Thursday, October 21, 2010

சர்ச்சையைப் பற்றி மனம் திறக்கிறார்

வலையுலகில் தன்னைப் பற்றிய தொடர் விமர்சனங்களால் மனம் நொந்த ஜாக்கி எந்த தொலைக்காட்சிக்குமே தராத பாக்கியத்தை நம் தொலைகாட்சிக்கு தந்திருக்கிறார். ஆம் நேயர்களே. உங்கள் தோழன், ஏழை பங்காளன், பிட்டு நாயகன், ஆபாச ஆதவன், வல்கர் வள்ளல், லோக்கல் ஸ்டார், குப்பத்து நாயகன், விமர்சன வீரன் நம்முடன் கதைக்கப் போகிறார். (குறிப்பு: பீப் பீப் பீப் என வரும் இடங்கள் எல்லாம் சென்சார் செய்யப்பட்ட இடங்கள்.)

(விளம்பர இடைவெளிக்கு பின் நிகழ்ச்சி தொடர்கிறது)

தொகுப்பாளர்: இதோ வந்து விட்டார். வணக்கம் ஜாக்கி. அமருங்கள்.

(ஜாக்கி வருகிறார். கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. தள்ளாடியபடி நடக்கிறார்)

ஜாக்கி: வணக்கம். நான் ரொம்ப லோக்கல். நான் ரொம்ப லோக்கல். (தலைநகரம் வடிவேலு பாணியில் கையை ஆட்டியபடியே சொல்லிக்கொண்டு அமர்கிறார்)

தொகுப்பாளர்: முதல்ல உக்காருங்க ஜாக்கி. சமீபத்திய சர்ச்சையைப் பற்றி.....

ஜாக்கி(இடைமறிக்கிறார்) : பீப் பீப் பீப் பீப் பீப் பீப் பீப்....

தொகுப்பாளர்(இடைமறிக்கிறார்): சார் சார். இது உங்க பிளாக் இல்ல. கொஞ்சம் டீசண்டா பேசுங்க.

ஜாக்கி: பீப் பீப் பீப் பீப் பீப் பீப்

தொகுப்பாளர்: என்ன சார் இது? கொஞ்சம் நாகரீகமா பேசுங்க சார்.

ஜாக்கி: அட இன்னப்பா இது? நான் ரொம்ப லோக்கல்பா.. என் வீடு அண்ணாநகர்ல இல்ல. கூவத்துக்கு அந்தாண்ட இருக்கு. எனக்கு இதான் வரும். நான் பத்தாவதுல 277. கேள்வி கேட்டா கேளு. இல்லேனா போ.

தொகுப்பாளர்(என்னடா இவன் சம்பந்தமில்லாம பேசுறானே என மனதுக்குள் நினைத்தபடி): அதெல்லாம் சரி சார். சர்ச்சையைப் பற்றி?

ஜாக்கி: பீப்.. அது..பீப்.. அவன் ஒரு பீப்... நான் டீசண்டா எழுதேலேனு சொல்றாங்கப்பா. நீயே சொல்லு. நான் என்ன நாய் பேய்னா எழுதுனேன்? பீப் பீப் பீப் னுதானே எழுதுனேன். அதுக்கு போயி என்ன indecentனு சொன்னா நான் என்ன செய்வேன்? (சொல்லிவிட்டு தாவாயை தடவிக் கொண்டே விட்டத்தைப் பார்க்கிறார்)

தொகுப்பாளர்: ஃபீல் பண்ணாதீங்க சார். இந்த முத்துசிவா, இளவரசன் என்றவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சார் பிரச்சினை?

(ஜாக்கிக்கு வியர்க்கிறது. கேமிராவை ஆஃப் செய்யும்படி செய்கை காண்பிக்கிறார்.)

தொகுப்பாளர்: சொல்லுங்க சார். மக்கள்லாம் பாக்குறாங்க. Liveல வேற ஓடிட்டிருக்கு. சொல்லுங்க சார்..

