Friday, October 22, 2010

கழுகுக்கும் வானத்துக்கும்.. (ஜாக்கி பற்றி இறுதியாக கொஞ்சம் சீரியசாக)   வணக்கம். சமீபத்தில் என் வலைப்பூவில் வெளியான பதிவுகள் உங்களை பலவாறு நினைக்கத் தூண்டியிருக்கும். சிலர் கேள்விகளையும், ஏச்சுக்களையும், பாராட்டுக்களையும் மின் அஞ்சலிலும், பதிவுகளின் பின்னூட்டங்களிலும் தெரிவித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றிகள். அதில் பல, மிகவும் தீர்க்கமாகவும், பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் இருந்தன. ஆனால் ஒன்றை நீங்கள் கவனித்திருந்தீர்களேயானால் இதுவரை சீரியசாக ஒரு பதிவு கூட நான் ஜாக்கி பற்றிய பிரச்சினைக்காக இடவில்லை. ஆனால் இன்று கழுகுடன் கதைத்த போது, ஜாக்கிக்கு நாம் விளக்கமளிக்க தேவையில்லையெனினும், எதிர்ப்பைக் கூட பாசத்துடனும், நாகரீகத்துடனும் காட்டிய கழுகுக்கு விளக்கமளிக்க வேண்டுமென தோன்றியது. அதனாலேயே இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

    நான் முதலில் எழுதிய "ஆபாச ஜாக்கியும் அதிசய டிஸ்கியும்" பதிவு முழுக்க முழுக்க ஜாக்கியின் பதிவுகளையும், கழுகு எடுத்த பேட்டியையும் கிண்டல் செய்து எழுதப்பட்ட Spoof அல்லது parody வகையைச் சார்ந்தது. அதில் ஜாக்கியின் பதிவுகளின் மீதிருந்த அருவெறுப்பும் சேர்ந்து கொஞ்சமாக காரத்தை கூட்டி விட்டது. ஆனால் அந்தப் பதிவில் கழுகை வெளிப்படையாக அநாகரீகமான முறையில் குறிப்பிட்டு எழுதியதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே கழுகிடம் மின்னஞ்சலில் மன்னிப்பு கேட்டேன் எனினும், இன்று கழுகை வாசிப்பவர்கள் முன்பு மன்னிப்புக் கேட்கவும் கடமைப் பட்டிருக்கின்றேன். மன்னியுங்கள்.
 
 விஷயத்திற்கு வருகிறேன். வலைப்பூ என்பது ஒரு பொதுஜன ஊடகம். ஆனந்தவிகடன் கூட 10 ருபாய் கொடுத்தால் தான் கிடைக்கும். ஆனால் வலைப்பூக்கள் அலுவலகங்களில் இலவசமாகவே கிடைக்கும் ஒரு ஊடகம். இப்படிப்பட்ட ஒரு வெகுஜன ஊடகத்தில் வரும் 'Adults only' விடயங்கள் சிறார்களுக்கும், மனமுதிர்ச்சி இல்லாதோர்க்கும் சென்று சேரக் கூடாது என்பதால் தான் 'Blogger' தனது 'settings' பகுதியில் 'adults only' option வைத்திருக்கிறது. பெரியவர்களுக்கான பதிவுகளை எழுதுபவர்கள் அதை enable செய்வதென்பது (enable செய்தால் தான் அந்த வலைப்பூவை நாம் திறக்கும் பொது ஒரு எச்சரிக்கை செய்தி வரும்) அத்தியாவசியமான, கண்டிப்பாய் செய்ய வேண்டிய பண்பான செயல் என்பதை யாரும் மறுக்கவே முடியாது. இதைக்கூட செய்யாமல் ஒருவர் தானாகவே தனது வலைப்பூவில் 18+ என்று குறியிட்டுக்கொண்டு விமர்சனங்கள் என்ற பெயரில் ஆபாசங்களயும், நகைச்சுவை என்ற பெயரில் அசிங்கங்களையும் எழுதிக்கொண்டிருக்கிறார். அழகியலாய் காமத்தை காட்டும் சினிமாக்களுக்கு இவர், இவர் பாணியில் விமர்சனம் எழுதும் போது அந்தப் படம் ஒரு மூன்றாம் தர நீலப்படம் போல் தோற்றமளிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இவர் எழுதிய விமர்சனத்தில் வந்த ஒரு வரி, "கதாநாயகனுக்கு அந்தப் பெண்ணை பார்த்தவுடனேயே போடவேண்டும் போல் இருந்தது"!! இது மிகவும் நாகரீகமான உதாரணம். இன்னும் படுகேவலமாக எழுதியிருக்கிறார் இன்னும் பல பதிவுகளில். அவர் ரசிகர்களுக்கு தெரியும். இவரை குற்றம் சொல்வதால் நான் ஒன்றும் கெட்டவார்த்தையே பேசாத புனிதன் அல்ல. ஆனால் கெட்ட வார்த்தைகளை ஒரு பொதுஜன ஊடகத்தில், முறையான எச்சரிக்கையில்லாமல் கண்டபடி பேசுவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது. இவரை பேசவேண்டாம் எனச் சொல்லவில்லை. அதற்கு எனக்கு உரிமையோ, ஏன் தகுதி கூட கிடையாது. ஆனால் bloggerல் உள்ள 'Adult content' optionஐ enable செய்துவிட்டுப் பேசட்டுமே பார்ப்போம். செய்தால் மகிழ்ச்சிதான்.

