Thursday, October 29, 2009

அதிகப்பிரசங்கி பெண்கள்!!


சமீபகாலமா ஒரு விஷயம் சில பெண்(??!!) (அதிகப்பிரசங்கிகள்) எழுத்தாளர்களிடம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அதாவது ஆண்கள் மாதிரி ஜீன்ஸ் டி.ஷர்ட் அணிந்துகொண்டு, ஆண்களை திட்டிக்கொண்டு, ஆபாசக் கவிதைகள் எழுதிக்கொண்டு திரிவது என்பதுதான் அது. கவிதை தொகுப்புகளுக்கு பெண் அந்தரங்க உறுப்புகளின் பெயரை வைத்துவிட்டு, தாங்கள் ஏதோ ஆயிரம் வருடங்களாக அடிமைப்பட்டிருந்த பெண் இனத்திற்கு விடுதலை வாங்கிக்கொடுத்துவிட்ட பெண் பெரியார்கள் போல் பேசிக்கொண்டு அலையும் கூட்டத்தைப் பற்றியே இந்தக் கட்டுரை! மேற்கண்ட விசயங்களில் கைதேர்ந்த பெண் எழுத்தாளினிகள் பலர் உண்டு. பெயர்கள் உங்களுக்கே தெரியும்! இந்தக் கட்டுரை அலசப் போவது அதைத்தான்!!!!

பெண்ணின் அந்தரங்கங்களை, அசராமல், அலுக்காமல் ஆலோசித்து சிலாகிப்பதுதான் பெண்ணியமா, பெரியாரியமா?
பெரியாரியத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? பெரியாரை படித்து மட்டும் வைத்து, புரியாமல் விட்டவர்கள், ஆபாசமாய் பேசுவதற்கு பெரியாரியம் ஒரு உரிமைச்சீட்டு என நினைத்துள்ளனர் போலும். பெண்களைப் பற்றி பெரியார் என்ன சொன்னார், என்பதைவிட, எப்போது சொன்னார்? எதனால் சொன்னார்? என்பவைகள் மிக முக்கியம்.

என்ன சொன்னார்? பெண்களை தலைமுடியை ஒட்ட வெட்டச்சொன்னார், கர்ப்பப்பைகளை அறுத்தெறியுங்கள் என்றார். ஆண்களைப் போல் உடையணியுங்கள் என்றார்.
சரி. எப்போது சொன்னார்? பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரங்களாகவும், அழகுப் பதுமைகளாகவும், போகப் பொருள்களாக மட்டுமே சமூகத்தால் பார்க்கப்பட்ட காலத்தில் சொன்னார்.
ஏன் சொன்னார்? இதைப் பார்க்கும் முன், உங்கள் வீட்டில், அலுவலகங்களில், தெருக்களில் என்று அனைத்து இடங்களிலுமே பெண்கள் முடியை ஒட்டவெட்டி, அழகு சாதனங்கள் அணியாமல், ஆண்கள் உடையணிந்து, கருப்பை அன்றி நடமாடுவதாக சிறு கற்பனை செய்து பாருங்கள். எப்படியிருக்கிறது? உங்கள் சுரப்பிகள் வழக்கமாய் சுரக்கும் காதல் ஹார்மோனான 'oxytocin' சுரக்கவே பயப்படுமே!!!! இதற்காகத்தான் பெரியார் அப்படிச் சொன்னார். அவர் சொன்னபடியெல்லாம் நடந்து தொலைத்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் ஆண்கள் ஒழுங்காக இருப்பார்கள் என்ற எண்ணத்திலேதான் அவர் அப்படியெல்லாம் சொன்னாரெயொழிய அவர் அதை 100% நடைமுறைபடுத்தும் பொருட்டு, பொருட்படுத்தி சொல்லவில்லை.
ஆனால் நம்மூரில் பெரியாரியம் பேசும் பெண்களில் 90% பேர், "எனக்கு ................ வருகிறது" என பொதுக்கூட்டத்தில் சொல்வதும், அந்தரங்க உறுப்புக்களின் பெயரில் கவிதைத் தொகுப்புகள் எழுதுவதும், மற்றவர்களையும் தூண்டிவிடுவதுமாகத்தான் திரிகிறார்கள். என்றாவது பெண்களை கவர்ச்சி நடனம் ஆடவிட்டு கமர்ஷியல் சினிமா எடுக்கும் இயக்குனர்களை திட்டியிருக்கிறார்களா? பெண்களை போகப் பொருள் என உலகுக்கு எடுத்துக்காட்டும் 'சிறந்த' உவமைகளான நடிகைகளை கண்டித்திருக்கிறார்களா? 'Low hip' ஜீனில் உள்ளாடையின் வண்ணத்தை விளம்பரம் செய்துப் போகும் பெண்மணிகளை திட்டியிருக்குறார்களா? இல்லையே. ஏனெனில் இவையெல்லாம் பரபரப்பான விளம்பரம் தரும் செயல்கள் அல்ல!!

