Friday, October 1, 2010

எந்திரன் விமர்சனம்- எல்லாம் வல்ல எந்திரன்.

எந்திரன் படத்தின் ஒரு வரியை சங்கர் யோசிக்கும் போதே  நம்மூர் பத்திரிக்கைகள் திரைக்கதையையே எழுதி வெளியிடத் தொடங்கின. ஆனால் அத்தனை யூகங்களையும் விட்டு விலகி கதையளவிலும், தொழில்நுட்ப அளவிலு விரவி நிற்கிறது எந்திரன். பிரம்மாண்டத்தை லாரிக்கும், ரோட்டுக்கும் பெயிண்ட் அடித்து காட்டும் இயக்குனர் சங்கர், இந்தப் படத்தில் பிரம்மாண்டத்தை கதைக்குப் பயன்படுத்தி பார்ப்பவர்களை பிரம்மிக்க வைத்திருக்கிறார் எந்திரனில்.ஒருவரி கதை:
கதையையும் காட்சியையும் விவரிக்கும் எண்ணமில்லையாதலால் ஒருவரியில் முடிக்கிறேன். வசீகரன் என்ற விஞ்ஞானி எல்லாம் வல்ல இயந்திரன் சிட்டியைப் படைக்கிறார். அதை ராணுவத்துக்கு உதவ அனுப்பலாம் என்ற எண்ணத்தில். பின் ஒரு சகவிஞ்ஞானியின் விஷம அறிவுரையால் வசீகரன் தான் படைத்த எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஊட்டுகிறார். எந்திரனுக்கு வசியின் காதலி சனாவின் மீதே காதல் பைத்தியம் பிடிக்கிறது. கிறுக்குத்தனம் செய்கிறது. பின் வில்லனின் கையில் மாட்டி வில்லத்தனம் செய்து சனாவை அடைய முயற்சிக்கிறது. வசி இதை முறியடிக்கிறார்.

விமர்சனம்:
கமலோ, அஜீத்தோ, ஷாருக்கானோ நடித்து இருந்தால் இந்த Action-Science Fiction படம் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் ரஜினி நடித்ததால் Action-Science Fiction-Fantasy ஆக மாறி மிக நன்றாக இருக்கிறது. எந்திரன் படம், ரஜினி என்ற காலுடனும், ஷங்கர் என்ற காலுடன் சேர்ந்து அநாயாசமாக நடந்திருக்கிறது. முதலில் இருந்த irobo படத்தின் காபியாக இருக்குமோ என்ற என் ஐயத்தை படத்தின் கதை சுத்தமாக நொறுக்கிவிட்டது. ரோபாவாக வரும் ரஜினியை குழந்தைகளுக்கு இதுவரை பிடித்ததை விடவும் மிகவும் பிடிக்கும். படம் முழுக்க ரஜினி ரஜினி மற்றும் ஆயிரக்கணக்கான ரஜினி. பிரம்மிப்பின் உச்சம். சங்கர் என்ற இயக்குனரின் Action scenes சார்ந்த கற்பனைகளை சொல்லி மாளாது. இத்தனை ஆலிவுட் பார்த்தும் அதன் பாதிப்பு இல்லாமல் ஒரு கலைஞனால் படம் எடுக்க முடிகிறதென்றால் ஆச்சரியம் தான். சங்கரின் ஜீன்ஸ் படம் தவிர எதுவுமே எனக்கு புடிக்காது. சிவாஜி உட்பட. ஆனால் அத்தனைக்கும் சேர்த்து இயந்திரனை தந்து அசத்தியிருக்கிறார் சங்கர். சங்கரின் கடின உழைப்பு ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.  சன் பிக்சர்சின் அடாவடி விளம்பரங்களும், வியாபார தந்திரங்களும் எரிச்சலூட்டும் வகையில் இருந்திருந்தாலும் எந்திரனை அவர்களைத் தவிர யாராலும் தயாரித்திருக்க முடியாது. (ஊரை அடித்து உலையில் போட்டாலே ஒழிய பணத்தை இப்படி இரைக்க முடியுமா என பின் சீட்டில் ஒரு தாத்தா சொன்னார்!) ஐஸ்வர்யாராய் மிக அழகு. கொஞ்சமாய் வயசு தெரிந்தாலும் மிக அழகாகத்தான் உள்ளார். ரகுமானின் இசை காட்சிகளோடு ஒன்றியும், சில நேரங்களில் ஒன்றாமலும் வருகிறது. சண்டைக் காட்சிகள் இசை மிரட்டல். ஆனால் ஆயிரம் பேரை கொல்லும் காட்சிகளில் Fantasy இசை அமைத்துள்ளது சற்றே ஒரு மாதிரியாக இருந்தாலும், எந்திரனின் வில்லத்தனத்தை நாம் ரசிப்பதால் இசை நன்றாகவே உள்ளது.  சாபு சிரில் கலை பிரம்மிப்பின் உச்சம். அவரையன்றி ஆளில்லை. ஒரு காட்சியில் நடிக்கவும் செய்கிறார். வில்லன் நடிகர் டேனி டெங்சோபாவின் தோற்றத்தில் அத்தனை கம்பீரம். ஆனால் அவரிடமிருந்து ரகுவரன் டைப் வில்லத்தனத்தை எதிர்பார்க்கும் போது ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் எந்திரனின் வில்லத்தனம் டேக் ஆஃப் ஆகும் போது அதில் முழுமையாக மூழ்கிப்போகிறோம். எந்திரன் ஒரு முழுநீள, இந்தியாவின் முதல் Action fantasy படம். இப்படியொரு படைப்பு தமிழ் நாட்டில் இருந்தது வந்தது மறைக்கப்பட்டு, இந்தியப்படமாக இந்திப்படமாக உலகின் முன் எடுத்துக்காட்டப்படாமல் செய்தால் மகிழ்ச்சிதான்.  எந்திரனை அனைவருக்கும், முக்கியமாக குழந்தைகளுக்கும்  மிகவும் பிடிக்கும். ஆனால் படம் பார்க்கும் போது எனக்குள் ஓடிய கேள்வி, இனி சங்கரை விட்டால் ரஜினியின் படங்கள் எடுபடுமா என்பதுதா. ஏனென்றால் ரஜினியை முழுதாக வேறொரு பரிமாணத்தில் சங்கர் காட்டியிருக்கிறார். ரஜினியை எந்திரனில் பார்க்கப் பார்க்க பிரமிப்பு மாளவில்லை. இந்த ரஜினியை ரவிக்குமாராலும், வாசுவாலும் காட்டவே முடியாதெ என்பதும் உண்மை. எனினும் இந்தக் கேள்வியை ரஜினியின் அடுத்த பட அறிவிப்புதான் தீர்க்கும்!!