 மேலும்.. ஜாக்கி பற்றி எனக்கு சில நாட்களாகத் தான் தெரியும். ஆபாசமான பதிவுகளைப் பார்த்து மிகவும் கோவப்பட்டுக்கொண்ட்டிருந்த தருணத்தில் கழுகில் பேட்டியும் வந்தது. அப்போது நான் எழுதியதுதான் 'ஆபாச ஜாக்கியும் அதிசய டிஸ்கியும்'. அதற்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்த போதுதான் ஜாக்கிக்கு ஏற்கனவே பல பிடிக்காதவர்கள் உள்ளார்கள் என்றும், அவர்களில் சிலரது கோபம் நியாயம் என்றும், சிலர் தனிப்பட்ட முறையில் ஜாக்கியுடன் பகைமை பாராட்டுகிறார்கள் என்றும் தெரிந்துகொண்டோம். அவர்களுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என தெரிவிக்க கடமை பட்டிருக்கிறேன். இது ஜாக்கிக்கும் தெரியும் என்பதை நேற்று அவர் எழுதியிருந்த 'நடுநிசி நாய்களும் நானும்' என்ற பதிவைப் பார்த்து தெரிந்துகொண்டேன். என்னையும் நண்பன் முத்துசிவாவையும் பண்ணாடை எனத் திட்டியிருந்தார். அவருக்கு இரண்டுமே நான்தானோ என்ற சந்தேகம் வேறு இருக்கிறது. இல்லை. நாங்கள் இருவரும் வேறு வேறுதான்! 
ஜாக்கிக்கு சில நாட்களுக்கு முன் அனுப்பிய பின்னூட்டத்தில் blog adult content பற்றியெல்லாம் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எதுவுமே வெளிவரவில்லை. பிறகு நான் எடுத்ததுதான் நக்கல் நையாண்டி ஆயுதம். இதற்கு கூட அவர் சஞ்சலப் பட்டதாய் தெரியவில்லை, மீண்டும் கெட்ட வார்த்தைகளையே பொழிகிறார். மேலும் தான் உபயோகிக்கும் நாற்றம் பிடித்த வார்த்தைகளுக்கும், சொலவடைக்கும் தான் லோக்கல் லோக்கல் என்ற காரணத்தை அவர் சொல்வது கேலிக்குறிய ஒன்று. லோக்கலான மக்கள் எல்லாரும் இப்படித்தான் பேசுகிறார்களா? லோக்கலென தன்னைச் சொல்லி லோக்கல் மக்களான உழைக்கும் தோழர்களை அசிங்கப்படுத்த வேண்டாமென கண்டித்துக் கூறிக்கொள்கிறேன். அவர்கள் அனைவருக்குமே இவரைப் போல அல்லாது, சபை நாகரீகம் தெரிந்தே இருக்கிறது.
 
  இந்தக் கட்டுரை எழுதியதன் நோக்கம் ஓரளவுக்கேனும் உங்களுக்கு தெளிவு பட்டிருக்கும் என நினைக்கிறேன். மீண்டும் கழுகிடமும், கழுகை நான் புண்படுத்திய போது புண்பட்ட கழுகின் வானத்திடமும் (வாசிப்பாளர்கள்) மன்னிப்பு கேட்டு விடைபெறுகிறேன். மற்றபடி தப்பு எங்கு நடந்தாலும் தலையில் அடிக்கும் செயல் பதிவுலகத்தில் தொடர வேண்டுமென்பதே என் நோக்கம். நான் செய்தால் நீங்களும், நீங்கள் செய்தால் நானும், பிறர் செய்தால் நாமும், தலையில் அடிப்போம். 
மிக்க தோழமையுடனும், நன்றியுடனும் 
இரா.இளவரசன்.

