Tuesday, October 19, 2010

ரஜினி இல்லாதொரு எந்திரன் என்னவாகியிருக்கும்!!??

இந்த கட்டுரை எந்திரனைப் பற்றி அல்ல. எந்திரனில் வந்த ரஜினியையும் சங்கரையும் பற்றி. முதல் முறை எந்திரன் படம் பார்த்து முடிக்கும் போது "இனி சங்கர் இல்லாமல் ரஜினியால் நடிக்க முடியுமா?"என்று எல்லாரையும் நினைக்கவைத்தார் சங்கர். சங்கர் இல்லாமல் இனி ஒரு ரஜினி படம் என்பது ரவிக்குமாரோ, வாசுவோ இயக்கினால் மிகச் சாதாரணமாகவே இருக்கும் எனவும் நினைத்தோம். மேலும் ரஜினியால் இனி சங்கரை தாண்டி சிந்திக்கவே முடியாது. சங்கரிடம் சரணடைந்துவிட்டார் என்றெல்லாம் யூகங்களும் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை. முதலில் எந்திரன் திரைப்படத்தை இரண்டாகப் பிரிப்போம். ரஜினி இல்லாத சங்கரின் எந்திரன், சங்கர் இல்லாத ரஜினியின் எந்திரன் என்று.

படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி, சிட்டி எந்திரனுக்கு முதல் காட்சியில் கண்ணாடி மாட்டி விடும் முன், வசி ரஜினி தன் பழைய ஸ்டைலில் கண்ணாடியை மாட்டமுயற்சிப்பார். மாட்ட முடியாமல் போகும். பின்னிருந்து சந்தானமும், கர்ணாசும் நக்கலாக சிரிப்பார்கள். இந்த ஒரே காட்சியில் இந்தப் படத்தில் வசி ரஜினி ஹீரோ ரஜினி அல்ல, சிட்டிதான் இந்தப்படத்தில் ஹீரோ ரஜினி என்று உணர்த்தியிருப்பார் சங்கர். இதைத் தவிர்த்து இயக்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சி என்று ஒன்றைக் கூட இந்தப் படத்தில் சொல்லமுடியவில்லை.
    
இந்தப் படத்தில் வரும் சிட்டி ரஜினி இடம்பெறாத பெரும்பான்மை காட்சிகள் சங்கரின் முந்தைய படங்களின் ஜெராக்ஸ். வசி பல நாட்கள் தன்னுடன் பேசாததால் சனா வந்து சந்தானத்திடம் புலம்பும் காட்சி (வசனம்) அப்படியே முதல்வனில் மனீஷா கொய்ராலா, மணிவண்ணன் மற்றும் வடிவேலுடன் பேசிய அதே வசனம். சங்கரின் முந்தைய படங்கள் போல எல்லா இடங்களிலும் ஊடக ஆட்கள் மைக்கை நீட்டியபடியே அலைகிறார்கள். குப்பை எங்கு கொட்வார்கள் என கேட்க ஒரு காட்சி வைத்து, அதில் மாநகராட்சி அதிகாரி வழக்கமான சங்கர் பட பாணியில் பதில் அளிக்கிறார். நாயகி படிக்கும் போது வழக்கம் போல் எதிர்த்த வீட்டு பணக்கார பையன்கள் சத்தமாக பாட்டு கேட்டு தொல்லை செய்கிறார்கள். சரோஜா தேவி கல்லூரிக்கு போன காலத்தில் இருந்த காட்சி அது. மீண்டும் ஐஸ்வர்யா ராயை வைத்து சங்கர் அந்த காட்சியை உயிர்பித்திருக்கிறார்.

