Sunday, February 7, 2010

ஆயிரத்தில் ஒருவன் -ஒரு அலசல்


என்னடா இவன் ஆறிப்போன சோற்றை பந்தியில் வைக்கிறானேனு நினைக்காதீங்க. ஆயிரத்தில் ஒருவன் ஆறிப்போன சோறு இல்லை, நாறிப்போன சோறு!

"தமிழ் திரைப்படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற செல்வாவுக்கு சல்யூட், செல்வாவுக்கு காராபூந்தி"னு ஊரே பரபரப்பா இருந்ததுனால் கொஞ்சம் அடங்கட்டும்னு வெயிட் பண்ணி எழுதுறேன். சரிப்பா மேட்டருக்கு வருவோம்!

இந்த செல்வராகவன் என்ற ஒரு இயக்குனருக்கு சோழர்களையும், பாண்டியர்களையும் பற்றி என்ன தெரியும்? குறைந்தபட்சம், படமெடுக்க ஆரம்பிச்ச அப்புறமாச்சும் அவர்களைப் பற்றி படித்திருக்க வேண்டும்! அதையும் செய்யவில்லை. ஏனெனில் அவர் சொல்கிறார், உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த படக்கதைக்கும் சம்பந்தமில்லையென டைட்டில் கார்டில் போட்டுவிட்டாராம், அதனால் எவனும் கேள்வி கேக்கக் கூடாதாம்! இந்த விளம்பரங்களில் எல்லாம் பல சலுகைகளை அறிவித்துவிட்டு, ஓரமாக சின்னதாக ஒரு '*' போட்டு "நிபந்தனைகளுக்கு உட்பட்டது"னு கீழ போட்டு ஏமாத்துவாங்களே அதுக்கும் இந்த ஆள் செய்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்! சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சம்பந்தமில்லையெனில், வேறு எதாவது கற்பனைப் பெயரை உருவாக்கி படத்துக்கு கதை அமைக்க வேண்டியதானே? உயர்ந்த விருந்தோம்பலுக்கும், நாகரீகத்துக்கும் பெயர் போன இரு தமிழ் அரச வம்சாவழிகளின் பெயரை எவ்வளவு கேவலப் படுத்தமுடியுமோ அவ்வளவு கேவலப் படுத்தியிருக்கிறார் செல்வராகவன். இந்தப்படத்தைப் பார்க்கும் வடநாட்டவர்க்கும், வெளிநாட்டவர்க்கும் நம் மன்னர்களைப் பற்றி தவறான ஒரு எண்ணம் வந்துவிடாதா? கறுப்பு மையை உடல் முழுதும் பூசி, ரத்தம் குடிக்கும் கொடியவர்களாய் காட்டி, (அவர்கள் உணவு கிடைக்காததால் காட்டுமிராண்டி ஆனார்கள் என சில அறிவீளிகள் சொல்கிறார்கள். ஆனால் ஃப்ளாஷ் பேக்கிலேயே சோழ பாண்டியர்கள் கறுப்பு மை பூசி காட்டுமிராண்டிகளாகத்தான் காண்பிக்கப்பட்டிருந்தார்கள்!) அவர்கள் ஏதோ காமத்தில் வல்லவர்களாக சித்தரித்து (பார்த்தீபனிடம் ரீமாசென் சரணடையும் காட்சி) நாறடித்துள்ளார் செல்வராகவன். படம் ஆரம்பிக்கும்போதே அபத்தம். தமிழகத்தில் இருந்து தமிழ் இளவரசன் 'வியட்னாம்' செல்கிறானாம்!! கார்த்தி, பருத்திவீரன் கெட்டப்பில் கெட்ட வார்த்தையுடன் நுழைகிறார். கூசாமல் எடுபிடி கார்த்தி, உயரதிகாரி(!!!) ரிமாசென்னையும் ஆண்ட்ரியாவையும் படுக்கைக்கு அழைக்கிறார். பின் ரீமாசென்னும், ஆண்ட்ரியாவும் ஆங்கிலத்தில் ஆபாசம் பீறிடப் பேசுகிறார்கள். கதாப்பாத்திர வடிவமைப்பு முற்றிலும் நாசம். அவரது முந்தையப் படங்களில் கதையோடு ஒட்டிவந்த 'sex' இதில் தண்ணீரில் எண்ணையாய் மிதக்கிறது. அநாவசியமாய் ஆயிரத்தில் ஒருவன் 'அதோ அந்தப் பறவை' பாடல் வேறு!!!!! ஏ.கே47 ரகத் துப்பாக்கி ரவைகளை கேடயம் தடுக்கிறது!! கண்றாவி!