24 comments:

ப.செல்வக்குமார் said...

மன்னிப்புக் கேட்டதுக்கு நன்றிங்க. எனக்கும் ஜாக்கி சேகர் பத்தி தெரியாது. நீங்க கழுக கிண்டல் பண்ணிருக்கீங்க அப்படின்னு நண்பர்கள் சொன்னதுக்கு அப்புறம்தான் நான் ஜாக்கி சேகர் ப்ளாக் பார்த்தேன். எது எப்படியோ.? கழுகு ஒரு போழுதுபோக்குத்தளம் அல்ல. நீங்க கழுகோட வேறு சில பதிவுகளையும் படிங்க. உங்களையும் கழுகோட இணைச்சுக்கோங்க.! சில நல்ல கட்டுரைகளை கழுகுக்கு எழுதி கொடுங்க ..!! அன்புடன் செல்வா..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@இளவரசன்

ஜாக்கி பத்தி நீங்க எழுதி இருக்கதுல நான் கருத்து தெரிவிக்க விரும்பல. ஆனா கழுக பத்தி பேசினது தப்பு உங்க மனசுல பட்டதும் அதை மூடி மறைக்காம பொதுல வந்து மன்னிப்பு கேட்ட உங்க நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு.

எஸ்.கே said...

ஜாக்கி சேகர் பற்றி நீங்கள் எழுதியது பற்றிய உங்கள் கருத்துக்களை பற்றி பிரச்சினையில்லை. ஆனால் நீங்கள் கழுகை பற்றி எழுதியது மனக்கஷ்டத்தை தந்தது. ஏனெனில் நல்ல பல விஷயங்களை அளிக்கும் தளம் அது. கிண்டல் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட உங்கள் குணத்திற்கு பாராட்டுக்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

நீங்களும் கழுகுக்கு நல்ல கருத்துள்ள பதிவுகளை எழுதலாம் இளவரசன் .கழுகு பொழுது போக்குவதற்கு ஆரம்பிக்க படலை .......அதில் நீங்களும் வந்து இணைந்து கொள்ளுங்கள் ......மன்னிப்பு கேட்பதற்கும் மனம் வேண்டும் .அந்த நல்ல மனது உங்களிடம் இருக்கிறது

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

உங்க நேர்மை பிடிச்சிருக்கு இளவரசன்....

பிரியமுடன் ரமேஷ் said...

நையாண்டியான அந்த மூன்று பதிவுகளுக்கு பதிலாக, முன்பே நீங்கள் செய்திருக்க வேண்டியது இதைத்தான் அசோக்... உங்கள் கேலிக்கு பதிலாக வந்த கழுகின் பதிலில் கோபம் இருந்ததே தவிர அநாகரிகமாக ஒரு வரி கூட இல்லை இல்லையா... நீங்கள் சொல்லுவது போல் நாம் ஓசியில் கிடைக்கும் ஊடக உலகில் இருக்கிறோம்.. கெட்ட வார்த்தை பேசுவதற்கு மட்டுமல்ல...எதைப் பதிவிடுவதற்கு முன்பும் ஒரு முறைக்கு இரு முறை இதனை எப்படி நயமாகக் கூறலாம் என்று யோசித்து செயல்படுவதுதான் நல்லது.. ஒருவர் மோசமாக செயல்படுகிறார் என்று நமது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக நாமும் அவரது புறத்தோற்றத்தை எல்லாம் நையாண்டி செய்து எழுதுவது நல்லது இல்லை இல்லையா..

Azar said...

நீங்கள் மன்னிப்பு கேட்டது மிக மிக மிக அற்புதமான செயல் திரு. இளவரசன் அவர்களே...இந்த பதிவிற்கு பிறகு உங்களுக்கும் கழுகுக்கும் (including readers ) எந்த ஒரு மனவருத்தமும் இல்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது.
அதே நேரத்தில் நீங்கள் கூறி இருந்த blogger settings பற்றிய கருத்து மிகவும் முக்கியமான ஒன்று. அதை கடைபிடிக்க வேண்டியவர்கள் கடைபிடித்து, பதிவுலகில் ஆபாசத்தை குறைத்து, (தயவு செய்து) குறைந்தபச்ச நாகரீகத்தை வெளிபடுத்தினால் தமிழ் பதிவுலகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
By common blog reader .

தனி காட்டு ராஜா said...