  மேலும் படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கான 'lead scenes' எல்லாமே அதரப்பழசான சங்கர் படங்களின் மற்றும் பிற தமிழ் படங்களின் மறுஒளிபரப்பு. 'காதல் ரத்து' போன்ற திணிக்கப்பட்ட பழங்கால வகையறா வசனங்கள், கலாபவன் மணி ஊறுகாய் ஆக்கப்படும் எம்.ஜி.ஆர் காலத்து காட்சி என எல்லாமே அதே ரகம் தான். கொசுவை பிடிக்க சிட்டி ஓடுகிறார். இது எஜமானில் வந்திருந்தாலும் குழந்தைகள் ரசித்ததால் ஏற்றுக்கொள்ளலாம். இனிதான் முக்கியமான மேட்டரே.!!!

 இரண்டு விஞ்ஞானிகள். ஆளுக்கொரு வீடு மாதிரி, ஆளுக்கொரு பெர்சனல் லேப் வைத்திருக்கிறார்கள். ரோபோவுக்கு நட்டு போல்ட்டு மாட்டுவதில் இருந்து தோல் மாட்டுவது வரை அவர்களே செய்கிறார்கள்.  வசிக்காவது இரண்டு மொக்கையான அள்ளக்கைகள் இருக்கிறார்கள், போராவுக்கு அதுவும் கிடையாது. சிட்டி ரோபோவை செய்து முடித்துவிட்டு அதுக்கு சின்ன சின்ன 'music, sports, arts, languages' என பெயரிட்ட 'hard drive'கள் இணைத்து load செய்கிறார் வசி. இந்த கேலிக்குரிய காட்சியை காட்டாமலாவது விட்டிருக்கலாம்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் காட்சி ஒன்று உள்ளது. நூறு போலிஸ்காரர்களை கொன்ற ரோபோவைப் பற்றி விசாரிக்க வசி labக்கு வரும் போலிஸ்காரர் "என்ன டீ போட்டிருக்கீங்க? சக்கரையே இல்லாம?" என்று டிக்கடைகாரரிடம் நாம் கேட்கும் தோரணையில், "என்ன ரோபோ செஞ்சிருக்கீங்க?" என்று சாதாரணமாக கேட்கிறார். வசனங்கள் ஒன்றிரண்டைத் தவிர அனைத்துமே மட்டம். மேற்கண்ட வசனம் உச்சகட்டம். வெளிநாட்டு தீவிரவாதிகள் ஒரு தரகரோடு வருகிறார்கள், போரா சில அனிமேஷன் படங்களைக் காண்பிக்கிறார், உடனே கல்யாண வீட்டுக்கு விருந்து ஆர்டர் செய்வது போல 1000 ரோபோ வேண்டுமென கூறி முன்பணம் தருகிறார்கள். அந்த காட்சியில் வரும் அனிமேஷன் போன்ற ஒரு மட்டரகமான கேலிக்கூத்து எந்தப் படத்திலுமே வந்ததில்லை. குறைந்தபட்சம் ரோபோவின் செயல் திறனை, அதன் தொழில்நுட்பம் மூலமாவது விளக்க முற்பட்டிருக்கலாம். சரி அதை விடுங்கள். போரா தான் வடிவமைத்த ரோபோவிடம் சில உத்தரவு போடுகிறார். அது ஏறுக்கு மாறாய் செய்து தொலைக்கிறது. 'Gun'ஐ எடு என்கிறார் அது bunஐ எடுக்கிறது. உடனே போரா "gun எடுன்னா bun எடுக்குற? மயிரப் புடுங்குனு சொன்னா உயிரப் புடுங்குவியா?" என மூன்றாம் தர அடியாள் போல பேசுகிறார். ரோபோவும் உடனே போராவின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு "உயிரப் புடுங்கு, மயிரப் புடுங்கு" எனக் கத்துகிறது. தலையில் தான் அடித்துக்கொள்ளவேண்டும்.இந்த வசனம் வைப்பதற்காகவே gun பக்கத்தில் bun வைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாம் தர இயக்குனர்கள் செய்யும் வேலை இது.

