Tuesday, July 21, 2009

சன் நெட்வொர்க்கும் கொடூர மாறன்களும்

தலைப்பு ஏதோ ஆலிவுட் டப்பிங் படம் மாதிரி இருக்குனு நினைக்காதீங்க. முழுசா படிச்சீங்கன்னா புரியும்!
அதுக்கு முன்னாடி,

"1) பா.ம.க வும், ம.தி.மு.கவும் அடிக்கடி கூட்டணி மாறாத கட்சிகள்.
2) தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக கம்யூனிஸ்ட் ஆட்சிதான்.
3) பேரரசு படங்கள் சமூகப்பொறுப்புணர்வுடன் கூடிய ஜனரஞ்சகமான படங்கள்."

இப்படியெல்லாம் நான் சொன்னா, என்ன "கேனைப்பயல், கோமாளி"னு திட்டுவீங்களா மாட்டீங்களா?
ஆனா,

"1) தெனாவெட்டு சூப்பர் ஹிட்டு
2) திண்டுக்கல் சாரதி செம படம்
3) அயன் படத்தை மக்கள் அயராமல் பார்க்கின்றனர்
4) சன் டி.டி.எச் சிறந்த டி.டி.எச்
5)படிக்காதவன்..........
6)மாசிலாமணி........."
7)கோவை பிரதர்ஸ் 2008ன் சிறந்த படங்களில் ஒன்று.

இப்படிலாம் சொன்னா மட்டும் எப்படி மக்களே சும்மா இருக்கீங்க? கூச்சமே படாம, ஓடாத படத்த செம ஹிட்டுனு நம்மகிட்டயே சொல்றாய்ங்க. கேட்கவே முடியாத பாட்டுக்கு நம்பர் ஒன் இடம் கொடுத்து டாப் டென்ல போடுறாய்ங்க.

சன் மியூசினு ஒரு சேனல் இருக்கு. ஆத்தி...!! கொடுமடா சாமி. அதுல வர்ற பொண்ணுங்க, பையனுங்க, சில நேரத்துல எங்க அப்பத்தா "அது பொண்ணா பையனாப்பா?"னு என்ட கேட்கும். ஆனா அது கூட காமெடி இல்ல. அதுக்கு பதில் சொல்றதுக்காக சட்டுனு திரும்பி டிவியப் பார்த்தா நம்மலால உடனே பதில் சொல்ல முடியாது. அவ்ளோ கர்ணகொடூரமா ட்ரெஸ் போட்டிருப்பாய்ங்க.
இப்படித்தான் ஒருநாளு எங்கப்பத்தா சன் மியூசிக் பார்த்துட்டு இருந்தப்ப திடீர்னு "அடப்பாவமே.. இந்தப் பொண்ணு நேத்து நல்லா இருந்துச்சு. இன்னிக்கு கையில மாவுக்கட்டுப் போட்டிருக்கு."னு கொஞ்சம் அதிர்ச்சியா சோகமா சொன்னுச்சு. என்னடானு பார்த்தா எனக்கு அடுத்தடுத்து ரெண்டு அதிர்ச்சி. முதல் அதிர்ச்சி, அந்தப் பொண்ணு போட்டிருந்தது மாவுக்கட்டு இல்ல, ஸ்டைலுக்காக போடுற ஃபேஷன் பேண்டு, அதாவது மணிக்கட்டுல இருந்து முட்டி வரைக்கும் மறைச்சு அப்புறம் ஓபனா விட்டு டி.ஷர்ட்னால மூடுறது. அடுத்த அதிர்ச்சி அந்தத் தொகுப்பாளர், பொண்ணு இல்ல, பையன்!!!!