ஜாக்கி (வேறு வழியில்லாமல்): நீயே சொல்லுப்பா.. நான் யாருப்பா? நான் ஒரு லோக்கல். என்ன போயி நல்ல படத்துக்கு எழுது. அசிங்கம எழுதாத.. ஆபாசமா எழுதாதனு சொன்னா எப்படிப்பா? நான் என்ன வச்சுகிட்டாப்பா வஞ்சனை பண்றேன்? நானே எதோ பிட்டு தளத்தையெல்லாம் பார்த்து காப்பியடிச்சு, புரணி பேசி, பெண்களை திட்டி பொழப்ப ஓட்டுறேன்.. என்னப் போயி.... (கதறிக் கதறி அழுகிறார்..)

தொகுப்பாளர்:  அய்யயோ.. விடுங்க சார்.. தெரியாம சொல்லிட்டாங்க சின்ன பசங்க... இணைய அறிமுகம் எப்படி சார் கிடைச்சுச்சு.?

ஜாக்கி: அது ஒரு பெரிய கதைப்பா. அப்ப நான் பத்தாவது படிச்சிட்டுருந்தேன். எங்க மிஸ் செமையா இருப்பாங்க. சிலுக்கு மாதிரி. இப்ப இருக்குற சகீலா எல்லாம் வேஸ்ட்டு. அந்த காலத்துல அனுராதா, குயிலி.......... (பேசிக்கொண்டே போகிறார்)

தொகுப்பாளர்(இடைமறித்து): சார் சார் விஷயத்துக்கு வாங்க...

ஜாக்கி: சாரி பா... எங்க வுட்டேன்..... ஆங்...அப்ப எங்க வாத்தியார் பக்கத்துல இருக்குற புரொவ்சிங் சென்டருக்கு போயி வினாத்தாள் எடுக்க சொன்னாரு. அப்போ அங்க போனப்பதான் எனக்கு 'பலான பலான' விஷயங்கள் இணையத்துல இருக்குனு தெரிஞ்சுச்சு. தியேட்டர்கள் மாதிரி இல்லாம இணையத்துல வர்ற படங்களை ரீவைண்ட் செய்து பாக்கலாம் என்பதை அறிஞ்சு பிரம்மிச்சேன். அப்புறம் தினமும் நண்பர்களோட போக ஆரம்பிச்சேன்.

தொகுப்பாளர்: ஓஹோ. அருமையான ஃபிளாஷ் பேக் சார். உலக சினிமாக்கள் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்ப வந்துச்சு?

ஜாக்கி: 1996ல ஜோதி தியேட்டர்ல சகீலா நடித்த பீப் பீப் பீப் படம் பார்த்தேன். அதுதான் உலக சினிமாக்களில் எனக்கு ஏற்பட்ட முதல் அறிமுகம். அதன் பிறகு ஸ்பானிஷ், இத்தாலி, ஹிந்தி போன்ற பல மொழிகள்ள உலகப் படங்களை பார்த்திருக்கேன். நானே கூட நாலு உலகப் படங்கள் எடுத்திருக்கேன்.

தொகுப்பாளர்: ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் (Alfred hitchcock) பத்தி என்ன நினைக்கிறீங்க?

ஜாக்கி: நம்ம ஆல்பர்ட்டா? அவரது அறிமுகம் சில நாட்களுக்கு முன் கிடைத்தது. வாசகர் கடிதம் கூட எழுதிருந்தாரு. ரொம்ப நல்ல மனிதர். என் பதிவுகளைப் பார்த்து வாழ்க்கையில் முன்னேறியதா கூட எழுதிருந்தாரு.... (கர்சீப் எடுத்து கண்ணீரை துடைக்கிறார்.)

தொகுப்பாளர்: (இதுக்கு மேல பேசினா Alfred hitchcockக்கு அசிங்கம் என முனகிக்கொண்டே)

சார். உலக சினிமாக்களை மூணு வகைகளுக்குள் அடக்கி புரட்சி செய்யப்போவதா போன வாரம் அறிவிச்சிருக்கீங்களே. அதைப் பற்றி...