 இதுபோல் எண்ணிலடங்காத காட்சிகள் படத்தில் உண்டு, நான் எதேனும் காட்சியை மறந்திருந்தால் comment பகுதியில் கூறுங்கள். இப்படி எத்தனையோ அரைத்த மாவையே அரைத்த காட்சிகள் வந்து நமக்கு ஒன்றே ஒன்றைதான் கூறிச் செல்கின்றன. சங்கர் என்ற இயக்குனருக்கு சரக்கு தீர்ந்துவிட்டது. அர்ஜூன், கமல், விக்ரம் என வரிசையாய் ஹீரோக்களை மாற்றி, சமூகத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் வெறுப்பையும், பிரச்சினைகளையும் காட்ட வேண்டிய விதத்தில் மசாலா தடவி காண்பித்து, தனக்கு சமூக அக்கறை அளப்பெரிய அளவில் இருப்பதாக ஒரு வெளித்தோற்றம் ஏற்படுத்தி பணம் சேர்த்த இயக்குனருக்கு ஒரு புதிய பரிமாணத்தில் திரைப்படம் எடுப்பதற்கான கற்பனை முற்றிலும் தீர்ந்துவிட்டது. இனி எந்திரனில் வருவது போன்ற ஒரு தொழில்நுட்பம் சார்ந்த, கதையோ, காட்சி பிடிமானமோ தேவைப்படாத ஒரு கதையை மட்டுமே சங்கரால் கொடுக்க முடியுமென தோன்றுகிறது. மேலும் படத்தில் பணிபுரிந்த ஹாங்காங் குழு ஏற்கனவே அந்த பாம்பு காட்சிகளை ஒரு ஹாங்காக் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். சிட்டி ஆயிரம் துப்பாக்கிகளை வைத்திருக்கும் காட்சி Mask படத்தில் அப்படியே வரும். இதுபோல் பல காட்சிகளை சொல்லலாம் எனினும் ரோபோ பற்றிய படம் என்றால் இதையெல்லாம் தவிர்த்து எடுக்க இயலாது என்பதும் உண்மையாதலால் இத்தோடு விட்டுவிடுவோம்.

  இப்போது சங்கர் இல்லாத ரஜினியின் எந்திரன் பற்றி பார்ப்போம். மேற்சொல்லப்பட்ட இப்படிப்பட்ட எந்திரனில் ரஜினி இல்லையென்றால் என்ன ஆகி இருக்கும்? முதல் காட்சியிலேயே எழுந்து வெளியேறியிருப்போமா மாட்டோமா? சிறிதளவு கூட திரைக்கதையிலும், வசனங்களிலும் அக்கறை செலுத்தாமல் சங்கரால் தரப்பட்டிருக்கும் இந்தப் படம் ரஜினி மட்டும் இல்லையென்றால் சன் பிக்சர்சை நடுத்தெருவுக்கு கொண்டுபோயிருக்கும். ரஜினியின் அப்பாவித்தனமான மற்றும் வில்லத்தனமான நடிப்பிலும், இதுவரை நாம் பார்க்காத கணினி தொழில்நுட்பக் காட்சிகளிலும் சங்கர் இந்தப் படத்தில் செய்துள்ள அத்தனை அபத்தங்களையும், மறுஒளிபரப்பையும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். ரஜினி என்ற நடிகன் "ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ.....வசி..ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ" என்ற ஒற்றை வரியில் மொத்தமாய் படத்தின் செலவையும் லாபத்தையும் வசூலில் மீட்டிருக்கிறார். ரஜினியால் மட்டுமே முடியும் மந்திரசெயல் அது.

