Saturday, July 25, 2009

நண்பன், காதலி, கோழிக்குழம்பு மற்றும் டைரி


"என்ன இப்ப? ஒன்னும் ஆகல.. அவதான் உன்ன வேண்டாமுனு விட்டுப் போயிட்டால விட்றா...."

"அது எப்படிடா முடியும்? கல்யாணம் எங்க நடத்தனும்ல இருந்து பொறக்குற குழந்தைக்கு பேரு வைக்கிற வரைக்கும் என்கூட பேசிருக்காடா. எப்டிடா மனசாட்சியே இல்லாம இப்டி நடந்துகிட்டா?"
பையன்தான்னு அவ சொல்லுவா, பொண்ணுனு நான் சொல்லுவேன். அதுக்கு கோச்சுகிட்டு நாலு நாள் பேசாம இருந்தாடா என்கூட. இன்னிக்கு என்ன விட்டுட்டு எப்படிடா போக முடிஞ்சிச்சு அவளால..."

"சரி. இப்போ என்னடா அதுக்கு?"

"கண்ண மூடுனா அவதான்டா வர்றா. பயமா இருக்குடா செத்துருவேனோனு. யாரப் பார்த்தாலும் அவ ஞாபகமா இருக்குடா. நெஞ்சு படபடனு அடிச்சுட்டே இருக்கு. டேய் உனக்கே தெரியும், நாங்க போகாத இடமே கிடையாது.. இனிமே அந்த இடத்துக்கெல்லாம் நான் எப்படிடா தனியா போவேன். அவ நினைப்பு சாகடிக்குமேடா. அவ போன மாசம் எனக்குக் கொடுத்த முத்தம் கூட இன்னும் காயலடா. "

"அடக் கருமமே! முத்தம் வேற கொடுத்தாளா உனக்கு? அட விடு மாப்ள. இன்னிக்கு அவனுக்கு கொடுத்திட்டிருப்பா!! இதெல்லாம் கொடுத்து வாங்குறதுதானப்பா!!! இதுக்குப் போயி பெருசா அலட்டிக்காதடா!ஹி ஹி!"

"அதான்டா என்னால தாங்கவே முடில. நேத்து வரைக்கும் என்கூட கொஞ்சிட்டு, கட்டில் விஷயம் வரைக்கும் அன்னியோன்யமா பேசிட்டு, இன்னிக்கு...... சீ... நினைச்சாலே அருவெறுப்பா இருக்குடா... செத்துருவேண்டா நான். என்னால முடிலடா.. ஆனா உனக்கு என் சீரியஸ்னெஸ் புரியலேல. எதோ எப்பயும் போல பேசுறேன்னு நினைச்சிட்டு கிண்டல் பண்றேல. இப்போ புரியாதுடா உனக்கு. நாளைக்கு புரியும்.. நான் வைக்கிறேன்..."

"டேய் டேய் வச்சிறாத.. உன்ன சிரிக்க வைக்கலாம்னு நினைச்சு சொன்னேன்டா.. மன்னிச்சுக்க. தப்பான முடிவு எதுவும் எடுத்துறாத மாப்ள. என்னனாலும் பார்த்துக்கலாம். உனக்கு இதை விட சூப்பர் ஃபிகரு கிடைக்கும்டா..
இப்போ என்னடா. அவள தூக்கலாமானு நேத்தே கேட்டேன். நம்ம பசங்க ரெடியா இருந்தாய்ங்க. நீதான், அவ விருப்பத்தோடதான் கல்யாணம் நடக்குது, தூக்குனா பிரச்சினை ஆயிரும் அதுனால வேணாம்னு சொன்ன. இன்னிக்கு ஃபோன் பண்ணி, செத்துருவேன் வச்சிருவேன்னு புலம்புற. என்னதான்டா பண்ண சொல்ற?"
........
"டேய்.. சிக்கன் வாங்கிட்டு வந்தேன். பூடு வாங்க மறந்துட்டேன்பா.. கண்ணு போய் வாங்கிட்டு வந்துருடா.. நைட்டு கோழிக்குழம்பும் சாப்பாடும் பண்றேன்."

"நீ வேறம்மா... இப்ப சிக்கன் தான் ரொம்ப முக்கியம். எப்பப் பார்த்தாலும் ஃபோன் பேசுறப்ப உயிர எடுக்காதம்மா... இரு வர்றேன்.. மாப்ள, நான் கடைக்கு போறேன். வந்து பேசுறேன்."
........

"சாப்புட வா.. மணி பத்தாச்சு."

"எனக்கு வேணாம்மா.."

"வாப்பா, உனக்காகத்தான் சிக்கனே வாங்குனேன். ஒழுங்கா வந்து சாப்புடு."

