
The reason why some people relate Brahmins mostly to the coinage 'Brahminism' is simple. If you observe those who practice Brahminism, its mostly Brahmins.
There are two kinds of Brahmins:
One who is intensionally practicing Brahminism
One who is unknowingly practicing it.

Somehow or other, most Brahmins fit into either of the category. If you observe the thinking patterns and ideologies of Brahmins, some sort of Brahministic behaviour will be visible for sure. I think it is transported to them genetically through 100s of years of Brahmin practice.

Regarding the issue of reservation based on economic status, one point needs to be highlighted.
Due to insane practices of caste and marginalization for over 100s of years, a large portion of the society still remains underdeveloped. If you see the comfort level of Brahmins or other dominant caste people in education, it is due to their vantage position in society for 100s of years. Every section of the society needs to be given a chance to attain that level of comfort. Only after attaining such a state of equilibrium, could we change reservation to be based on economic status alone.

Agilan said...

சகோதரரின் பார்பனிய எதிர்ப்பு கருதுக்கள் படிக்க கிடைத்தது..! உங்கள் மற்ற படைப்பில் இருக்கும் ஒரு தெளிவு இங்கு எயானோ காணவில்லை...!

உங்கள் வாதத்தின் தன்மை ஒரு கொள்கையை எதிர்ப்பது போல் தோற்றம் அளித்தாலும், நீங்கள் செய்து இருப்பது செத்த பாம்பை அடிப்பதே.. எப்படி? பார்போம்..!!

// விஜய் தொலைக்காட்சியில் சில காலம் முன்பு ஒரு நிகழ்ச்சி. அதில் ஒரு இளையதலைமுறை பார்ப்பன பெண் பேச வந்திருந்தார். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியை நடத்துபவரிடம் அந்தப் பெண் "நான் ஒரு ஐயங்கார் சார். எனக்கு அது

ரொம்ப பெருமையாவும் கர்வமாவும் இருக்கு"எனச் சொல்லிற்று. ஐயங்காராய் இருப்பதில் என்ன கவுரம் இருக்க முடியும்? என்ன சாதித்தால் பார்ப்பான் என்ற 'உயர்வான' சாதியில் பிறக்கலாம்??? எவ்வளவு இழிவான பேச்சை அந்தப்

பெண் பேசியிருக்கிறது? இது ஒரு வகை. பார்ப்பனர்களில் 99% இப்படித்தான் இருக்கிறார்கள்///

இதை படித்ததும் சிரித்து தான் இருக்க வேண்டும் ஆனால் எனக்கு கொஞ்சம் அழுகை தான் வந்தது. நண்பரே! நீங்கள் சொல்லும் அதே விஜய் டிவியில் அதே நிகழ்ச்சியில் வேறு விவாதம் நடந்த பொது, கலப்பு திருமணம் செய்தால்

தன் சொந்த மகளாக இருந்தாலும் 'இல்லாமல் செய்வேன்!" என்று ஒரு தகப்பன் மார் தட்டினார். கண்டிப்பாக அவர் நீங்கள் வெறுக்கும் பார்பனர் ஜாதி அல்ல..! 'போற்றி பாடடி.." வகையிற மாதிரி தான் இருண்தது..அவர் பக்கம் அமர்ந்த

சிலர் இதற்கு கை தட்டி ஆதரவும் தெரிவித்தனர், நண்பர் இதை பார்கவில்லை போலும்.

செரி ஒரு ஐயங்கார் பெண் சொன்ன (மட்டமான) கருத்தை வைத்து 99 % பார்பனர்கள் இப்படி தான் என்று முத்திரை குத்துகிறீர்கள்...இது நியாயம் தானா?? சற்றே சிந்திக்கவும்..

Agilan said...

...contd

///இப்படியானதொரு, தாங்களே தங்களை உயர்வாய் நினைத்துக்கொள்ளும் மேன்மைத்தனம், நம் ஆட்கள் அவர்களை 'சாமி சாமி' என விளிப்பதில் இருந்து, அவர்கள் நம்மிடையே இருந்து வித்தியாசப்படுத்திக்கொள்ள அணியும் பூணூல்

வரையில் நீள்கிறது///

நண்பருக்கு இது தெரிந்திருக்கும் "பாப்பானை சாமி என்னும் காலமும் போச்சே.." ஒரு பாபனே சொன்ன வாக்கியம் இது...செரி அதையும் மீறி இந்த சமுகம் இவன ஏன் சாமி சாமின்னு குபிடுது? இவன் கையில அருவாள துகுவன்னு

பயந்தா?? இல்ல தமிழ் நாட்டோட பெரும்பான்மை ஜாதி இவன்..இவன பகைச்சுக்க கூடாதுன்ன?இல்ல இவன் சாதி கிட்ட தான் எல்லா பொருளாதார வாய்ப்பும் இருக்கு அதனால அண்டித்தான் வாழனும்னா..?? கொஞ்சம் இந்த

பார்பன வெறுப்ப விலகிட்டு யோசிபீங்கனு நம்புறோம்..