 பல வருடங்களுக்குப் பின் ரஜினியின் விஸ்வரூப நடிப்பை பார்த்த நமக்கு, இன்று ஏதோ சங்கர் தான் ரஜினிக்கு இனி எல்லாமே எனக் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை. சங்கரை விட பல மடங்கு திறமையுள்ள ரவிக்குமாரோ, வாசுவோ, முருகதாஸோ... சரியான கதையுடன் ரஜினி என்ற நடிகனை தட்டியெழுப்பும் காட்சிகளுடன் படமெடுத்தால் எந்திரனை விட பல மடங்கு அந்தப் படம் நம்மை ஆட்கொள்ளும் என்பதில் மிகையில்லை.
எந்திரன் என்னும் கம்ப்யூட்டர் குப்பையை விற்க சங்கருக்கு ரஜினி மிக தேவை பட்டிருக்கிறார். ஆனால் ரஜினிக்கு சங்கர் கொஞ்சம் கூட தேவையில்லை என்பதே என் கருத்து!!!


22 comments:

முத்துசிவா said...

//ரஜினி என்ற நடிகன் "ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ.....வசி..ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ" என்ற ஒற்றை வரியில் மொத்தமாய் படத்தின் செலவையும் லாபத்தையும் வசூலில் மீட்டிருக்கிறார். ரஜினியால் மட்டுமே முடியும் மந்திரசெயல் அது. //

100% கரெக்ட்

Suburaman said...

Excellent article. Vaazhthukkal. Ur other articles too are purely awesome. Am following.

Kannan said...

//ரஜினி என்ற நடிகன் "ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ.....வசி..ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ" என்ற ஒற்றை வரியில் மொத்தமாய் படத்தின் செலவையும் லாபத்தையும் வசூலில் மீட்டிருக்கிறார். ரஜினியால் மட்டுமே முடியும் மந்திரசெயல் அது.//
மிகவும் சரி..

//எந்திரன் என்னும் கம்ப்யூட்டர் குப்பையை விற்க சங்கருக்கு ரஜினி மிக தேவை பட்டிருக்கிறார். ஆனால் ரஜினிக்கு சங்கர் கொஞ்சம் கூட தேவையில்லை என்பதே என் கருத்து...
Cool..

Movie Posters said...

Nice review aboutt Shankar

Anonymous said...

Recently I saw few interviews of shankar.. ennamo steven spielberg brother-in-law maathiri pesaraar...
Rajini mattum illanna... padam pappadam aayirukkum,..I wouldnt have watched it even for a single time. I watched it 6 times so far..
This movie is a hit just bcos of one man.. Thats RAJINI...

பூங்குழலி said...

//ரஜினி என்ற நடிகன் "ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ.....வசி..ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ" என்ற ஒற்றை வரியில் மொத்தமாய் படத்தின் செலவையும் லாபத்தையும் வசூலில் மீட்டிருக்கிறார். ரஜினியால் மட்டுமே முடியும் மந்திரசெயல் அது.//
மிகவும் சரி..

ரைட்

sathish said...

boss antha train fighttukku munnadi charge ethura comediya vittuteenga

deesuresh said...

""சங்கரின் ஜீன்ஸ் படம் தவிர எதுவுமே எனக்கு புடிக்காது. சிவாஜி உட்பட. ஆனால் அத்தனைக்கும் சேர்த்து இயந்திரனை தந்து அசத்தியிருக்கிறார் சங்கர்."" இது கூட உனது கமெண்ட் தான் அசோக்கு...!!
ஆனாலும் ரஜினி இல்லாத எந்திரன் என்னவோ கலைஞர் இல்லாத பராசக்தி மாதிரித்தான்..!!

எப்பூடி.. said...

//மூன்றாம் தர இயக்குனர்கள் செய்யும் வேலை இது. //

யூ மீன் த கிரேட் டிரெக்டர் பேரரசு!!!!!

பால் [Paul] said...

