Wednesday, September 15, 2010

ரஜினி என்ற பத்திரிக்கை பலியாடு.

       


                          நான் வெகு நாட்களாகவே எழுத நினைத்த விஷயம் இது. இப்போதுதான் பொழுதும், எண்ணமும், எழுத்தும் கூடி வந்திருக்கிறது, சமீபத்திய 'ரஜினி மகள் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்காத' சர்ச்சையால். இந்த சர்ச்சைக்குள் செல்லும் முன் நாம் சின்னதொரு பின்னோட்டம் (flashback) பார்போம்.

   ஜெயராம் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த சர்ச்சையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கும் பெண் ஜெயராமிடம் கேட்கிறார், "வீட்டில் வேலை செய்யும் பெண்களை முதலாளிகள் 'கரக்ட்' பண்ணுவார்களே அதுபோல் செய்ததுண்டா என்று. ஜெயராம் சொல்கிறார் "இல்லை, என் வீட்டில் ஒரு தமிழ் பெண் வேலை செய்கிறாள், எருமை போல் இருப்பாள். அவளிடம் எனக்கு அப்படியெல்லாம் தோன்றாது" என்று. பின் இருவரும் சிரிக்கிறார்கள், பேட்டி முடிகிறது. அடுத்த நாள் பத்திரிக்கைகள் எழுதுகின்றன "மலையாள நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை எருமை என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது" என்று. உண்மையான நேரடியான செய்தியான "ஜெயராம் தன்னிடம் வீட்டுவேலை செய்யும் பெண்ணை தரக்குறைவாக தொலைக்காட்சியில் பேசியதால் சர்ச்சை"னு எழுதியிருந்தால் சமூகத்தில் நான்கு செயல்கள் நடந்திருக்கும். 

1)முதலில் பெண்களையெல்லாம் கேவலப்படுத்தும் விதமாக கேள்வி கேட்ட அந்தப் பெண்ணை கண்டித்திருப்பார்கள் தமிழக மற்றும் கேரள மக்கள்.

2)ரெண்டாவது "ஏன்டா நாயே. வேலைக்காரி எருமை மாதிரி இருக்குறதுனால தான் ஒழுங்கா இருக்கியா? இல்லேனா கரக்ட் பண்ணிருப்பியா?" எனத் திட்டி ஜெயராமை அவர் மனைவி செருப்பால் அடித்திருப்பார்.

3)மூன்றாவது, வெகுசன ஊடகத்தில் கள்ள தொடர்பை ஏதோ அத்தியாவசிய உரிமை போல் சித்தரித்து பேசிக்கொண்ட இருவரையும் எதிர்த்து மக்கள் திரண்டிருப்பர்.

4)நான்காவது, குடும்ப சுமையைப் போக்க உடல் வருத்திப்பாடுபடும் உழைக்கும் பெண் இனத்தை கேவலப்படுத்தியதற்காக ஜெயராமையும் கேள்வி கேட்ட அந்தப் பெண்ணையும் எதிர்த்து மகளிர் சங்கங்களால் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும்.

 மேற்கண்ட அத்துணை எதிர்வினைகளையும் நடக்கவிடாது தடுத்தது நம் ஊடகங்களின் திரித்துக்கூறும் தன்மை. பிரச்சினையை, அவமானப்படுத்தப்பட்ட பெண்ணின் இடத்தினின்று பாராமால், ஒரு ஒட்டுமொத்த உழைக்கும் பெண் சமூகத்தையே கேவலமாய் ஒரு நடிகன் பேசியதை மறந்து, அதை ஏதோ தமிழர்-மலையாளி பிரச்சினை போல் சித்தரித்து, விஷயத்தையே திசை திருப்பிய ஊடகங்களை என்ன செய்வது?