////மற்றபடி தப்பு எங்கு நடந்தாலும் தலையில் அடிக்கும் செயல் பதிவுலகத்தில் தொடர வேண்டுமென்பதே என் நோக்கம். நான் செய்தால் நீங்களும், நீங்கள் செய்தால் நானும், பிறர் செய்தால் நாமும், தலையில் அடிப்போம்.
////

எப்படியோ ஒரு பிரச்சினைய நல்ல விதத்துல முடிவுக்கு கொண்டு வந்துட்டிங்க..........
உங்க துணிவு ,மன்னிப்பு கேக்க தெரிந்த நேர்மைக்கு பாராட்டுகள் தல ....

Anonymous said...

@ப.செல்வக்குமார்
நன்றி. புரிந்துகொண்டமைக்கு... கண்டிப்பாக கழுகுக்காக எழுத வேண்டுமென்ற எண்ணம் உண்டு. விரைவில் ஈடேறும்.

Anonymous said...

@பாண்டியன், எஸ்.கே, வெற்றி, இம்சை அரசன் பாபு

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து படியுங்கள்.

Anonymous said...

@பிரியமுடன் ரமேஷ்
நீங்கள் சொல்வது சரிதான் நண்பா. ஆனால் முதலில் இருந்தே ஜாக்கி பிரச்சினையை சீரியசாக விமர்சித்து எழுதும் எண்ணம் எனக்கில்லை. ஏனெனில் அவரை சீரியசாக நான் இதுவரைக்கும் நினைக்கவில்லை. அதானால் தான் நையாண்டி. அதில் சில புறத்தோற்ற கிண்டல்களை தவிர்க்க முடியவில்லை! ஆனால் எப்போது கழுகு இதில் ஈடுபட்டதோ அப்போதே சீரியசாக ஒரு பதிவு போடவேண்டுமென எண்ணி இன்று எழுதினேன், கழுகுக்காக மட்டும். ஆனால் ஜாக்கியை கிண்டல் செய்து எழுதிய பதிவுகளுக்காக நான் வருத்தப்படவுமில்லை, அவைகளை திரும்பப்பெறப் போவதுமில்லை. எதிரிக்கு ஏற்றவாறு நம் ஆயுதங்கள் அமைகின்றன. நன்றி ரமேஷ்.

dheva said...

தம்பி....இளா.....!

புரிதலுக்கு நன்றிகள் தம்பி!

வினோ said...

நீங்கள் மன்னிப்பு கேட்டது பாராட்டத்தக்கது..

ஜீவன்பென்னி said...

இளா வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். நீங்கள் ஜாக்கி அவர்களின் பதிவு பற்றி எழுதிய கருத்துக்கள் அனைத்தையும் நானும் வழிமொழிகிறேன். நீங்கள் கூறியுள்ளது, அனைத்து அடல்ட் பதிவு எழுதுபவர்களுக்கும் பொருந்த கூடிய ஒன்றுதான். ஆனால் முடிவில் கழுகின் பார்வையையும், அதன் இலக்குகளையும் நீங்கள் உணர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

Anonymous said...

@தேவா
:-)

@வினோ
நன்றிகள் தல..

Anonymous said...

@ஜீவன் பென்னி
மிக்க நன்றி ஜீவன்.

கழுகின் ஒரு இறகு.... said...

யாம் நினைத்து போல் நீர் சகதி அல்ல. சந்தனம்தான். உமக்குள் ஒரு மூலையில் ஊற்று எடுத்தது கழிவுநீர் காலன் என்று தெரிந்ததும், சிறிதும் தாமதிக்காமல் பொது வெளியில் மன்னிப்பு கேட்ட உமது மான்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மாசு கண்டு வீறு கொண்டு எழும் உமது சீற்றம் எமக்கு பிடித்து இருக்கிறது. தவறுகளை கண்டால் உங்கள் எதிர்ப்பை இதுபோல் நாகரிகமாக தெரிவியுங்கள். திருந்தாவிட்டால் தாக்கி தவிடுபொடி ஆக்குங்கள். முடிந்தவரை தனிமனித தாக்குதல் தவிறுங்கள். வானத்துக்கு உங்களை நட்புடன் வரவேற்று விடைபெருகிறேன்!!

லெமூரியன்... said...

வணக்கம் இளவரசா....
நெடு நாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம் வலையில்...! :)
உங்களின் தொடர் பதிவு மற்றும் அதற்க்கு ஜாக்கி பதில் பதிவிட்டது என்று தொடர்ந்து படித்துக் கொண்டே வந்தேன்...
Blogger Settingsஐ அவர் செயல்படுத்தவில்லை என்ற உங்களின் கேள்விக்கு அவர் பதில் தரவில்லை இன்னும்....
மற்ற படி ஜாக்கியின் பதிவுகள் நிறைய நன்றாகவே இருக்கும்....ஒரு COMMON MAN THOUGHT அவரின் எழுத்துக்களில் பிரதிபலிக்கும்...
ஆனால் இப்பொழுது அவை மிக மிக கம்மியாகி...நீங்கள் சொன்னதைப் போல் (போட வேண்டும் போன்ற) ஆபாச நெடி அதிகம்.............