இது மிகவும் அபத்தமான பதிவாகவே பட்டது எனக்கு.. பதிவுகள் எப்போதும் நடுநிலையாக இருக்க வேண்டுமென்பது என் கருத்து. மக்களை கவரும் ரஜினியின் மாயத் திறமைகளை நான் ஒத்துக் கொள்கிறேன் என்றாலும் கூட, ஒரேயடியாக ஷங்கரை ஒதுக்கியிருக்கும் இந்த ஓரவஞ்சனை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள இயலாதது. ஹாலிவுட்டின் பல படங்களின் இன்ஸ்பிரேஷன் தான் என்றாலும் கூட ஷங்கரின் திறமைகளை முழுவதுமாக ஓரம்கட்டி விட முடியாது..

தமிழ்நாட்டில் மட்டுமே பெரிதாக பேசப்பட்ட ரஜினியை உலக அளவில் இதுவரை கண்டிராத எல்லைகளை காண செய்த படங்கள் இரண்டு.. ஒன்று சிவாஜி.. மற்றொன்று எந்திரன்.. இவ்வளவு நாட்கள் ரஜினியை வைத்து படமெடுத்த ரவிக்குமாராலும் வாசுவாலும் (அவர்களது திறமையை குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும் கூட, இதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை) ஏன் இத்தகைய சாதனையை படைக்க முடியவில்லை..?

உங்கள் பதிவின் மறுபகுதி கேள்வியான "இப்போது ஷங்கர் இல்லாத ரஜினியின் எந்திரன்" என்னும் கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் எளிது:
1. சாத்தியமில்லை..
2. அப்படியே சாத்தியமாக இருந்தாலும் கூட அது இன்னொரு படையப்பாவாகவோ அல்லது சந்திரமுகியாகவோ மட்டுமே இருந்திருக்க முடியும்.. அதனுடைய வெற்றி இந்திய முழுவதுமோ அல்லது உலக அளவிலோ பேசப்பட்டிருக்காது..

அதனால் தான் ரஜினியின் வாயாலேயே இசை வெளியீட்டு விழாவில் அவர் சொன்னார், "எந்திரனில் நான் எதுவும் சொந்தமாக செய்யவில்லை.. முழுக்க முழுக்க ஷங்கர் சொன்னதை அப்படியே செய்தேன்" என்று.. ரஜினியிடம் மக்களை ஈர்க்கும் திறமை இருக்கிறது.. அதை உலகளவில் பேச வைக்க மேடை அமைக்கும் திறமை நிறைந்த மனிதர் ஷங்கர்.. அவர்கள் இருவரும் இணையும் போது தான் அந்த மாயாஜாலம் பிறக்க முடியும்.. ஷங்கரால் மட்டுமோ அல்லது ரஜினியால் மட்டுமோ அது முடியாது..

Anonymous said...

@சுரேஷ் அண்ணே.

முதல் முறை எந்திரன் படம் பார்த்து முடிக்கும் போது "இனி சங்கர் இல்லாமல் ரஜினியால் நடிக்க முடியுமா?"என்று எல்லாரையும் நினைக்கவைத்தார் சங்கர். சங்கர் இல்லாமல் இனி ஒரு ரஜினி படம் என்பது ரவிக்குமாரோ, வாசுவோ இயக்கினால் மிகச் சாதாரணமாகவே இருக்கும் எனவும் நினைத்தோம்.//

எந்திரனைப் பற்றியே என் முதல் பதிவை அலசவே இந்தப் பதிவு. அதனால் தான் இந்தப் பதிவை மேற்கண்ட வரிகளோடு ஆரம்பித்திருக்கிறேன் அண்ணே.

Shankar said...

nooru peroda arivum thiramaiyum...
nooru peroda aakka sakthi...
pondra dialogues miga miga miga mokkai...

தனி காட்டு ராஜா said...

//ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ.....வசி..ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ//

:))

Anonymous said...

Recharging the robo from Electric Train Junction Box, Cars total waste.. The robo is disqualified. But Rajini taking it to public? then villan is talking to the robo? He is convincing it .. Inventor itself doesn't have a control on the machine what a idea sabjjj?

பார்வையாளன் said...

