Thursday, October 28, 2010

கலியுக கண்ணன்களும், ஒரு பெருசும். (சிறுகதை)

“செம வெயிலு. கைல உள்ள முடியெல்லாம் பத்திகிட்டு ‘ghost rider’ படத்துல வர்ற மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்துல எரிஞ்சிரும் போல... ஆனா இவளுங்க கொஞ்சம் கூட அசரலையே மச்சி.. என்னாமா பேனர் புடிச்சிட்டு கத்துறாளுங்க பாரு..... வெயிட்டுடா.. ஆனா ஒருத்தியாவது நல்லா இருக்காளா.. ம்ம்ம்ஹ்ம்ம்ம் எல்லாமே மொக்க மச்சி... ஸ்டமக் அப்சட் (stomach upset) ஆகி வாமிட் வருதுடா..” நண்பன் கிட்ட பேசிட்டிருக்கது நம்ம ஆறுமுகம். படிப்பை முடிச்சிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்து ஒரு வருஷம் ஆகுது. ஆனா வேலைதான் கிடைக்கல.. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். அப்பா இவனுக்கு சின்ன வயசா இருக்கப்பவே செத்துட்டாரு.. இப்படியெல்லாம் வழக்கமான சிறுகதை மாதிரி ஃபிளாஷ்பேக் ஓட்டுவேன்னு நினைப்பீங்க. அதான் இல்ல. இவனும் இவன் குடும்பமும் எப்படி நாசமா போனா நமெக்கென்ன பாஸ்? நானே பஸ்ச அரைமணி நேரமா நிப்பாட்டி வச்சிருக்காய்ங்களேன்ற கடுப்புல இருக்கேன்.. இவன் பின்னால உக்காந்துகிட்டு போற வர்ற புள்ளைகளையெல்லாம் ஓட்டிட்டி இருக்கான்.. இவன் ஏதோ டாம் குரூஸ் மாதிரியும் அதுங்கல்லாம் அருக்காணி சுஹாசினி மாதிரியும!. நீங்க வாங்க. அங்க வெயில்ல கத்திகிட்டிருக்க நாலஞ்சு ஃபிகருங்க என்ன பண்ணுதுங்கன்னு பார்ப்போம். காலேல இருந்து வேகாத வெயில்ல கத்துறாளுங்க. எவளோ ஒருத்திக்கு வரதட்சிணை பிரச்சினையாம். அதான் இந்தக் கத்து. அந்த புள்ளையும் சும்மா இல்ல. மாமனார், மாமியாரை எல்லாம் வரதட்சிணை வழக்குல உள்ள தள்ளிட்டு தான் இங்க வந்து நிக்குது. புருஷன் என்ன ஆனானா? அவன்தான் அப்பா, அம்மாவை உள்ள தள்ளுனவுடன பொண்டாட்டி கூட சமாதானம் ஆயிட்டானே... நம்ம ஸ்ரீகாந்த் மாதிரி. அதோ அந்த ஓரத்துல இந்த பொம்பளைங்களுக்கெல்லாம் டீ வாங்கிட்டு வந்து கொடுக்குறான் பாருங்க, அவன் தான் புருஷன். பாவம் அந்த குடும்பம். உண்மை என்னனு யாருக்கும் தெரியாது.

“தம்பி இருப்பா. நீ பாட்டுக்கு அப்படியெல்லாம் பேசாதப்பா. நிஜமாவே அந்தப் பொண்ணை ரொம்ப கொடுமை படுத்துனாங்கப்பா அவங்க வீட்டுல. பணம் தரலைன்னு மாமியார் சூடெல்லாம் வச்சுச்சாம்பா” தீடிரென என்னை மறித்து ஒரு பெருசு பேசுது. சரி வாங்க அதுட்ட பேசுவோம்.

“இன்னுமா அய்யா இப்படில்லாம் பண்றாங்க? 1980ல விசு படத்தோட இதெல்லாம் முடிஞ்சிருச்சுனு பார்த்தா பேரரசு காலத்துலயும் நிப்பாட்ட மாட்டாய்ங்க போலயே!!”

“அதை ஏன்பா கேக்குற. எதோ இந்த மாதிரி சில தைரியமான பொண்ணுங்க போராட்டம், பேச்சுனு இறங்கி வேலை செய்யிறதுனாலதான் மத்த பொண்ணுங்களுக்கு நிம்மதி.”

“ஹ்ம்ம்ம்ம்.. உங்களுக்கு எப்படி இவ்ளோ டீடெயில்ஸ் தெரியுது?”

“அட.. அதோ அங்க பாருப்பா. புளூ ஜீன்சும் டி.சர்ட்டும் போட்டு நிக்கிதே ஒரு பொண்ணு. அதான்பா என் மக. அவதான் இந்த மாதர் சங்கத்துக்கு தலைவி. இவங்க பண்ற போராட்டம்னாலதான் பஸ்சு அரைமணி நேரமா நிக்கிது”

அடப் பாவிப்பயலே... இதுல பெருமையாய்யா உனக்கு என மனதுக்குள் நினைத்துக்கொண்டே “ஓஹோ. செம கெத்து சார் உங்க பொண்ணு. பெருமையா இருக்கு சார்”

அந்த பெருசு முகத்துல அவ்வளவு பிரகாசம்.
நானே தொடர்ந்தேன்.. “அதெல்லாம் சரி சார். ஏன் சார் உங்க பொண்ணு 40இன்ச் இடுப்புல 30 இன்ச் பேண்ட் போட்டிருக்காங்க? கொஞ்சம் தாராளமா போட்ருக்கலாமே”னு கேட்டேன்.

