Friday, June 26, 2009

ரஜினி. ரஜினி மட்டுமே.


ரஜினி! ரஜினியைப் பார்த்து, சுருட்டைமுடி இருந்தாலும், ரஜினி போல முடிவெட்ட வேண்டும் என்ற ஆசையோடு, முடி வெட்டுபவரிடமும், அப்பாவிடமும் சண்டை போட்ட பலரில் நானும் ஒருவன். இது ஒருபுறமிருக்க, ரஜினியை உள்ளுக்குள் பிடித்தாலும், படித்தவர்களும், உலக சினிமாக்களை அலசி ஆராய்ந்த மேதைகள் போல் நடிக்கும் மேதாவிகளின் கூட்டத்தால் கிண்டலடிக்கப்படுவோமோ எனப் பயந்து ரஜினியை பிடிக்காததுபோல வெளியில் காட்டிக்கொள்ளும் கூட்டம் ஒன்று உள்ளது. மிகச் சமீபம் வரையில் அக்கூட்டத்தில் இருந்தேன். பின் உலக ரசிகர்களால் போற்றப்படும் Clint eastwoodயின் திரைப்படங்களை சளைக்காமல் பார்த்து ரசித்தபோது என் மனதில் அடிக்கடி ஒரு உருவம் வந்துபோனது. அது ரஜினிகாந்த். குறிப்பு:Clint Eastwoodன் இயக்கும் திறமையோடு ரஜினியை நான் ஒப்பிடவில்லை. நடிப்பிலும், தனித்தன்மையிலும் மட்டுமே ஒப்பிடுகிறேன்) Clint Eastwoodஐ ரஜினி பின்பற்றவில்லை. ஆனால் இருவரிடமும் ஒரே மாதிரியான தனித்தன்மை உண்டு. அதை வெளிக்கொணரும் நோக்கிலேயே இந்தக் கட்டுரை. ரஜினியின் அரசியல் வாழ்க்கையையோ, அவரது ஆன்மீக வாழ்க்கையையோ நியாயப்படுத்த, ஏன் நான் தொடவே போவதில்லை. அவரது திரையுல வாழ்க்கையை அலசவே இதை எழுதுகிறேன். இந்தக் கட்டுரை ரஜினி ரசிகர்களுக்காக அல்ல. ரஜினியை ஒரு கோமாளி என்றும், "பல நடிகர்கள் மிகவும் உழைத்து சம்பாரிக்கும் காசை, ஒன்றுமே செய்யாமல், உடல் அசையாமல் சம்பாரித்துவிட்டுப் போகிறார் ரஜினி", இதுபோன்ற எத்தனையோ வசனங்களை புழக்கத்தில் விடும் ரஜினி வெறுப்பாளர்களுக்கும், சினிமாவின் சராசரி ரசிகர்களுக்கும் தான். மிகவும் முக்கியமாக, ரஜினியின் அரசியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை, இதர இதர போன்ற விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இதைப்படியுங்கள். இது ரஜினிக்கே மிகவும் பிடித்த ரஜினி என்ற நடிகரைப் பற்றியது. நடிகரை மட்டுமே பற்றியது!!!