ஆயிரத்தில் ஒருவன் ஒரு புது முயற்சி டேஷ் முயற்சி என்று கூறுவது, நிர்வாணமாய் ரோட்டில் ஓடுவதை, புதியமுயற்சி எனப் பாராட்டுவது போல்தான் உள்ளது! தயாரிப்பாளரின் பல கோடி ரூபாய்களை சரியான கதை, திரைக்கதை, வசனம் இன்றி, பிரம்மாண்டம் என்ற பெயரில் வாரி இரைப்பது நல்ல முயற்சியா? சும்மா ரெண்டாயிரம் பேருக்கு கறுப்பு சாயம் பூசி கத்த விடுவதை எவன் வேண்டுமானாலும் செய்யலாம். Apocalipto(காட்டுவாசிகள், கடைசியில் வரும் கற்பழிப்பு காட்சிகள்), Cannibal(ரத்தம் குடிப்போர்), 300(பார்த்தீபனின் போர் காட்சிகள்), troy, Schilndler's list, Gladiator போன்ற படங்களின் வாந்திதான் ஆயிரத்தில் ஒருவன். மாயாஜாலப்படமா, சரித்திரப் படமா அல்லது புதையல் வேட்டை படமா என்பது கடைசி வரை தெரியவில்லை. (மாயாஜாலம் அறிந்த சோழர்கள் போரில் தோற்கிறார்கள். ரீமாசென் முதுகில் புலிக்கொடி திடீரென முளைக்கிறது!) அதாவது சுருக்கமாக இந்தக் கதையை சொல்லமுடியுமானால் பல ஆங்கிலப் படங்கள் பார்த்த 'முழுப் பைத்தியக்காரனின் மூன்று மணிநேர உளறல்' எனச் சொல்லலாம்.

இந்தப் படம், நல்ல திரைப்படமே பார்க்காத சிலருக்கு (சிலருக்கு மட்டுமே) வேண்டுமானால் சிறந்த முயற்சியாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு, தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு அழைத்துச் செல்கிறேன் பேர்வழியென இப்படி ஒரு குப்பையை எடுத்திருக்கும் செல்வராகவனை என்ன செய்தாலும் தகும் என்றே தோணும். தோணுகிறது!


Saturday, February 6, 2010

அசல்- திரைப்பட விமர்சனம்


அசல். எதிர்பார்ப்பு, அது இது என்ற வழக்கமான விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு படத்துக்குள் செல்வோம். கதையைப் பற்றி விவாதிக்கவேண்டாம். விமர்சனத்தை மட்டும் பார்ப்போம். சமீபகாலத்தில் இவ்வளவு மட்டமான திரைக்கதையை நான் எந்தப் படத்திலும் பார்க்கவில்லை. சரணின் 'கதைக்கரு' (PLOT) மிக அருமையான, அதிரடி ஆக்சன் திரைப்படத்தை உருவாக்குவதற்கான வழிகள் அனைத்தையும் கொண்ட ஒரு அருமையான கதைக்கரு. ஆனால் அதை சரண்-யூகிசேது-அஜீத் கூட்டணி சின்னாபின்னமாக சிதைத்து கருச்சிதைவே செய்துள்ளனர்!!! அதிரடியாய் ஒரு காட்சி கிடையாது. ஆங்கிலத்தில் 'Goosebumps' என சொல்லப்படும் உணர்வை ஆக்சன் படம் என சொல்லப்படும் இந்தப் படம் ஒரு இடத்தில் கூட தரவில்லை. மிக அசிரத்தையாக, கதை எங்கெங்கோ நகர்கிறது. வழக்கமான கதாநாயகி உளறல்களை, காதல்களை, பாவனாவும் சமீராவும் செய்து போகின்றனர்.
திரைக்கதையின் மிக முக்கியமான பின்னடைவு கதாநாயகிகள் அஜீத் மேல் வைத்துத் தொலைக்கும் காதல்.

