Friday, October 8, 2010

கொலையாய்வு. பகுதி3 -குழப்பத்திற்கு முடிவு.

  முன்னிட்ட பதிவுகளைப் படிக்க....கொலையாய்வு. பகுதி-1. கொலைகளின் மறுபக்கம்  
கொலையாய்வு. பகுதி-2. Video game திருடிய குற்றவாளி  

  கணவனின் ஆணுறுப்பை அறுத்துவிட்டு பயத்துடன் தறிகெட்டு ஓடிய ஒரு பெண் எதற்காக தன் வீட்டில் தங்கியிருந்த விருந்தாளி ராபியிடம் 100$ பணத்தையும், வீடியோ கேமையும்(video game) திருடிப்போக வேண்டும்? லொரேனா, கொலை முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அவர் நீதிமன்றத்தில் நடந்துகொண்ட முறையிலும், சாட்சியங்கள் லொரெனாவின் கணவர் வன்முறைகளை ஒவ்வொன்றாக நிரூபித்துக் கொண்டிருந்ததாலும் லொரேனா மீது இயற்கையிலேயே மக்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு soft corner ஏற்பட்டிருந்தது. ஆனால் லொரெனாவின் இந்த திருட்டு குற்றம் ஒன்றே லொரெனா வழக்கின் மீது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் உண்மை தெரிந்தபின் லொரேனாவிற்கு சாதகமாக அந்த திருட்டு சம்பவம் மாறப் போகிறது என்பதை லொரெனா உட்பட யாருமே அறிந்திருக்கவில்லை. கீழே, நடந்ததை விரிவாக பார்ப்போம்.

 சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, காலையில் தான் ராபி, லொரேனா-ஜானின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் கதவைத் தட்டிய நேரம் ஜான்-லொரேனா தம்பதியினர் உடலுறவில் ஈடுபட்டிருந்தகாக வாக்குமூலத்தில் இருவருமே தெரிவித்திருந்தார்கள். இந்த முறை லொரேனாவின் விருப்பதினோடே அது நடந்ததாக லொரேனாவும் தெரிவித்திருந்தார். (ஆனால் ஒப்புக்கொள்ளவில்லையெனில் ஜானின் வன்முறைக்கு ஆளாக வேண்டியதிருக்கும் என்று பயந்தே ஒப்புக்கொண்டதாக அந்த வாக்குமூலத்தில் விரிவாக சொல்லப்பட்டிருந்தது). விஷயத்திற்கு வருவோம். ராபி கதவை தட்டிய நேரம் ஜான் உச்சகட்டத்தை அடைந்திருந்ததால், லொரெனாவைப் பற்றி கவலைப்படாமல் கதவைத் திறக்க வெளியே சென்றிருக்கிறார். ஜானும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார் தனது வாக்குமூலத்தில். (லொரெனாவை போலீஸ் கைது செய்த போது "சுயநலம் பிடித்த மிருகம் அவன்" என அவர் கத்தியதற்கு காரணம் இந்த சம்பவம் தான்.) ராபி வீட்டின் உள்ளே வந்த சிறிது நேரத்தில் ஜானும் ராபியும் நீச்சல் குளத்திற்கு சென்றிருக்கிறார்கள். பின் இருவரும் திரும்பி வந்த போது லொரெனாவும் ஜானும் ஏதோ பிரச்சினையில் இருப்பது போல் இருந்தார்கள் என ராபி தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஜானுடன் வந்த ராபியிடம் "எங்களுக்கு சிறிது தனிமை வேண்டும்" என லொரெனா சொல்லியவுடன், ராபி சாப்பிட சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். வந்து பார்த்த போது லொரெனா தனது உடைமகளை, வீட்டை காலி செய்யும் தோரணையில் ஒரு பெட்டியில் அடுக்கிவைத்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண் Diane விருப்பமானால் இன்று தன்னுடன் தங்குமாறு லொரெனாவுக்கு விடுத்த அழைப்பை மறுத்து, "இன்று ஜானின் நண்பர் ராபி எங்களுடன் தங்கியுள்ளார். நண்பர் இருக்கும் போது ஜான் தவறாக நடக்கமாட்டார். அதனால் நான் சமாளித்துக் கொள்கிறேன்" எனக்கூறியுள்ளார் லொரெனா. இதில் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. ஜானின் நண்பன் ராபி என்ற வெறுப்பும், ராபியின் இருப்பு இன்று தன் கணவனின் வழக்கமான வன்முறையில் இருந்து தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையும் ஒருசேர லொரெனாவுக்கு இருந்துள்ளது. இதெல்லாம் நடந்துகொண்டிருந்த நாளில் தான் லொரெனா ராபியிடம் இருந்து 100$ பணத்தை திருடியுள்ளார். பின் அதற்கு அவரே பதிலும் அளிக்கிறார், "ராபி ஜானின் நண்பர். எனக்கு ஜான் 100$ பணம் தர வேண்டியதிருந்தது. அதனால் ஜானின் நண்பர் ராபியிடம் இருந்து அந்தப் பணத்தை எடுத்தேன்."என்று. முதலில் நீதிபதிகளுக்கு லொரெனாவின் மனநலத்தை சந்தேகிக்க வைத்ததி இந்த பதில் தான். பின் ஆணுறுப்பை அறுத்தெரிந்த சம்பவத்திற்கு பின், தன்நிலை மறந்து ஓடிய லொரெனா ராபியின் வீடியோ கேமை திருடியதன் பிண்ணனி என்ன? என்ற கேள்விக்கு லொரெனாவால் பதில் தர இயலவில்லை. ஆனால் அதற்கு இரண்டு தரப்பு மனநல நிபுணர்களுமே ஒரே மாதிரி பதில் அளித்தார்கள். "லொரெனா 'அந்த' சம்வத்தை செய்துவிட்டு ஓடிய போது முழுக்க முழுக்க தன்னை மறந்திருந்தார்"என்று. பின் இரு தரப்பு மனநல வல்லுனர்களின் வாக்குமூலத்தின் படி, ஏழு மணி நேர தொடர் விசாரணைக்கு பின் 'Insane' (மனநலம் சரியில்லாத காரணத்தால்) வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின் அந்நாட்டு சட்டப்படி 45 நாள் மனநல வல்லுனர்களின் மேற்பார்வையில் இண்டியானாபோலீஸீல் உள்ள மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார்.  
 
  இப்போது லொரெனாவுக்கு இன்னொரு ஆணுடன் திருமணம் ஆகி விட்டது. உலகெங்கும் உள்ள இந்த வழக்கை கூர்ந்து நோக்கிய ரசிகர்கள் (ஆம். லொரேனாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே தோன்றியது. அதும் பெண்கள் மத்தியில்) நகைச்சுவையாக இப்போது கேட்கும் ஒரே கேள்வி "லொரெனா இப்போது திருமணம் செய்திருக்கும் ஆண் எப்படி நிம்மதியாக இரவில் தூங்குகிறார்??" என்பதே!!!!! எனக்கும் அதே கேள்விதான்!!!

                             -தற்காலிகமாக முடிந்தது!

2 comments:

Coumarane said...

sariyana mental case pa.

ம.தி.சுதா said...

தங்களத இந்தப் பதிவகள் ரசிக்கக் கூடியாதாகவும் அடுத்த கட்டத்தை எதிர்பார்ப்பதாகவும் இருக்கிறது... வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...