ஆசியாவில், அகில உலக நட்சத்திரம் 'ஜேக்கி சேனு'க்கு (Jackie Chan) அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குகிறார் ரஜினி. தென் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி எப்படி இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? வழக்கமாய் ரஜினிக்கு திரையுலகில் ஜால்ரா தட்டுவோரும், அவரின் அதிதீவிர ரசிகர்களும் சொல்லும் "அவரு ரொம்ப சிம்பிள். வெரி டெடிகேட்டட் ஆர்டிஸ்ட், இதர..இதர" விஷயங்களை நான் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவை உண்மையான காரணம் அது அல்ல. அவரை மக்களுக்கு பிடித்திருப்பதற்கு காரணம் அவருக்கு இயற்கையிலேயே, பிறப்பிலேயே அமைந்திருக்கும் தனித்தன்மையும், ஆங்கிலத்தில் charm, charisma எனப்படும் பார்ப்பவர்களை ஈர்க்கும் தோற்றமும் தான். என்னதான் உயிரைக் கொடுத்து வெறியாய் நடித்தாலும் இதெல்லாம் வராது, எனெனில் இது இயற்கையாய் அமையப் பெறுவது. இந்த விஷயங்கள் அமையப் பெற்ற நடிகர்கள் வெகுசிலர் தான். Clint Eastwood, Charlie chaplin, Al pacino மற்றும் இளைய தலைமுறையில் Johnny Depp.இந்தியாவில், ஏன் ஆசியாவில் ரஜினி மட்டுமே. Clint Eastwood தனது சமீபத்திய மிகப்பெரிய வெற்றிப் படம் 'Gran Torino'வரை தனது தோற்றத்தை மாற்றியோ, குரலை மாற்றியோ நடித்ததில்லை. தனது எழுபத்தெட்டாவது வயதில் கூட மிகப்பெரிய துப்பாக்கியைத் தூக்கி, வில்லன்களிடம், "I blow a hole in your face and then I go in the house... and I sleep like a baby. You can count on that." என பஞ்ச் டயலாக் பேசினாலும் திரையரங்கில் விசில் பறக்கிறது. இந்த ஸ்டைல் உள்ள நடிகர்களை Hollywoodயிலும் Mass Heroக்களாகவே பயன்படுத்துகிறார்கள். இந்த நடிகர்களையெல்லாம் அழுகவிட்டும், வில்லனிடம் கெஞ்சவிட்டும் படமெடுத்தால் அங்கே யாரும் பார்க்க மாட்டார்கள். clint Eastwood காவல்துறை அதிகாரியாக நமது கொடி பறக்குது பாணியில் அதிரடியாக நடித்த திரைப்பட வரிசைதான் 'Dirty Harry'. இதில் அவர் சொல்லும் "'Go on. Make my day" போன்ற வசனங்களை, மிகப்பெரும் நடிகர் De Niro சொல்வதுபோல் கற்பனை செய்தால் கூட மகாகேவலமாக இருக்கும். அதேபோல் ரஜினியின் "ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி" போன்ற வசனங்களை இந்தியாவில் வேறு யார் சொன்னாலும் பொருத்தமில்லாமல் தான் இருக்கும். ஆனால் ரஜினி அதை சொல்லும்போது அவரைப் பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடிக்கும். Al Pacinoவின் Scarface வசனமான "You wanna fuck with me? ok. Fuck. But remember, you're fucking with the best" என்ற வசனமும் இதே ரகம் தான். இப்படி பல ஆயிரம் puch dialogue எனப்படும் அதிரடியான வசனங்கள் Hollywoodயிலும் உண்டு. அடுக்கிக்கொண்டே போகலாம்.

ரஜினி, Clint Eastwood போன்றோர் மிகப்பெரும் நடிகர்கள் ஆகாமல் இருந்திருந்தால் கூட, அவர்களின் தனிப்பட்ட வட்டாரத்தில் அவர்கள் ஒரு Heroக்களாகவே போற்றப்பட்டிருப்பர். அவர்களின் தோற்றம், பேச்சு, செயல் அப்படி. அதை யாராலும் மறுக்க முடியாது.