"இந்த வர்றேன் இரு.."
........
"எப்படிம்மா சூப்பரா பண்ற. நீ செஞ்சா மட்டும்தாம்மா வாசம் பயங்கரமா வருது. எவ்ளோ சாப்புறேன்னு எனக்கேத் தெரில. அப்பா எங்கம்மா?"

"அத விடு. நீயென்டா இன்னிக்கு என்னமோ போல இருக்க? எதாச்சும் பிரச்சினையா? ரகு கூட சண்ட போட்டியா எப்பவும் போல? என்ன பிரச்சினைனு என்கிட்ட சொல்லு இப்படி இருக்காத கண்ணு. அம்மா இருக்கேன்ல..."

"அதுக்காகத்தான் நீயா போயி சிக்கன் வாங்கிட்டு வந்து சமைச்சியா? பிரச்சினையெல்லாம் ஒன்னுமில்லம்மா.. நல்லாத்தான் இருக்கேன். நான் டைரி எழுதிட்டு போய் தூங்கப்போறேம்மா."

"ஹ்ம்ம்"
........

அம்மா செஞ்ச சிக்கன் சூப்பரா இருந்துச்சு. வேற ஒன்னும் எழுதுற அளவுக்கு பெருசா நடக்கல. அவ்ளோதான்.
........

12 comments:

தேவன் மாயம் said...

வாங்க நண்பரே!!!
கதை அருமை!!

Anonymous said...

வாங்க நண்பரே!!!
கதை அருமை!!//

mikka nandri..

சுட்டபழம். :) said...

ஒப்பனிங் எல்லாம் நல்லா கீது........ஆனா பினிஷிங் இல்லையே.....மாமு..... :(

elkay said...

thunna piraku nanban kathali ellaam poyeee pochu only kozhi ...hiiiyyyoo hiiiyyyooo...

Anonymous said...

ஒப்பனிங் எல்லாம் நல்லா கீது........ஆனா பினிஷிங் இல்லையே.....மாமு..... :(////

இது இருத்தலியம் என்ற தத்துவத்தைச் சார்ந்தது. இப்படி பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் நமது அறிவிற்கு எட்டாமலே நிகழ்கிறது. உதாரணம்: தாய் இறந்த இரண்டாவது நாளில் வீட்டிற்கு வந்த குழந்தையின் சேட்டையைப் பார்த்து சிரிப்பது போன்ற விஷயங்கள். இந்தக்கதையில் அப்போதைக்கு பெரிதாய் தெரிந்த காதலியின் பிரிவு துயரம், ஒருவேளைக்குண்டான பிடித்த உணவிலேயே காணாமல் போகிறது. ஆனால் மீண்டும் அது எழக்கூடும், அதைப் பற்றிக் கவலையில்லை நமக்கு.
To be simple, Lover-Life partner. Chicken-favrte dish. எது எதை மறக்கடிக்கிறது பாருங்கள். illogical. இதுதான் உலகிலும். இருத்தலியத்தின் படி world has no logics.! அதன் ஒரு துளி தான் கதை.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

இது சம்பந்தமாக தமிழச்சி அவர்கள் இன்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.

ஆனா பசங்க விடுற இந்த பீலிங்ஸ் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. ஹி ஹி

இருத்தலியம் - ஆங்கிலத்தில் எழுதவும். இதனைப் பற்றி அறிய வேண்டும்.

Anonymous said...

இருத்தலியம் - ஆங்கிலத்தில் எழுதவும். இதனைப் பற்றி அறிய வேண்டும்.//
existentialism. idhai vida nihilism innum arumai.! wikipaediavil thulaavungal!!! existentialism என்ற ஒன்றுமே அல்லாத மாபெரும் கடலின் ஒரு துளிதான் இந்தக்கதையின் கரு!

Anonymous said...

ஆனா பசங்க விடுற இந்த பீலிங்ஸ் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. ஹி ஹி//

ஹி ஹி.. இதைப் பத்தி ஒரு பெரிய ஆராய்ச்சியே பண்ணிருக்கேன். கூடிய சீக்கிரம் எழுதுறேன்!! :-))

சுட்டபழம் :) said...

தல என்னையும் மதிச்சு ரிப்ளை பண்ணிகிறியே.........உண்மையிலேயே கிரேட் தல.......மதுரயாண்ட வரும் போது சொல்லு தல..... அம்மா மெஸ்ல கோழி பிரியாணி வாங்கி தரேன்......

ELKAY said...

To be simple, Lover-Life partner. Chicken-favrte dish. எது எதை மறக்கடிக்கிறது பாருங்கள். illogical. இதுதான் உலகிலும். இருத்தலியத்தின் படி world has no logics.! அதன் ஒரு துளி தான் கதை////

[:D]...

விக்னேஷ்வரி said...

மிக அழகான டைரிக் குறிப்பு.

Anonymous said...

hey its true ... infact after feeling for the previous topic "kathaliyin pinam", I am able to smile for this article... is this illogical too?

Related Posts Plugin for WordPress, Blogger...