Monday, July 6, 2009

தாத்தன்



தாத்தன் நீ செத்த அடுத்த மாசம்
நான் வந்து பொறந்ததால
உம்பேர வச்சாய்ங்கனு
நேத்துவர நினைச்சிருந்தேன்..

உன் மேல கடுப்பெல்லாம்
என்மேல காட்டுவாய்ங்க...
உன் பேர சொல்லித்திட்டி
அப்பப்ப மிதிப்பாய்ங்க...
உன் பேரு எனக்குவச்சக்
காரணத்தத் தெரிஞ்சுகிட்டேன்..

நீ நாடகத்தில் வேசம் கட்டி
வச்சக் கடைய விட்டீனு
ராவுல டாக்கீசு போனா
உம் புள்ள அடிக்கிது..
மானங்கெட்ட உன் பேரன்,
எனக்கெங்க வலிக்குது?

சோறு நல்லா வேகலேனு
உம் பொண்டாட்டிய அடிச்சியாமே?
நீ தின்னதே உம்மாமன் காசு..
என் அப்பத்தாவோ உம் மாமன் பொண்ணு..!!
அப்பப்ப உன் நெனெச்சி
உன் மச்சினைங்க மொறைக்கிறாய்ங்க..!!

எதிர்த்த வீட்டு பெருமாளுட்ட
பத்து ரூவா வாங்குனியே..
குடிக்க வித்த வீட்டுக் காசில்
அதையாச்சும் அடைச்சியா?
எங்கூட விளையாண்டா, அவனே
அவன் பொண்ண மிதிக்கிறான்..!!

கண்ணமூடி எவனத் தொட்டாலும்
நீ கட்டியுருண்டவனா இருக்குறான்..
உம்மேல பகையில
என்ன வெறிச்சுத்தான் முறைக்குறான்..
சும்மா நான் போனாலும்
ஒரண்ட இழுக்க பாக்குறான்..

பொண்ணு கேட்டுப் போனா
உம்பேரச் சொல்லுறாய்ங்க..
"நீ அவன் பேரனா?"னு
பத்தடிக்குப் பம்முறாய்ங்க...

அப்பத்தா அப்ப வந்து,
நான் உன்னமாதிரினு சொல்லி
என் உச்சியில முத்தந்தந்து
அது கண்ணோரம் தொடைச்சிக்கிச்சு..
மொத்த குடும்பம் முறைச்சாலும்
அப்பத்தாவப் பாக்கையில,
தாத்தன் பேரு வச்சதிலே
தப்பொன்ணும் இல்லையினு
என் உள்மனசு சொல்லுச்சு...
என் தாத்தன் உம்பேர
நம்ம ஊருக்குள்ள
கத்தனும் போலிருந்திச்சு....!!!

7 comments:

பா.ராஜாராம் said...

மிக நகைச்சுவையாய் செலுத்தி
கண்கள் கசிய நிருத்தியிர்ந்தீர்கள்...
தொடர்ந்து எழுங்கள் இளா..
வாழ்த்துக்கள்!

Suresh said...

அட கவிதைகளும் பின்னுரியேப்பா.. என் போன் சர்விஸில் இருக்கு இல்லைனா உனக்கு முதல போன போட்டு பேசி இருப்பேன்

jayanthi said...

nice job that kurivikaran is a bloody good job whom ever created this

கிறிச்சான் said...

Superb Ilaa..

முத்துசிவா said...

//அப்பத்தா அப்ப வந்து,
நான் உன்னமாதிரினு சொல்லி
என் உச்சியில முத்தந்தந்து
அது கண்ணோரம் தொடைச்சிக்கிச்சு..
மொத்த குடும்பம் முறைச்சாலும்
அப்பத்தாவப் பாக்கையில,
தாத்தன் பேரு வச்சதிலே
தப்பொன்ணும் இல்லையினு
என் உள்மனசு சொல்லுச்சு...
என் தாத்தன் உம்பேர
நம்ம ஊருக்குள்ள
கத்தனும் போலிருந்திச்சு....!!!//

ஃபினிஷிங் டச் சூப்பர் மச்சி...

Chan said...

Super Na :)அப்பத்தாவப் பாக்கையில,
தாத்தன் பேரு வச்சதிலே
தப்பொன்ணும் இல்லையினு
என் உள்மனசு சொல்லுச்சு...
என் தாத்தன் உம்பேர
நம்ம ஊருக்குள்ள
கத்தனும் போலிருந்திச்சு....!!!////
Super Ending !! :)

thiru said...

Kalakkal!!

Related Posts Plugin for WordPress, Blogger...