Wednesday, July 15, 2009

கவுதம் லூசுதேவ மேனன்.

இந்த கட்டுரை, கவுதம் 'லூசு'தேவ மேனனைத் தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...!!

சமீப காலமாக நம்மூர் மக்கள் கவுதம்மேனனை தலையில் தூக்கிவைத்து ஆடுவதில் மும்முரமாக உள்ளதைக் கண்டதின் பலனாகவே இதை எழுதுகிறேன். இவரின் முதல் சில சினிமாக்களில் இவர் பெயர் வெறும் 'கவுதம்'. பின் 'கவுதம் மேனன்'. பின் 'கவுதம் வாசுதேவ மேனன்'. பின்வரும் நாட்களில் கவுதம் 'லூசு'தேவ மேனனாகக் கூட மாறலாம்.

ஆங்கிலப் படங்களை திருட்டு விசிடியில் பார்த்து படம் எடுப்பதை வரவேற்பவன் நான். ஏனென்றால் இங்கிருக்கும் பல இயக்குனர்கள் சொந்தமாக சிந்தித்து படமெடுத்தால் நம் கதி அவ்வளவுதான். ஆனால் கவுதம் என்ற அறிவுஜீவி, தான் காப்பி அடித்ததை ஒத்துக்கொள்ள மறுப்பதோடல்லாமல், காப்பியடிக்கப்பட்ட கதை தன் வாழ்வில் தனக்கு நடந்த சம்பவம் என கொஞ்சமும் கூச்சப்படாமல் சொல்லும் ஒரு வெட்கங்கெட்ட கேரக்டர். அது எப்படியோ தெரியவில்லை, கவுதம் வாழ்க்கைல நடந்த கதையை அமெரிக்காகாரன் 'Forrest Gump'னு TomHanksச வச்சு படமா எடுத்துட்டான். (என்னால கவுதமை பற்றி எழுத்துத் தமிழ்ல இதுக்கு மேல எழுத முடில. அதுனால பேச்சுத்தமிழ்லயே எழுதிறேன்.!!)

முதல்ல 'வானரம்' ஆயிரம் படத்த பாப்போம். ஒரு அருமையான அமெரிக்க படத்தை காப்பி அடிச்சதையாவது ஒழுங்கா அடிச்சுச்சா இந்த அதிகப்பிரசங்கி? முதல் காட்சில புருசன் சூர்யா ரத்தம் ரத்தமா கக்குறத பார்த்து பொண்டாட்டி சிம்ரன் சாவகாசமா "ஹேய் வாட் ஹேப்பண்ட் (Hey, what happened?)"னு ரொம்ப ஜாலியா, கூலா ஒரு வசனம் பேசுச்சு பாருங்க, எனக்கு ரத்தவாந்தியே வந்துருச்சு. அடுத்த சீன்ல அடுத்த அட்டாக் என்னன்னா, அப்பன் சாகுறத பார்த்து மகள் ரசிச்சுட்டே சொல்லுவா "(mom.See.He is smiling!!)மாம். சீ.. ஹி இச் ஸ்மைலிங்"னு!!! அடங்கொன்னியா!! என்னால முடிலடா சாமி!!
ஸ்கூல் ஃபீசு கட்ட வக்கில்லாம தங்கச்சிகிட்ட கடன் வாங்குன அப்பன், பையன அமெரிக்கா அனுப்புவாராம். பையன் அங்கபோயி ஜாலியா கும்மாளம் போடுவாராம்!! அப்பன், பையனோட நண்பர்கள் முன்னாடி பொண்டாட்டி மேல சாஞ்சுகிட்டே தண்ணியடிப்பாராம், அதுவும் 1980கள்ல. இப்ப அப்படி பண்ணாலே எந்தப் பையனும் செருப்பால அடிப்பான். ஆனா படத்துல பையனும் பொண்டாட்டியும், அப்பன் தண்ணியடிக்கிறத கும்பலா ரசிக்கிறாங்கப்பா.

