Wednesday, March 3, 2010

நித்யானந்தமும் பக்கத்து வீட்டு பாட்டியும்!


"கதவைத் திற காற்று வரட்டும் (open the door let the breeze come in)"
"உங்களுக்கான தியானம்(Meditation for you)",
"வாழும் ஞானம் (Living enlightment)"
,
இதெல்லாம் நம் நித்யானந்த பரமஹம்சர் எழுதிய புத்தகங்கள். இதெல்லாம் கூட காமெடி இல்ல. உச்சகட்ட காமெடி என்னன்னா, தலைவரு இன்னொரு புக்கு எழுதிருக்காரு "காமம், பயம், கவலைகளை கடப்பதற்கு உத்திரவாதமான வழிகள் (Guaranteed solutions for lust, fear, worries)"னு. இந்த புத்தகத்தோட பேரை படிச்சிட்டு, அப்படியே 'அந்த' சன் டிவி ஒளி-ஒலிக்காட்சியை பாருங்க! செம காமெடி!

"கதவைத் திற காத்து வரட்டும்"னு எழுதிட்டு அவரு ரூமை மூட மறந்துட்டாரு!!!

சரி விஷயத்துக்கு வருவோம்! கடவுள், மதம், தியானம், ஞானம் போன்ற சகல விஷயங்களையும் உலகத்துக்கே எடுத்துரைக்கும் இவனைப் போன்ற சாமியார்கள் சிந்திக்கும் திறன் கொஞ்சம் அதிகமாய் அமையப் பெற்ற சாதாரண மனிதர்களே என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் தான் நித்யானந்தா என்ற ராஜசேகரன். 32 வயதுக்குள் பல கோடி ரூபாய் சொத்துக்கள், பல வெளிநாட்டு-உள்நாட்டு பணக்கார பக்தர்கள், ஆடம்பர வாழ்க்கை, பல நாடுகளில் ஆசிரமம், தான் எழுதிய புத்தகங்களை விறபனை செய்வதற்கென்றே பிரத்தியேக குளிர்சாதன கடைகள் என அனைத்தும் எப்படி நித்யானந்தாவுக்கு கிடைத்தது? மக்களின் குழம்பிய மனங்களில் தெளிவாய் திமிங்கலம் பிடிக்கத் தெரிந்த கலைதான் இவனைப் போன்றவர்களின் ஒரே முதலீடு.
சமீபகால அவசர வாழ்க்கையின் நேரடி விளைவுகள் நிம்மைதியின்மை, தூக்கமின்மை, மன உளைச்சல், இதர, இதர. மக்கள் தாங்கள் 'மென்டல்' ஆகாமல் இருக்க இவனைப் போன்ற 'மென்டல்'களிடம் போகிறார்கள். இவர்களின் சொற்பொழிவுகள் மக்களை அப்படியே கட்டிப் போட்டு, இவர்கள் சொற்களுக்கு அடிமையாக்குகின்றன. முதலில் சாமியார்களின் அல்லது ஞானிகளின் சொற்களுக்கு மட்டுமே அடிமையாகும் மக்கள், பின் அந்த சொற்கள் தங்களுக்கு தரும் மயக்கநிலையை ஆழ்ந்து அனுபவிக்கத் துவங்கிவிடுகிறார்கள். இதன் அடுத்த கட்டம் தான் அந்த சொற்களை உதிர்த்த 'மனிதனுக்கு' அடிமையாதல். இரண்டு மூன்று சொற்பொழிவுகளைக் கேட்டால் கூட போதும் பிரச்சினை உள்ள மனம் அடிமையாகிவிடும்! மேலும் இவரைப் போன்ற சாமியார்கள் இல்லாததைச் சொல்வதைப் போன்ற ஒரு பிரம்மையை மனம் நம்புவதும் அடிமைத் தனத்தின் ஒரு வடிவம்தான். புத்தரின் தம்மபதாவிலும், ஜென்னிலும் உள்ள கோட்பாடுகளை அழகாக மக்கள் நம்பும் கடவுள்களுடன் இணைத்து இவர்கள் ஆளுக்கொரு சித்தாந்தங்களை உருவாக்குகிறார்கள். இன்றைய சமுதாயத்திற்கு ஏற்றவாறு அதை மாற்றுகிறார்கள். மக்களுக்கு அதைப் படிக்க படிக்க ஏதோ இல்லாததைக் கண்டுபிடித்ததைப் போல் மயங்கி தலையில் வைத்து ஆடுகிறார்கள்.
மனிதனுக்கு(குருவுக்கு) அடிமையாகிவிட்டது, அடுத்த கட்டம் என்ன? அவன் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாய் செய்வது! நித்யானந்தத்தின் வீடியோவில் கூட ரஞ்சிதா என்ற நடிகை ஒரு பணிப்பெண் போல செயல்பட்டதைப் பார்க்கலாம்! ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட மனிதன் (குரு) 'என்ன' சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும், ஏனென்றால் அவன்தான் தன் கடவுள் என்ற குருட்டு நம்பிக்கை பக்தனுக்கு தனதுஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. பின் அந்த பக்தன் தன் கடவுள் தன்னிடம் என்ன சொன்னாலும் செய்வான். "தாயை கொல்" என்றாலும் "செத்துமடி" என்றாலும், "500 பேரை கொளுத்து என்றாலும் அந்த மனம் அதை செவ்வனே செய்து முடித்து தன் கடவுளிடம் வாலாட்டும்! அமெரிக்காவின் 'heaven's gate' போன்ற இயக்கங்கள் இது போல் செயல்பட்டவை தான். கிறுக்குப் பிடித்த சாமியார்கள் வசம் மாட்டிக்கொண்டு, அவர்களுக்கு அடிமையாகி பின் அவர்களின் கட்டளைப்படி கும்பல் கும்பலாக தற்கொலை செய்து கொண்ட கூட்டம் அங்கு ஏராளம். Marshal Applewhite(ஹெவன்ஸ் கேட்டின் தலைவன்) என்பவனின் கீழ் 1997ஆம் ஆண்டு 39பேர் (அவனையும் சேர்த்து) தற்கொலை செய்துகொண்டனர். இது ஒரு உதாரணம் தான். இதுபோன்ற கிறுக்குப் பிடித்த 'cult'கள் அங்கு ஏராளம் உண்டு! ஆனால் இந்திய சாமியார்கள் குறியாய் இருப்பது காமத்திலும், பணத்திலும் தான்! அதனால் தான் பெரும்பாலும் உணர்ச்சியை அடக்க முடியாமல் மாட்டிக் கொள்கின்றனர்.

