Sunday, September 19, 2010

கொலையாய்வு. பகுதி-2. Video game திருடிய குற்றவாளிமுதல் பகுதியைப் படிக்க கொலையாய்வு. பகுதி-1. கொலைகளின் மறுபக்கம்லொரெனா காவல் துறையிடம், அன்றிரவு அரற்றிய விஷயம், தன் கணவன் ஜான் தன்னை படுக்கையறையில் மதிக்கவில்லையென்றும், தன் திருப்தியைப் பற்றி கவலைப்படாமல் சுயநலமாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்தார். அன்றிரவு காவல்துறைக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு பெண், அதுவும் மிகவும் கூச்ச சுபாவமுள்ள லொரேனா தன் கணவன் தன்னை உடல் ரீதியாக திருப்தி படுத்தவில்லையென்பதால் ஆணுறுப்பை அறுக்கும் அளவிற்கா செல்வாள் என குழம்பினார்கள் பின் விசாரணையில் லொரெனாவே பல உண்மைகளைச் சொன்னார்.

 ஜான் தன்னை கடந்த மூன்று ஆண்டுகளாகவே மனரீதியான, உடல்ரீதியான துன்பங்களுக்கு உள்ளாக்கியதாகவும், தன்னை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். லொரேனா மீதான ஜானின் மூன்று வருடத்திய மனரீதியான, உடல்ரீதியான தாக்குதல்கள் லொரெனாவை நிலையிழக்கச் செய்து அவரால் தவிர்க்கமுடியாத ஆத்திரத்தில் ஜானின் ஆணுறுப்பை வெட்டியதாக லொரெனாவின் வழக்குரைஞர் வாதாடினார். ஜானுன் ஜானின் தரப்பும் லொரெனா தரப்பின் குற்றச்சாட்டுக்களை அறவே மறுத்தது. சம்பவம் நடந்த அன்று தான் மிகவும் குடித்திருந்ததாகவும், கட்டிலில் படுத்திருந்த லொரெனாவைப் பார்த்து தான் அன்றிரவு உடலுறவு வைக்க முற்பட்டதாகவும் முதலில் கூறினார். பின் போதையில் தூங்கிப் போனதாகவும், எதையோ உணர்ந்து எழுந்து பார்த்தபோது லொரெனாவின் கையில் தன் ஆணுறுப்பைப் பார்த்திருக்கிறார். சுதாரிக்கும் முன் தன் ஆணுறுப்பு வெட்டப்பட்டதாக கூறியுள்ளார் ஜான்.

சம்பவம் நடந்த அன்று ஜான் மிகவும் குடித்துவிட்டு லொரெனாவின் விருப்பத்திற்கு மாறாக அவரை வன்புணர்ச்சி (spousal rape) செய்திருக்கிறார். (இது சட்டப்படி குற்றம். இதற்காக 1994ஆம் ஆண்டு ஜான் மீது தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது தனிக்கதை). பின்னர் தூங்கிய லொரெனா, இரவில் எழுந்து சமையலறைக்கு தண்ணீர் குடிக்கச் சென்றிருக்கிறார். அங்கு சமையலுக்காக பயன்படும் கத்தி கண்முன் கிடந்திருக்கிறது. ஜான் தனக்கு இதுவரை செய்த கொடுமைகளும், இப்போது செய்த கொடுமையும் ஒன்று சேர்ந்து நினைவலையில் சுழட்டியடித்திருக்கிறது. தன் நிலையை இழந்த லொரேனா அந்தக் கத்தியை எடுத்துக்கொண்டு நேராக அவர்கள் படுக்கையறைக்கு சென்றிருக்கிறார். நிர்வாணமாக கிடந்த, ஜானின் ஆணுறுப்பை ஆத்திரத்துடன் அறுத்துவிட்டு, கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் லொரெனா. திடீரென அவர் கையில் ஏதோ தட்டுப்பட, அது ஜானின் வெட்டப்பட்ட ஆணுறுப்பு! அலறியபடி அதை எங்கோ எறிந்துவிட்டு தொடர்ந்து தான் வேலை பார்க்கும் அழகு நிலையத்திற்கு காரை ஓட்டியுள்ளார். பின் சில மைல் தூரம் சென்ற பின் மற்றொரு கையில் ரத்தத்துடன் கூடிய கத்தி. அதையும் வீசிவிட்டு தன் முதலாளி (பெண்) வீட்டிற்கு சென்றுள்ளார் லொரேனா. அங்கிருந்துதான் அமெரிக்க உதவி எண் 911க்கு தானே ஃபோன் செய்து நடந்ததை சொல்லியிருக்கிறார் லொரெனா. பின் தான் போலீஸ் வந்திருக்கிறது.