எல்லாத்தையும் விட காமெடி, "மாலினி நீ அவ்ளோ அழகு"னு சூர்யா சொல்றப்ப சிம்ரன் ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க, அய்யோ அம்மா... செத்துப்போன எங்கப்பத்தா கூட அழகா சிரிக்கும்டா சாமி. படம் இப்ப முடிஞ்சிரும் அப்ப முடிஞ்சிரும்னு பார்த்தா கிழவன் சூர்யா நடந்துகிட்டே அட்வைச போடுறான், பையன் ஆடிகிட்டே அருவைய போட்றான். "ஐ தின்க் ஐ ஃபெல் இன் லவ் வித் யூ (i think i fell in love with you)"னு படத்துல அத்தனை பேரும் பத்து தடவ சொல்றாய்ங்க. எனக்கு பைத்தியமே புடிச்சு போச்சு. ஆங்கில படத்த காப்பியடிச்ச சரி, அதுக்காக வசனத்தையுமா ராசா காப்பியடிக்கிறது??!!!

இன்னொன்னு..
கவுதம் படத்துல எல்லாருமே நீளமா முடி வளர்த்துகிட்டு கெட்ட கெட்ட வார்த்தையா பேசுவாய்ங்க. எல்லாமே ஆங்கிலப் படத்துல வர்ற "Fuck, Cunt, Son of a bitch, etc" போன்ற மிகக் கேவலமான வார்த்தைகள். இந்த லூசுதேவ மேனன் அதைக் கூட விடுறதில்ல. எல்லா வார்த்தையையும் அப்படியே தமிழ்ல டப்பிங் பண்ணி வசனம் எழுதிரும். நமக்கு தியேட்டர்ல பாக்குறப்ப "****தா வாடா" "பெரிய போலீஸ் ******டையாடா நீ", "உன் பொம்பளை****** தூக்கிட்டேன்டா"னு முக்கால்வாசி சென்சார் பண்ணித்தான் கேக்கும்! ஆனா ஈயடிச்சான் காப்பில கவுதமை மிஞ்ச முடியாது. பெரிய ஜார்ஜ் புஷு பேரன்னு நினைப்பு, காதலை சொல்றதை கூட "நான் உன்ன விரும்புறேன்"னு இவரு படத்துல சொல்ல மாட்டாய்ங்க. "ஐ ஃபெல் இன் லவ் வித் யூ"னு எஸ்.எம்.எஸ் அனுப்புற மாதிரிதான் பேசுவாய்ங்க. அப்பத்தான் படம் உலகசினிமா அளவுல இருக்குமாம். இப்படி போயி ஒரு பொண்ணுகிட்ட காதலை சொன்னா, லவ் லெட்டர் இல்ல, நம்மல மென்டல்னு நினைச்சு நம்ம மேல ஒரு ஈவ்டீசிங் கேசு கூட கொடுக்காது.

வேட்டையாடு விளையாடு படம் அப்படியே RED DRAGON மற்றும் இன்னும் சில சீரியல் கில்லர் படங்களின் காப்பி. அதுல வில்லன்களை ஓரினசேர்க்கையாளர்களாகவும், பெண்களை வல்லுறவு கொள்ளும் வெறியர்களாகவும் காமிச்சிருப்பாரு இந்த அரைவேக்காட்டு இயக்குனர்!! எங்க போயி சொல்றது. அந்தப் படத்துல நடிச்சதுக்கு கமலே வருத்தப்பட்டது வேற விஷயம். பச்சைக்கிளி முத்துச்சரம் 'Derailed' என்ற படத்தின் அச்சு அசல் காப்பி.

சமீபத்துல ஒரு இணையதள நேர்காணல்ல இந்த லூசுதேவ மேனன் ஒரு செம காமெடி பண்ணாரு. நிருபர், இயக்குனர் மிஸ்கின் பத்தி கேட்டதுக்கு, கருத்து சொல்ல மாட்டாராம் இவரு. ஏன்னா மிஸ்கின் இரண்டு படம் தான் இயக்கியிருக்காராம். ஆனா சுப்பிரமணியபுரம் நல்ல படம், சசிகுமார் நல்ல டைரக்டர்னு மட்டும் அதே நேர்காணல்ல சொல்லுவாராம். சசிகுமார் மட்டும் என்ன மூணு படமா இயக்கிருக்காரு!!
http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon-2.html

சூர்யா மட்டும் இல்லென்னா வாரணம் ஆயிரம் 'சாம் ஆண்டர்சனின்' 'யாருக்கு யாரோ' ரேஞ்சுக்கு ஆயிருக்கும்.