சன் மியூசிக்ல ஒரு பொண்ணும் பையனும் வந்து பேசுனா கூட பல்லக் கடிச்சுட்டு பாட்டுக்காக வெயிட் பண்ணி பார்த்துரலாம். ஆனா ரெண்டு பையனுங்க வந்து பேசுனாய்ங்கன்னா, கொமட்டிட்டு வரும். சும்மா அறு அறு அறு அறுனு அறுத்தெடுப்பாய்ங்க. எதையாவது மொக்கத்தனமா சொல்லிட்டு அவிய்ங்களே சிரிச்சுக்குவாய்ங்க. இத அவங்க வீட்டு ஆளுகெல்லாம் பார்ப்பாங்களா மாட்டாங்களானு தெரில!! சன் மியூசிக்க எங்க அப்பத்தா பார்த்ததே பாட்டு போடுவாய்ங்கனுதான். ஆனா இப்பல்லாம் போட்டா அயன் பாட்டு, படிக்காதவன் பாட்டு, மாசிலாமணி பாட்டு தான். திருப்பி, திருப்பி அதான், அதேதான். சன் நெட்வொர்க்குக்கு புடிக்காத தயாரிப்பாளர்களான ஐய்ங்கரன், தாணு படங்களில் இருந்து பாடல்களே கிடையாது. முக்கியமாக அஜித் பாடல்கள் அமாவாசைக்கு ஒருமுறை வரும். சரி உன் சேனல். நீ என்ன வேணா போட்டுக்க!!

சன் டிவி, கேட்கவே வேணாம். அடக் கண்றாவியே, ஈழத்துல என்ன ஆச்சுனு தெரிஞ்சுக்க எட்டு மணிக்கு நியூஸ் போட்டா அதுல 'மாசிலாமணி திரைப்படம் தமிழகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. மக்கள் சும்மா சும்மா எழுந்து ஆடுகின்றனர். பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது'னு சொல்றான்பா கூச்சமே படமா!! இதான் நியூஸா???
அப்புறம் சித்தி, அவ மக அண்ணாமலை, அவ மக செல்வி, அவங்கம்மா அரசினு ஒரு வரலாற்று காவியம் நிக்காம ஓடுது! தேவயாணிக்கு ரெண்டு புள்ள பொறந்தும் கோலங்கள் முடியல!! விஜய் டிவி லொள்ளு சபால கலக்கிட்டு இருந்து மனோகரை கூட்டி வந்து டாப் டென்ல மொக்கையாக்கிட்டாய்ங்க!! இதெல்லாம் கூட நமக்கு பிரச்சினை இல்ல. இப்போ கொஞ்சம் சீரியசா பிரச்சினையை பார்ப்போம்!!!

'திராவிட இயக்க வரலாறு' எழுதிய முரசொலி மாறனின் இளைய மாறன்கள், தங்கள் தொலைக்காட்சியில் இராமயணமும், மகாபாரதமும், ஜோதிடமும் ஒளிபரப்பிய போதே, இவர்கள் தொழிலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால் இதெல்லாம் என் பிரச்சினை அல்ல. இவைகளைப் பார்ப்பது பிடிக்கவில்லையென்றால் ரிமோட்டை எடுத்து சுலபமாக என்னால் சேனல் மாற்றி 'பயனுள்ள நிகழ்ச்சிகள்(!!)' பலவற்றை பார்க்க முடியும்!
ஆனால் என்னிடம், பிச்சைக்காரன் நோட்டீஸ் காட்டுவதைப் போல, தினமும் ஆயிரம் விளம்பரம் காட்டி, 2000ரூபாய் பிச்சையெடுத்து, சன் DTHஐ என் வீட்டில் மாட்டிய இந்த மாறன்களின் அயோக்கியத் தனத்தையும், சர்வாதிகாரத்தையும் சமீபத்தில் அறிந்தேன். சன் மியூசிக் என்ற மகாகேவலனமான சேனலை பாடல்களுக்காகக் கூட காண சகியாது, இசையருவியை பார்ப்போமே எனப் பார்த்த போது, இலவசச் சேனலான அது SUN DTH சேவையில் இல்லை. வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்தால் (அது இலவசம் இல்லை. TOLL FREE number எப்பொழுதுமே கிடைக்காது) பல நிமிட காத்திருப்புக்குப் பின் பேசிய அதிகாரியின் பதில் "இசையருவி இப்போதைக்கு கொடுப்பதாய் 'ஐடியா' இல்லை" என்பது!!! இதே நிலைதான் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிக்கும்.
சன் DTHக்கு நாம் காசு கொடுக்கிறோம். Star movies, HBO போன்ற Pay channelகளுக்கு தனியாக கட்டுகிறோம். ஆனால் மாதத்திற்கு 75ரூபாயிலான Basic Packயில் தெரிய வேண்டிய இசையருவியையும், ஜெயா மேக்ஸும் ஏன் தெரியவில்லை? நாம் இதைத்தான் பார்க்கவேண்டும் என முடிவு செய்ய இவர்கள் யார்? 500 ரூபாய்க்கு DTH என்ற விளம்பரத்தைப் பார்த்து என் நண்பன் வீட்டில் அதை மாட்டினான். ஆனால் வினியோகஸ்தர்கள் அவனிடம் வாங்கியதோ 1850ரூபாய். விவரம் Installation charge 100ரூபாய், SUN DTH charge 1750 ரூபாய். வாடிக்கையாளர் சேவை மையத்திடம் கேட்டால் ஒழுங்கான பதில் இல்லை. Installation chargeஆகத்தான் அந்த 1350 ரூபாயும் வாங்கியிருப்பார்கள் என பதில் அளித்தார்கள். பின் ஏன் 500ரூபாய் என விளம்பரம் செய்ய வேண்டும்?