     இதுதான் ஜான் மற்றும் லொரெனாவின் முதற்கட்ட வாக்குமூலத்தைக் கொண்டு முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகள். ஆனால் இன்னும் மற்றொரு முக்கிய சாட்சி  மீதம் இருந்தது. அவர் பெயர் ராபி. ஜான்-லொரேனாவின் விருந்தாளியாக சம்பவம் நடந்த அன்று அவர்கள் வீட்டில் தங்கியிருந்த ஜானின் நண்பர். அவர் வாக்குமூலத்தில் கூறிய சில விஷயங்கள் காவல்துறையை மட்டுமல்லாது, இந்த வழக்கை கூர்மையாக கவனித்து வந்த ஒட்டுமொத்த மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

 ஜானின் ஆணுறுப்பை வெட்டிவிட்டு காரில் சென்ற (தப்பிய என சொல்ல முடியாது) லொரெனா, தன் வீடீயோ கேமை (Hand video game) திருடி சென்றதாகவும்,  அதே நாள் முற்பகலில் தன் கைப்பையில் இருந்து 100$ பணமும் லொரெனா திருடியதாகவும் ராபி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். போலீசின் விசாரணையில் அது உண்மையென தெரிந்தது. ராபியின் வீடியோ கேம் லொரெனாவிடமிருந்து கைப்பற்றப்பட்டு ராபியிடம் சேர்க்கப்பட்டது (ரொம்ப முக்கியம்). ஆனால் லொரெனாவின் இந்த செயல்களுக்கு போலீசாரால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. பெரிய உளவியலாளர்கள் கூட திணறினார்கள். கடைசியில் அடுத்தகட்ட வாக்குமூலத்தில் லொரெனாவும் அவரது உளவியலாளரும் இந்தக் குழப்பத்திற்கு விளக்கமளித்தார்கள்.

 (குறிப்பு: ஜானின் ஆணுறுப்பு டாக்டர்கள் ஜேம்ஸ் மற்றும் பெர்மன் என்பவர்களின் 9.30 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின் ஒட்டவைக்கப்பட்டது. செயல்பட்டதா என்பதைப்பற்றி எந்த செய்தியும் இல்லை.)
.............................கொலையாய்வு தொடரும்

6 comments:

lkc said...

அதே நாள் முற்பகலில் தன் கைப்பையில் இருந்து 100$ பணமும் லொரெனா திருடியதாகவும் ராபி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். //

ஓஹோ...அப்படியா? நான் ஜான் கதையை நகைசுவை பின்னணியில் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...
ஆனால் நீங்கள் உண்மை தன்மையை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்...மிக அருமை...தொடரட்டும் மர்மம்...

lkc said...

செயல்பட்டதா என்பதைப்பற்றி எந்த செய்தியும் இல்லை.) //

சராசரி கேள்விக்கணைகளையும் நீங்கள் அலசி செய்தி போட்டுப் இருப்பது மிக அருமை...

முத்துசிவா said...

machi super ah irukku da ... u continue

rajesh said...

Super. interesting, your writing style is pure profesional

Saravanan sudan said...

Dude am following u since long. ur blog is exceptionally awesome. I do have some varied ideas from yours. BUT your way of expressing with humor will convince anyone. All the best for your writing career.

ம.தி.சுதா said...

ரசிக்க வைக்கும் விறுவிறுப்பான பதிவு... வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

Related Posts Plugin for WordPress, Blogger...