Thursday, September 16, 2010

இளையதளபதி விஜய்- தீவிர ரசிகனின் கொந்தளிப்பு.

(இன்று காலை என் மின்னஞ்சலில் ஒரு சிறுகுறிப்புடன் கூடிய கடிதம் ஒன்று வந்திருந்தது. அதில் "தம்பி அசோக்குக்கு. நான் நடிகர் விஜய்யின் ரசிகன், தொண்டன். அவரைப் பற்றி நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை பத்து பேர் படிக்கும் உங்கள் வலையில் வெளியிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். வெளியிடாவிட்டால் உங்களை கொலை செய்து விடுவேன் என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி." என்று எழுதப்பட்டிருந்தது. அதனால் அவசரம் அவசரமாக அந்தக் கட்டுரையை என் வலைப்பூவில் அப்படியே வெளியிடுகிறேன். மற்றபடி இந்தக் கட்டுரைக்கும் எனக்கும், என் வலைக்கும் எந்த சம்பந்தமோ, ஒட்டோ-உறவோ, தொட்டோ-தொடர்போ கிடையாது!)

              அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு முறை தமிழக அரசியல் வரலாற்றில் சரியான தலைவனின்றி ஒரு இடைவெளி விழும் போதும் ஒரு நடிகரின் வடிவில் ஒரு சகாப்தம் உருவாகும். அப்படி ஏற்பட்டிருக்கும் ஒரு மாபெரும் எழுச்சி தான் நடிகர் இளையதளபதி டாக்டர் விஜய். தான் நடிக்கும் படங்கள் அனைத்திலுமே மிகவும் அருமையான அரசியல் சார்ந்த-சாராத கருத்துக்களைப் பரப்பி, தன் கை கால்களை பரப்பி ஆடி குடும்பப் பெண்களையும் குத்தாட்டம் போட வைக்கும் தலைவனைப் பற்றியும் அவரின் வளர்ச்சியைப் பற்றியும்தான் இந்தக் கட்டுரை.

 முதல் படமான 'நாளைக்கழிச்சு தீர்ப்பு' திரைப்படம் வந்த நாட்களில், பல பத்திரிக்கைகள் "இந்த மூஞ்சிக்கு எதுக்கு நடிப்பு ஆசை?" என கிண்டலடித்த போது அந்தப் பத்திரிக்கைகளுக்கு தெரியாது, எங்கள் தலைவன் வரும் நாட்களில் நடிப்பைத் தவிர மற்ற அனைத்தையுமே செய்யப் போகிறார் என்று! நாளைகழிச்சு தீர்ப்பின் படுதோல்வியை தாண்டி மீண்டும் நம்பிக்கையுடன் கம்பீரமாய் எழுந்து நின்றார்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் என்ற  இயக்குனர் இமயமும், விஜய் என்ற வளரும் நடிகனும். அந்த நம்பிக்கையில் உருவானதுதான் 'செந்தூரநோண்டி' என்ற காவியம். கேப்டன் வல்லரசு துணை நிற்க விஜய் நடித்த  இந்தப் படத்தில் தான் வரலாற்று சிறப்புமிக்க அந்தப் பாடல் காட்சி இடம் பெற்றது. பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக கதாநாயகி யுவராணிக்கு ஒரு சட்டையை மாட்டி, அந்த சட்டையுடன் செட்டாக வந்த 'குட்டி டவுசர்'ஐ தன் மகன் விஜய்க்கு ஆசையுடன் மாட்டிவிட்டு, மழையில் ஆடவிட்டு அழகு பார்த்தார் எஸ்.ஏ.ச. மழையில் எடுக்கப்பட்ட இந்தப் பாடல் மக்களால் வெகுவாகப் பாரட்டப்பட்டது. படம், விஜய் மற்றும் யுவராணியின் உடைகளுக்காகவே பல நாட்கள் எகிடுதகுடாக ஓடியது. முதல் முறையாக வெற்றிக் களிப்பில் திளைத்தார்கள் எங்கள் தலைவரும், அவர் தந்தையும் எங்கள் குருவுமான எஸ்.ஏ.ச. அடுத்த இடி வருவது தெரியாமல்.