ரஜினியின் மிகச்சில படங்களே அவரின் உண்மையான திறமையை வெளிக்கொண்டு வந்த படங்கள். எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், தளபதி, மூன்று முடிச்சு, தில்லு முள்ளு, இன்னும் சில மட்டுமே. தளபதியில் மம்முட்டி சாகும் தருவாயில் எதிரிகளால் அடித்துப் போடப்படும் போது மருத்துவமனையில் அவரிடம் ரஜினி அரற்றும் காட்சி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தளபதி போல சாரம் உள்ள, அதே நேரத்தில் ரஜினியை சரியாக உபயோகப்படுத்தும் வகையில் இன்னும் ஒரு பத்து படங்கள் வந்திருந்தால் கூட ரஜினியை விமர்சிக்கும் விமர்சகர்கள் வாயை, மூடியிருப்பர். நிறைய படங்கள் ரஜினியை exploit செய்து எடுக்கப்பட்ட படங்கள். சமீபத்தில் வந்த சிவாஜி, ரஜினையை மட்டுமே முதலாய் வைத்து எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். பலமான கதையே இல்லாமல், வெறும் ரஜினியால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்தமுடிகிறதெனில். சரியான கதையோடு ரஜினியை சரியாய் பயன்படுத்தி எடுக்கப்படும் படம் எப்படிப்பட்ட வெற்றிபெறும் என என்னால் நினைக்கவே முடியாது.
சங்கர் போன்ற இயக்குனருக்கு ரஜினி போன்ற ஒரு மாபெரும் நடிகர் தேவைப்படலாம். ஆனால் எந்த விதத்திலும் ரஜினிக்கு சங்கர் தேவையில்லை என்பது என் கருத்து. வெறும் தயாரிப்பாளரின் காசில் தெருவுக்கு வண்ணம் பூசி படமெடுப்பதில் என்ன பெரிய ஆளுமை இருந்துவிடப்போகிறது? எந்திரனில் ரஜினி நடிப்பது எனக்கு வருத்தமாகவே உள்ளது. மிக சமீபத்தில் எதோ ஒரு விருது நிகழ்ச்சியில் ரஜினிக்கு 'Year's best entertainer award' வழங்கப்பட்டபோது, ரஜினியே, தான் ஷாரூக்கான் நடித்த 'Chak de India' திரைப்படம் போன்ற கதையுள்ள படங்களில் நடிக்க விரும்புவதாகவும், ஆனால் எவரும் அதைச் செய்ய தயாராக இல்லையென்றும், தன் வாழ்க்கை முழுதும் 'Best entertainer' ஆகவே முடிந்துவிடுமோ என்ற பயம் தனக்கு உள்ளதாகவும் மிகவும் வருத்தப்பட்டு பேசினார். ரஜினி என்ற, திரைப்படக் கல்லூரியில் இணைந்து படிக்கும் அளவுக்கு சினிமாவைக் காதலித்த அந்த நடிகனுக்குள் இருக்கும் சினிமா தாகத்தையும் ஏக்கத்தையும் உணர்த்தியது ரஜினியின் அந்தப் பேச்சு. 'Chak De India'திரைப்படத்தில் படத்தின் கதாநாயகனான, அந்த ஹாக்கி பயிற்சியாளர் வேடத்தில் ரஜினியை கற்பனை செய்து பாருங்கள். நினைக்கவே புல்லரிக்கிறது. பிய்த்து உதறியிருப்பார். ஆனால் இங்கு ரஜினியை வைத்து சிவாஜி எடுக்கத்தான் இயக்குனர்கள் உள்ளனர். 'Chak de india' சீண்டப்படுவதேயில்லை.