நண்பரே எந்த பாப்பான் என்ன சாமின்னு தான் கூபட்னோம்னு கழுதுல கத்தி வெச்சான்..? அதான் பெரியார் முதல் பெரியார்தாசன் (ஒ இப்போது அப்துல்லா!) வரை அவனை திட்டி தீர்தாச்சு ஆனாலும் இந்த சமுகம் அவனை ஏன் சாமிநு சொல்லுது..??

Agilan said...

///என் தோழன் சொன்னதைப் போல் அவனை எல்லாரும் வேற்றுகிரகவாசி போல பார்க்கிறார்கள் என்ற விசயத்தில் உண்மை இருக்கவே செய்கிறது. உதாரணமாக, திருநெல்வேலி தமிழ், மதுரை தமிழ், நாகர்கோயில் தமிழ், சென்னை

தமிழ் என இருக்கும் vernacular dialects போல பார்ப்பனத் தமிழ் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அவாள் மட்டும் எந்த ஊரில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அந்த ஊரின் vernacular dialectஐ

பிடித்துக்கொள்ளாது தங்கள் வீட்டில் 'சமஸ்கிருத தமிழ்' தானே பேசுகிறார்கள்.////

உங்கள் வாதத்துக்கு வசதியாக தான் உங்கள் நண்பர் கேள்வி எழுப்புகிறார்... பார்பன தமிழ் பேசுவதால் அவன் வேற்று கிரக வாசி..இதை ஒரு நிமிடம் ஒத்து கொள்வோம்.. செரி இதே தமிழ் நாட்டில் இசுலாமியர்கள் பாய்-பாய் என்று

கூப்பிடுவதும் அரை குறை ஹிந்தி அல்லது உருது கலந்து பேசும் தமிழ் ஏன் உங்களை உறுத்த வில்லை... ஏன் என்றால் நம் மொழி பற்று வீரம் எல்லாம் ஊருக்கு இளைச்சவன அடிக்க தான்..!!

//// சாதாரணமாக என் அறையில் ஒரு கிறித்தவனும், பிற சாதி இந்துவான நானும், ஒரு பார்ப்பனனும் இருந்தால், பழக்க வழக்கங்களில் கிறித்தவன்தானே எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான். சட்டையை கழட்டிவிட்டு காற்றாட

இருக்கும் போது கூட கிறித்தவன் தானே என் உருவில் இருக்கிறான். எனக்கும் அந்த கிறித்தவனுக்கு எங்களிடம் இருந்து வித்தியாசமாக அவன் அணியும் பூணூல் ஒரு வேற்றுமை தன்மையை தருமா தராதா?////

திரும்பவும் பூணல் மேட்டர் சொல்லி இருகிறீர்கள்.....செறி என் நண்பன் கிருட்டவன், சிலுவை கழுத்தில் அணிகிறான் இது அவன் நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம் இது எனக்கு ஏன் உரூதானும்?? இன்னொரு நண்பன் முஸ்லிம், பள்ளி

நாட்களில் தனக்கு நடந்த சுன்னத்தை பெருமையாகவே எங்களிடம் சொல்லி இருக்கான்!! இது அவன் அவனுக்கா செய்துகர விஷயம் இத வெச்சு நான் என் அவன் வேற்று கிரகம்னு நேனைகாணோம்..?? புரியவில்லை..!!

அது செறி லப்பை, மறைகையர் போன்ற முஸ்லிம்களை நண்பர் வாழ்கையில் சந்திக்கவில்லை போலும்...இவர்கள் தமிழர் என்று கூட சொல்லிகொள்வதில்லை தூய அரபியர் என்றே சொல்கிறார்கள் இவர்களை நீங்கள் சந்திக்க
வேண்டும்...

Agilan said...