செந்தூரநோண்டி பட வெற்றிக்கு யுவராணியின் கூச்சமின்மையும், ஊறுகாயாய் வந்து போன கேப்டனின் வெக்கமின்மையுமே காரணம் என பத்திரிக்கைகள் சாடின. வெகுண்டெழுந்தார்கள் தந்தையும் தனயனும். ஆரம்பித்தார்கள் 'ரெசிகன்' என்ற திரைக்காவியத்தை. இதில் தான் விஜயின் தொடர் நாயகி சங்கவியை முதல் முதலாக திறமை காட்டவைத்தார் எஸ்.ஏ.ச. சென்ற படத்தைப் போலவே இந்தப் படத்திலும் வரலாறு சொல்லும்படியாக ஒரு காட்சியை வைப்பதற்காக ஹாலிவுட் கலைஞர்களுடன் ஆலோசித்து எஸ்.ஏ.சு எடுத்த காட்சி தான் மாமியாருக்கு நடிகர் விஜய் சோப்பு போடும் காட்சி. இந்தக் காட்சி சிறப்பாக வருவதற்காக ஆலிவுட்டில் இருந்து தொழிநுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப் பட்டிருந்தார்கள். திரைப்படம் வெளிவந்தது. ஆஹா, ரெசிகன் திரைப்படத்தில் மகனும், அப்பாவும் சேர்ந்து நிகழ்த்திய கலைக் கண்காட்சியில் உலகமே வாயைப் பிளந்தது. படம் 'ஒரே வாரத்தில்' 175 நாட்கள் ஓடி மகத்தான சாதனை படைத்தது.

பின் நடிகர் விஜய்க்கு ஏறுமுகம்தான். இலையே உனக்காக, டவுசருக்கு மரியாதை, சொரிமலை, பல்லி, ஆந்தை, பிச்சைக்காரன், இன்று புறா என தொடர் வெற்றிகள்.
 எங்கள் தலைவன் எங்களுக்காக என்ன செய்தார் எனக் கேட்கும் அறிவீலிகளே. இதோ கேளுங்கள்.  புறா திரைப்படத்தில் தமன்னாவின் டவுசரை விஜய் தூக்கி தூக்கி அழகாக ஆ(ட்)டுவதைப் பார்க்கும் போது, விஜய் பழசை மறக்காத, செந்தூரநோண்டியில் நடித்த அதே டவுசர்பாண்டி தான் என்ற எண்ணம் என் கண்களில் நீர் பெருகச் செய்தது. எனக்கு மட்டுமல்ல, என் போன்று, அமெரிக்கா, சோமாலியா, உகாண்டா, உருகுவே, உருகாதவே, இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலும் கண்டங்களிலும் வசிக்கும் பல முண்டங்களான நாங்களும் பழசை மறக்கக் கூடாது என உறுதி பூண்டோம். "உழைத்திடு உயர்ந்திடு, உன்னால் முடியும்" என்ற எங்கள் தலைவனின் பொன்மொழியை வேதவாக்காக கொண்டு அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் வருவது போல எங்கள் வாழ்விலும் இடைவேளைக்கு முன்பு ஏழையாகவும், இடைவேளைக்குப் பின் பணக்காரனாகவும் மாறுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களை செருப்பால் அடிக்கும் எதிரியிடம் கூட மிகவும் பாசமாக, காதுக்கு அருகே சென்று 'உம்ம்மா' கொடுப்பதைப் போல மெதுவாக போய் பஞ்ச் டயலாக் பேசும் பண்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் காதலைச் சொல்லும் பெண்களிடம் எல்லாம் எங்கள் ஏழ்மையை சொல்லி அழுது, மறுத்து, பிச்சையெடுத்து, பின் ''என் உச்சி மண்டையில் டம்முங்க்குது, சொர்ர்ருங்குது" என பாடல் பாடும் மாண்பை எங்கள் தலைவன் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார், பல ஆண்டுகள் படித்தோ, அல்லது ஏதேனும் துறையில் சாதனை செய்தோ பெற வேண்டிய கவுரவ 'டாக்டர்' பட்டத்தை, தமன்னாவின் டவுசரைக் கழட்டி மாட்டி. கழட்டி மாட்டி ஆடி பெறலாம் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார்!நாளை கண்டிப்பாக எங்கள் தலைவனின் ஆட்சி மலரும் என்றும், எங்கள் தலைவனைத் தூற்றும் பலருக்கும் இந்தக் கட்டுரை ஒரு சவுக்கடியாக அமையும் என்றும் சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் .

