Saturday, September 11, 2010

லார்ட் கணேஷ் இஸ் டபுள் கிரேட் (double great)இது பேரு மவுஸ் விநாயகராம். பாவம்டா அவரு.
சீனா தானா ரகசியா மாதிரி ஆக்கிட்டிங்களேடா!!

என்னடா பேண்ட் இது? பாவமா இல்லையாடா உங்களுக்கு!!


என்னடா விநாயகர இப்படி செக்சு போஸ்டர் மாதிரி ஆக்கிட்டீங்க. அத இந்தம்மா உத்து வேற பாக்குது.


ஹாய் ட்யூட்.. வாட்ஸ் அப் மேன்?சூப்பர். இன்னும் கொஞ்ச நாள்ல எங்கெங்க குத்த போறாய்ங்களோ!!


உங்கள் கார், ஷெல்ஃப், பர்ஸ், கக்கூசை அலங்கரிக்க விதவிதமான லார்ட் கணேஷ்.

ஆஹா. சாமிக்கே நம்மாளுங்க குட்டி ஜட்டி மாட்டிவுட்டாய்ங்க!
எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி விஷ்சஸ்.
        மேல நீங்க பார்த்த எல்லா விநாயகர் படத்தையும் பண்ணது நாத்தீகர்கள் இல்லப்பா. பெரியாராவது விநாயகர உடைச்சாரு. பக்தர்கள் விநாயகரா இப்படி சகீலா பட போஸ்டர் மாதிரி ஆக்கிவுட்டாய்ங்க!! அந்தக் காலத்துல் நம்ம விநாயகரு ஒரே மாதிரிதான் இருப்பாரு. தும்பிக்கை, தொந்தி, பெரிய காது, ஒத்த தந்தம். ஆனா இப்போ லேட்டஸ்டா எல்லாருக்கும் விநாயகர புடிச்சதால பயங்கர ஃபேஷனா டிசைன் டிசைனா ஆயிட்டாருப்பா. அதுவும் இப்போ காலேஜ் பொண்ணுங்க எல்லாம் "ஹேய். ஐ லைக் லார்ட் கணேஷ்"னு சொல்லி இந்த பசங்களையெல்லாம் உசுப்பேத்திவுட்டு, இப்ப விக்கிற விநாயகர் பொம்மை எல்லாம் ஹேர் க்ளிப் மாதிரி ஆயிருச்சு. அதை வாங்கி அலமாரில வைக்கிறாய்ங்க, கார்ல வைக்கிறாய்ங்க, கீசெயின்ல வைக்கிறாய்ங்க, பர்ஸ்ல வைக்கிறாய்ங்க, பொட்டுல வைக்கிறாய்ங்க. இவ்ளோ ஏன், என் நண்பன் ஒருத்தன் கக்கூஸ்ல வச்சிருந்தான். என்னடானு கேட்டா பிராப்ளம் இல்லமா கக்கூஸ் போறதுக்காக வேண்டிகிட்டானாம். இதுல பெரிய காமடி என்னான்னா இப்போ இருக்குற பிள்ளையார்ஸையெல்லம் உத்து உத்து பாத்தாதான் பிள்ளையார்னே தெரியுது. இவனுங்க கைல பிள்ளையார் படுற பாடு இருக்கே. (பார்க்க படங்கள்) தாங்க முடிலடா சாமி. இதுக்கு அவரு அழுக்குருண்டையாவே இருந்திருக்கலாம்.

இது இப்படின்னா நம்ம வீட்ல இருக்க பொம்பளைங்க சாணி அல்லது களிமண்ணை அள்ளி பிள்ளையாரு புடிக்கிறேன் பேர்வழினு ரோட்டுல தட்டுல வச்சு நடப்பாங்க. அதை பார்த்தா ஏதோ அசிங்கம் பண்ணத தட்டுல வச்சி கொண்டு போற மாதிரியே இருக்கும்.