15 comments:

Anonymous said...

ஏற்கனவே இணையத்தில் கலாபவன் மணி வரும் காட்சியில் தமிழினத்தையே கேவலப்படுத்தி காட்டப்பட்டுள்ளாதாக விவாதங்கள் நடைபெறுகின்றன. அதைப் பற்றிய கருத்துக்களையும் இடுங்கள். நன்றி.

PG said...

I had the same opinion when I read the movie reviews. Haven't seen the movie yet, though. But I'm afraid that Rajini should now be really careful in choosing his directors. Another masala movie from Rajini (like Annaamalai or Veera etc.. why even Padayappa) might not get along well. I like Padayappa.. but only for the second part. :P

முத்துசிவா said...

u r cent % rite... endhiran world class.....

deesuresh said...

ரொம்ப புகழ்ச்சியாய் இருக்கு...!! அசோக்கு அப்படி எழுதற ஆளுமில்லை..!! சங்கர் படம்னாலே ஓவரா நக்கலடிப்பாப்ல..!! எந்திரன் பாட்டுக்கு கூட நல்லால்லன்னு ஃபீல் பண்ணாப்ல..!! ஆனால் இப்படி பாராட்டி தள்ளிருக்காப்ல..!! போயி பார்ப்போம்..!!

suji said...

after seeing this review.. hmmm ya i'm getting more eager on to watch ROBO... bt tic?? :(

Anonymous said...

@suji

Adhu summa porali. Tckt easy ya kidaikum innum two days la.. U wont believe, but 6 or 7 seats were empty in the theatre in which i watched the movie. Egapatta theatresla oduthu, so two days la housefull humbug over aayirum. enjoy the movie. :-))

karthick said...

Naalaikku kalaila 8 mani show in PVR..

Aparam comment post panraen..

jegan said...

Saw Enthiran noon show! Was shocked to see half the theater empty!!! Film has a good touch of the hollywood production n graphics team!!! Credits of to them,,, Very weird Rajni film with no punch dialogues!! Overall A leap for the Tamil film industry,, will be a bench mark film for the graphical content! Now all the filmstars will be jealous of Rajini!

TechShankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

Anonymous said...

அருமையான தலைப்பு... நல்ல விமர்சனம்.

-வினோ

எப்பூடி.. said...

// எனினும் இந்தக் கேள்வியை ரஜினியின் அடுத்த பட அறிவிப்புதான் தீர்க்கும்!! //

இதைதான் நானும் எதிர்பார்த்திருக்கிறேன், பொசிடிவ் விமர்சனத்துக்கு நன்றி. இன்னும் எத்தனை தடவை'என்'எந்திரனை திரையில் பார்ப்பதென்பதை இப்போது முடிவுசெய்ய முடியவில்லை :-)

ம.தி.சுதா said...

நான் பார்த்த விமர்சனங்களுக்கள் தங்களத கொஞசம் வித்தியாசமாக இருக்கிறத... ஒரு சிலர் தான் எந்திரனை ஏற்றுக் கொண்டள்ளது தான் வருத்தமாக உள்ளது...

ம.தி.சுதா said...

அது சரி ஏன் இம்புட்டு பேர் கருத்திட்டவிட்ட வாக்குப் போடல...

பிரியமுடன் பிரபு said...

ENTHIRAN LA KATHAI IRUNTHUCHA??

AHAA ENAKKU THERIYAMA POCHE?

பிரியமுடன் பிரபு said...

RAJINI IS A ONLY GOD-- APPADINU UNGA BLOG PADICHAPPA PURINJUTHU

Related Posts Plugin for WordPress, Blogger...