          மேற்கண்ட விஷயம் நம் பத்திரிக்கைகளின் தன்மையைப் புரிய ஒரு உதாரணம். நாம் தற்போது நடக்கும் ரஜினி விஷயத்திற்கு வருவோம். ரஜினி ஒரு நடிகர். அவருக்கு மக்களிடம் ஓட்டு வாங்கும் தேவையோ, தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும் தேவையோ அல்லது மக்களை முதுகில் சுமக்கும் தேவையோ அடியோடு கிடையாது. ரஜினி கோடி கோடியாக சம்பாதித்திருந்தாலும், சம்பாதித்துக் கொண்டிருந்தாலும் அவர் ஒரு தொழில் செய்பவர், நடிகர். அவர் தன் மகள் திருமணத்திற்கு ரசிகர்கள் அனைவரையும் வரவேண்டாம் என சொல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம். அவர் பொதுநலத்திற்காக அப்படிச் சொன்னதாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் சுயநலமாகவே அப்படிச் சொல்லியிருந்தாலும் கூட அதில் தப்பு அறவே கிடையாது. என் வீட்டருகில் இருக்கும் ஒரு மளிகைக் கடையில் நான் இருபது வருடமாக நான் பொருள் வாங்குகிறேன், ஆனால் அந்தக் கடைக்காரர் அவரின் மகள் திருமணத்துக்கு என்னை அழைக்கவில்லை என்பதால் நான் அவரிடம் கோபப்படுவது எவ்வளவு முட்டாள் தனமோ அவ்வளவு முட்டாள் தனம், ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் மகள் திருமணத்திற்கு அந்த நடிகர் தங்களையெல்லாம்  அழைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது. ரஜினியின் ரசிகன் எவனும், மன்றத்தை சேர்ந்தவனும் சரி, மன்றத்தை சேராதவனும் சரி, இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் "ரசிகர்கள் கோபம்", "ரசிகர்கள் கொந்தளிப்பு", "ரசிகர்கள் ஆத்திரம்" என பொத்தாம் பொதுவாய் செய்தி போடும் இந்த ஊடகங்களிடம் கேட்கிறேன் "யார் ரசிகர்கள்? யாரிடமெல்லாம் நீங்கள் கருத்து கேட்டீர்கள்?". (இதைப் பற்றி நண்பன் சிவா எழுதியுள்ள கட்டுரையின் சுட்டி) அப்படியே ரசிகர்கள் கோபப்பட்டாலும் கூட, உங்கள் காலடியில் வந்து புலம்பி அழுதிருந்தால் கூட 'அந்த நடிகர் உனக்கென்ன சொந்தமா? அல்லது உன் முதலாளியா? உன் வாழ்க்கைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?' என ரசிகர்களிடம் கேட்கும் பொறுப்பு இப்போது வரிந்துகட்டிக் கொண்டு இணையத்திலும், பத்திரிக்கைளிலும் ரஜினியைத் திட்டும் பத்திரிக்கையாளர்களுக்கும், கட்டுரையாளர்களுக்கும் இல்லையா? அதை விட்டுவிட்டு "அய்யோ ரஜினி இப்படி பண்ணிட்டாரே. உங்களுக்கு துரோகம் பண்ணிட்டாரே" எனப் புலம்பி கண்ணீர்விட்டு ஒரு சர்ச்சையைக் கிளப்பி வியாபாரம் பண்ணுவதுதான் உங்கள் தொழில் தர்மமா?

                  அமெரிக்க ஜனாதிபதி அலுவலகம் ரகசியமாக செய்த வாட்டர் கேட் ஊழலை வெளிக்கொணர்ந்தது Carl Bernstein மற்றும் Bob Woodward என்ற இரண்டு பத்திரிக்கையாளர்கள். நம் ஊரில் மீனவர்கள் தினமும் சாகிறார்கள். மத்திய அமைச்சன் அப்படித்தான் சாவார்கள் என்கிறான்.  தினமும் அப்பாவி மக்கள் தீவிரவாத ஒழிப்பு, மாவோயிஸ்ட் ஒழிப்பு என்ற பெயரில் ராணுவத்தால் சாகடிக்கப்படுகிறார்கள். சோற்றுக்கு பிச்சையெடுக்கும் நாட்டில் வறுமையை மறைக்க, ரூபாய்க்கு குறியீடு (symbol) கொண்டு வந்துவிட்டதாகவும் அதுதான் அளப்பெரிய சாதனை என்றும் மக்களை நம்பச் செய்து பீற்றுகிறார்கள். இன்னும் எத்தனையோ இருக்க, நம் வெகுசன ஊடகங்கள் என்ன செய்கிறார்கள்? திரிஷா என்ன நிறத்தில் உள்ளாடை போட்டிருக்கிறார் என அவருக்கு அடியில் காமிரா வைத்து படம்பிடித்து நடுப்பக்கத்தில் போட்டு சம்பாதிக்கிறார்கள்.  சூர்யா தங்கை கல்யாணத்தின் போது ஒரு பக்க அளவில் செய்தி போட்டு "மணமகள் பச்சை நிறத்தில் பிளவுசும், சிகப்பு சேலையும் அணிந்திருந்தார். அய்யர் அரைமணி நேரம் தாமதமாய் வந்தார்" என உலகுக்கு தேவையான செய்தியை போடுகிறது தினமலர். நடிகைகள் விபச்சாரம் செய்தார்கள் என படத்துடன் செய்தி போட்ட தினமலரின் இணைப்பான வாரமலரில் தானே வாராவாரம் நடுப்பக்கத்தில் அதே நடிகைகளின் கவர்ச்சிப் படம் இருக்கிறது? அவர்கள் விபச்சாரம் செய்கிறார்களென்றால் அவர்களின் படத்தை வைத்து வியாபாரம் செய்யும் நீங்கள் மாமாக்களா? (இந்த விஷயத்தைப் பற்றி நான் முன்பு எழுதிய கட்டுரை ("விபச்சாரம் செய்யும் விகடன்")