மெயின் மேட்டர் ஓவர். இப்போ லார்ட் கணேஷோட பர்த் ஸ்டோரி தெரியாதவங்க கீழ படிங்க....
எல்லா சாமிலயும் கொஞ்சம் ஸ்பெஷல் நம்ம லார்ட் கணேஷ். அவர கும்பிட்டா ஆப்ப எடுத்துவுடுவாரு. கும்பிடலேனா ஆப்பு அடிச்சிவுட்ருவாரு. நம்ம தமிழ் பட வில்லனுங்க மாதிரி. அவரு பர்த் ஸ்டோரியே செம டெரரா இருக்கும். ஒருநாளு பார்வதி ஆன்ட்டி குளத்துல குளிக்க போனாங்க. அப்போ யாருனா எட்டி பாத்துட்டா த்ரிஷா மாதிரி எதாச்சும் பிரச்சினை ஆயிடுமோனு பயந்து அவங்க உடம்புல இருந்த அழுக்க எல்லாம் ஜாயின் பண்ணி, உருட்டி ஒரு பெரிய்ய உருவம் செஞ்சாங்க. (டேய் எவன் டா அது "அதான் அழுக்கையெல்லாம் உருட்டிட்டாங்களே அப்புறம் எதுக்கு குளிக்க போனாங்க"னு கேக்குறது? சாமி மேட்டர்டா கண்ணா. நோ கிராஸ் டாக். கன்னத்துல போட்டுக்க) அப்படி அழுக்கையெல்லாம் உருட்டி அதுக்கு லைஃப் கொடுத்து, குளத்தாங்கரைல நிப்பாட்டி "யாராச்சும் கேமராவோட உள்ளாற வந்தா பாத்துக்கோ, அம்மா குளிச்சிட்டு வந்துர்றேன்"னு சொல்லிட்டு குளிக்கப் போயிட்டாங்க. அப்போ பார்த்து நம்ம பரமசிவன் அங்கிள் அங்க வந்துட்டாரு. சிவன் அங்கிள் அவரு பொண்டாட்டிய பாக்க உள்ள நுழைஞ்சா அழுக்குருண்டை உருவம் அடிக்க வருது. அவரு கைல இருந்த உடுக்கைய கேமரானு நினைச்சிருக்கும் போல. என்னாடா இது நம்ம பொண்டாட்டிய பாக்க இவன் உள்ள வுட மாட்றானே.. யாருடா இவன்னு டவுட்டாயிட்டாரு சிவன் அங்கிள். அப்புறம் கடுப்புல கத்திய எடுத்து கழுத்துலயே ஒரு சொருவு சொருவுனாரு, அழுக்குருண்டையோட தல உலகத்துக்கு அந்தாண்ட போயி விழுந்துருச்சு. இதைப் பாத்த பார்வதி ஆன்ட்டி ஒரே ஃபீலிங்ஸ் ஆயிட்டாங்க. "என்னாயா நீ? நம்ம புள்ளைய வெட்டிபுட்டியே?"னு சொல்லி ஓ னு அழுதாங்க. சிவனும் ஃபீலிங்ஸ் ஆயிட்டாரு, அப்புறமா அந்தப் பக்கமா வந்த ஒரு அப்பாவி யானைய புடிச்சு கழுத்தவெட்டி அழுக்குருண்டை கழுத்துல ஃபெவிகுயிக் வச்சு ஜாயின் பண்ணாங்க. இதான் நம்ம காட் கணேஷோட ஃபிளாஷ்பேக். 

என்னமோப்பா... நானும் விநாயகர் சதுர்த்திக்கி ஸ்பெஷலா ஒரு பிளாக் போஸ்ட் போட்டேன். நன்றி வணக்கம். 14 comments:

சுரேஷ்.... said...

அடுத்து ஆயுதபூஜை, விஜயதசமி வருகிறது.

வாழ்த்துக்கள் :)

ஈழவன் said...

நகைச் சுவையாக, கருத்துடன் கூடி இருந்தாலும் கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கு!

lkc said...

ஆஹா. சாமிக்கே நம்மாளுங்க குட்டி ஜட்டி மாட்டிவுட்டாய்ங்க! //
this sentence makes me laugh laugh....

pillaiyarukkum sensor thevai enbathu unga article moolama therinthu kondEn....

pillaiyarai plural il sonnathu romba romba azhako arumaiyo arumai...

appuram azhukka join panninaanga sonnathu...paarvathiyai aunty kooppittathu!

pillaiyarai nippaatti, yaaravadu cameravoda uLLAra vantha paartthukko! endra varikaL ellaam sariyana comedy enbathai vida sinthikka vendiya visayamo...romba arumaiyo arumail..

design pillayaar's images very suite to your article...