10 comments:

முத்துசிவா said...

Mr.Asok..... எங்களுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. எங்கள் தலைவனை இதுக்கு மேல கிண்டல் பண்ணீங்க... அவ்வளவுதான்....நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் 2075 ல எங்க தலைவனோட ஆட்சி தான்... அத யாராலயும் தடுக்க முடியாது....

அப்புறம் தம்மன்னா டவுசர அவரு ஒண்ணும் கழட்டல... தானா கீழ விழுந்தத எங்க தலைவரு தாங்கி புடிச்சி ஒரு பொண்ணோட மானத்த காப்பாத்திருக்காரு.. இதுக்காகவே அவருக்கு இன்னும் நாலு டாக்டர் பட்டம் குடுப்போம் நாங்க... டாக்டர் மட்டும் இல்ல இன்னும் வக்கீல், கலெக்டர்ன்னு என்னென்ன பட்டம் இருக்கோ அத்தனையும் குடுப்போம்...

அவரோட வளர்ச்சிய பாத்து பொறாமை பட்டே இந்த பதிவை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள்... இல்லை எதிர் கட்சிகளிடம் பணம் வாங்கிட்டீங்களா?

Raj said...

Innum comedyaa yeludhalam.....but nalla irrundchu...

Regards
Raj

ரஹீம் கஸாலி said...

கலக்கலுங்கன்னா.....படத்தோட பெயரை எங்கே புடுச்சீங்க?
சூப்பர். விஜய் பற்றி என் பதிவையும் படியுங்கள்.


ராகுல்- விஜய் சந்திப்பு. பேச்சின் முழு விபரம்- வெளிவராத தகவல்கள்.

திருமணமும் விஜய் படமும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விஜய் பத்தி நாங்களும் கொஞ்சம் டவுசர் கிழிச்சிருக்கோம்ல!
http://shilppakumar.blogspot.com/2010/09/blog-post_03.html

ம.தி.சுதா said...

சிலருக்கு சிலது புரியும் பலருக்கு பலது புரியாது. முற்றும் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை... எல்லாம் சரீப்பா இந்த பில்டப் தான் எனக்க பிடிக்கல ஃஃஃஃ....இயக்குனர் இமயமும்....ஃஃஃ

ம.தி.சுதா said...

இது புகழ்ச்சி கட்டுரையா.. இகழ்ச்சிக் கட்டுரையா..? சந்தேகமாய் இருக்கிறது..

முத்துசிவா said...

@ம.தி.சுதா : அட இதுகூட தெரியலையாண்ணே... தலைவர புகழ்ந்துதான் எழுதிருக்காரு இந்த அசோக் தம்பி....

Jagu said...

engalukku thevai ottu podura makkalin atharavu than (athu nerayave irukku)...intha maathiri pikkali pasangaloda atharavu illa..neenga enna than thalaikeela niinu thanni kudichalumm..vijay-in vetriyai thadukka mudiathu..ponga da mothalla unga kundi suthama irukka mu paarunga..apparam aduthavan kundiya nondunga..

முத்துசிவா said...

@Jagu

//mothalla unga kundi suthama irukka mu paarunga..apparam aduthavan kundiya nondunga..//

அண்ணே... உங்களூக்கு இது part time job ah இல்ல full time job ah?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்க தலைவரு டவுசர நாங்க எப்பிடி கழட்டி கழட்டி மாட்டி மாட்டி வெளையடுறோம்னு நம்ம கடைப்பக்கம் வந்து பாருங்க!

http://shilppakumar.blogspot.com/2010/10/blog-post.html

Related Posts Plugin for WordPress, Blogger...