Sunday, February 7, 2010

ஆயிரத்தில் ஒருவன் -ஒரு அலசல்


என்னடா இவன் ஆறிப்போன சோற்றை பந்தியில் வைக்கிறானேனு நினைக்காதீங்க. ஆயிரத்தில் ஒருவன் ஆறிப்போன சோறு இல்லை, நாறிப்போன சோறு!

"தமிழ் திரைப்படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற செல்வாவுக்கு சல்யூட், செல்வாவுக்கு காராபூந்தி"னு ஊரே பரபரப்பா இருந்ததுனால் கொஞ்சம் அடங்கட்டும்னு வெயிட் பண்ணி எழுதுறேன். சரிப்பா மேட்டருக்கு வருவோம்!

இந்த செல்வராகவன் என்ற ஒரு இயக்குனருக்கு சோழர்களையும், பாண்டியர்களையும் பற்றி என்ன தெரியும்? குறைந்தபட்சம், படமெடுக்க ஆரம்பிச்ச அப்புறமாச்சும் அவர்களைப் பற்றி படித்திருக்க வேண்டும்! அதையும் செய்யவில்லை. ஏனெனில் அவர் சொல்கிறார், உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த படக்கதைக்கும் சம்பந்தமில்லையென டைட்டில் கார்டில் போட்டுவிட்டாராம், அதனால் எவனும் கேள்வி கேக்கக் கூடாதாம்! இந்த விளம்பரங்களில் எல்லாம் பல சலுகைகளை அறிவித்துவிட்டு, ஓரமாக சின்னதாக ஒரு '*' போட்டு "நிபந்தனைகளுக்கு உட்பட்டது"னு கீழ போட்டு ஏமாத்துவாங்களே அதுக்கும் இந்த ஆள் செய்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்! சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சம்பந்தமில்லையெனில், வேறு எதாவது கற்பனைப் பெயரை உருவாக்கி படத்துக்கு கதை அமைக்க வேண்டியதானே? உயர்ந்த விருந்தோம்பலுக்கும், நாகரீகத்துக்கும் பெயர் போன இரு தமிழ் அரச வம்சாவழிகளின் பெயரை எவ்வளவு கேவலப் படுத்தமுடியுமோ அவ்வளவு கேவலப் படுத்தியிருக்கிறார் செல்வராகவன். இந்தப்படத்தைப் பார்க்கும் வடநாட்டவர்க்கும், வெளிநாட்டவர்க்கும் நம் மன்னர்களைப் பற்றி தவறான ஒரு எண்ணம் வந்துவிடாதா? கறுப்பு மையை உடல் முழுதும் பூசி, ரத்தம் குடிக்கும் கொடியவர்களாய் காட்டி, (அவர்கள் உணவு கிடைக்காததால் காட்டுமிராண்டி ஆனார்கள் என சில அறிவீளிகள் சொல்கிறார்கள். ஆனால் ஃப்ளாஷ் பேக்கிலேயே சோழ பாண்டியர்கள் கறுப்பு மை பூசி காட்டுமிராண்டிகளாகத்தான் காண்பிக்கப்பட்டிருந்தார்கள்!) அவர்கள் ஏதோ காமத்தில் வல்லவர்களாக சித்தரித்து (பார்த்தீபனிடம் ரீமாசென் சரணடையும் காட்சி) நாறடித்துள்ளார் செல்வராகவன். படம் ஆரம்பிக்கும்போதே அபத்தம். தமிழகத்தில் இருந்து தமிழ் இளவரசன் 'வியட்னாம்' செல்கிறானாம்!! கார்த்தி, பருத்திவீரன் கெட்டப்பில் கெட்ட வார்த்தையுடன் நுழைகிறார். கூசாமல் எடுபிடி கார்த்தி, உயரதிகாரி(!!!) ரிமாசென்னையும் ஆண்ட்ரியாவையும் படுக்கைக்கு அழைக்கிறார். பின் ரீமாசென்னும், ஆண்ட்ரியாவும் ஆங்கிலத்தில் ஆபாசம் பீறிடப் பேசுகிறார்கள். கதாப்பாத்திர வடிவமைப்பு முற்றிலும் நாசம். அவரது முந்தையப் படங்களில் கதையோடு ஒட்டிவந்த 'sex' இதில் தண்ணீரில் எண்ணையாய் மிதக்கிறது. அநாவசியமாய் ஆயிரத்தில் ஒருவன் 'அதோ அந்தப் பறவை' பாடல் வேறு!!!!! ஏ.கே47 ரகத் துப்பாக்கி ரவைகளை கேடயம் தடுக்கிறது!! கண்றாவி!

