Monday, July 27, 2009

சுஹா'சனி'யின் பேசும் படம்."எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டக் கேக்கும்"னு தல வடிவேலு பாடுனதுதான் ஞாபகம் வருது. நம்ம சுஹாசினி அம்மாவின் 'எட்டணா', அவங்க கணவர் மணிரத்னம். மணிரத்னம் மனைவின்னா உலக சினிமாக்களை கரைத்துக் குடித்தவர்னு நினைப்பு! ஊரே இந்தம்மா பேச்ச கேக்கும்னும் நினைப்பு! விஜய் டிவியின் 'மதன்'ஸ் திரைப்பார்வை'யைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையா சுஹாசினி போட்டுகிட்ட சூடுதான் 'சுஹாசினி பேசும் படம்'. மேட்டருக்கு வருவோம்.

இந்தப் பதிவ நான் எழுதக் காரணம், இந்தம்மா 'தோரணை' படத்தை விமர்சனம் செய்த விதம் தான். ஒரு 'Gentleman behaviour'னு சொல்லப்படுற நாகரீகத் தன்மை கூட இந்தம்மாகிட்ட கிடையாதுனு அன்னைக்குதான் தெரிஞ்சுகிட்டேன். தோரணை படத்துல சந்தானத்தோட காமெடி பத்தி இந்தம்மா சொன்ன வார்த்தைகளை பாருங்க, "சந்தானம்கிட்ட நான் ஒன்னு கேக்குறேன். நீங்க பண்ற காமெடி மிகவும் மட்டமா இருக்கு. நீங்க யாரையும் கிண்டல் பண்ணாம காமெடி பண்ணுங்க, நாங்க எங்க பொண்ணையும் கட்டிக் கொடுத்து, எங்க ராஜ்ஜியத்துல பாதியையும் கொடுக்குறோம்"னு லூசுத்தனமா சொன்னுச்சு. கிட்டத்தட்ட மர கழண்ட கேசு மாதிரி பேசுது. தோரணை படத்துல என்ன மேட்டருன்னா டாப் டென்ல வர்ற குண்டு ஆர்த்திய, சந்தானம், குண்டு, அது இதுனு கிண்டல் பண்ணுவாரு. அதுக்குத்தான் சந்தானத்துக்கு இந்த அர்ச்சனை. இன்னும் அந்தம்மா கேவலமா என்னென்னமோ சொன்னுச்சு, எனக்கு பாதி மறந்துருச்சு. இப்போ அந்தம்மாவ பத்தி பார்ப்போம்.

"ஓடக்கார மாரிமுத்து, ஓட்டவாயி மாரிமுத்து" பாட்டுல 'ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போன கதையென்னாச்சு'னு வரி வரும். இன்னும் பல பேர கிண்டலா வர்ணிச்சு அந்தப் பாட்டுல வரிகள் இருக்கும். இதுல காமெடி என்னன்னா, அந்தப் பாட்டு இடம்பெற்ற படம் இந்தம்மா இயக்கிய 'இந்திரா'!!!! இந்திராவை இயக்குறப்ப (அந்தப் படம் இயக்குனது மணிரத்னம், அத விட்டுருவோம்.) இந்தம்மாக்கு யாரையும் கிண்டல் பண்ணக்கூடாதுங்குற ஞானோதயம் இல்லையா?

தலைவர் கவுண்டமணி, செந்திலையும், மத்தவய்ங்களையும் கிண்டல் பண்ணாம காமெடி பண்ண படம் எதாச்சும் ஒன்னு இருக்கா? சொல்லப்போனா கவுண்டரு கிண்டல் பண்றதை பட யூனிட்ல உள்ள அத்தன பேரும் ரசிப்பாங்கன்னு சத்யராஜ் சொல்லி பல தடவ கேட்ருக்கோம். இந்தம்மா, நம்ம தலைவர் கவுண்டமணிய பத்தி இதே வார்த்தைகளை சொல்லிருமா? சொல்லிட்டு தெருவுல நடமாடிருமா? பிச்சுருவோம் பிச்சு! :-))

ஆர்த்தின்ற பொண்ணு குண்டா இருக்குறதுதான் அது சினிமால நடிக்கிறதுக்கு முதல்காரணமே. அதன் 'முதலே' அதோட குண்டு உடம்புதான். ஆர்த்தியோட உடல்வாகு கிண்டலடிக்கப்படுவதை அந்தப் பொண்ணே கண்டுக்குறதில்ல, மேலும் அதுவே கூடபலதடவை கிண்டலடிச்சிருக்கு. ஆனா இந்தம்மா அதைப் பெரிய தப்பு மாதிரி டிவில பேசுறதுதான் அந்தப் பொண்ணை கஷ்டப்படுத்தும்.