         ரஜினி போன்ற நடிகர்கள் படம் நடிக்கப் போவதாய் அறிவித்த உடனேயே "எந்திரன் கதை" "எந்திரன் புதிய படங்கள்" "எந்திரன் என்ன செய்கிறான்" "எந்திரனுக்கு வயிற்றுபோக்கு" என என்னென்னவோ தலைப்பு வைத்து கேடுகெட்ட தனமாய், நாட்டை உலுக்கும் முக்கிய பிரச்சினைகளையெல்லாம் விட்டுவிட்டு மக்களை முழுக்க முழுக்க சினிமா மோகத்தில் வைத்திருந்து சம்பாதிக்கும் பத்திரிக்கைகளுக்கு, தன் வீட்டு திருமணத்திற்கு கூட்டமாய் வரவேண்டாம் என பொதுநலத்துடன் கேட்டுக்கொண்ட ரஜினியைச் சாடவும், அவரால் ஏதோ நாடே கெட்டது போல செய்தி போடவும் என்ன தார்மீக உரிமை, நியாயம் இருக்கிறது?  ரஜினி மற்றும் பிற நடிகர்களை வைத்து செய்தி போடுவது உங்கள் உரிமை. ஆனால் இப்போது அதுவே கடமையாய் மாறிவிட்டதே. ரஜினி மகள் திருமணத்தில் அவர் யாரை அழைத்தால் என்ன அழைக்காவிட்டால் என்ன? ரஜினி, கமல், சூர்யா வேறு யாராகட்டும் இவர்கள் அனைவரும் பரபரப்பான விறபனைக்கு தேவைப்படுகிறார்கள். நாட்டின் முக்கிய பிர்ச்சினைகளையும், செய்திகளையும் சேகரித்து ஆராய்ந்து செய்தி வெளியிட முதுகு வளையாத காரணத்தால் வெகுசன ஊடகங்களுக்கு பிரபலங்களும், அவர்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளும் தேவைப்படுகி(றார்கள்)றது. ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த கையாலாகாத ஊடகங்களின் விறபனைக்கும், வியாபரத்திற்கும் இன்றைய காலகட்டத்தில் முதலாகவே மாறிப் போயிருக்கிறார்கள். அதனால் பிரபலங்கள் பற்றிய வெறும் பரபரப்பான செய்தி மட்டுமே பத்திரிக்கை விற்பனைக்கு போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் செய்திகளையும், பேட்டிகளையும் திரித்து சர்ச்சையாக்கும் இழிநிலையில் இன்றைய பத்திரிக்கைகள் உள்ளன. இந்த பாணியில் தான் தற்போது ரஜினியின் பேட்டியும் வேறு கோணத்தில் திசை திருப்பப்பட்டு பத்திரிக்கைகளின் விற்பனைக்காக பலிகடா ஆகி இருக்கிறார் என்பதே உண்மை.