என்னிடம் ஆர்குட் விவாதத்தில் ஒரு அறிவுஜீவி பெண் ஒன்று, "அண்ணனிடம் நாப்கின் வாங்கச்சொல்ல எங்களால் முடியுமா? எங்களுக்கு அந்த சுதந்திரம் உள்ளதா?" என்று அறிபூர்வமான ஒரு கேள்வி ஒன்றை கேட்டார். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், பெண் விடுதலை என்பது ஆண்களை நாப்கின் வாங்கிவரச் சொல்வதல்ல, பெண்களே தங்களுக்காக போய் வெட்கப்படாமல் நாப்கின் வாங்குவதுதான். (தன் பெண்பிள்ளைக்கும், மனைவிக்கும் நாப்கின் வாங்கித்தரும் எத்தனையோ அப்பாக்களை கடைகளில் நான் பார்த்திருக்கிறேன்.)

இங்கு பிரச்சினை என்னவென்றால், 'எதற்காக அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசவேண்டும்?', என்பதுதான்! பெண்கள் கூடி உங்கள் விஷயங்களைப் பேசுங்கள். என்ன பிரச்சினை, எதனால் இப்படி, ஏன் அப்படியென ஆலோசியுங்கள். பொது இடங்களில் மேடை போட்டு கெட்ட வார்த்தை பேசுவது நாகரீகமே அல்ல. ஆண்களையும் பெண்களையும் சமமாகக் கருதும் மேற்கத்தியர்கள் கூட "MEN ARE FROM MARS, WOMEN ARE FROM VENUS" என்ற கருத்தை ஏற்று கொண்டார்கள். அதாவது ஒரு ஆணுக்கும்- பெண்ணுக்கும் மனநிலையில் அவ்வளவு வித்தியாசங்கள் உள்ளனவாம். அந்த வித்தியாசங்கள் தான் ஆணையும், பெண்ணையும் இத்தனை லட்ச வருஷமும் கட்டிப் போட்டுக் காதலிக்க வைத்திருக்கிறதாம். ஆனால் பெண்ணியம் பேசுகிறேன், பெரியாரியம் பேசுகிறேன் பேர்வழியென பெண்கள் எல்லோரையும் ஆண்கள் போல் மாற்றிவிட்டால் ஆண்-பெண் வேறுபாடுக்கும், காதலுக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடுமே?!!

ஒரு ஆண் தன் அந்தரங்க உறுப்பு சம்பந்தமான பிரசினைகளை இன்னொரு பெண் முன் சொல்வது எப்படி அவனது மனைவிக்கு அசிங்கமாக, அறுவெறுப்பாக இருக்குமோ, அதுபோல்தான் பெண்கள் இப்படி பொது இடத்தில் தங்கள் உறுப்புக்களைப் பற்றி பேசுவதும் இருக்கும். அந்தரங்கங்களே தேவையில்லையென்றால் உடைகள் எதற்கு?