ஆயிரத்தில் ஒருவன் ஒரு புது முயற்சி டேஷ் முயற்சி என்று கூறுவது, நிர்வாணமாய் ரோட்டில் ஓடுவதை, புதியமுயற்சி எனப் பாராட்டுவது போல்தான் உள்ளது! தயாரிப்பாளரின் பல கோடி ரூபாய்களை சரியான கதை, திரைக்கதை, வசனம் இன்றி, பிரம்மாண்டம் என்ற பெயரில் வாரி இரைப்பது நல்ல முயற்சியா? சும்மா ரெண்டாயிரம் பேருக்கு கறுப்பு சாயம் பூசி கத்த விடுவதை எவன் வேண்டுமானாலும் செய்யலாம். Apocalipto(காட்டுவாசிகள், கடைசியில் வரும் கற்பழிப்பு காட்சிகள்), Cannibal(ரத்தம் குடிப்போர்), 300(பார்த்தீபனின் போர் காட்சிகள்), troy, Schilndler's list, Gladiator போன்ற படங்களின் வாந்திதான் ஆயிரத்தில் ஒருவன். மாயாஜாலப்படமா, சரித்திரப் படமா அல்லது புதையல் வேட்டை படமா என்பது கடைசி வரை தெரியவில்லை. (மாயாஜாலம் அறிந்த சோழர்கள் போரில் தோற்கிறார்கள். ரீமாசென் முதுகில் புலிக்கொடி திடீரென முளைக்கிறது!) அதாவது சுருக்கமாக இந்தக் கதையை சொல்லமுடியுமானால் பல ஆங்கிலப் படங்கள் பார்த்த 'முழுப் பைத்தியக்காரனின் மூன்று மணிநேர உளறல்' எனச் சொல்லலாம்.

இந்தப் படம், நல்ல திரைப்படமே பார்க்காத சிலருக்கு (சிலருக்கு மட்டுமே) வேண்டுமானால் சிறந்த முயற்சியாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு, தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு அழைத்துச் செல்கிறேன் பேர்வழியென இப்படி ஒரு குப்பையை எடுத்திருக்கும் செல்வராகவனை என்ன செய்தாலும் தகும் என்றே தோணும். தோணுகிறது!


12 comments:

karthick said...

Yenda oru vayilla poochiya ippadi thitrae? Avan etho theriyama try pannittan! At least he made some efforts to shoot the scenes da, though the story and screen play are crap..

Neraya peru athu kooda illama, ilaya thalapathy, chinna thalapathy, puratchi thalapathy nulam potukaranga..

Vidu hope Selva will do good in next films..

Anonymous said...

Neraya peru athu kooda illama, ilaya thalapathy, chinna thalapathy, puratchi thalapathy nulam potukaranga..//

Ya da.. adhaan naan avaingala pathi pesrathe illa. Ippadi oru thought wasta pochu.. Atleast vijay, vishal are harmless. But the mistake (misinterpreting two great dynasties and adding erotica to their livin style), selva has done will be very harmfull if it gets the attention! Adhaan eluthunen!

Shankar said...

@Karthick,
//At least he made some efforts to shoot the scenes da, //
Producer kitta vaanguna 35 crore, plus iluthadicha 3 yrs, 10 % sincere'a velai paarthirunthaa ithai vida 100 madangu thavarugalai sari seithirukkalaam. avan panam'naa ippadi methanamaa irunthiruppaana selvaraagavan?

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

எனக்கு முடிவு புரியவே இல்ல.... அத சொல்லுவீங்கன்னு பார்த்தா... :(

யாரு ஆயிரத்தில் ஒருவன்? பார்திபனா கார்த்தியா?

தாய் தின்ற மண்ணே, பெம்மானே பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும்.. அந்த பாட்டு காட்சியமைப்பு பார்க்கல நானு. பாட்டு சுவை கேட்டு போயிடும்னு

பாகம் 2 வரப போகுதுன்னு பசங்க சொல்றாங்க. உண்மையா?