சுஜாதா வசனம் எழுதிய படங்களில் இதுதான் பெஸ்ட் என்பதே உண்மை.. வசனத்தை குறிப்பிடாத ஒரு விமர்சனத்தையும் பார்க்க முடிய்வில்லை என்பதுதான் நிலவரம்

ஜோ/Joe said...

//ஆனாலும் ரஜினி இல்லாத எந்திரன் என்னவோ கலைஞர் இல்லாத பராசக்தி மாதிரித்தான்..!!//
தவறான உவமை ..நடிகர் திலகம் இல்லாத பராசக்தி என்றிருக்க வேண்டும்.

Sai said...

உங்க மொக்கய் பதிவுக்கு ரஜினியே பதில் சொல்லி இருக்கிறார் சன் டிவியில்.
அந்த ம்ம்மே சீன் கூட ஷங்கர் ஸ்க்ரிப்ட் என்று.. ஷங்கரின் உழைப்பு இன்று போட்ட மேக்கிங்கில் பார்த்தால் புரியும். தயவு செய்து நுனிபுல் மேயாதிர்கள். i accept with Mr.Paul.

வேழமுகன் said...

மிக சரியான பார்வை. ரஜினியின் பெயரை வியாபாரத்துக்கு மட்டும் பயன்படுத்த நினைக்கும் ஷங்கர் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரஜினி தயவு செய்து அவருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கவேண்டும்.

"தளபதி" ஒரு உதாரணம். அது 100 % மணிரத்னம் படம். 200 % ரஜினி படம். ஒரு அருமையான Win-Win formula..

Anonymous said...

anna this is really cool u have written wat all i felt about endhiran:)add this all forming of round ball like structure shown in mib and other animations are from very old english movies

Anonymous said...

//"ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ.....வசி..ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ" என்ற ஒற்றை வரியில் மொத்தமாய் படத்தின் செலவையும் லாபத்தையும் வசூலில் மீட்டிருக்கிறார். ரஜினியால் மட்டுமே முடியும் மந்திரசெயல் அது. //
Yes this can done only be rajni, this is one of highlight in enthiran!

// 'Gun'ஐ எடு என்கிறார் அது bunஐ எடுக்கிறது. உடனே போரா "gun எடுன்னா bun எடுக்குற? மயிரப் புடுங்குனு சொன்னா உயிரப் புடுங்குவியா?" என மூன்றாம் தர அடியாள் போல பேசுகிறார். ரோபோவும் உடனே போராவின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு "உயிரப் புடுங்கு, மயிரப் புடுங்கு" எனக் கத்துகிறது. தலையில் தான் அடித்துக்கொள்ளவேண்டும்.இந்த வசனம் வைப்பதற்காகவே gun பக்கத்தில் bun வைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாம் தர இயக்குனர்கள் செய்யும் வேலை இது. //
That scene with gun and bun is 100%right only,there is no fault with that, as scientist had to check that if he said gun, what robot sensing and taking gun or bun as both having moreover same pronunciation.

Anonymous said...

//சரியான கதையுடன் ரஜினி என்ற நடிகனை தட்டியெழுப்பும் காட்சிகளுடன் படமெடுத்தால் எந்திரனை விட பல மடங்கு அந்தப் படம் நம்மை ஆட்கொள்ளும் என்பதில் மிகையில்லை.
எந்திரன் என்னும் கம்ப்யூட்டர் குப்பையை விற்க சங்கருக்கு ரஜினி மிக தேவை பட்டிருக்கிறார். ஆனால் ரஜினிக்கு சங்கர் கொஞ்சம் கூட தேவையில்லை என்பதே என் கருத்து!!! //
Answer to this said by rajni in exclusive interview in suntv on diwali that "from now on if shankar calls to any film i will go to act! and he too said if anyone other than shankar,approached me with same enthiran story, i will not accepted it"

Anonymous said...

I have to admit that i typically get bored to learn the whole thing but i think you can add some value. Bravo !

Related Posts Plugin for WordPress, Blogger...