அப்பாவி யானைய புடிச்சு கழுத்தவெட்டி அழுக்குருண்டை கழுத்துல ஃபெவிகுயிக் வச்சு ஜாயின் பண்ணாங்க. இதான் நம்ம காட் கணேஷோட ஃபிளாஷ்பேக்//this is very superB....makes me to llllaaaauuugggghhhh...

I really enjoyd ur article...
really superb...
totally madurai slang , the way u presntd everything is Excellent...

very intellegent article..more commonsense...

thodarungaL vazhthukkaL...

nirayaaa pandikaikaL varukirathu unga blog il mazhaiyo mazhai !

:)))...

Anonymous said...

@சுரேஷ்
எல்லாம் நம்ம பக்தர்கள் புண்ணியம் தான்!! ஹிஹி

Anonymous said...

@ஈழவன்
கொஞ்சம் ஓவர் தான். ஆனா படத்தை மறுபடியும் பாருங்க.. அதையெல்லாம் நான் வரையலீங்கோவ்வ்வ்...

Anonymous said...

@எல்.கே

நன்றி நன்றி நன்றி...

PRINCENRSAMA said...

இதைப் படிங்க பாஸு முதல்ல.... காவிக்கூட்டம் கதி கலங்கிக்கிட்டிருக்கு...
http://www.facebook.com/album.php?aid=223595&id=597879624&fbid=448320419624&ref=mf


நம்ம எதுவும் பண்ண வேண்டாம்... இவனுங்களே அசிங்கப்படுத்துவானுங்க... நம்ம போட்போ எடுத்துப் போட்டா மட்டும் குதிப்பானுங்க...

padma said...

hellovvvvvv i object ur article wholeheartedly...eppo ethukku epdi scene oru article pottu..seri athu enna ganesaaa double great??? oh rendu pagama avaru padam and avaru pirappu kathaiya pottuka namma tamil cini directors pola topic vecheenkalakum..[:P]

oru matter olunga theriyama en article a podreenka eventhough for fun neenga sonna kathai nijamave alukkuthan..ungalku yaro thappa kathai solirukanka ok..kathai engaluku sonnavarai kulikka possum manjalil uruvamamum atharku uyirum koduthathathan ketrukom and too appavi yanaiya kolamatanka seri unkalukku ethukku waste a kathai solitu[:x]

neenka athesita irunga thesist a irunga illai agnostic a irunga athu its upon ur wish but entha oru visyathaiyum fully therinjukama demoralize panatheenka...

and too innoru information artists meant drawing artist yarum unga freind a irunda kelunga neenga thedi pidichu potrukeenkale sexy paintings nu and too oru akka uthu pakrankanum unga friend solvanga wat sort of painting athu nu ok...female anotomy ye artists blog la podranga apdi irukrappa pillayara potathu thappilai ok...

seri seri unga friend solirukaru aduthu saraswathi pooja and vijayadhasami varuthunu innelenthu purandu kavunthu yosinga epdi uttalakadi vidalam athu pathi nu angeyum varuven nan nalu semathiya unkalukku kudukka..athuvari unkalidam irundu vidai peruvathu ungal thozhi..tintinditin

Anonymous said...

@Padma

1)மிக்க்க்க நன்றி. இவ்வளவு பெரிய பின்னூட்டம் இட்டதற்கு
2)நான் எழுதியதன் நோக்கம் முழுக்க முழுக்க நகைச்சுவை மட்டுமே!! கொஞ்சம் மிளகாய் சேர்த்திருந்தேன்! நான் 'டபுள் கிரேட்'னு பேரு வச்சது உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் நகைச்சுவை காட்சி பார்த்து. சும்மா டைமிங்க்காக வச்சேன்.

3)பார்வதி அழுக்கை உருட்டியதாகத்தான் கந்தபுராணமும், சிவபுராணமும் சொல்லுது.