"அய்யோ அழகிரி சன்DTHஐ அழிக்கிறார், அவரின் ஆதரவாளர்கள் உடைக்கிறார்கள்" என தெருத் தெருவாய் ஒப்பாரி வைக்கத் தெரிந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் இது தெரியவில்லையா? இப்படி மக்களை ஏமாற்றியும், "நான் அளிக்கும் சேனலைத்தான் நீ பார்க்க வேண்டு"மென சர்வாதிகாரம் செய்பவர்களையும் மக்களே செருப்பால் அடிப்பார்களெனத் தெரியாதா இவர்களுக்கு? தொழிலுக்காக அப்பாவை அசிங்கப்படுத்தினார்கள், இப்போது மக்களை ஏமாற்றும் இவர்களை என்ன சொல்வது?
தொழிலுக்காக எதையும் செய்யும் இந்த வியாபார காந்தங்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்றும் ஜெயலலிதா சுமத்தும் அனைத்துக் குற்றங்களையும் ஏன் செய்திருக்க மாட்டார்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது.

மேலும் கலைஞர் டிவி, மற்றும் ஜெயா டிவி அதிகாரிகள் SUN DTHன் இசையருவி, ஜெயா மேக்ஸ் இருட்டடிப்பை உடனே கண்டுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.

இந்த ஆகஸ்டு மாதத்துடன் SUN DTHக்கான என் சந்தா முடிவடைகிறது. தொலைகிறது சன்(னி)யன் என என் வீட்டிலுள்ள DTHஐ மாற்றலாம் என முடிவு செய்துள்ளேன். இப்போது சன்DTH உபயோகிப்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பதும் இதைத்தான். தயவு செய்து சந்தா முடிந்தவுடன் மாற்றிவிடுங்கள். என்ன DTH சேவை உபயோகிக்கலாம் என யோசிப்பவர்களிடம் நான் சொல்வதெல்லாம், தமிழ் நாட்டுக்காரனின் DTH சேவை சன் தான் என சன்DTH போடாதீர்கள், வேறு எது வேண்டுமானாலும் போடுங்கள். தமிழ்நாட்டில் உள்ளது என்பதற்காக சாக்கடையில் விழ முடியுமா? விழுந்த வருத்தத்தில் சொல்கிறேன். சீக்கிரமே சன் நெட்வொர்க் தனது அபரிமிதமான வளர்ச்சி ஒரு புற்றுநோய் கட்டிதானேயொழிய நியாயமான, சரியான வளர்ச்சியல்ல என்பதை உணரும். மக்கள் உணர்த்துவர். சன் நெட்வொர்க்கின் அனைத்து சேவைகளையும் முடிந்தவரை புறக்கணியுங்கள். நன்றி.

42 comments:

Kiri said...

Superrrr

யாத்ரீகன் said...

Makkal thaangalaga thaerndheduththuk kondadhu idhu.. yenakenamo idhila irundhu yaarum thappikuradhuku muyarchi yedukkura mathiri theriyala..

Sameer said...

Each and every word was very true......
you have a very good sene of humour while posting an article with anger.
Superb....Keep it up.

Anonymous said...

Good , It is 100 % true.

Anonymous said...

Always best DishDTH

more tamil channels with all sports channels.

க. தங்கமணி பிரபு said...