கதைநாயகர்களுக்கு கொடி பிடிக்கும் இளைங்கர்கள் என்று சுட்டியிருந்தார் உங்களை....
உங்களின் வலைப் பூவை மேய்ந்திருக்க மாட்டார் என அறிகிறேன்....
இளவரசனின் பார்வையில் நடிகர்கள் எவ்வாறு உள்ளனர் என்று இளாவின் தளத்தை சிறிது நோட்டம் விட்டால் கண்டு கொள்ளலாம்.....
கழுகிடம் மன்னிப்பு கேட்டது குறித்து அனைவரும் பாராட்டியிருக்கிறார்கள்...
எனது பாராட்டுக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்........
உங்களின் எதிர்ப்பைக் கூட நாகரீகமான முறையில் வெளிப்படுத்தி உங்களின் தனித் தன்மையை நிலைப் படுத்துங்கள்......
வாழ்த்துக்கள் இளா...........!

ஜெய்லானி said...

செய்த தவறை ஒத்துக்கொள்பவனே மனிதன்..இனியாவது தவறை நாகரீகமான முறையில வெளிப்படுத்துங்கள் .அதுவே போதும்..!!
:-)

Anonymous said...

இது போன்ற பனி(பதிவுலக)ப்போர்கள் எப்போதான் நிக்குமோனு தெரில.. எனினும் எவ்வளவோ நல்ல விசயங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சொல்லலாமே நண்பரே! இது போன்ற பதிவுகள் நீங்கள் அவருக்கு இலவசமாக கொடுக்கும் விளம்பரங்களாகவே அமையும்.. எனவே உங்கள் எழுத்தாற்றலை வேறு விதமான பதிவுகளாக எதிர்பார்க்கிறேன் நண்பரே!

பால் [Paul] said...

:) இந்த பதிவு எனக்கு பிடிச்சிருந்தது.. 'பதிவர்களின்' பொறுப்பு என்பதான அடிப்படையில் நீங்கள் கூறிய கருத்துக்களை நான் ஒத்துக் கொள்வதுடன், பாராட்டுகிறேன்..

Shankar said...

//ஆனால் ஜாக்கியை கிண்டல் செய்து எழுதிய பதிவுகளுக்காக நான் வருத்தப்படவுமில்லை,... //
இளவரசன்,
மற்றவர் கருத்தையோ, செயலையோ கண்டிக்க பல வழிகள் உள்ளது. நாகரிகமான, ஆக்கப்பூர்வமான வழியை தெரிவு செய்பவரிடம் கண்டிப்பாக ஒரு முதிர்ச்சி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கருத்திலும் முதிர்ச்சி இருக்கும். கண்டிப்பாக உங்கள் முந்தைய (ஜாக்கி, கழுகு) பதிவுகளில் அது இல்லை. மாறாக சிறு பிள்ளைகளிடம் காணப்படும் ஈகோ சண்டை தான் அவற்றில் தோன்றிற்று.
ஆகையால் உங்கள் முந்தைய பதிவகள் (ஜாக்கி) முதிர்வற்றவை என்பதனை நீங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன்...

Potemkin said...

//மேலும் தான் உபயோகிக்கும் நாற்றம் பிடித்த வார்த்தைகளுக்கும், சொலவடைக்கும் தான் லோக்கல் லோக்கல் என்ற காரணத்தை அவர் சொல்வது கேலிக்குறிய ஒன்று. லோக்கலான மக்கள் எல்லாரும் இப்படித்தான் பேசுகிறார்களா? லோக்கலென தன்னைச் சொல்லி லோக்கல் மக்களான உழைக்கும் தோழர்களை அசிங்கப்படுத்த வேண்டாமென கண்டித்துக் கூறிக்கொள்கிறேன். //

I back this point...

-Potemkin

இளைய கவி said...

ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை! அது போல ஜாக்கி மாறுவதில்லை, புடிச்சா படிங்க, புடிக்காட்டி படிக்காதீங்க, அத விட்டுட்டு adult option enable பண்ணு சிருபுள்ளத்தனமா சொல்லிகிட்டு , போங்க சார் போயி காம்பிளான் குடிச்சிட்டு போகோ சேனல் இருந்தா பாருங்க ,

Related Posts Plugin for WordPress, Blogger...