Wednesday, March 17, 2010

நித்யானந்தா- மூன்றாம் பரிமாணம்


முப்பதி இரண்டே வயதான இந்த நித்யானந்த பரமஹம்சர் யார்? மக்கள் இவரை இப்போது கீழ்கண்டவாறுதான் பார்க்கிறார்கள்.
*முற்றும் துறந்த இந்துமத சாமியார். ஆன்மீக குரு. நோய்களைத் தீர்க்கும் நடமாடும் மருத்துவமனை!

அல்லது

*பெண் பித்தன். பக்தர்களை நம்பிக்கை மோசடி
போலி சாமியார்.

இந்த இரண்டிலும் மட்டுமே அடைபட்டுப் போன நம் மக்களின் மூளை, இன்னொன்றைப் பற்றி சிந்திக்க மறந்துவிட்டது. அல்லது மறுக்கிறது. நித்யானந்தா என்ற முப்பத்தி இரண்டே வயதான ஒரு இளைஞன், ஆசாபாசங்களும், பொருளாசையும், புகழாசையும், காமமும், இன்ன பிற அனைத்து மனித குணங்களும் நிரம்பிய ஒரு சாதாரண மனிதன் என்பதை. அவனை ஆரம்பத்தில் ஏணியில் ஏற்றிவிட்டு, பின்புறத்தை பிடித்தும் விட்ட குமுதம் போன்ற ஊடகங்களை நாம் மறந்திருக்கிறோம் (இப்போது குமுதமும் நித்யானந்தாவை திட்டுகிறது). ஒரு இளைஞன், அதுவும் இளமையின் சீரிய கட்டத்தில் இருக்கும் இளைஞன், தான் ஒரு பிரம்மச்சாரி என உலகிற்கு சொல்லும் போது எப்படி இந்த மக்கள் நம்புகிறார்கள்? நம்புவதை விடுங்கள், இயற்கைக்குப் புறம்பாக ஒருவன் பிரம்மச்சாரியாய் இருந்தால், அவன் புனிதமானவன் என்ற ஒரு மகா மடத்தனத்தை எப்படி இந்த மக்கள் ஏற்றுகொள்கிறார்கள்?

இதைவிட எனக்கு மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் ஒரு பிரம்மச்சாரியாக, இயற்கைக்கும், அவன் வயதின் ஆசைகளுக்கும் புறம்பாக இருந்தபோது, மக்களுக்கு கடவுளாக தெரிந்த நித்யானந்தா, தன் வயசுக்கும், இயற்கை விதிகளுக்கும் உள்ளடங்கிய ஒரு காரியத்தை, அதுவும் அந்தப் பெண்ணின் முழு சம்மதத்துடன் செய்த போது எப்படி அயோக்கியனாய் தெரிகிறான்? மக்களின் இந்த இயற்கைக்கு புறம்பான மனநிலை உச்சகட்ட அயோக்கியத்தனம் ஆகாதா? ஒரு இளைஞனுக்கும் அவன் காதலிக்கும் இடையே நடந்த காதல் பரிமாற்றங்களை, மகள், மகன், மனைவி, கணவன், தந்தை, தாய் என அனைத்து உறவுகள் சகிதமாக தொலைக்காட்சியில் கண்டு களித்தது எப்பேர்பட்ட அயோக்கியத்தனம்? அதை அரைமணிக்கொருமுறை திரும்ப திரும்ப ஒளிபரப்பி தங்கள் டி.ஆர்.பி விகிதத்தை உயர்த்திக் கொண்ட தொலைக்காட்சியின் செயல் விபச்சாரத்திற்கு ஈடாகாதா?

