Tuesday, August 4, 2009

ஆலிவுட்டில் மசாலா. உண்மை நிலவரம்!!

"அய்யயோ.. தமிழ் படமா? எவன் பாப்பான்? எல்லாம் ஒரே மசாலா... நான் இங்க்லீஷ் படம் மட்டும் தான் பாப்பேன்!"ன்னு எவனாவது சொன்னீங்க, மவனே கொன்டேபுடுவேன்!!

மேல உள்ள "அய்யய்யோ........"வசனத்தை நம்ம ஆளுங்க நிறையா பேரு ஊருக்குள்ள சொல்லிட்டு இருக்காய்ங்க. அதுக்காகத்தான் இந்த பதிவே. அமெரிக்காகாரன் மட்டும் என்ன எல்லாப் படமும் ஆர்ட் ஃபிலிம்மாவா எடுக்குறான். அவிய்ங்களை மிஞ்சுன மசாலாப் படத்தை நம்மலால எடுக்கவே முடியாது. ஆலிவுட்ல வர்ற 99சதவிகிதம் மசாலா தான். என்ன ஒன்னு, கொஞ்சம் செலவலிச்சு காஸ்ட்லியா எடுக்குறாய்ங்க. ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தை விட இதுக்கு நல்ல உதாரணம் கிடையாது. நம்ம மசாலா ஹீரோக்களை விட ஹீராதி ஹீரோ அவரு. ஒரே ஃபார்முலாதான் எப்பவும். அறிமுக அதிரடிக் காட்சி, நாடு விட்டு நாடு தாவுறது, பெண்களை தனது எண்ணத்திற்கு பயன்படுத்துறது, அதில் ஒரு பெண் கொல்லப்பட்டவுடன் கோவப்பட்டு பொங்குறது, அப்புறம் வில்லனோட இடத்தை தரைமட்டமா ஆக்கி கடைசீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல தப்பிச்சி நடுக்கடல்ல சேட்டை பண்றது. இது எல்லாத்தையும் விட முக்கியம், எல்லாப் படத்துலயும் ரஷ்யாவ வில்லனா காமிக்கிறது.எதை நீங்க மசாலா படம்னு சொல்றீங்க? வழக்கமான ஃபார்முலால ஒரு அறிமுக குத்துப் பாட்டு, நாலு ஃபைட்டு, நாலு டூயட்டு, வில்லனோட நாற்பது அதிரடி வசனம் (பஞ்ச் டயலாக்). இதெல்லாம் இருந்தா மசாலாப் படம்னு சொல்றீங்க. இதேதான ஆலிவுட்லயும் நடக்குது. ஹீரோ சாதரணமான ஆளு, இல்லேனா நமக்கு போலீசு மாதிரி அவிய்ங்களுக்கு இருக்கவே இருக்கு எஃப்.பி.ஐ (F.B.I). எதையாச்சும் கண்டுபிடிக்க போவாரு. ஒரு பொண்ணோட அறிமுகம் கிடைக்கும். வில்லன் ஆளுங்க அந்தப் பொண்ண கடத்துவாய்ங்க. அப்புறம் சண்ட, அப்புறம் படம் முடியும். நடுவுல சில dialogue oriented நகைச்சுவைகள் இருக்கும். நம்ம ஊரு டூயட்டுக்கு பதிலா அதுல முத்தக்காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் இருக்கும். எனக்குத் தெரிஞ்சு ஆலிவுட்டின் மிகச்சிறந்த இயக்குனர்கள் கூட இந்த ஃபார்முலாவை விட்டு வெளியே வர முடியாதவங்க தான். அங்கயும் எப்பவாச்சும் நமக்கு ஒரு 'அஞ்சாதே' மாதிரி அவங்களுக்கு ஒரு "TAKEN" வருது. "TAKEN" படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். அது ஒரு வித்தியாசமான ஆக்சன் திரைப்படம். மகளைக் கடத்திய கும்பலிடம் இருந்து பெரும்பாடுபட்டு மகளை மீட்கும் அப்பாவின் கதை. முடிஞ்சா பாருங்க. அருமையான படம்.