////சரி. பார்ப்பனர்கள் மட்டுமா இப்படி செய்கிறார்கள்? ஆதிக்க சாதிக்காரன் தன்னை உயர்த்திப் பேசுவதில்லையா? அவர்களை ஏன் குறிப்பிடுவதில்லை? ஒவ்வொரு சாதியாக சொல்லி பேசாமல், பார்ப்பனீயம் என்பது எல்லா ஆதிக்க

சாதியையும் ஒரு சொல்லில் அடக்கும் வார்த்தையே அன்றி, பூணூல் அணிந்த சாதியை மட்டும் குறிப்பதன்று////

ஐ! தம்மாதூண்டு வலைபூ குள்ள இந்த ஜகா வாங்கற நீங்களா நண்பரே சீமானை உரிச்சு போடீங்க? எனக்கு என்னவோ இத படிச்சப்போறோம் சீமான் ஒரு மாவீரார தெரியறாரு(ஓகே அது வேற மேட்டர்..) அதெப்படி வாத்யாரே யார்

பண்ற தப்பானாலும் அது பாப்பான் தலைல போடறீங்க?? நான் சொன்ன செத்த பாம்ப அடிக்கிற மேட்டர் இது தான்.

- எந்த ஆதிக்க சக்தி தலித் வாயில மலம் திணிச்சாலும், பழி பாபனுக்கே
- கிறிஸ்தவன் திருச்சியில கல்லரையில ஜாதி செவுரு எழுப்பினா அதுவும் பாப்பான் தலைல போடு
- ஈழதுல நம்ம ஆள சிங்களவன் கொன்னா அதையும் தூக்கி பாப்பான் தலைல போடு...

ஐயா இது விசுலடிசான் குஞ்சுகளோட மோசமா இல்ல இருக்கு...!!

உலகத்துல எங்க அடக்குமுறை நடந்தாலும் அதன் பழி பார்பனுகே..!! இதையே நாம நாடாரியம், கவுண்டரியம், தேவரியம், இசுலாமியம் etc சொன்னா நம்ம கதவு, ஜன்னல் ஏன் கை, கால் கூட மிஞ்சாது...அதனால் இந்த மாறி

புரட்சி செய்து பார்பனையே திருத்துவோம்..!

வாழ்க தமிழ்..!

techarun said...

ella jathi la(caste) nallavanga(good),kettavanga(barbaric) erukanga...Avanga suttri erukum environment dan avanga gunathai theermanam pannudhu..I am also belongs a brhamin family but My parents didnot impose brhamanic thoughts..I studied MY UG and PG in minority institution...My friends also from other caste or religion they didn't criticize me,because i am doesn't mention my caste.

dear friend,our caste people (fore fathers)introduced manu dharma,untouchbility,...etc,but today everything changed.we are also ready to change.we are also like unity among indians.

i really worried about some fundamentalists like(VHP,RSS,bhramanic journals)are doing same mistake.

All Brhamins are not bad yet some of Good brhamins suffer racism..i am also respect periyarists thoughts,Amberkarism. the main mistake is fundamental brhamanic parents is imposed their chidrens.fundamentalist of any religion should eradicate from our country....

i didn't know how to write Tamil in blog.

by
Arun,trichy

vIns said...

Agilan..Well said

vIns said...

Well said Agilan.

Raj Mohan S said...

நண்பா,

என் தந்தை ஒரு பார்பனர் அல்லாத சாதி. என் தாய் பார்பன வகுப்பை சேர்ந்தவர். என் மனைவி பார்பனர் அல்லாத சாதி. உங்கள் அளவுக்கு 'நடுநிலை' இல்லாவிடினும் நான் சொல்வதெல்லாம் உண்மை.

1 ) எங்களை சில வருடங்களுக்கு முன்பு வரை இருவீட்டு சொந்தங்களும் இல்லை இல்லை இரு சாதியினரும் ஒதுக்கியே வைத்திருந்தனர். இதில் பார்பனன் & பார்பனன் அல்லாதவன் பாகுபாடு எல்லாம் இல்லை. என் மனைவியின் வீட்டார் என் திருமணத்தின் பத்திரிக்கையில் அவர்களது சாதியை எங்கள் பெயரின் பின்னாலும் போட்டுவிட்டு, எனது தந்தையின் சாதியை குறிப்பிட்டால் அவர்களின் சொந்தபந்தங்கள் மத்தியில் இழிவாக போய்விடும் என்று விளக்கெண்ணை விளக்கம் வேறு கொடுத்தார்கள்(என் தந்தை & மாமனார் இருவரும் பார்பனர் அல்ல). என் தாய் வீட்டு சொந்தங்கள் சிலரிடம் என்னை வேற்று கிரகவாசி போல நான் உணர்ந்ததுண்டு. உனக்கு மந்திரங்கள் சொல்ல தெரியுமா?? உன் வாயில் அந்த சொற்கள் நுழையுமா? கருப்பாக இருகிறாய் என்று உனக்கு வருத்தம் இல்லையா? என்று என்னை நோண்டி நொந்கேடுத்தவர்கள் உண்டு. நீங்கள் குறிப்பிடும் அதே விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு மதுரை பையன் அமெரிக்காவில் படிக்கும் பொழுது காதலித்ததாகவும், ஆனால் அவரது பெற்றோர் சாதியை காரணம் காட்டி மறுத்தால் வேறு வழி இன்றி அந்த பெண்ணிடம் சொல்லாமல் கொள்ளாமல் தொடர்பை துண்டித்ததாகவும் தெரிவித்தார். பாபப்பட்டி, கீரிப்பட்டி கதைகள் ஊரறிந்ததே. நான் சென்னை வந்த பிறகு என் நண்பர்களின் FB பக்கங்களை பார்த்து வியப்படைந்தேன். பல நண்பர்கள் அவர்கள் சார்ந்த சாதியின் பெயரால் உள்ள குழுக்களில் அல்லது பக்கங்களில் உறுபினர்களாக உள்ளனர். ஆக பாகுபாடு என்பது அணைத்து சாதியிலும் உள்ளது.