நண்பர்களே நிறைய படங்களை பாருங்க. எது நல்ல படம், யார் நல்ல இயக்குனர் என்பதை முதலில் உங்கள் மனதில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஊரில் நிறைய பேர் சொல்கிறார்கள் என நீங்களும் குமபலோடு கோவிந்தா போடுவதால்தான் கவுதம் வாசுதேவ மேனன் போன்ற ஆட்கள் நிறைய முளைக்கிறார்கள்.

ஆனா எனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன்னா அடுத்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ல கவுதமோட சோடி போட்டுருக்குறது 'ஆம்பிளை ஷகீலா' சிம்பு. அதுவும் போக, எப்பவும் இணையத்துல நல்ல ஆங்கில பாடல்களை தேடி, சுட்டு, மெட்டு போடும் ஆரீஸ் ஜெயராஜும் இந்தப்படத்துல கிடையாது. சிம்புவும்-கவுதமும் மட்டும் சேர்ந்துருக்காங்கப்பா.. ஹி ஹி!!! ஐயாம் வெரி ஹாப்பி. ஐயாம் வெரி ஹாப்பி!!! :-)

29 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

ஹி ஹி ஹி.. நான் (படத்தை) பாக்கலயே... பாக்கலயே.. பாக்கலயே..

karthick said...

//"ஐ ஃபெல் இன் லவ் வித் யூ"னு எஸ்.எம்.எஸ் அனுப்புற மாதிரிதான் பேசுவாய்ங்க.//

I wanna make love with you.. itha vittutiyae machi..

Anonymous said...

சூர்யா மட்டும் இல்லென்னா வாரணம் ஆயிரம் 'சாம் ஆண்டர்சனின்' 'யாருக்கு யாரோ' ரேஞ்சுக்கு ஆயிருக்கும்.
hahahahahaha

ரங்கன் said...

நல்ல ஆய்வு.

இந்த வேட்டையாடு விளையாடு படம் பார்த்ததும் தான் புரிஞ்சுது..

இவர் எப்படிப்பட்ட டைரடக்கர்னு..

இருக்கும் சில லூசுகளில் இது மூத்த லூசு..

அவ்ளோதான்.

andygarcia said...

அவர் derailed படத்த காப்பி அடிக்களையாம் நாவல் படிச்சு எடுத்தாராம்(ரெண்டும் ஒன்னுதானே)

Anonymous said...

Most of the indian films are inspired from other language films(let alone english)
Nearly all Maniratnam movies are copied ones(they call inspiration)

Did you really see Forrest Gump??I dont think gowtham has copied from it.

Varanam ayiram sucked anyways.

Anonymous said...

வேட்டையாடு விளையாடுல வருகிற எலுமிச்சம் பழம், விரல் சீன்கள் எல்லாம் அப்படியே ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல் ஒன்றில் வந்தது.... அதற்க்கு அவரிடம் கேட்டதற்கு நான் காப்பி அடிக்கவில்லை என டீசண்டாக சொல்லி இருக்கலாம்... அதை விட்டுவிட்டு "ரஜெஷ்குமாரா யார் அவரு"ன்னு கேட்டது இந்த அறிவு ஜீவி.... யாரவது சொல்லுங்கப்பு கிரிகெட் ஆடு பூட்பால் ஆடு.... ஆணவத்துல மட்டும் ஆடாதன்னு...

பனையூரான் said...

நல்ல பதிவு

Anonymous said...

Most of the indian films are inspired from other language films(let alone english)
Nearly all Maniratnam movies are copied ones(they call inspiration)

Did you really see Forrest Gump??I dont think gowtham has copied from it.

Varanam ayiram sucked anyways.///

Of course i did. Mother character replaced with father's. And he has tried to indianise it and its result is disastrous as i have told in my post!! Varanam ayiram is a pathetic movie.

Senthil said...

verymuch true!!!!!!!!!!

ராம் said...