இனிமே தேவையில்லாம ஆலிவுட்ட புகழக் கூடாது. எது பேசுனாலும் பிளான் பண்ணி பேசனும்.
நான் ஏன் இதை எழுதுறேன்னா, போன வாரம் என் நண்பன் ஒருத்தன் சுந்தர்.சி யை அவனுக்குப் புடிக்கும்னும், ஐந்தாம்படை நல்லா இருந்துச்சுன்னும் அவன் அலுவலகத்துல சொல்லிருக்கான். (நானும் அவனும் தான் ஐந்தாம்படை பார்த்தோம். காமெடி சூப்பர். நேரம் போனதே தெரில. நல்லாதான் இருந்துச்சு) உடனே அவனை கிண்டல் பண்ணி சண்டை போட்ருக்காய்ங்க கூட இருந்தவய்ங்க. எனக்கு என்ன புரிலனா, ஐந்தாம்படை நல்ல மசாலா படம்னு ஒத்துக்குறதுல என்ன அவமானம் இவய்ங்களுக்கு? வழக்கமான ஆலிவுட் ஃபார்முலால வந்த 'ஜான் ரேம்போ'(John Rambo) சூப்பரா இருக்குனு சொல்லத் தெரியுது, வழக்கமான தமிழ் மசாலா ஃபார்முலால வந்த ஐந்தாம்படை என்ன பாவம் பண்ணுச்சு? (இன்னும் நம்மூருல சில பேரு இருக்கான். விஜய்ய நல்ல ஹீரோனு சொல்லுவான், விஜய் 100 பேரை அடிச்சா கைதட்டுவான். ஆனா சுந்தர்.சி படம் நல்லாவே இருந்தாலும் ஒத்துக்க மாட்டான். அவய்ங்களுக்கும் சேர்த்துதான் இது.) இது என்ன ஓரவஞ்சனை. அல்பத்தனமான ஒரு அலட்டல்!!! :-))

என்னைப் பொறுத்தவரை நல்ல படங்கள் என்பன, எவ்வகையிலும் சமூகத்துக்கு கெட்ட விஷயங்களை சொல்லாமல், நாம் திரையரங்கில் அமரும் 3 மணி நேரமும் நம்மை ஆக்கிரமித்து படத்துடன் ஒன்றச் செய்யும் படங்களே என்பதுதான். அப்புறம்தான் அது மசாலா படமா, ஆலிவுட்டா, தமிழா என்பதெல்லாம். மசாலா படங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நல்லது. ஆனால் அதற்காக ஆலிவுட் படங்களை நல்ல படங்களென்றும், தமிழ் படங்களை மட்டம் என்றும் பேசுவது சரியே அல்ல.

ஆலிவுட் மசாலா இயக்குனர்களுக்கு நம் இயக்குனர்கள் சற்றும் சளைத்தவர்களல்ல. அவரவர் சார்ந்த நாட்டின் பொருட்டே அவர்களின் திரைப்படங்கள் அமைகின்றன. உதாரணம், நம் ஊரில் அறுவாள், ஆலிவுட்டில் துப்பாக்கி.

மேலும் இந்தப் பதிவு எந்த விதத்திலும் மசாலாப் படங்களைத் தூக்கிப் பிடிப்பதற்காக அல்ல. இந்திய மசாலாப் படங்கள் அமெரிக்க மசாலாப் படங்களுக்கு சற்றும் குறைந்தவை அல்ல என்ற உன்னதமான மற்றும் தற்சமயம் நாட்டுக்குத் தேவையான உண்மையை உணர்த்துவதற்காகவே!! ஹி ஹி!!!

13 comments:

சரவணகுமரன் said...

ஹி ஹி

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

நீங் சொல்றதெல்லாம் சும்மா அப்படியே ஒத்துக்க முடியாது :)

http://en.wikipedia.org/wiki/Travellers_and_Magicians

இது ஆனானப்பட்ட பூடானில் வந்து உலக அளவில் பாரட்டு பெற்ற படம். இத்தனை கோடி செலவில் மற்றும் உலகிலேயே மிக அதிக படம் எடுக்கும் தேசத்தில் இம் மாதிரி எத்தனை படம் வந்திருக்கிறது?