படத்தின் முக்கியமான விஷயமான, பெரும் பலமாக சொல்லப்பட்ட அஜீத்திடம் வருவோம். எழவு வீட்டில் துக்கம் விசாரிக்கச் சென்றவர் போல் படம் முழுக்க முகத்தை வைத்துக்கொண்டு வருகிறார் அஜீத். சண்டைக் காட்சிகளில் வேகம், பரபரப்பு என்று எதுவுமே இல்லை. ஏதோ கடமைக்கு நடித்தது போல் இருந்தது. அதைவிட டூயட்டுகளில் அஜீத் ரியாக்சன் கண்றாவி!!! சகிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு, வெகு சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு, 'டொட்டொடொயின்ங்' என்று அவர் ஆடும் போது பாவமாக இருக்கிறது. அஜீத் பல காட்சிகளில் 'Obese'ஆக தெரிகிறார். ஆக்சன் ஹீரோவுக்கு உடல் உறுதியும் கொஞ்சமேனும் முக்கியம் என்பதை அஜீத் உணரவேண்டும். அப்பா வேடத்தில் மட்டும் அஜீத் மின்னியிருக்கிறார். அவர் முகத்தில் தெரியும் முதிர்ச்சி அப்பா வேடத்திற்கு அவருக்கு பெரிதும் உதவியுள்ளது! படத்தின் கடைசி காட்சியில் அஜீத், பாவனா, சமீரா நிற்கையில், பாவனா, அஜீத்-சமீராவின் மகள் போல் தோற்றமளிக்கிறார்!!

பின்ணனி இசை இரைச்சல் தான். படத்தின் கதையோஉ ஒட்டி வரும் இரண்டு பாடல்கள் படத்தில் இல்லை. ஆனால் மூன்று டூயட்டுகள் வந்து உயிரை எடுக்கிறது!

விஷ்ணுவர்தன் போன்ற இயக்குனர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்க வேண்டிய கதை. சரண் கையில் சிக்கி சிதறியிருக்கிறது! திரைக்கதை மற்றும் இணை இயக்கம் ஆகிய செயல்பாடுகளில் அஜீத் பெயர் வருவதும் பாவமாகவே இருக்கிறது! இயக்குனர் பாதி பலியை அஜீத் மேல் போடுவதற்காக செய்தாரோ என்னவோ!! சம்பத், ராவத் ஆகியோர் வழக்கமான வில்லன்கள். சுரேஷ் மட்டுமே மிளிர்கிறார். அவருக்கு அருமையான 'Come back' படம் இது. படத்தின் இரண்டே நல்ல விஷயங்களாக அப்பா அஜீத் மற்றும் சுரேஷ் மட்டுமே. மற்ற அனைத்தும் மகாமட்டம்! இதையெல்லாம் நீங்கள் நம்பாமல், வெளியில் உலாவரும் 'படம் சூப்பர்' என்ற பொய்யை நம்பி படம் பார்க்க செல்வதாய் இருந்தால் உங்களுக்கு என் இரங்கல்கள்!! :-) அசல்-அஜீத்-சரண்-காலி!
Related Posts Plugin for WordPress, Blogger...