சமீபத்துல என்னை பயங்கரமான அதிர்ச்சில ஆழ்த்துன விஷயம், சுஹாசனி ஒரு தேசிய விருது வென்ற நடிகைன்ற படு கொடூரமான செய்திதான். ரிக்ஷாகாரன் படத்துக்காக எம்.ஜி.ஆர் தேசியவிருது வாங்குன செய்தி கூட என்னைய இந்தளவு அதிர்ச்சில ஆழ்த்தல. இந்தம்மா அவார்டு ஜெயிச்ச படம் 'மனதில் உறுதி வேண்டும்'. அதுல இந்தம்மா நடிப்புன்ற பேருல ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க, அதைப் பார்க்கவே நமக்கு மனதில் உறுதி வேண்டும். அப்புறமா விசாரிச்சதுல தெரிஞ்ச விஷயம் என்னன்னா, இந்தம்மாவோட சொந்தக்காரய்ங்க அந்த வருஷ தேர்வாளர்கள் கமிட்டில உறுப்பினர்களாம். அந்த செல்வாக்குல கிடைச்ச விருதுதான் அதுவாம். இதுவே பெரிய தில்லாலங்கடி, இதுக்கு சந்தானத்தை கேவலமா கேள்வி கேக்க என்ன உரிமை இருக்கு. சந்தானம் சினிமாக்கு வந்ததே லொள்ளு சபால மத்தவங்கள கலாய்ச்சுதான். இந்தம்மா சந்தானத்துகிட்ட வேற என்னத்த எதிர்பார்க்குதோ கிரகம் தெரில..!!

இன்னொன்னு இந்தம்மாகிட்ட இருக்குற ஒரு நல்லப் பழக்கம் என்னன்னா, இயக்குனர்களைக் கூப்பிட்டு அவங்க முன்னாடி நல்ல புள்ள மாதிரி பேசிட்டு, அவய்ங்க போனவுடன அசிங்க அசிங்கமா திட்டும். வாயிலயே வயலின் வாசிக்கும்!! இதெல்லாம் ரொம்ப டீசன்ட்டான வேல போல! மதனோட விமர்சன நிகழ்ச்சில இருக்கும் ஒரு நாகரீகம் இந்தம்மாவோட நிகழ்ச்சில சுத்தமா இருக்காது. சும்மா வீட்டுல இருந்த அம்மாவ கொண்டு வந்து விமர்சனம் பண்ணுனு சொன்னவுடன அந்தம்மாக்கு தலகால் புரில. லூசு மாதிரி (மன்னிக்கனும் நண்பர்களே இதைத் தவிர வேறு சரியான வார்த்தை கிடைக்கல) "பொண்ணக் கட்டித் தர்றோம், ராஜ்ஜியத்துல பாதி தர்றோம்"னு சொல்லுதே இந்தம்மா, பெரிய மைசூர் மகாராணினு நினைப்பு! நாளைக்கு சந்தானம் ஒரு ஜோக்கு சொல்லி சிரிக்க வச்சாருன்னா இந்தம்மா என்ன பண்ணும்? இதுகிட்ட பொண்ணும் கிடையாது, ராஜ்ஜியமும் கிடையாது, கட்டுனா இதத்தான் கட்டனும்!!! அத நினைச்சுதான் சந்தானம் ஜோக்கே சொல்லல போல!

உலக சினிமாவையெல்லாம் மூஞ்சிய சீரியசா வச்சிகிட்டு விமர்சனம் பண்ணும் பாருங்க, தாங்க முடியாது. உச்சகட்ட காமெடி என்னன்னா நிகழ்ச்சி முடிஞ்சவுடன காய்கறி விக்கிற மாதிரி ஒரு தராச கொண்டு வந்து எடை வேற போடும். இது எடுத்த, இது நடிச்ச படத்தையெல்லாம் எடை போடனும்னா எங்க போயி போடுறது? குப்பைலதான் போடனும். அதுவும் இந்தம்மா வசீகரா படத்துல அழுதுகிட்டே ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க.. அய்யோ யம்மா....!!!!!!!!!

இந்தம்மாக்கு நடிப்பும் வரல, இயக்கமும் வரல, விமர்சனமும் வரல!!
மொத்தத்தில் 'சுஹாசினியின் பேசும் படம்', ரசிகர்களுக்கும், சினிமாவுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் பிடித்த சனி!!! 


22 comments:

Anonymous said...

ஹாஹாஹா... ரசிச்சி படிச்சேன். இன்னும் கூட மோசமா வைய்யணும் போலருக்கு. இவங்களெல்லாம் விமர்சனம் பண்ணலேன்னு யார் அழுதா...

இன்னும் பல அசிங்கமான பங்கங்கள் இருக்கு, இந்த பெண்மணியைப் பற்றி. வெளிய சொன்னா வெக்கக்கேடு.