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

பெரியார் சொன்ன இந்த கருத்தை படிச்சா அப்புறம், இந்த சேர சோழனுங்கள நினைச்சாலே பத்திக்கிட்டு வருது...
_________

நம் நாட்டைப் பொறுத்த வரையில் நம் நாட்டு அரசர்களான சேர, சோழ, பாண்டியர்
முதலான மன்னர்கள் ஆரியத்துக்குச் சலுகை கொடுத்து அவர்களைத் தெய்வீக
பருஷர்களாக நினைத்து ஆரியருக்கு இருக்க அக்கிரகாரமும், வயிறு வளர்க்க
கோயில் கட்டி, மாளிகை விட்டும் நம்மை இழி மக்களாக்கி, இந்த 1950-ஆம்
ஆண்டில் கூட நாம் இழிவு மக்களாய் இருக்கும்படி
செய்துவிட்டார்கள்.

இன்று அறிவு உணர்ச்சி, மான உணர்ச்சி
ஏற்பட்டிருப்பதால் அசுரரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும்,
பவுத்தர்களும், சமணர்களும் செய்துவந்த வேலை நம் கழகம் செய்து
வருகிறது.

http://tamizachiyin-periyar.com/index.php?article=2039

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஆ. ஒ.

Anonymous said...

பெரியார் சொன்னது சரிதான். பெரியார் சொன்ன கருத்தை சுட்டிக்காட்டி படமெடுத்திருந்தால் பரவாயில்லை.(செல்வராகவனின் படத்தில் சோழர்களின் மதகுருவாக ஒரு பார்ப்பனரல்லாதவன் தான் காண்பிக்கப்படுகிறான்!) மொத்தமாக ஒரு இனத்தையே இழிவு செய்யும் வேலையை செய்துள்ளார் செல்வராகவன். தமிழ் மன்னர்கள் பார்ப்பன அடிமையாய் இருந்து தொலைத்தது இன்னும் நம்மை பாதிக்கும் மாபெரும் தவறே எனினும், அதற்காக உலக மக்கள் நம் பழங்கால வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ளும் நமது வரலாற்றில் கை வைத்து, நம்மை காட்டுமிராண்டிகளாக காட்டியிருப்பது மாபெரும் தவறாக படுகிறது. இரண்டாம் பாகம் எடுப்பாரு. யாரு பணம் போடுறது????!!!!!! :-)

Anonymous said...

மேலும் என்னை ஆங்கிலத்தில் திட்டியும், சினிமா பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதென்றும், நான் மகாமுட்டாள் என்றும் ஒருவர் கமெண்ட் போட்டிருந்தார்! சபை நாகரீகம் கருதி அதை வெளியிடமுடியாமைக்கு வருந்துகிறேன்! மேலும் சினிமா பற்றி கொஞ்சமே தெரியும் எனினும் வரலாற்றைப் பற்றியும் வரலாற்று திரிபுகளால் எவ்வளவு கேடு நிகழும் என்பது பற்றி நன்றாகவே தெரியுமென சொல்லிக் கொள்கிறேன்!

Anand said...

The problem with this film is not just the logic but the film making itself.. When the film is not gripping the audience , how does the filmmaker expect them to believe in anything he tries to convey through his film.. Even if he had not touched Tamil history , it still is a very bad movie..

Jeeva said...

super appu

ரா.கிரிதரன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி இளவரசன். என் பதிலை இங்கு பதிந்துள்ளேன்.

http://beyondwords.typepad.com/beyond-words/2010/02/1001.html?cid=6a01156ffbfe0a970b0120a8b5d20b970b#comment-6a01156ffbfe0a970b0120a8b5d20b970b

Vaanathin Keezhe... said...

செல்வராகவன் என்ன எடுத்தாலும் வித்தியாசமாத்தான் இருக்கும் என்று சில கைப்புள்ளைகள் கூட்டம் நம்பிக்கிட்டிருக்கு. அந்தக் கூட்டம் கடைசி வரை செல்வராகவன் வக்கிரத்துக்கு ஆதரவை வாரி வழங்கிக்கிட்டுதான் இருக்கும்.

அதன் விளைவுதான் இந்த மாதிரி படங்கள் வருவதும் தொடர்கின்றன.

உங்க கோபத்தை அப்படியே காட்டியிருக்கீங்க. அதில் நியாயமும் உள்ளது. அது புரியாதவங்களைப் பத்தி கவலைப்பட்டு ஒண்ணும் ஆகப்போறதில்லை.

-வினோ

Related Posts Plugin for WordPress, Blogger...