Monday, October 25, 2010

நான் எனப்படுவது யாதெனில்..



நான்...,

நல்லவனும் கெட்டவனும்
ஒருசேரக் கேவலமானவர்கள்
என உணர்ந்தவன்....
எவனோ கொடுத்த அளவுப் பரிமாணத்தில்
அடை பட்டுக் கிடக்கும் அற்பர்கள்
என அறிந்தவன்...
என் வட்டம், வட்டமானது...
புரியாதது...
ஆரம்பமும், முடிவும் இல்லாதது... 

பொய்யும் உண்மையும்
ஒருசேர அழகானவை
எனத் தெரிந்தவன்...
இரண்டையுமே நிர்வாணமாய்ப் பார்த்து, ரசித்து,
என் சொற்களின் ஆடைகளையும் கிழித்துக் கொண்டவன்...
நிர்வாணமாய்ப் பேசுபவன்...!!

மதங்களை நம்பி
அதன் மார்க்கமாய் போவதும்,
மார்பில் பால் குடிப்பதாய் நினைத்து,
சீல் நிறைந்த கொப்புளங்களை சப்பிக் குடிப்பதும் சமம்
என அறிந்தவன்... 

அந்தரங்கக் கண்ணாடி ஆடை போட்டு நின்றால்
நிர்வாணமாகவும்,
நிர்வாணமாக நின்றால் ஆடை போட்டும் காட்டுமெனத்
தெரிந்தவன்...
அதனாலேயெ அதில் கல்லெறிந்து,
அது உடைகையில் ரசித்துச் சிரித்தவன்...

பெண்கள் அழகு என்பதையும்,
அவர்கள் தூரத்தில் மட்டுமே அழகு,
என்பதையும் ஒருசேர உணர்ந்தவன்...

"அழகிகளைப் பார்த்து காதல், காமம் கொள்ளாதீர்"
என சொல்லுதல் பெரும் பாவமென அறிந்தவன்.
ஆனால் கிளியோபாட்ராவின் மலம் கூட
அருவெறுப்பானது தான்
என்ற 'சின்ன' உண்மையையும் அறிந்தவன்!!

காதலில்லா காமமும்,
காமமில்லா காதலும்,
நோய்கள் என நினைப்பவன்...

கடவுள் இல்லையென நம்புங்கள் என சொல்ல வந்தவனில்லை..
கடவுளை நம்புங்கள் என சொல்பவன்...
''நம்பிவிட்டேன்'' என சொல்பவனைப் பார்த்து
கெட்டவார்த்தையில் திட்டிச் சிரிப்பவன்...
கடவுள் இருக்கும் விஷயம்,
இல்லாத அந்தக் கடவுளைத் தவிர,
இருக்கும் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது
என நன்கு அறிந்தவன்...

ஞானம் வெளிச்சம் அல்ல
இருட்டு எனப் புரிந்தவன்...
இருட்டைக் கூட அறியமுடியாத
அளவிற்கு ஞானம் இருட்டானது...
ஞானத்தை அடைய
ஞாபகத்தையும், மறதியையும்
ஒருசேர தொலைக்க வேண்டுமென
அறிந்தவன்...
தொலைத்த வழியில்
தொலைந்தும் போனவன்...

நான் நானாக இருக்காமல்
இந்த உலகமாகவே இருப்பவன்.
அதனால்தான் என் உலகம்
நுண்கிருமியின் கண்களில் இருந்து
புளுட்டோவின் விட்டம் வரை
அகண்டுகொண்டே போகிறது..
இன்னும் போகும்.........................!!!










4 comments:

லெமூரியன்... said...

JUST FINE.! SUPERB...!

KICHA said...

/மதங்களை நம்பி
அதன் மார்க்கமாய் போவதும்,
மார்பில் பால் குடிப்பதாய்
நினைத்து ,
சீல் நிறைந்த கொப்புளங்களை சப்பிக்
குடிப்பதும் சமம்
என அறிந்தவன் .../
Good

dheva said...

தம்பி... செம.. நிறைய சொல்லத் தோணுது.. கவிதை பற்றியும் அதன் பின்புலத்தில் இருக்கும் கூரான புத்தியின் செழுமை பற்றியும்....

இப்போதைக்கு நான் மீண்டும் கவிதைகுள் மூழ்குகிறேன் மீண்டும்... ! கருத்துக்கள் நாம் பகிர்ந்து கொள்வோம்.. நமது ஜி சாட்டில்...!

நந்தா ஆண்டாள்மகன் said...

அருமை ரசித்து படித்தேன்..

Related Posts Plugin for WordPress, Blogger...