-எஸ்

sriram said...

machi........ super ma....
what u said i 101% true.......

Anonymous said...

நாயின் வேலையை நாய் தான் பார்க்க வேண்டும் ..
இவரின் இந்த அதி மேதாவிதனத்துக்குதான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞான புனைக்கதை இயக்குனர் (இவர் இயக்கிய வியாபாரி படத்திற்காக வழங்கப்பட்ட பட்டம்) "திரு.சக்திசிதம்பரம்" த்திடம் வசமாக மாட்டிக்கொண்டார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விளம்பரம் மாதிரி. அந்த ப்ரோக்ராம் வந்தா சேனல் மாதிடனும்னு அர்த்தம்

Kannan said...

மனசுல பெரிய மேதைனு நினைப்பு. அவங்க சொல்லும் ஆங்கில பட உதாரணம் இதவிட ரொம்ப கொடுமையா இருக்கும்.

satheeskannan said...

இவங்க ஒரு காமிடி பீஸ் boss.....

Anonymous said...

hahahahaha....

nalla sollirukreenga..
indha amma siripu than idhuku +-amam

kevalama irukum...

nalla ezhudhi irukreenga.....

Raj said...

நல்ல வேளை சந்தானம் தப்பிச்சாரு...அவருக்குதான் ஏற்கெனவே கல்யாணம் ஆயிருச்சே....அந்த ப்ரொக்ராம்ல இந்தம்மா பேசும்போது நான் mute பண்ணிடுவேன்

Raj said...

போன வாரம் அச்சமுண்டு அச்சமுண்டு படம் விமர்சனம் செய்யும்போது...ஒரு ட்ரெஸ் போட்டு வந்திருந்துச்சி.....கொடுமைடா சாமி..குழந்தைக போடற ஒரு ப்ராக் ஐ போட்டுகிட்டு வந்துருச்சு...என்னத்த சொல்ல

ELKAY said...

SUKA "SANI" ARUMAIYANA THALAIPPU ATHATKU YAETRA CONTENT...APPLAUSE...
நாங்க எங்க பொண்ணையும் கட்டிக் கொடுத்து, எங்க ராஜ்ஜியத்துல பாதியையும் கொடுக்குறோம்"னு லூசுத்தனமா சொன்னுச்சு. //ADA KANDRAVIYEEEEE......
கிட்டத்தட்ட மர கழண்ட கேசு மாதிரி பேசுது.///
NETHIADI ...
SARIIIIYANA UTHARANAM...DAAAANNN YENGAIYOOO POYITTENGA...
நம்ம தலைவர் கவுண்டமணிய பத்தி இதே வார்த்தைகளை சொல்லிருமா? சொல்லிட்டு தெருவுல நடமாடிருமா? பிச்சுருவோம் பிச்சு! :-)) ///
PINNAY...WHISTLE...
அந்தம்மாக்கு தலகால் புரில. லூசு மாதிரி (மன்னிக்கனும் நண்பர்களே இதைத் தவிர வேறு சரியான வார்த்தை கிடைக்கல) "பொண்ணக் கட்டித் தர்றோம், ராஜ்ஜியத்துல பாதி தர்றோம்"னு சொல்லுதே இந்தம்மா, பெரிய மைசூர் மகாராணினு நினைப்பு! நாளைக்கு சந்தானம் ஒரு ஜோக்கு சொல்லி சிரிக்க வச்சாருன்னா இந்தம்மா என்ன பண்ணும்? இதுகிட்ட பொண்ணும் கிடையாது, ராஜ்ஜியமும் கிடையாது, கட்டுனா இதத்தான் கட்டனும்!!! அத நினைச்சுதான் சந்தானம் ஜோக்கே சொல்லல போல!////
ENNAKKU SIRICHU SIRICHU VAIRU VALIKUTHUNGA....YENNUNGA IPPADI ELLAM EZHUTHURENGA...SARIIYAAANAAA BLOG UNGA BLOG...RASIKKA SIRIKKA SINTHIKKA VAIKIRENGA...
இந்தம்மா வசீகரா படத்துல அழுதுகிட்டே ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க.. அய்யோ யம்மா....!!!!!!!!! //
[:D]

Shyam said...

////விஜய் டிவியின் 'மதன்'ஸ் திரைப்பார்வை'யைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையா சுஹாசினி போட்டுகிட்ட சூடுதான்/////


அப்ப மதனை புலி என்கிறீர்களோ அசோக்??

என்ன கொடுமை???

Ilavarasan.R said...

அப்ப மதனை புலி என்கிறீர்களோ அசோக்??

என்ன கொடுமை???//

ஏன் கொடுமை நண்பா?

ms said...