நல்ல பதிவுங்க! உங்க கோபம் புரியுது! இதுல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா? ஒரு உணர்வா கொஞ்சம் பேர் படிக்கிற ப்ளாக்ல பகிர்ந்துக்கலாம்! அன்ன கொஞ்சம் எபக்ட் வேணும்னு ஆசைபட்டீங்கன்னா, அவங்களை பொழக்கறதுக்குனே குமுதம், தினமலர் மற்றும் சில ஏடுகள் வாய்ப்புத் தேடி காத்துட்டிருக்குக! அவங்களுக்கும் ஒரு காப்பி பிரிண்ட் போட்டு தட்டியுடுங்க! ஏதாவது நடக்கும்!

க. தங்கமணி பிரபு said...

உங்க ப்ளாக் லுக்கு பிரமாதம். நான் என் ப்ளாக்கை அகலப்படுத்த முயல்கிறேன்! ஏதாவது ஐடியா த்ர இயலுமா?

Anonymous said...

அனைவருக்கும் நன்றி.

@தங்கமணி பிரபு

கண்டிப்பாய் என்னாலான குறிப்புகளைத் தருகிறேன். என் gtalk idக்கு request அனுப்புங்கள். ashok2906@gmail.com

shiyamsena said...

r u ADMK?

shiyamsena
http://free-funnyworld.blogspot.com

ms said...

வருங்கால ஜனா thipathi "அசோக் இளவரசன்" வாழ்க!!!!!!!

யூர்கன் க்ருகியர் said...

தலைவா... வெளுத்து கட்டிட்டீங்க.

மிக நன்கு உண்மையினை சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றி.

Chandru said...

கேபிள் டீவீயிலும் இவங்க அட்டகாசம் தொடருது. சென்னையில் போட்டியாக இருந்த hathway ஐ துரத்தியே விட்டார்கள்.

Anonymous said...

@shiyam sena

r u ADMK?///

ha ha.. sun DTHku 2000 kattuna naan sathyama paramaparai DMK kaaran!! :-)

p.s. -ADMK vaa irundha SUN DTH potrukave maaten!!

முத்துசிவா said...

மச்சி நீ சொன்ன இந்த விஷயத்த கூட சன் டிவி ல advertise பண்ணாதாண்டா மக்களுக்கே போய் சேரும். அந்த அளவுக்கு தமிழக மக்களை அடிமை படுத்தி வச்சிருக்காங்க.
உங்க அப்பத்தாவ பத்திரமா பாத்துக்கோ... நமக்கு அப்பத்தா தான் முக்கியம்.

வண்ணத்துபூச்சியார் said...

நியாமான கோவம்.

Template Xlent..

அஹோரி said...

நாட்டுக்கு , ஊருக்காக உழைத்த கூட்டம் அது ... பேசாம அதுங்களுக்கு ஜால்ரா போடா பழகிகோங்க ... பொழைக்கிற வழிய பாருங்க ...

Murali said...

அருமையான பதிவு...........!!!
///////கூச்சமே படாம, ஓடாத படத்த செம ஹிட்டுனு நம்மகிட்டயே சொல்றாய்ங்க. கேட்கவே முடியாத பாட்டுக்கு நம்பர் ஒன் இடம் கொடுத்து டாப் டென்ல போடுறாய்ங்க. //////// இப்படி போட்டு போட்டு தான் ஓடாத மொக்க படத்த கூட ஓட்டறான்...... இன்னும் நம்ம ஊர்ல top ten movies பாத்து படத்துக்கு போற ஆளுக தான் நெறைய பேர் இருக்காங்க..........அவிங்களுக்கு எல்லாம் ''புரிஞ்சு, தெரிஞ்சு, புறக்கணிச்சு'' எனக்கு கொஞ்சம் தலையே சுத்துது ''தல''......

Yuvaraj said...

IBM in deal with Sun TV

IBM has announced the signing of a services deal to implement and manage Customer Relationship Management-(CRM) related applications for Sun Direct TV, part of the Chennai-based Sun TV Group. This multi-year deal includes end-to-end services, from strategy through implementation, and displaces Sun Microsystems, the incumbent provider.
Sun Direct TV, launched in December 2007, has over three million subscribers. It plans to implement a CRM platform for six million subscribers, with a target of 10 million by 2010.
IBM will build and maintain a dynamic infrastructure for Sun Direct TV.

Vinoth said...