2 ) Vernacular Dialect & பூணுல் பற்றி குறிப்பிட்டீர்கள். இந்தியாவை பொறுத்த வரை அதுவும் தமிழகத்தில் நிலம் சார்ந்த மொழி நடை என்பதை விட சரியாக சொன்னால் அதுவும் அந்த நிலத்தில் பெரும்பான்மையாக வாழும் சாதிகள் பேசும் மொழி தான். ரொம்ப வசதியாக கிறுத்துவ நண்பனை உதாரணமாக காட்டினீர்கள். இசுலாமியர்களை விட்டு விட்டீரே. சாதிய கிறுத்துவர்கள் (மதம் மாறினாலும் சாதியை விடாதவர்கள்) பலர் இந்த உலகத்தில் உண்டு. அவர்கள் மற்ற சாதி கிறுத்துவர்களுக்கு பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டார்கள். பூணுலும் பேச்சு வழக்கும் வேறுபடுத்தி காட்டும் அதே நேரத்தில் குல்லாவும், மீசை இல்லா தாடியும், எங்கே போனாலும் மதப்பரப்பலில் ஈடுபடுவதும், ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதும் வழிபடுவதும், உருது கலந்த தமிழில் பேசுவதும், சக இனத்தவனைக் கண்டால் எவனை பற்றியும் கவலை படாமல் உருதிலேயே பேசிக்கொள்வதும் உங்களுக்கு தோதுப் படாததால் விட்டு விட்டீர்கள்.

3 ) பார்பனன் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை தான். ஆனால் அது எப்படி பிற சாதியினரை குறிப்பிடவும், இசுலாமியர்களை குறிப்பிடவும் சில வார்த்தைகள் உள்ளனவோ, அவை எவ்வளவு மன வேதனை அவர்களுக்கு தருமோ அதற்க்கு ஈடான வார்த்தை தானே???

இந்தியா என்கிற ஜன நாயக நாட்டில் அவரவர் தனக்கு பிடித்ததை பேசலாம், உடுத்தலாம், உண்ணலாம். அது எப்படி உங்களுக்கு ஒரு பிரிவினர் செய்வது மட்டும் உறுத்துகிறது. எனக்கு அணைத்து பிரிவினர் செய்யும் விநோதப் பழக்கங்களும் என்னிலிருந்து வேறுபடுத்தியே எனக்கு காட்டுகின்றது. ஒரு பிரிவினரை மட்டும் 99 % விஷமிகள் என்பது தவறு நண்பா. அது போலி பகுத்தறிவு.

பகுத்தறிவு என்பது அன்றைய கால கட்டத்தில் பார்பனிய எதிர்பாக இருந்தது. காரணம் அன்றைய தேவை அது தான். அதை முன்னெடுத்து நடத்தியது தந்தை பெரியார். பெரியார் முதலில் ஒழிக்க வேண்டியது பார்ப்பனீயம் என்றார். ஆனால் அவர் அதை மட்டும் எதிர்க்கவில்லை. பிற ஆதிக்க சாதியினரின் அடக்கு முறைகளையும் சாடினார். ஆனால் அவை மறைக்கப்படுகின்றன. காரணம் திராவிடத்தை சார்ந்த சுயநல அரசியல்.

பார்ப்பனீயம் ஒழிக்கப் பட வேண்டும். மாற்று கருத்து இல்லை. ஆனால் பிற சாதி ஆதிகங்களும் அதிகம் உள்ளது. அதை ஏற்றுக்கொள்ளவும், பெயர் வைக்கவும், ஏன் நம்பவுமே பலர் மறுக்கின்றனர். பார்ப்பனியத்துடன் பல உருவங்களில் மறைந்திருக்கும் மற்ற ஆதிகங்களையும் களைவோமாக.

நன்றி,
ராஜ் மோகன்.
திருச்சி

Related Posts Plugin for WordPress, Blogger...