பெருசு வாய மூடிட்டு ஜன்னல்ல வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுருச்சு.
திடீர்னு பெரிய சத்தம் பின்னாடி.. ரெண்டு பேரு பேசிட்டிருந்தாங்க. ஒருத்தன் நிக்கிறான் ஒருத்தன் உக்காந்துருக்கான்.

நின்னுட்டிருந்தவன், “ஏம்பா.. லேடிஸ் நிக்கிறாங்கள்ல. கொஞ்சம் எந்திரிச்சு இடம் கொடுத்தா என்னப்பா?”

உக்காந்திருந்தவன், “என்னது? எங்க கால் மட்டும் என்ன கட்டை காலா? எங்களுக்கும் நின்னா வலிக்கத்தாம்பா செய்யும்.”

நின்னுகொண்டிருந்தவன் முகத்துல ஈ ஆடல. அவன் பக்கத்துல இருந்த பொம்பளை “நான் உன்கிட்ட கேட்டேனாடா?”ங்குற மாதிரி அவன பார்த்துச்சு.

திடீரெனெ என் அருகில் இருந்த ஒருவன், “அப்படிப் போடு. நல்லா சொன்னான்யா.”  சிரித்துக்கொண்டேன் நான். பயபுள்ள ரொம்ப அடிபட்டுருப்பான் போல. சரி ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுவோமேனு, “ஆமாண்ணே.. நம்மலே கஷ்டப்பட்டு நாய் படாத பாடுபட்டு சீட்டு புடிச்சு உக்காருவோம். இவன மாதிரி எவனாவது வந்து கிருஷ்ணன் திரளபதிக்கு சேலை கொடுத்தத மனசுல நினைச்சுட்டு ஆபத்பாந்தவன் மாதிரி வந்து நம்மல கடுப்பேத்துவாய்ங்க.”

நாங்க பேசுறத அந்த பெருசு பார்த்துட்டே இருந்துச்சு. திடீர்னு “தம்பிகளா. பொம்பளைங்க உடல் பலவீனமானவங்கப்பா. நம்மனா நின்னுக்கலாம். பாவம் பொம்பளைப் புள்ளைங்க என்னப்பா பண்ணும்? நீங்களே சொல்லுங்க”

எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. என்கிட்ட பேசிட்டிருந்த பாதிக்கப்பட்டவன் மூஞ்சியப் பார்த்தேன். அவன் சொன்னான் பாருங்க ஒரு பதிலு..

“யோவ் பெருசு. இங்க நடந்தததான நீ பாத்த. நேத்து நானும் என் ஃபிரண்டும் ஓட்டலுக்கு போயி சாப்டுட்டிருந்தோம்யா. ஒருத்தன் பார்சல் வாங்க வந்தான். ரெண்டு நூடுல்ஸ் ஒரு சிக்கன்னு சொல்லிட்டு, சர்வர் கிட்ட “லேடீஸ் சாப்பிடுறதுப்பா.. நல்லா போடச் சொல்லுங்குறான்.. இதெல்லாம் என்ன பண்ண சொல்ற??”

 எனக்கு செம சிரிப்பு. பெருசு என்ன பரிதாபமாக பார்த்துட்டு ஒன்னுமே சொல்லாம ஜன்னலப் பாக்க ஆரம்பிச்சிட்டாரு. போராட்டம் பண்ண பொண்ணுங்கள்ளாம் பஸ்ல ஏறுனாங்க. கண்டக்டர் கத்துனான். “உள்ள போ உள்ள போ.. லேடிஸ் வர்றாங்க...”  பஸ் கிளம்பிருச்சு.

 

4 comments:

Anonymous said...

ha haa

தமிழ்ப் பையன் said...

இன்னா சொன்னாலும், பொம்பிளைங்க பாவம் தான்... இன்னொருத்தன் வூட்டுக்கு போய் கஸ்டப்படுறவங்க தானே மேன்...

தனி காட்டு ராஜா said...

//“யோவ் பெருசு. இங்க நடந்தததான நீ பாத்த. நேத்து நானும் என் ஃபிரண்டும் ஓட்டலுக்கு போயி சாப்டுட்டிருந்தோம்யா. ஒருத்தன் பார்சல் வாங்க வந்தான். ரெண்டு நூடுல்ஸ் ஒரு சிக்கன்னு சொல்லிட்டு, சர்வர் கிட்ட “லேடீஸ் சாப்பிடுறதுப்பா.. நல்லா போடச் சொல்லுங்குறான்.. இதெல்லாம் என்ன பண்ண சொல்ற??”//

//கண்டக்டர் கத்துனான். “உள்ள போ உள்ள போ.. லேடிஸ் வர்றாங்க...” பஸ் கிளம்பிருச்சு. //

அருமையான பதிவு தல .....
பெண்கள் கர்ப்பமான சமயம் ,கைக்குழந்தையுடன் வரும் சமயம் போன்றவற்றில் நாம் அவர்களுக்கு உதவலாம்........

புராணாத்தில் கிருஷ்ணன் திரளபதிக்கு சேலை கொடுத்தது ......மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் தான் .....
[ அட ...நம்ம தமிழ் சினிமாவில் கூட இத தானே செய்யுராங்க.....]

எதற்கெடுத்தாலும் லேடீஸ்,லேடீஸ் என்று சொல்லுபர்கள்.......கலியுக கண்ணன் அல்ல .....கலியுக ஊத்த வாயர்கள் என்று தான் பாராட்ட வேண்டும் ......

Anonymous said...

story la eka patta twistu:):)neenga eppavume gentsku than sapport panringa anne

Related Posts Plugin for WordPress, Blogger...