ஜாக்கி: ஆமாப்பா. சண்ட படம், காமெடி படம், குடும்ப படம் (சொல்லும்போதே முகத்தை சுழிக்கிறார்) அது இதுனு ஏகப்பட்ட வகை இருக்காம். அதான் ஏன் இவ்வளவு குழப்பம்னு நான் ஒரு முடிவுக்கு வந்தேன் (நிமிர்ந்து உக்காருகிறார்). ஏன் இவ்வளவு குழப்பம்.. மூணே வகைக்குள்ள நம்ம அடக்குனா என்னனு தோணுச்சு. அந்த மூணு வகைதான் "x, xx மற்றும் xxx" (கேமிராவைப் பார்த்து பெருமிதமாக சிரிக்கிறார்).

தொகுப்பாளர்: ஓஹோ.. சூப்பர் சார். சினிமால நீங்க என்னவா சார் இருக்கீங்க?

ஜாக்கி: கேமிராமேனுக்கு உதவியாளரா இருக்கேன் பா..

தொகுப்பாளர்: கேமிராமேன் என்ன செய்றாரு?

ஜாக்கி: அவரு சும்மாதான்பா இருக்காரு.

தொகுப்பாளர்: ஏன் சார் நீங்க குடும்பப் படம் எதுக்கும் விமர்சனம் எழுதுறதில்ல?

ஜாக்கி: அட போப்பா.. அது என்னமோ அந்த மாதிரி படம் பாத்தா டைட்டில் ஓடுறப்பயே தூங்கிருவேன்பா...!

தொகுப்பாளர்: Life is beautiful என்ற இத்தாலிய படம் பற்றி என்ன சார் நினைக்கிறீங்க?

ஜாக்கி: அது..... அது.. வந்து... ம்ம்... எங்க வீட்டுல ஒரு நாய்குட்டி இருக்கு தெரியுமா....????

தொகுப்பாளர்: அது சரி சார்.. Life is beautiful பத்தி.....

ஜாக்கி: அந்த நாய்குட்டி ஒருநாள் என்கூட விளையாண்டுச்சா... அப்போ....

தொகுப்பாளர் (கடுப்பாக): டேய்.. உனக்கு Life is Beautiful பத்தி தெரியுமா தெரியாதா??!!!

ஜாக்கி: என் பட்டக்ஸ்லயே கடிச்சுருச்சு...

தொகுப்பாளர்(மிகவும் கோபமாக): அதுகிட்ட பிட்டு படம் போட்டு காமிச்சிருப்ப.. (ஆடியன்ஸை பார்த்து) பார்த்தீங்களா.. நல்ல படம் எதையும் இந்த ஆபாசம் புடிச்சவன் பாக்க மாட்டான் போல. ஒரு நல்ல படம் தெரியுமாடானு கேட்டா... நாய் குட்டின்றான்... கடிச்சிருச்சுன்றான்.....

ஜாக்கி(இடைமறித்து கோவமாக): நீ ஏன்பா என்கிட்ட அதைப் பத்திலாம் கேக்குற? நான் லோக்கல் பா. என் தகுதிகேத்த மாதிரி கேளுப்பா...

தொகுப்பாளர் (கோபமாக): ஆமா.. நீ லோக்கல். நாங்கள்லாம் STD. உன் தகுதிக்கேத்த மாதிரி கேக்கனும்னா அசிங்க அசிங்கமா தான்டா கேக்கனும் உன்னல்லாம்..... சேர்(chair) வேற கேடு உனக்கு.. எந்திர்றா நாயே.. (எனக் கத்தியபடி ஜாக்கியின் சேரை உதைக்கிறார்)

(இதைக் கண்டு ஜாக்கியுடன் வந்த அள்ளக்கைகள் அவசரமாக அரங்கை விட்டு கத்தியபடியே ஓடுகிறார்கள்.அப்பொது காமிராக்குள் இருந்து கற்கள் சராமாரியாக ஜாக்கியை தாக்குகின்றன.. ஒரு பெரிய கல் தலையில் பட்டவுடன்..)

"சாண்ட்வெஜ் நான்வெஜ் சாண்ட்வெஜ் நான்வெஜ்.. அய்யா.. ஜாலி.... சாண்ட்வெஜ் சாண்ட்வெஜ் நாண்வெஜ்" எனக் கத்தியபடியே அரங்கை விட்டு ஓடுகிறார் ஜாக்கி....

சோக கீதத்துடன் நிகழ்ச்சி முடிகிறது....