மக்களுக்கு ரசனை இல்லை என்று இன்னும் பல வருடங்களுக்கு தப்பிக்க முடியாது.

ஆ.ஞானசேகரன் said...

கலக்கலா இருக்கு

ரங்கன் said...

ங்ணா.. நீங்க சொல்றது உண்மைதானுங்.

நல்ல பதிவுங்.

வாழ்த்துகளுங்!!

Sriram.A said...

"இன்னும் நம்மூருல சில பேரு இருக்கான். விஜய்ய நல்ல ஹீரோனு சொல்லுவான், விஜய் 100 பேரை அடிச்சா கைதட்டுவான். ஆனா சுந்தர்.சி படம் நல்லாவே இருந்தாலும் ஒத்துக்க மாட்டான். அவய்ங்களுக்கும் சேர்த்துதான் இது."

boss, golden words.........

karthick said...

Once in "Naiyandi tharbar" Yugi.Sethu told like "Holly wood la nambavae mudiyatha vishayatha nambara maathiri eduthuduvaanga, namma oorla namba koodiya vishayatha, ennamo nambavae midiyatha maathiri edupanga."..

Avlo than machi vidyasam.. inga car la irunthu car thavina, anga helicopter la irunthu helicopterku thaavuvanga.. mathapadi vishayam ellam onnuthan..

Namma makkalukku mel nattu mogam eppadi ella vishayathulayum irukko, athey maadhiri cinemavulayum irukku.. Hollywood padam parthatha sollikittathan avangalukku perumaai..

My dear kuttichatan flop.. ana Harry potterku ticket kidaikala.. Pasangalukku Ambulimama, (Chandamama, english version), bala mithra, vaangi kodukka mattanga ana JK rowling ezhudina bookku advance booking pannuvanga...

Ithellam namma oorla romba sagajam.. Nee tension aavatha..

eLKay said...

ஆலிவுட் மசாலா இயக்குனர்களுக்கு நம் இயக்குனர்கள் சற்றும் சளைத்தவர்களல்ல. அவரவர் சார்ந்த நாட்டின் பொருட்டே அவர்களின் திரைப்படங்கள் அமைகின்றன. உதாரணம், நம் ஊரில் அறுவாள், ஆலிவுட்டில் துப்பாக்கி.
///
KANAREKATTA SONNENGA....
மேலும் இந்தப் பதிவு எந்த விதத்திலும் மசாலாப் படங்களைத் தூக்கிப் பிடிப்பதற்காக அல்ல. இந்திய மசாலாப் படங்கள் அமெரிக்க மசாலாப் படங்களுக்கு சற்றும் குறைந்தவை அல்ல என்ற உன்னதமான மற்றும் தற்சமயம் நாட்டுக்குத் தேவையான உண்மையை உணர்த்துவதற்காகவே!! ஹி ஹி!!!///

PADAM MUDINJA VANAKKAM PODUVATHU POLA NAAMA VILAKKAMA ARTICLE THANTHALUM , MUDIYUM NAANGA ITHUKKAHA KODI PIDIKKALAINU SOLLA VENDI IRUKKU, IVINGALAI ONNUM PANNA MUDIYATHU...HO...VAIYAI THURANTHALE POOTCHI MARUNTHU ADICHUDANUM...ENNA NAAN SOLLURATHU...

Pollathavan said...

Vijaya vambuku ilukama nama makkaluku thookam varathu pola....

Nice...

நையாண்டி நைனா said...

இதைதான் மாப்பு நானும் சொல்றேன்.

Faaique said...

ஆலிவுட் மசாலா இயக்குனர்களுக்கு நம் இயக்குனர்கள் சற்றும் சளைத்தவர்களல்ல. அவரவர் சார்ந்த நாட்டின் பொருட்டே அவர்களின் திரைப்படங்கள் அமைகின்றன. உதாரணம், நம் ஊரில் அறுவாள், ஆலிவுட்டில் துப்பாக்கி.

Jayaprakashvel said...

I agree with u.

250WcurrentIsay said...

andha vijay photo sooper....

Related Posts Plugin for WordPress, Blogger...