நான் பெண்ணடிமைத்தனத்தை மெச்சவில்லை, அதை எதிர்க்க சில பெண் புரட்சியாள காமெடியாளர்கள் எடுக்கும் ஆயுதம் மிகவும் கேவலமானது. பெண் விடுதலை என்பது பெண்கள் ஆண்கள் போல் திரிவதல்ல, பெண்கள் அடிமைகளாய் இராது 'பெண்'களாகவே வாழ்தல் என்பதுதான்.
சில விஷயங்கள் பொது இடத்துக்கு விவாதப் பொருளாக வராமலிருப்பதுதான், ஆணுக்கு பெண் மீது உள்ள ஈர்ப்பையும், பெண்ணுக்கு ஆண் மீது உள்ள ஈர்ப்பையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

அதனால் விளம்பரத்துக்காக மேடைகளில் ஆபசமாய் பேசியும், கவிதைகளில் கண்டது கழியதை எழுதியும், கவிதை தொகுப்புகளுக்கு அசிங்கமாக பெயர் வைத்தும் அலையும் பெண்களை "பொது இடத்தில் ஆபசமாய் நடப்பதற்காக அல்லது நடந்ததற்காக ஏன் கைது செய்ய கூடாது? இதெல்லாம் கேட்கமாட்டோம்! நாங்கள் இப்படித்தான் செய்வொம் என அலைபவர்கள் அலையுங்கள். பெண்கள் எல்லோரும் தெருவில் வந்து கெட்ட வார்த்தை பேசுங்கள். ஜாலியாகவும், காதுக்கு இனிமையாகவும் இருக்கும், அப்படியே இலவச இணைப்பாக பெண் சுதந்திரமும் கிடைக்கும்!!!!! யாராச்சும் திட்டுறதுன்னா கமெண்ட்ல திட்டுங்க!! நான் கிளம்புறேன்பா!

11 comments:

ரோஸ்விக் said...

//பெண் விடுதலை என்பது ஆண்களை நாப்கின் வாங்கிவரச் சொல்வதல்ல, பெண்களே தங்களுக்காக போய் வெட்கப்படாமல் நாப்கின் வாங்குவதுதான். (தன் பெண்பிள்ளைக்கும், மனைவிக்கும் நாப்கின் வாங்கித்தரும் எத்தனையோ அப்பாக்களை கடைகளில் நான் பார்த்திருக்கிறேன்.) //

அருமையான கட்டுரை. அதில் இந்த வரிகள் மிக "அருமை". சுதந்திரம் அவர்களுக்கு வேண்டுமே ஒழிய ஆடைக்கும், அந்தரங்கத்திற்கும் வேண்டுமென போராடுவது தான் நமது மன வருத்தம்.

..:: Mãstän ::.. said...

Nice one Illavarasan. Really true words.

few girls are express feeling like that... this is the human rights place whoever wherever whenever can express whats their in mind. What can we say other then this? Some time I have to be visit such blogs then I feel like disgust. Anyhow....hmmm... when I reading some blog I expect she is in lust, using words were like that. But most of girls have been writing in good way.

Thanks for sharing...

BONIFACE said...

//ஒரு ஆணுக்கும்- பெண்ணுக்கும் மனநிலையில் அவ்வளவு வித்தியாசங்கள் உள்ளனவாம். அந்த வித்தியாசங்கள் தான் ஆணையும், பெண்ணையும் இத்தனை லட்ச வருஷமும் கட்டிப் போட்டுக் காதலிக்க வைத்திருக்கிறதாம்//
உண்மையே,,,,இதை புரிந்து கொல்லாமல் இருவருமே நொந்து கொள்கிறார்கள் !!!

ராஜவம்சம் said...

சம்மந்தபட்டவர்களுக்கு புரிந்தால் சரி

கந்தர்மடம் கவின் said...

//பெண் விடுதலை என்பது ஆண்களை நாப்கின் வாங்கிவரச் சொல்வதல்ல, பெண்களே தங்களுக்காக போய் வெட்கப்படாமல் நாப்கின் வாங்குவதுதான். (தன் பெண்பிள்ளைக்கும், மனைவிக்கும் நாப்கின் வாங்கித்தரும் எத்தனையோ அப்பாக்களை கடைகளில் நான் பார்த்திருக்கிறேன்.) //

இதுதான் உண்மை....இதை பெண்கள் புரிந்துகொளவார்கள்.
பெண்கள் போலிருப்பவர்களால் புரிவது கடினம்.

தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பமுடியாது நண்பரே..!

நல்ல அலசல், நல்ல எழுத்து நடை தொடரட்டும் உங்கள் பணி.

Sabarinathan Arthanari said...