என் மனதில் இருந்ததை அப்படியே கொட்டிவிட்டீர் நண்பரே

Vaanathin Keezhe... said...

நல்ல உணர்வுப்பூர்வமான கட்டுரை... உங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதே அனுபவங்களைத்தான் தந்து வருகிறது இந்த Moron குழுமம்...

இந்த கருமாந்திரம் புடிச்ச பூனைகளுக்கு யார் மணிகட்டுவார்களோ... தெரியவில்லை!

- Vino

aroki said...

தோழா நாளைக்கே கருணாநிதி மண்டைய போட்டகூட அதுக்கும் advertise பண்ணி காசு பார்க்க தான் நினைபனுக இவனுக. இதல்லாம் கம்மி

Anonymous said...

கட்டுரையில் உள்ள உண்மையை உணர்ந்து பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல. இந்த பதிவுக்கு கமெண்ட் போட்ட சில பேராச்சும் சன் நெட்வொர்க்க புறக்கணிங்கப்பா...

அப்படியே யாராச்சும் இந்தப் பதிவை எப்படி ஜூனியர் விகடன் போன்ற பத்திரைகளுக்கு முறையாக அனுப்பது பற்றி எனக்கு சொன்னீங்கன்னா நல்லாருக்கும். சிறிது மாற்றம் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாமென இருக்கிறேன்!!! :-))

Anonymous said...

Itha vida periya koduma inimael than...

Top 10 films of the year 2009 are,

1.Ayyo
2.......10.........

Anonymous said...

You are right .
Sun Group is a cancer to tamil nadu.
It sells craps and garbages through repeat repeat repeat ..and ...repeated advertisements.
And creating illness in peoples mind repeating a same stuff every five ..minute.. Now a days this type of advertisements irritates and I hate..Sun..Its a Marketing mafia...

Karthikeyan said...

We dont have tamil channel which gives Real and True Information. We should take bold decisions and support and real information.
- Karthik

Suresh said...

அருமையான நடை, நகைச்சுவையுணர்வு, நல்ல கருத்துகள். நேர்மையான எழுத்து பெருசா வருவிங்க நண்பா தொடர்ந்து கலக்குங்க நான் இனி உங்க பின்னாடி அதாங்க பாலோவர்

Suresh said...

அட நம்ம ரஜினி டாட் காமில் எழுதிய இளவரசனா நீங்க இப்போ தான் உங்க பழயை பதிவை அலசிய போது தெரிந்தது செம தில் , செம நக்கல நல்ல எழுத்து இது போது நீங்க நல்லா வருவிங்க ;) கலக்குவோம்

வாய்ப்பாடி குமார் said...

சன் சாதாரணமானது இல்ல .
இசையருவி வருது வருதுனு காட்டவே இல்லை.

ஆனா டிஷ் டீவிக்காரன் பிரியா காட்டீட்டு இப்ப குளோஸ்
பண்ணீட்டாங்க. இப்ப ஷீ தமிழ் காட்டறான்.
என்ன பண்ண ,

கோவையில ஒரு அறிவிப்பு பார்த்தோம்

6 அடி சி பேண்ட் டிஷ் ரூபாய் 2500.
கலைஞர்,இசையருவி,செய்திகள்,சிரிப்பொலி,மக்கள்,மெகா,ஜெயா 3 சேனல்கள்,
தமிழன்,இமயம்,எஸ்,எஸ் மியூசிக் ,ராஜ் மியுசிக், நியூஸ் உட்பட‌
135 சேனல் பார்க்கலாமுனு.

நாங்க 8 அடி டிஸ்ஸில் 350 சேனல் பாக்கிறோம் (சன் தவிர)

பிரசன்னா இராசன் said...

உங்களை சுவாரஸ்யமான பதிவர் விருது கொடுக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபங்கள் உள்ளதா?

Anonymous said...

உங்களை சுவாரஸ்யமான பதிவர் விருது கொடுக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபங்கள் உள்ளதா?//

Neengala paathu koduthaa sarithaan!!!

Anonymous said...

I say this is the 1st voice against this group. I appreciate the writing.

I could only say, you have written very less about this network. They are even more dangerous for the society. They actually control tamil cine industry now / TV industry / DTH industry / Cable industry / Print..../theatre industry and there are more to come..... there will be lot more scandals from them.