//சூர்யா மட்டும் இல்லென்னா வாரணம் ஆயிரம் 'சாம் ஆண்டர்சனின்' 'யாருக்கு யாரோ' ரேஞ்சுக்கு ஆயிருக்கும்.//

வருங்கால அமேரிக்க ஜனாதிபதி அண்ணன் சாம் ஆண்டர்சனை விமர்சித்ததை வன்மயாக கண்டிக்கிறோம்..

jai said...

/*சூர்யா மட்டும் இல்லென்னா வாரணம் ஆயிரம் 'சாம் ஆண்டர்சனின்' 'யாருக்கு யாரோ' ரேஞ்சுக்கு ஆயிருக்கும்.*/


சும்மா கிழி கிழி கிழிசுடீங்க போங்க.

ungalodu konjam said...

கவுதம் .வி. மேனன் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம். இந்திய டைரக்டர்கள் யார் தான் ஹாலிவுட்டை காப்பி அடிக்க வில்லை. forest Gump பாதிப்பு இருப்பதாக அவர் ரேடியோ பேட்டியில் சொல்லி இருக்கின்றாரே. அதுவும் இல்லாமல் forest Gump படத்தின் ட்ரீட்மென்ட் தான் இந்த படத்தில் இருக்குமே தவிர படத்தின் கதை வேறு.

மற்ற மொழி படங்களை பாதிப்பாக கொள்வது ஹாலிவுட் இயக்குனர்களிடமும் உள்ளது. ஹாலிவுட் படமான "தி ஆஸ்ட்ரேலிய "படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அந்த இயக்குனர் தன்னுடைய ஒளிப்பதிவாளருக்கு கொடுத்த சாம்பிள் டிவிடிகளில் இந்திய இயக்குனர் சத்தியஜித் ரே யின் படங்களும் ஒன்று.

ஹிந்தி இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்க்கார் படத்தை எந்த படத்தின் பாதிப்பால் எடுத்தார் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்குமே. படங்கள் மட்டும் அல்ல விளம்பரங்கள் கூட தான் வெளிநாட்டு பாதிப்பில் எடுக்கப் படுகிறது. நீங்கள் என்ன சொன்னாலும் ஒரு கதையை பிலிமில் effective ஆக convert செய்வதில் மேனனை மிஞ்சிகொள்ள ஆட்கள் இங்கு குறைவு. ஷங்கர் கூட பிரமாண்டத்தினால்தான் வாழ்கிறார் தவிர அவருக்கும் இந்த கன்வெர்ஷன் சரியாக வர வில்லை.

அப்புறம் மிஸ்கின் விவகாரத்தில் அது அவர்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்கனவே இருந்திருக்கலாம் அதற்காக அப்படி கூறி இருப்பார்.

உங்களிடம் ஒரு விஷயத்தை நான் ஒத்துகொள்கிறேன் . அது மேனனுக்கு கொஞ்சம் மண்டை கணம் அதிகம் என்பது தான்.

ஒரு கொசுறு செய்தி.
ஒருமுறை மேனனிடம் உங்களை பாதித்த தமிழ் படம் எது என்று கேட்டதிற்கு , என்னை எந்த தமிழ் படமும் பாதித்ததில்லை என்று இந்த மலையாளி கூறினார்.

அஹோரி said...

Mind your words about 'Sam Anderson', he is future 'CM' of tamil nadu.

Anonymous said...

அதோடு தமிழில் பேசுவதையே குறைச்சலாக கருதும் திரிஷா மாமி இருக்காங்களே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில். இந்த படம் ஊத்திக்கொள்ள என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Sathish said...

Malayalees like this people spoil Tamil Movies. They dont know Tamil Culture.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

பாஸு..
நல்லாத் தான் பொலந்தீங்க
ஆனா இப்புடியா ஆறப்போட்டு பொலக்கறது?
அயன் போல இன்னொரு மொக்க கூட வந்திடுச்சே?
இந்த ஆளு காபி டி பூஸ்டு அடிக்காம எதையும் செய்யமாட்டான்.

ஹாரீசையும் பகைச்சுகிட்டான்..
இவன் படத்துல ஒரே டீமை வைச்சு வேற எடுத்து தன படைப்பு ஒரு பஷ்டு கிளாஸ் படைப்பு என்பான்...