15 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
வயிறு நிரம்பின வாக்குப் பொட்டுப்புட்டுப் போயிடுவேன்...

பயணமும் எண்ணங்களும் said...

உன் தகுதிக்கேத்த மாதிரி கேக்கனும்னா அசிங்க அசிங்கமா தான்டா கேக்கனும் உன்னல்லாம்..... சேர்(chair) வேற கேடு உனக்கு.. எந்திர்றா நாயே..

-------------------------

:))) ஹாஹா..

பயணமும் எண்ணங்களும் said...

உங்கள் தோழன், ஏழை பங்காளன், பிட்டு நாயகன், ஆபாச ஆதவன், வல்கர் வள்ளல், லோக்கல் ஸ்டார், குப்பத்து நாயகன், விமர்சன வீரன் நம்முடன் கதைக்கப் போகிறார். (குறிப்பு: பீப் பீப் பீப் என வரும் இடங்கள் எல்லாம் சென்சார் செய்யப்பட்ட இடங்கள்.)
---------------------------

சிரிச்சு சிரிச்சு.. முடியல...:))))))

Anonymous said...

unga attuliyaam thaanga mudiyala ..but i laughed and laughed reading through this ..charu/Jeyamohan na kalaainga ..jackie paavam ..

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா,சக படைப்பாளியை நாமே கிண்டல் செய்யலாமா?

Karthik said...

தொகுப்பாளர்: அது சரி சார்.. cricket பத்தி.....

ஜாக்கி: மந்திரா பேடி, லேகா வாஷிங்டன் லம் வருவாங்களே, அந்த program ஆ.

அது எனக்கு பிடிச்ச program பா, ஆனா starting, naduvule & ending மட்டும் தான் நான் பார்பேன்.

ஹி ஹி ஹி (தலையை சொரிந்த படி )

தொகுப்பாளர்: (அட "****பீப் ****பீப்" இதுக்கு மேல பேசினா சச்சின் உன்ன பேட் ஆளயே அடிச்சு கொன்னுடுவார் என முனகிக்கொண்டே) அடுத்த கேள்வி...


:) :) :)

கோவி.கண்ணன் said...

//எங்க மிஸ் செமையா இருப்பாங்க. சிலுக்கு மாதிரி. இப்ப இருக்குற சகீலா எல்லாம் வேஸ்ட்டு. அந்த காலத்துல அனுராதா, குயிலி.......... (பேசிக்கொண்டே போகிறார்)//

உங்களுக்கும் அவரை கலாய்க்க கவர்ச்சி நடிகைகள் பெயர் தானே தேவைபடுது. இதுல அவரை மட்டும் குறை சொல்லி ........

:(

தனி காட்டு ராஜா said...

தல ,
இந்த ஒட்டு ஒட்டு ரீங்களே .....ஜாக்கிய பத்துன உங்க தளத்துல உள்ள எல்லா பதிவையும் படித்தேன் ....
சிரிப்பு சிரிப்பாக வருகிறது ....:)))))

எனக்கும் ஜாக்கியை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை தான்.......இவர் மாதிரி உள்ள நெறைய பதிவர்களை கலாய்க்க வேண்டும் என்று கூட நினைத்தது உண்டு .....முக்கியமாக தங்களை பிரபல பதிவர் என்று சொல்லி கொள்ளும் குமுட்டைகளை.........
அவர்களை கலாய்ப்பதால் மறைமுகமாக நாம் அவர்களை பெரிய ஆள் ஆக்கி விடுகிறோம் .....
கழுகு -வில் அவர் பேட்டியை படித்த பின் அவரை பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது .......
தன்னை பற்றி வெளிப்படையாக சொல்லுகிறாரே ......பாரட்டலாம் ........
யாரிடம் தான் குறைகள் இல்லை .....விடுங்க....தல

பென்சில் பெருமாள் said...

உங்கள் தொடர் "ஜாக்கி" பதிவுகளில் உள்ள நகைச்சுவையை ரசித்தேன்.

ஆனா ஜாக்கியின் பதிவுகள் பலவும் ரசிக்கும்படி இருக்கின்றன என்பதும் உண்மை.