கருத்துக்களில் பெரும்பான்மையானவற்றுடன் ஒத்து போகிறேன்.
//பெண் விடுதலை என்பது பெண்கள் ஆண்கள் போல் திரிவதல்ல, பெண்கள் அடிமைகளாய் இராது 'பெண்'களாகவே வாழ்தல் என்பதுதான். //

இதற்கு பெண்கள் என்ன சொல்வார்கள் என்று பார்ப்போம்.

யுவன் பிரபாகரன் said...

innumaa yaarum thittala ?

லெமூரியன்... said...

\\அதாவது ஆண்கள் மாதிரி ஜீன்ஸ் டி.ஷர்ட் அணிந்துகொண்டு....//

முதலில் ஒரு விஷயம்......உடை விஷயத்தில் அது தனி நபர் சுதந்திரம்..இப்படித்தான் அவர்கள் உடுத்த வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்க முடியாது..........

\\பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரங்களாகவும், அழகுப் பதுமைகளாகவும், போகப் பொருள்களாக மட்டுமே சமூகத்தால் பார்க்கப்பட்ட காலத்தில் சொன்னார்........//
இப்போது அந்த பார்வை மாறி விட்டதா என்று நீங்களே சொல்ல வேண்டும்...........எனக்கு தெரிந்து கல்வியில் முன்னேறி செல்கிறார்கள்....சுயமாக தன் காலில் நிற்கும் தன்மை பெற்றிருக்கிறார்கள் கொஞ்சமே கொஞ்சமாக....அதுவும் நகரங்களில் மட்டும்.............

\\அவர் அப்படியெல்லாம் சொன்னாரெயொழிய அவர் அதை 100% நடைமுறைபடுத்தும் பொருட்டு, பொருட்படுத்தி சொல்லவில்லை. .......//
உண்மைதான் அவர் நடைமுறை படுத்த சொல்லவில்லைதான்.......ஆனால் அந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள ஆத்திரத்தின் அளவை கொண்டே அவர் இந்த சமுதாயத்தின் மீது கொண்ட பார்வை புலப்படும்!

\\அந்தரங்க உறுப்புக்களின் பெயரில் கவிதைத் தொகுப்புகள் எழுதுவதும், மற்றவர்களையும் தூண்டிவிடுவதுமாகத்தான் திரிகிறார்கள்............//
உங்களிடம் இந்த கருத்து வந்தது கண்டு சற்று அதிர்சியுற்றுதான் போனேன்........பெண்ணை போக பொருளாக சித்தரித்து தொண்ணூறு விழுக்காடு ஆண் கவிகள் எழுதும் கவிதையை தாங்கள் குற்றம் சுமத்த விளயவில்லையே?????

\\பெண் விடுதலை என்பது ஆண்களை நாப்கின் வாங்கிவரச் சொல்வதல்ல, பெண்களே தங்களுக்காக போய் வெட்கப்படாமல் நாப்கின் வாங்குவதுதான்..........//
பள்ளி பருவத்தில் ஒரு முறை என் தங்கைக்காக நாப்கின் வாங்க நான் கடைக்கு சென்ற பொழுது அந்த கடைக்காரன் என்னை ஏளனமாக பார்த்த பார்வை இன்னும் நினைவில்..........
ஒரு ஆணையே இப்படி நோக்கும் அவர்கள் பார்வையில் ஒரு பெண்ண சென்று வாங்கும் போது நீங்களே நினைத்து பார்த்து கொள்ளுங்கள்...!(மாநகரங்களில் வேண்டுமானால் இந்த பார்வை குறைந்திருக்க வாய்ப்புண்டு...)

\\பெண் விடுதலை என்பது பெண்கள் ஆண்கள் போல் திரிவதல்ல,..................//
இயற்கையே சில வேறுபாடுகளை ஆணுக்கும் பெண்ணுக்கும் தீர்மானித்திருக்கிறது...........அதை தவிர்த்து வேறென்ன வேறுபாடுகளுடன் அவர்கள் இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்???????

தனி காட்டு ராஜா said...

நல்லா அனலிஸ் பண்ணி எழுதி இருக்கீங்க......

arunkumar said...

nacchu article

A.L.Raja said...

i like this article

Related Posts Plugin for WordPress, Blogger...