Anonymous said...

Kakka kakka and vettaiyadu films are
inspired from the film sEVEN.

cdmSaran said...

மிக சரியாக சொன்னிர்கள்.
ரொம்ப திரமையா படம் எடுக்கிரத நினைப்பு. தமிழ்க்கு வர்ர எல்ல மலையால இயக்குனர் எல்லாரும் இப்படிதான். பிரியதர்ஷன் , ஃபாசில்(ஒரு சில படங்கள் த்விர).
இருந்தலும் நம்ம லுசு மெனன் தான் முதலிடம்.

கக்கு - மாணிக்கம் said...

கவுதம் கிடக்கட்டும் சாமி, உங்க பிளாக் back ground பிரமாதம். இம்மாம்பெரிய ஜீன்ஸ்
என்கிருந்துதைய்யா கிடச்சிது? அருமை. கண்ணுக்கு அழகாக,வித்யாசமா.இருக்கு.
ஆனா கொஞ்சம் கூட கிழியலையே சாயம் போகலையே. எந்த பிராண்டு ?.

Tamil said...

இந்த வெங்காயம், வேட்டையாடு விளையாடு படத்துல... இரண்டு homo sex வில்லன்களுக்கு சுத்த தமிழ் பெயர் வைத்தது .. இதை பற்றி கேட்டப்ப ... ரொம்ப தெனாவட்டாக பதில் சொன்னுச்சு இந்த ஜந்து... ஏன் ... "நாராயன மேனன்", "மாதவன் நாயர்" நு பேர் வைக்க வேண்டியது தானே

Kannan said...

//....இப்படி போயி ஒரு பொண்ணுகிட்ட காதலை சொன்னா, லவ் லெட்டர் இல்ல, நம்மல மென்டல்னு நினைச்சு நம்ம மேல ஒரு ஈவ்டீசிங் கேசு கூட கொடுக்காது. ...//


என்னால சிரிப்பை அடக்க முடியல அரசு.

Murali said...

எல்லாமே நல்ல தான் இருக்கு தல.....ஆனா //// 'ஆம்பிளை ஷகீலா' சிம்பு///// னு சொல்லி நீங்க மலையாள படத்துல நடிச்சு போல கோடி ரசிகர்களை ஈர்த்து மலையாள சூப்பர் ஸ்டார் களையே மண்ண கவ்வ வெச்ச அந்த மகராணி ஷகிலாவ கேவலமா பேசிடீங்க........இதுக்கு நீங்க கண்டிப்பா ஷகிலா ரசிகர்கள் கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும் .....

தயா X said...

Nanraakach chonneerkal!! ungal anumathiyudan en facebook 'il ithai pirasurikkiren unkal inaiya mukavariyudan! Nanri!

Anonymous said...

Be careful with Sam next time,

Already you are under the eagle watch list of Sam Andersons fans club.

Make sure you do post something good about SAM soon.

Shankar said...

Don,
The substance of Forrest Gump and Vaaranam aayiram are entirely different. Even comparing the scenes, I dont see any similarity! It is entirely a wrong argument to correlate these two films.

Anonymous said...

arumai... athunayum unmai...

sweet said...

parra... Vijay-ai vida simbu better-pa.....

Surya, Ajitha, Vijay ivangalai vida nalla dancer... acting too... hey surya-oda first 10 padam paaru... enna oru kevalamana nadippu-nu theriyum? similarly vijay and ajith too... yaarum 1 day-la varala... so neraya floppp koduthu thaan vandhu irukkanga.. theriyum-la...

ennamo nee loosuthanama sollikkittu padam edukkiravanai kenaiyan-nu solreyaaa?? idhukku peru thaanda kaala kodumai....

ippadikku unnoda mokkai friend madhumidha

GERSHOM said...

"கவுதம் லூசுதேவ மேனன்."சரியான தலைப்பு! மலயாளிங்கள வளத்து விடுறது நம்மாளுங்க...கடசீல அவனுக தண்ணி தரமாட்டானுக...என்ன கொடுமைடா சாமீ?

Related Posts Plugin for WordPress, Blogger...