Tuesday, March 2, 2010

சிம்புவின் முதல் படம்'விண்ணைத் தாண்டி வருவாயா-விமர்சனம்' னு தலைப்பு வைக்க ஏனோ பிடிக்கவில்லை. படம் முழுதும் சிம்பு மட்டுமே கண்ணிலும் மனதிலும் நிற்பதால். வழக்கமாய் நம்மையெல்லாம் எரிச்சலூட்டும் சிம்புவை மிக கண்ணியமாக, நேர்த்தியாக நடிக்க (சொல்லியதற்கு) வைத்ததற்கு ஆயிரம் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் கவுதமுக்கு. சிம்புவின் முதல் படம் இப்படிப்பட்ட படமாக இருந்திருந்தால் நமக்கு மிகவும் பிடித்த நடிகராய் இப்போது சிம்பு இருந்திருக்கக்கூடும். இதையே நாம் சிம்புவின் முதல் படமாய் எடுத்துக்கொண்டு அவருக்கு வாழ்த்து சொல்வோம்! இந்தப் படத்தில் சிம்பு நடிக்கவேயில்லை. நிஜத்தில் ஒரு 22 வயது பையனை அப்படியே வார்த்திருக்கிறார். அவர் நடை, உடை, வசன உச்சரிப்பு, கண்ணசைவு என பின்னியிருக்கிறார். அவருக்காகவே இந்தப் படத்தை எத்தனை முறையேனும் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. த்ரிஷா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை இறகு சுமப்பதைப் போல் மிக சுலபமாக செய்து போகிறார். சிம்புவுடன் கூடவே சுற்றும் அந்த ஒளிப்பதிவாளர் கதாப்பாத்திரமும் அருமை. மொத்தத்தில் எந்தக் கதாப்பாத்திரமுமே திணிக்கப்பட்டதாய் தெரியவில்லை. வசனங்களும் தான். கவுதமின் மற்ற படங்களை விட இதில் ஆங்கில வசனங்கள் சாலக் குறைவு. அதுவே பெரிய நிம்மதியாக இருந்தது. பின்ணணி இசை பின்னுகிறது. முக்கியமாக அந்த 'முஸ்தஃபா முஸ்தஃபா' இசையை சரியான இடத்தில் கோர்த்தது அருமையான ரசனை! படத்தில் மிக மிக மிக பெரிய பலம் ஒளிப்பதிவு. ஒவ்வொரு 'Frame'மும் ஒரு புகைப்படத்தின் அழகோடு இருக்கிறது. ஒளிப்பதிவு இவ்வளவு அழகாக கொண்ட ஒரு படம் வந்ததாய் நினைவில்லை. கதை என எதுவும் பெரிதாக இல்லை. ஏற்கனவே வந்த பல படங்களின் கதை தான். காட்சிகளும் மிகவும் புதிதாய் இல்லை. ஆனால் சிம்புவும், வசனங்களில் உள்ள மெல்லிய நகைச்சுவையும் நம்மை காட்சிகளில் நிலைக்க செய்கிறது. ஆனாலும் கூட சில இடங்களில் மக்கள் 'உஸ்ஸ்' என்கிறார்கள்.

அருமையான நடிகர்கள். மிகவும் அழகான ஒளிப்பதிவு. சில்லிடும் இசை. அழகான காதல். மெல்லிய நகைச்சுவை. மொத்தத்தில் இது ஒரு அருமையான படம் என சொல்லிவிடலாம் தான். ஆனால் நம் அண்ணன் கவுதம் மேனனும், அவரது 'கவுதம் மேனனிஸங்'களும் தடுக்கிறது. கதாநாயகனுக்கு காதல் வந்தால் உடனே நெஞ்சில் குத்திக் கொள்வது, திரைக்கதையில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதே தடம் மாறி எங்கெங்கோ அலைவது, அனைத்து பாடல்களின் ஒளிக்காட்சியும் ஒரே மாதிரி அமைத்துள்ளது, (அதாவது எல்லா பாடல்களிலும் சிம்புவின் பின்னால் வெள்ளைக்காரர்களும் கறுப்பர்களும் ஆடுகிறார்கள்), இரண்டாவது பாதியில் எங்கெங்கோ போய் என்னென்னமோ செய்து மக்களை பொறுமையிழக்க செய்தது, படம் முடிந்ததா இல்லையா எனத் தெரியாமல் மக்கள் திரையரங்குக்குள் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தது போன்ற பல பிரச்சினைகளை சகிக்கத்தான் வேண்டியிருந்தது! இதைவிட பெரிய கொடுமை, த்ரிஷாவுக்கு கடைசியில் திருமணம் ஆனதா இல்லையா என 90% பேருக்கு தெரியவில்லை!! எனக்கும் தான்! ஹி ஹி!!!

கவுதம் மேனன் இன்னும் கொஞ்சம் தெளிவடைய வேண்டும்.
கவுதமின் பிற படங்களுடன் ஒப்பிடுகையில் இது 'மின்னலே' படத்தை ஒத்த படம். கண்டிப்பாய் சிம்புவுக்காகவேனும் பார்க்கவேண்டிய படம். கண்டிப்பாக பாருங்கள். நீங்கள் பார்ப்பதற்குள் கடைசி 20 நிமிடத்தை வெட்டி விடுவார்கள் என நம்புவோமாக!!!!

4 comments:

தர்ஷன் said...

//த்ரிஷாவுக்கு கடைசியில் திருமணம் ஆனதா இல்லையா என 90% பேருக்கு தெரியவில்லை!! எனக்கும் தான்! ஹி ஹி!!!//


ன்னா இது ஓவர் அதுதான் தெளிவா த்ரிஷா தனக்கு கல்யாணம் நடந்ததை சொல்லி இன்னுமொருவரை தேடிக் கொள்ள சொல்கிறாரே. ஆனால் நம்ம மக்கள் அவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்போர் அந்த கடைசி நேரம் எழும்பி போவது என்ன எலவுக்குனு தான் தெரியல்ல. ஆப்பரேடர் லைட்ட போட்டவுடன் போக வேண்டியதுதானே மத்தவனையும் பார்க்க விடாம

karthick said...

Dei as u said, except simbhu and ARR noting is there in that movie. Also the 'Gautam menatics' are continuing which we don like at al..

But my fav part in the movie is ofcourse the climax. And its clear that trisha is married to some one else and Simbhu is telling he likes the pain and will continue to feel that..

Anyway, we saw many other good movies that depicted love in a better way than this. Ex: Mouna raagam, Alaipayuthey etc etc.. Padathin thirai kathaiyil orae aarudhal climax.

Jabes said...

Really i EXPECTED some Strong Slapping Words About Gautam From U(U've Already Didit in VAARANAM AAYIRAM).. Bt U'hv proved ur Critics Quality..
HATS OFF..
A REVIEW BY JABES..
A REVIEW BY ILAVARASAN..

sakthistudycentre.blogspot.com said...

படிக்க படிக்க சுவாரஸ்யம்.....
அருமையான தமிழ் எளியநடையில் சொல்லப்பட்டுள்ளது...

உன்னுடைய எழுத்து பயணம் தொடர எனது நல்வாழ்த்துக்கள்....

என்றும் அன்புடன்,
http://sakthistudycentre.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...