ஜாக்கியும் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி படிக்கப்படுகிறார். ஆனால் பிரச்சனை என்று வரும் போது "செந்தழல் புவி"யை சுளுக்கெடுத்த "இரும்புத்திரையின்" மன திடம் பத்து சதவிகிதம் கூட ஜாக்கியிடம் இல்லை.

பதிவுலக வழக்கப்படி அடுத்தபடியாக "ஜாக்கிதான் போலி" என்றோ "போலியின் அல்லக்கை ஜாக்கி " என்றோ பதிவு போட்டால் கூட கொடுப்பதை வாங்கிக்கொண்டு வலிக்காத மாதிரியே அடுத்த பதிவு போடுவார் ஜாக்கி.

Anonymous said...

@கோவி.கண்ணன்
உங்களுக்கும் அவரை கலாய்க்க கவர்ச்சி நடிகைகள் பெயர் தானே தேவைபடுது.///

என்ன சார் சொல்றீங்க? கவர்ச்சி நடிகை பேர சொன்னாலே ஆபாசமா? கவர்ச்சி நடிகை பெயரை சொன்னாலே ஆபாசம் என குற்றம் சாட்டும் நீங்களா அவர ஆதறிக்கிறீங்க? பெரிய முரணாக உள்ளது!!:-)

Anonymous said...

@செந்தில்குமார்
நண்பா,சக படைப்பாளியை நாமே கிண்டல் செய்யலாமா?////

படைப்பாளியா??? எங்க எங்க?? அட நீங்க வேற சார். நீங்க படைப்பாளி. உங்க அட்ராசக்கல நான் follower கவர்ச்சி படம் போட்டு பொழப்ப ஓட்டுறவன்லாம் படைப்பாளியாண்ணே?? ரொம்ப குசும்புனே உங்களுக்கு....

Anonymous said...

அவர்களை கலாய்ப்பதால் மறைமுகமாக நாம் அவர்களை பெரிய ஆள் ஆக்கி விடுகிறோம் ....//

இல்லண்ணே.. அவரை சீரியஸான மேட்டரா நினைச்சிருந்தா நான் சீரியசா கண்டிச்சிருப்பேன். அந்தாளு செம காமெடி பீசு. அதான் கலாய்ச்சேன்! எப்படியும் மக்கள் திருந்த போறதில்ல. இன்னைக்கு கூட அந்தாளு என்னை அவரு பிளாக்ல 'பண்ணாடை'னு சொல்லிருக்காரு. அதுக்கு அவரு ரசிகர் ஒருத்தன் "மீ த ஃபர்ஸ்ட் கமெண்ட்"னு போட்டிருக்கான்!! என்னத்த சொல்ல!! சிரித்துவிட்டுப் போவோம்னே! நமக்கு காமெடி நல்லா வரும். அந்தாளுக்கு ஆபாசம் நல்லா வரும்! அவ்ளவுதான்!! :-))

டுபாக்கூர் பதிவர் said...

உங்களுடைய மூன்று பிரபல பதிவுகள் அவரை குறிவைத்து எழுதப் பட்டவையே...இதை எபப்டி கலாய்த்தல் என நியாயப் படுத்துகிறீர்கள் என தெரியவில்லை.

வன்மம், குரோதம், கொலைவெறி என சக பதிவரை நார் நாராய் கிழித்து விட்டு கலாய்த்தல் என எப்படி சொல்கிறீர்கள்.

வெப் தமிழன் said...

Very very bad taste....

- Web Tamilan

ரஜின் said...

சகோ..இந்த மாதிரி ஆளுங்கள..மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டலாம்.ஆனால் இன்னொரு பக்கம் அது அவர்களுக்கான இலவச விளம்பரமா பொய்ருது...அவர தெரியாத இன்னும் 100 பேர் அவரப்பத்தி,தெரிஞ்சுக்கிராங்க..அதுல சிலர் அவரோட வாசகராவும் ஆகிருவாங்க..கெட்டதப்பத்தி அதிகம் பேசுனா கெட்டது வளரும்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்,,,விட்டுடுங்களேன்...இந்த மாதிரி ஆளுங்கல திருத்தீர்லாம்னு நெனைக்கிரீங்களா?..

நன்றி
அன்புடன்
ரஜின்

Related Posts Plugin for WordPress, Blogger...