It's unbelievable that people would do something about it (going against).... But something will happen to control them....but not Now(..will take ages probably, there is a end for everything..isn't it?

Anonymous said...

very good ,
me & my family never see their tv .esp the serials....

pls avoid sun tv...support makkal in some programms,raj & zee in news & vijay in all programms.

csestrings said...

ur simply super excellent blog ... thanks..

ilanchezhian said...

Neenga sonnathu ellam romba correct than.. aana neraya oorla(mostly in remote areas) cable theriyutha nu kooda keyka maatanga "SUN TV" theritutha nu than keykuranga.. antha alavukku sun tv reach aayiruku..itha change panra varaikum avainga(sun network) aatam adangathu.
Aduthu "SURYAN FM". avainga athuku meyla padam release ku munnadiye SUPER HIT MOVIE nu sollrathu, sun pics pada paatu podum pothu paatuku naduvula SUN PICTURES KALANITHI MARAN valangum nu or introduction veyra("unmaiyana producer kooda ivlo intro koduka maatar").. ivaingala maathavey mudiyathu

rajesh. V said...

its one of a good articles i read in the blog world.

Keep it up ilavarasan.

Rajesh. V

கக்கு - மாணிக்கம் said...

தற்கால டீ. வி. க்கள் அனைத்துமே குப்பைகள் தான் என்ற யதார்த்தம் புரிந்திருந்தால் நிச்சயம் DTH , அது யாருடயதாய் இருந்தாலும் வாங்கி இருக்க மாட்டீர்கள்.இல்லையா? உங்களைபோன்றவர்கள் "அவர்களை " ஊக்குவிப்பதும் பின்னர் அவர்கள் நம் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொண்டவுடன் புலம்பித்தீர்பதும்...........

புரிந்து கொள்ளுங்கள், நாம் இஷ்டப்பட்டால் அன்றி எவரும் நம்மை "சுரண்ட " இயலாது.
தப்பும் தவறும் நம்மீதுதானே ! இடம் கொடுத்தால் எவரும் மடம் பிடுங்கும் சங்கதிதான்.

Anonymous said...

BIG TV தான் இப்போதுள்ள டி டி எச் ல் மிகவும் அதிக தமிழ் சானல்கள் தருகிறது. சண், சண் மியூசிக், சன் நியுஸ், ஆதித்யா,கே டிவி. கலைஞர். செய்திகள், இசைஅருவி. சிரிப்பொலி, பாலிமர் , வசந்த், மெகா. மக்கள், பொதிகை, ஜெயா, ஜெயா செய்திகள், சுட்டி , விஜய், ராஜ், ஆசீர்வாதம். ufx. ஆக 21 சானல்களை தருகிறது. மேலும் டிஸ்கவரி, அனிமல் பிளானட். மற்றும் பல ஹிந்தி சானல்களும் பேசிக் பாக்கில் கிடைக்கிறது.

Manikandan said...

அருமையாக சொன்னிர்கள் அனைத்தையும்.... நான் இதை ஏற்கனவே அனுபவித்தவன். இப்போது இந்த சனியனை தூக்கி எறிந்துவிட்டு கேபிள் connection கொடுத்துவிட்டேன். Now only i realized how those ppl cheated me. Ippolam SUN DTH adv parthale kaduppa iruku. Anyway thanks for sharing this useful information to all. Why this is not added to your facebook?, so that it can be shared with all...

Don Ashok said...

Why this is not added to your facebook?, so that it can be shared with all... ///

ஏற்கனவே பலமுறை share செய்துவிட்டேன்! முடிந்தால் நீங்களும் நண்பர்களிடம் பகிருங்கள்.

Thamizhachi said...

Well said and 100% true. Even if anyone pays for me I am no longer willing to watch SUN TV group channels. I ditched them long back.

Ganesh said...

நான் சன் DTH வந்த புதிதில் வாங்கி, அதன் மோசமான சேவைக்காக மூன்றே மாதத்தில் பிடுங்கி எரிந்து விட்டேன்.

Anonymous said...

சன் டி.டி.எச்ல இப்போ ஜெயா மேக்ஸ் இசையருவி வருது.. ஆனா அதெல்லாம் பே சேனல்களாம்....

வீடியோகான் போகலாம்னுதான் முடிவெடுத்திருக்கிறேன்..

நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பரே! வாழ்த்துக்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...