ஆனால் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இவ்வளவு கேவலமாக இருக்கும் இவர்களுக்கு எப்படி இவ்வளவு அருமையாக பேசவும், எழுதவும் வருகிறது? எப்படி மக்களை வசீகரிக்கிறார்கள்? என்று. நல்ல கேள்விதான். பதிலும் வெகு சுலபமான பதில். நிறைய படிக்கிறார்கள். கற்பனை சக்தியை படர விடுகிறார்கள். மக்கள் தன்னை குருவாகவும் கடவுளாகவும் ஏற்று கொள்ள கொள்ள தாங்களே தங்களை எல்லாம் வல்ல கடவுளாக பார்க்கின்றனர். தான் எது செய்தாலும் நியாயம் தான் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு கண்டதையும் செய்கிறார்கள். இது ஒருவிதமான மனநோயே! டாமர், டெட்பண்டி போன்ற கொடுரமான கொலையாளிகளுக்கு அழகான, வசீகரிக்கிற, நகைச்சுவையான, யாரையுமே பேச்சால் மயக்கக்கூடிய அளவுக்கு பேச்சுத் திறமை இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. உலகின் இயல்பு நடைமுறையில் இருந்து வெளியில் வரும்போதே பேச்சும் மாறுபடுகிறது. திரும்பிப்பார்க்க வைக்கிறது. ஏதோ விஷயம் உள்ளது போல் நம்மை சிந்திக்க வைக்கிறது.
ஒன்றே ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் கொள்க, "புத்தனைப் போல் பேசுபவன் எல்லாம் புத்தன் அல்ல." புத்தனைப் போல் யார் வேண்டுமானாலும் பேச முடியும். அதற்கு கொஞ்சம் அறிவும், பேச்சுத்திறமையும், கற்பனாசக்தியும் போது. இதுதான் இந்த சாமியார்களுக்கு நான் முதலிலேயே சொன்னது போல், வாய்த்துள்ளது!
சரி. இதற்கு என்னதான் வழி? மனக்கவலைகளை, கஷ்டங்களைத் தீர்க்க நிறைய புத்தகங்களும் (ஜென், டாவோயிசம், கன்ஃபூஷனிசம், தம்மபதம்), முறையாக தியானம் சொல்லித்தரும் பயிற்சி நிலையங்களும் நிறைய உண்டு. எதுவும் சரிப்படவில்லையெனில் தயவுசெய்து மனநல மருத்துவர்களை பாருங்கள். மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு உண்டு. அங்கு மட்டுமே உண்டு. தியானம் போன்றவற்றை அவர்களே சொல்லித் தருகிறார்கள். சாமியார் எவனையும் நம்பாதீங்க. கடவுள் பேரால் பிழைக்கும் அனைவரும் ஏமாற்றுக்காரர்களே, அயோக்கியர்களே. எனக்கு மிகுந்த வருத்தம் தருவது, இத்தனை நாள் இந்த நித்யானந்தாவை நம்பி தங்கள் வீட்டில் புகைப்படங்களை மாட்டி, தங்கள் குடும்பப் பெண்களையும் சாமியாரின் பணிகளில் ஈடுபடுத்திய பக்தர்களுக்கு, தங்கள் குரு ஒரு அயோக்கியன் எனத் தெரியும் போது எப்படிப்பட்ட மனநிலை இருக்கும், என்பதுதான். தீவிரமான பக்தர்கள் தங்கள் குருவை இன்னமும் நம்பிக்கொண்டிருப்பார்கள் என்பது வேறு விஷயம். அவர்களையெல்லாம் மனநல மருத்துவர்கள் தான் காப்பாற்றவேண்டும். நான் சொல்வது மிதவாத பக்தர்களைப் பற்றி. நேற்றைய செய்திக்குப் பின் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் முன்பு எவ்வளவு அவமானப்படுவார்கள்? நினைக்கவே பாவமாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி, ஆன்மீக, மத ஆசிரமங்களை அரசு உடனே தடை செய்வதுதான். இன்னமும் நீங்கள் சாமியார்களை நம்புவதாக இருந்தால் அந்த இல்லாத கடவுள் தான் உங்களைக் காப்பாற்றவேண்டும்!