11 comments:

முத்துசிவா said...

seruppadi machi...ithula muthal idathula irukkathu nakkeeran thaan.. netrikkannai thirappidnum poiya thavara vera ethayum elutha maattom nu sabatham eduthuruppainga polarukku....

Anonymous said...

Correct, this what I too see here.
http://nanavanthan.blogspot.com/2010/09/blog-post_04.html

We must write against those media people who just think after drinking one bottle beer.

Gayathri said...

நிறைய பத்திரிக்கைகள் விற்பனைக்காக கண்டப்படி எழுதுறாங்க..
என்ன செய்வது

Veerasekaran said...

Super nanbaa. Serupaala adichurginga. niraiya eludhunga

raja said...

நிரம்ப சொரணையுடன் எழுதப்பட்ட கட்டுரை...எல்லவற்றையும்விட எந்த வித தளுக்கோ,சமரசமோ இல்லாமல் இருக்கும் உங்கள் மொழிநடை சரியான சவுக்கடி.. சரி என் விஷயத்துக்கு வர்றேன்.. இந்த கேடு கெட்ட பன்னிங்க.. நீங்க எந்த செருப்ப கழட்டி மூஞ்சியில அடிச்சாலும் தொடைச்சிக்கிட்டு மறுபடியும் அத தின்ன போயிடுங்க.. விடுங்க அய்யா.. தமிழ் சமுகம் சோரம் போய் மிக ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது..

ம.தி.சுதா said...

///...சூர்யா தங்கை கல்யாணத்தின் போது ஒரு பக்க அளவில் செய்தி போட்டு "மணமகள் பச்சை நிறத்தில் பிளவுசும், சிகப்பு சேலையும் அணிந்திருந்தார். அய்யர் அரைமணி நேரம் தாமதமாய் வந்தார்" என உலகுக்கு தேவையான செய்தியை போடுகிறது தினமலர்...///
நல்ல பதிவொன்று... ஆனால் திருந்துவார்களா என்றால் அது தான் இல்லை... வாழ்த்துக்கள்...

butterfly Surya said...

கேவலமான ஊடகங்களின் நிலை அனைவரும் அறிந்ததுதான். அவர்கள் பத்திரிகை விற்க வேண்டும். TRB ரேட்டிங் வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள்.. காட்டுவார்கள்.

அவர்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. அதை விழுந்து அடித்து பார்க்கும் மக்களும் எப்படியாவது மீடியாவில் ஐலைட் ஆகவேண்டும் என்று சினிமா காரார்களும் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

மக்களும் இதை புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும்.


சினிமா என்பதும் ஒரு ஊடகம் தான்.
ஆனால் வாழ்வாதாரமாக அதை கொண்டாடுவடுதான் சகிக்கவில்லை.

என்று முடியும் இந்த மோகம்..????

பகிர்விற்கு நன்றி நண்பா.

karthick said...

Dei, u too don waste ur/our time by writing all these da.. Better concentrate on the things u mentioned in the second paragraph.

Anonymous said...

@karthick

No. Presumably, i have taken Rajinikanth's recent scandal aboard to establish the unsubstantiated news or opinions of the indian and tamil media particularly. So here the subject into argument is not rajini, but the media's scandalisation of unimportant and sometimes important news. :-)

ARASIAL said...

சரியான பதிவு... நன்றி இளவரசன்.
உண்மையில் இந்த மீடியா உலகுக்கு ரஜினியைப் பற்றி நன்கு தெரியும். அவர் பக்க நியாயங்களும் தெரியும். ஆனால் தெரிந்தேதான் இந்தத் தவறுகளை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். ரஜினி என்ற மந்திரச் சொல்லை அவர்கள் தவறாகப் பிரயோகித்தாலும் இன்னும் அதிகமாகத்தான் பணம் கொட்டுகிறது... அதனால்தான் இந்த நிலை. ரசிகர்களும் மக்களும் புரிந்து கொள்ளவேண்டும்!

-என்வழி

காளி said...

அய்யா இளவரசரே...
என்னோட படிச்ச பயலுங்க இன்னும் மன்றத்திலேயே இருக்காங்க... இதுல யாரு கோவப்படாங்கன்னுதான் தெரியல... பயபுள்ளைங்க அவனுக பேரை போட்டாலும் பரவாயில்ல....

Related Posts Plugin for WordPress, Blogger...