4)அப்பாவி யானையதான் கொன்னாங்க. "மேற்கு பக்கம் தலை வைத்துப் படுத்திருக்கும் நபரின் தலையை கொய்து வா"னு கிங்கரர்களிடம் சொல்லுவார் சிவன். அவர்கள்தான் மூடர்கள் ஆச்சே. போயி யானை தலையை கொண்டு வந்துருவாங்க. அதுவும் அப்பாவி யானைதாங்கோவ்! அது மட்டும் என்ன credit card fraudஆ பண்ணுச்சு!! இந்த டீடெய்ல்ஸ் நான் ஒரு story interestக்காக சொல்லல! :-)) ஹி ஹி. தமிழ் இயக்குனர்கள் மாதிரி!!

5)நான் atheistஆ theistஆங்குறாது மேட்டர் இல்ல. பிள்ளையார் கடவுளா மனிதர்கள் கையில காமெடி பீசாங்குறதுதான் மேட்டர்.

6)உசேன் சரஸ்வதி தேவியை நிர்வாணமா வரைஞ்சப்ப கொதித்த இந்துத்துவர்களும், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் ஏன் பிள்ளையார் பிட்டு பட போஸ்டர் ஆக்கப்பட்டபோது கொதிக்கவில்லை? அடுப்பு அணைஞ்சிருச்சோ?? ஹி ஹி. ஏன்னா பிள்ளையார கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கூட காமடி பீஸ் போல பயன்படுத்துவதுதான். இதைச் சொல்வதுதான் கட்டுரையின் நோக்கம்!

7) என் நண்பர் சுரேஷ் சந்தோசமா வாழ்த்து சொல்லல. கடுப்பா சொல்லிருக்காரு!

8) சில நேரங்கள்ல blog எழுத குப்புற படுத்து யோசிக்கத்தான் வேண்டியதிருக்கு!! :-( நான் போயி கொலையாய்வு இரண்டாம் பகுதிக்கு குப்புறப்படுத்து யோசிக்கிறேன். நன்றி. வணக்கம்.
9) முடியலடா யப்ப்ப்பாஆஆஆஅ............

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

பட்டாசு பதிவு... நிறைய சிப்பு சிப்பா வந்துச்சு.

முத்துசிவா said...

ha ha... super machi... aana ithu mari nakkalu, naiyyandi, edakku madakku ithellam ithuve kadaisi thadavaya irukkanum...:-)

karthick said...

dei, antha photova ellam kalai kannoda paakanum. unakku tasteae illada!

முத்துசிவா said...

@padma:

sister kalakkittinga.....

@ila:

sabash sariyaana potti

நாதன் said...

இந்த மாதிரி கதை எழுதி எத்தனைபேர் உங்க இயக்கத்துல சேர்ந்தாங்க. ஒருத்தன் புகழ் பெறணும்-ன சொந்த கதை எழுதனும். அடுதவனோட நம்பிக்கைய ஏளனம் பண்ணுன கூட்டம் எல்லாம் நாட்டுல தன்னோட சுயநல மிக்க ஆசை நிறைவேத்திட்டு காணாம போயிட்டு இருக்கு. ஆனா மூவாயிரம் வருஷமா எவ்வளவு பிரச்சினை வந்தாலும் பாமரனுக்கும் , பணக்கரனுக்கும் நிம்மதி தர்ற ஒரே இடம் ஆன்மிகம் மட்டும் தான்.இப்படி எல்லாம் கட்டுரை எழுதி அரைகுறை ஆசாமிய ஏமாத்தலாம் எல்லத்தையும் முழுசா தெரிஞ்சவன் மட்டும் இல்ல தெரியணும் நினைகிரவனை கூட உங்க பக்கம் வரமாட்டான்.இப்படி குப்புற கிடந்தது யோசிக்கறத விட்டுட்டு நிமிர்ந்து இருந்து எதையாவது உருப்படிய தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாமே,அது பெரியவர் சொன்ன நாத்திகமா இருந்தாலும் செரி இல்ல மனம் திருந்தி ஆத்திகமா இருந்தாலும் செரி. எத படிச்சாலும் முழுசா படிங்க,நாட்ட திருத்த அப்புறம் குப்புற கிடந்து யோசிக்கலாம் (எப்பவாவது நாலறிவு உள்ள மனுஷன் பிறந்தா சொல்லி அனுப்புறோம்).இந்த காலத்துல வோட்டு கேக்கவர்ற நாத்திக கூட்டமே சாமி மேல தான் சத்தியம் வாங்குறான்.

Related Posts Plugin for WordPress, Blogger...