இதையெல்லாம் விட்டுவிடுவோம். என் பக்கத்து வீட்டு பாட்டிக்கு கவலையைப் பாருங்கள்.
"ஏம்பா அசோக்கு அந்த வீடியோல வந்த நடிகை யாருப்பா?"
"அது ரஞ்சிதாவாம் பாட்டி"
"அய்யயோ. அப்ப கலைஞர் டீவில தெக்கத்திப் பொண்ணை நிப்பாட்டிருவானாப்பா??!!!"
"???!!!!!!!!!"

8 comments:

Rajakumar Iyyemperumal said...

neradiyaka iraivanai anukuvathey mana kavalai ku ore theervu !

PRINCENRSAMA said...

//நேற்றைய செய்திக்குப் பின் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் முன்பு எவ்வளவு அவமானப்படுவார்கள்? நினைக்கவே பாவமாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி, ஆன்மீக, மத ஆசிரமங்களை அரசு உடனே தடை செய்வதுதான்.//
உண்மையில் பலரிடம் இப்போது பேசவே தயக்கம்தான்... அப்படியே விட்டுவிடலாம்! அவர்களாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால்... நாளைக்கே இன்னொரு சாமியார் வந்தால் அவன் பின்னாலும் போவார்கள். இவர் அப்படியெல்லாம் இல்லையாம்...என்றபடி.! அரசு தடை செய்வது சாத்தியமில்லாமல் கூட இருக்கலாம்... ஆனால் நாம் மக்களின் மனங்களில் ஏற்படுத்த வேண்டிய பணி நிறைய இருக்கிறது... கைகோர்ப்போம்!

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

லூசுங்க உலகம் முழுக்க இருக்கனுங்க.... எதோ பணத்தை மட்டும் புடுங்கினானே. (கீழே இருக்கற சம்பவத்தை படிச்சா குலை நடுங்குது)
Peoples Temple was a pseudo-religious organization founded in 1955 by Jim Jones that, by the mid-1970s, included over a dozen locations in California including its headquarters in San Francisco. It is best known for the events of November 18, 1978 in Guyana, in which 918 people died at the Peoples Temple Agricultural Project

http://en.wikipedia.org/wiki/Peoples_Temple

nathan said...

evanai polla enum palarum ulanar padam eduthu velevidubavargal yaro antha padangaliyum sikiram veliyetal samugathuku nallam.

hey itz me kuruvu said...

regardness of the personel traight of the spritual leaders life,we should imbibe what he says not his behind screen scenario..bcoz our mind has already painted a white colour for every spitual leaders that does not intend to see d other side of the nature..
அப்டின்னு சொல்லுவேன்னு பாத்தீங்களா சத்தியமா கிடையாது...[:p]
மக்கா நீங்க மட்டும் பக்காவா ஏகத்துக்கும் ஒரு தலைப போட்டு சோக்கா எமதிடீங்களா சோ நானும் உங்க ஸ்டைல் அ கமெண்ட் குடுத்தேன்...
வாழ்க எங்கள் குரு அசோகானந்தா[:p]

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையாக ஆலசியுள்ளீர்!
கட்டாயம் நம்மைச்சுற்றியுள்ளவர்கள் ஒருசிலரையாவது; மன உளைச்சலின் போது; சாமிமாரிடம் சிக்காது
பாதுகாப்போம்.சாமியாரும் மனிதர்களே! மகான்களென எவரும் இல்லை. என்பதைத் தெரியவைப்போம்.

easyinfo said...

nice article

Anonymous said...

அந்த இல்லாத கடவுள் தான் உங்களைக் காப்பாற்றவேண்டும்!
this line remeberibg me kamal hasan anna

Related Posts Plugin for WordPress, Blogger...