நித்யானந்தா ஒரு நம்பிக்கை துரோகி (அவர் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாததால் இப்படித்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது) என விளிக்கும் உலகத்துக்கு எதை நம்புவதென ஒரு வரைமுறை வேண்டாமா? காவி உடை போட்டு எவன் எது சொன்னாலும் காலில் விழுந்து சேவகம் செய்துவிட்டு, பின் நம்பிக்கை துரோகம் எனச் சொல்வது சரியா? நித்யானந்தாவை மக்கள் நம்புவதற்காக அவருக்கு அழகாய், ஆடம்பரமாய், பக்திமயமாய் மேடை அமைத்துக் கொடுத்து காசு பார்த்த குமுதம் போன்ற பத்திரிக்கைகளையும், சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களையும் சும்மாவா விடுவது? சொல்லப்போனால் நித்யானந்தா போன்ற, சும்மா இருந்த சாமியார்களை ஊதி ஊதி பெரிதாக்குவதே இது போன்ற ஊடங்கங்கள் தான்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களை அம்பலப்படுத்துவதே துப்பறியும் பத்திரிக்கைகளின் வேலையாக இருக்க வேண்டுமேயொழிய, ஒருவன் தன் படுக்கையறையில் காதலியுடன் என்ன செய்கிறான் என்பதை துப்பறிவதாக இருக்க கூடாது. அடுத்தவன் கழிவறையில் எட்டிப் பார்த்து இன்பம் அடைவதைவிட கேவலமானது அது.

நித்யானந்தா விஷயத்தில் அவன் நோய்களை குணப்படுத்துகிறான் என ஊடகங்கள் செய்தி பரப்பிய போதே நாம் அதை கண்டித்திருக்க வேண்டும். அதற்குதான் நமக்கு உரிமையுண்டே தவிர, அவன் ரஞ்சிதாவுடன் உடலுறவு வைத்ததை கண்டிக்க எவனுக்கும் உரிமை கிடையாது. நித்யானந்தா விஷயத்தில் சாகடிக்கப் பட்டிருப்பது மக்கள் அவன் மேல் கொண்ட மடத்தனமான நம்பிக்கை அல்ல, மனித உரிமை. ஒரு மனிதனின் மனித உரிமை ஊடகங்களின் வியாபர பேராசைக்காக முற்றிலுமாக சாகடிக்கப்பட்டுள்ளது. ஒரு 32 வயது இளைஞன் தன் காதலியுடன் இருந்த போது படம் பிடிக்கப்பட்டு, அந்தப் படம் விளம்பரப்படுத்தவும் பட்டிருக்கிறது. நான் சொல்வதெல்லாம் இதுதான், நித்யானந்தாவின் மீதான் பணமோசடி, கொலை குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் அதே சமயம், நித்யானந்தாவின் மூன்றாவது பரிமாணமான, அவன் சாதாரண மனிதன் தான் என்பதையும், அவன் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் எண்ன வேண்டும். இதை இன்று நாம் கண்டிக்காமல் விட்டால், நாளை உங்கள் காதலியுடன் நீங்கள் இருக்கும் போது கவனமாய் இருங்கள், காமிரா பார்த்துக் கொண்டு இருக்கலாம். உங்கள் உரிமைகள் செத்துக் கொண்டிருக்கலாம்.

12 comments:

- Sathya said...

மிக நேர்மையான வாதம்/கருத்துக்கள் தம்பி..........

deesuresh said...

முற்றிலும் உண்மை...!!!

Rajakumar Iyyemperumal said...

/// நித்யானந்தா விஷயத்தில் அவன் நோய்களை குணப்படுத்துகிறான் என ஊடகங்கள் செய்தி பரப்பிய போதே நாம் அதை கண்டித்திருக்க வேண்டும். அதற்குதான் நமக்கு உரிமையுண்டே தவிர, அவன் ரஞ்சிதாவுடன் உடலுறவு வைத்ததை கண்டிக்க எவனுக்கும் உரிமை கிடையாது. ///

mika sariyana kootru. ipadi noykalai kunapaduthikiren endru niraiya per pira mathankalilum [naan kirusthuva mathathai sollavillai !:-)] ullargar.avarkalayum kandikka vendiya porupu makkalidame ullathu.

Jabes said...

Applause.. Peoples forgotten other Point of view from Different Angle..

U reflected d Same wat i thot n wat i heard frm my US persons in Same Criteria..

Anonymous said...

well said ashok ( or ilavarasan)...many magazines focus on his affair with ranjitha more than other things..its like the magazines are no better than him....both try their luck for money.

nice article :)

eamaravanga irukara varai ...emathitu thaan irupaanga :(

Vikram R said...

நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. நித்தியானந்தன் படுக்கையில் அவனுடைய காதலியை வைத்திருந்தால் ஒரு வேளை தவறு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவன் படுக்கையில் வைத்திருந்தது அடுத்தவன் பொண்டாட்டியை என்பதை ஏனோ நினைவில் வைக்க மறந்து விட்டீர்கள்.

Anonymous said...

ஆனால் அவன் படுக்கையில் வைத்திருந்தது அடுத்தவன் பொண்டாட்டியை என்பதை ஏனோ நினைவில் வைக்க மறந்து விட்டீர்கள்.//
haha.. apdinaa video edukalaama? Apdina indha mattera 'extra marital affair' problema kondu poirukanume thavira False godman problema kondu poga kudathu!!! :-))

Anonymous said...

"அடுத்தவன் பொண்டாட்டி" aaga illama unmarried heroines like namitha, trisha, anuksha, etc., ipdi ellam irunthu iruntha innum one month ku magazines la hot topic ah irunthu irukum pa :-))

but ranjitha thaan matikichu, athai avanga husband thaan kekanum and kandikkanum, not us nu nenaikaren. atha vittutu TV la ellam potu asinga paduthalama?

//படுக்கையில் அவனுடைய காதலியை வைத்திருந்தால் ஒரு வேளை தவறு இல்லாமல் இருந்திருக்கலாம்.// ennanga neenga? appa unmarried na oru percentage potu "ok" nu solliduvenga pola iruku :O

But I think this article is about magazines and the public who focus more on his bedroom issues and fail to focus on his other fraudulence and failed to investigate his mistakes in the initial stage.

Anonymous said...

Thanks suji. for speakin my mind

Anonymous said...

தவறு நித்தியானந்தா விடமும் , காலங்காலமாக போலிசாமியர்களை நம்மி ஏமாறும் இந்த மக்களிடமும் உள்ளது.
என்பது மட்டுமே உண்மை. பகுத்தறிவு எங்கே போனது என்பதுதான் எனக்கும் தெரியவில்லை.

"அடுத்தவன் பொண்டாட்டி" எல்லாம் சரிதான். ஆனால் இங்கே அவள் நடந்து கொண்டது என்னவோ அவள் விருபத்தினாலே என்பதால் அது எப்படி தவறாகும்.

hey itz me kuruvu said...

ஒரு செல் உயிரி மனிதனாக பரிணாம வளர்ச்சி கண்ட நாள் முதல் இயற்கையின் ந்யதிக்கு உட்பட்ட ஆசைகளை தான் நித்யா நந்தன் அரங்கேற்றி உள்ளான்..இதில் போது மக்களுக்கு அவன் மேல் ஏன் கோவம் ??? ஏனென்றால் காமத்தை அடக்கு என்று சொலிவிட்டு அதில் அவர் தவறியதால்தான் இவளவு விமர்சனம்.. கடவுளை பற்றி அறிய நமது சுயத்துக்கு எட்டாத ஒன்றையும் எவரும் கூறிவிடவில்லை ஆனால் நாம்தான் இடைத்தரகர்களை போல் செயல்படும் இம்மாதிரியான நபர்களின் வார்த்தைஜால வலையில் வீழ்ந்துவிட்டு பின் அவர்களின் சுயம் தெயர்யும்போது தூற்றவும் செய்கிறோம்..உண்மையான ஞானிகள் யாரும் காமத்தை அடக்க சொலவில்லை அதை கடக்க மட்டும்[pass over] தான் சொலி இருக்கிறார்கள்,... முடிவாக மக்கள் தங்களின் பிரச்சனை மனகுலபங்களை உட்கார்ந்து சிந்தித்து அதற்கு தீர்வு எடுக்காமல் கோள்களையும் கிரகங்களையும் நம்பிகொண்டிருக்கும் வரை எது போன்ற *நந்தாகள்* வரத்தான் செய்வார்கள்,,, crime அண்ட் thriller கதைகளை போன்றே அவர்களும் தங்கள் வேலைகளை தொடரவும் நாமும் அவர்களை விமர்சிக்கவும் இயல்பான ஒன்றாகிவிட்டது .. .

mak said...

well said..

Related Posts Plugin for WordPress, Blogger...