மச்சி, இவங்களுக்கு கிழவி வாய்.. வாய்க்கும் programme namekum (பேசும் படம்) சம்மந்தமே கிடையாது..!

fan of big R said...

one thing shyam. Mathan is a genious.

M.Sasithar said...

anna super! aaana enna marimuthu enga appa peru sera paaatae appadithanaeee

Anonymous said...

சம்பந்தப்பட்டவர்களிடமே விமர்சனம் செய்பவர் மதன் மட்டுமே...ஆகையால் மதன் புலியே, சுஹாசனி எலியே, அசோக் சரியே...

எப்பூடி ... said...

கலக்கலாக எழுதியுள்ளீர்கள். இன்று கூட இந்த லூசின் 'அங்காடித்தெரு' விமர்சனம் ஒரு சில நிமிடங்கள் பார்த்தேன், அதில் 'அப்படி ஒன்றும் அழகில்லை' பாடலை ஏதேதோ புதுசு புதுசா சொல்லி விமர்சிக்குது, இது கூட இருந்துதான் 'மணி'க்கும் ஒரு மாதிரி ஆகியிருக்குமென்று நினைக்கிறேன்.

Veera said...

Thala well said... nan nenachathellam apdiye vandhirukku... Keep it up

ஆதவா said...

ஏன்???
என்னாச்சு??
எதுக்கு.. இப்படி???

Anonymous said...

நல்லா சொன்னீங்க நண்பா! இப்பதான் தெரியுது, மணிரத்தினம் ஏன் சொதப்பல் படங்களையே எடுக்கிறார் என்று. நம்பளால கொஞ்ச நேரமே இந்த அம்மாவின் இம்சையை தாங்கமுடியில. கச்சேரி ஆரம்பம் என்ற கலக்கல் காமெடிப் படத்தை இயக்கிய திரைவண்ணன், இயக்குனர் சீமானின் சிஷியராம். அந்தப்படத்தின் ஆரம்பக்காட்சியில், ஒரு புத்தகத்தின் அட்டையில் சீமானின் புகைப்படம் இருப்பதாக எடுத்துள்ளார். அடடா ... என்னா சத்தம் போடுது இந்த அம்மா?! அதுக்கூட பரவாயில்லை.... ஏதோ ஒரு மதுரை சார்ந்த கதையில் நாலு பசங்க ரொம்ப அழுக்காக இருக்கிறார்களாம்!!! கொஞ்ச சுத்த பத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும் எனது முகம் சுழிக்கிறார்! என்ன கொடும பாருங்க. நீங்க சொன்ன மாதிரி இது ... அதேக் கேசுத்தான்.

Jayadev Das said...

'இந்திரா'படம் இது பண்ணிய கொடுமை, நம்ம ஸ்ரீ ப்ரியா இயக்கிய படத்தோட இதையும் வச்சு கும்பிட வேண்டிய படம். [கும்பிட்டு ஓடிப் போயிடனும், பாதொம்னா தொலைஞ்சோம், ஹி...ஹி...ஹி...] இது மட்டுமல்ல, சும்மா இருக்காம ராவணன் படத்துக்கு வசனம் எழுதப் போறன்னு சொல்லி எழுதி, அது ஊத்திகிச்சு, மணிரத்னம் தலை மேல துண்டை போட்டுட்டாரு.
//அதுல இந்தம்மா நடிப்புன்ற பேருல ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க, அதைப் பார்க்கவே நமக்கு மனதில் உறுதிவேண்டும்.//ஹா...ஹா...ஹா... சூப்பரப்பு. //இந்தம்மாவோட சொந்தக்காரய்ங்க அந்த வருஷ தேர்வாளர்கள் கமிட்டில உறுப்பினர்களாம். //இவங்க அப்பா ஒரு தேசிய விருது வாங்கினதும் இப்பிடியேதான் என்கிறார்கள். //உச்சகட்ட காமெடி என்னன்னா நிகழ்ச்சி முடிஞ்சவுடன காய்கறி விக்கிற மாதிரி ஒரு தராச கொண்டு வந்து எடை வேற போடும். //இப்படியெல்லாம் போட்டு, குசேலன் படத்தை வாசு எடுத்ததிலேயே மிகச் சிறந்த படம்னு சொல்லிச்சு, அது என்னவாச்சுன்னு உங்களுக்கே தெரியும், ஹா....ஹா....ஹா.... இது பண்ணுவது கொஞ்சம் ஓவர் அலப்பறைதான். [அது சரி, இவ்வளவு நாள் கழிச்சு இப்பதான் இந்த பதிவு பிரபலமாச்சா?]

Bhargavi said...

In this film really santhanam didnt do his best comedy....... i can really assure it...

Related Posts Plugin for WordPress, Blogger...