அவரைப் பலர் பழிப்பதற்கு, மிகவும் கேவலமான ஒரு திரையுலகமான தமிழ் திரையுலகில் அவர் சிக்கியிருப்பதும், சங்கர், கவுத,ம் போன்ற மகா மட்டமான இயக்குனர்கள் இங்கு மிகப்பெரும் ஆட்களாக இருப்பதும் தான் காரணம். மேலும் சினிமா என்ற பொழுதுபோக்கு விஷயத்தையும் அரசியலையும் இங்கு கிண்டி கிளறி நடிகர்களைக் கெடுக்கும் ஜால்ரா கூட்டமும், ஊடகங்களும் முக்கிய காரணம். சும்மா இருப்பவனிடம் போய் "அரசியலுக்கு வருவீர்களா? உங்கள் ரசிகர்கள் விரும்புகிறார்களே?" என ஏற்றிவிட்டு அதை தலைப்புச் செய்தியாய் போடுவதுதான் பல பத்திரிக்கைகளின் பிழைப்பே. அதனால்தான் நேற்று மழையில் இன்று முளைத்த காளான்களுக்குக் கூட அரசியல் ஆசை வருகிறது. ஆலிவுட்டில் ஒரு மிகப்புகழ் பெற்ற நடிகர் இருந்தால் அவர் பெயரைச் சொல்லிச் சொல்லியே பிழைப்பை ஓட்டும் வழக்கம் அறவே கிடையாது. இங்கு மட்டுமே படத்துக்கு படம் "தலைவா..தலைவா" என பிதற்றுவதும், வேறு நடிகரின் பெயரைச் சொல்லி கைத்தட்டு வாங்குவதும் நடக்கிறது. ரஜினியை வைத்து ஒரு நடிகர் வேட்டையாடுகிறார், இன்னொருவர் ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜீத்தை வைத்து பிழைப்பை ஓட்டுகிறார். ரஜினியை அப்படியே பின்பற்றி பலர் முளைப்பதும், அடுத்த ரஜினி தான் தான் என கிளப்பிவிடுவதும் நடக்கிறது. இவர்களுக்கும் ஆர்குட் போன்ற தளங்களில் குழுமங்கள் இருப்பது வேதனையான விஷயம். அஜீத், சூர்யா, விக்ரம், மாதவன் போன்ற நடிகர்கள் எக்காலத்திலும் தங்கள் படங்களில் பிற நடிகர்களின் பெயரை பயன்படுத்தியதில்லை(சூர்யா-மாயாவி தவிர்த்து. அதில் கூட அவர் சக வயது நடிகரான அஜீத்தின் ரசிகராகத்தான் நடித்தாரேயொழிய, ரஜினியின் ரசிகராக அல்ல).

ரஜினியின், தரமான அதே நேரத்தில் அவருக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை தமிழ் திரையுலகம் சாகடிக்காமல் இருந்தால் நலம். சங்கர் போன்ற இயக்குனர்கள் தயவு செய்து அவரைவிட்டு விலகினால் நமக்கு தளபதி போல் பல படங்கள் கிடைக்கும். ரஜினிகாந்தும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்பதே என்னைப் போன்ற பல ரசிகர்களின் கோரிக்கை, கனவு, எல்லாமே. எதிர்வினைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.


23 comments:

elkay said...

ரஜினி, Clint Eastwood போன்றோர் மிகப்பெரும் நடிகர்கள் ஆகாமல் இருந்திருந்தால் கூட, அவர்களின் தனிப்பட்ட வட்டாரத்தில் அவர்கள் ஒரு Heroக்களாகவே போற்றப்பட்டிருப்பர். அவர்களின் தோற்றம் அப்படி. அதை யாராலும் மறுக்க முடியாது.//

yeah u r right...

திவ்யா.என் said...

அருமையாக எழுதியுள்ளீர்கள். கலக்குங்க. இந்தப்பதிவு மற்றுமல்ல மற்ற பதிவுகளும் மிக அருமை. நக்கல் பகுதியில் அதிகம் எதிர்பார்க்கிறேன். பயங்கர நகைச்சுவை. வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. வாழ்துக்கள்.

satya said...

good one

Anonymous said...

machi,,, rajini pathi etho onnu ooruhittae irundhuchu...
atha weightaa explore pannitta...pattya kelappu

tamizhanban said...

ரஜினி ரசிகன் என்பதை வெளியே சொன்னால் அவமானம் என்ற அளவில் இன்றைய நிலை இருக்கிறது. ஹாக்கி கோச்சாக நடித்து இருந்தால் கண்டிப்பாக ரஜினி பிரமாதப்படுத்தி இருப்பார். ஒரு கலைஞனாக தனித்தன்மை வாய்ந்த ரஜினி அரசியல் எதிர்பார்ப்புகளாலும் அதிகப்படியான ஜால்ரா கூட்டத்தினாலும் அவரது திறமை பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

யார் போற்றினாலும் தூற்றினாலும் ரஜினி என்ற நடிகன் கடந்து வந்த பாதை நாளைய சமூகத்தால் போற்றுதலுக்கு உள்ளாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ் திரைத்துறை நல்லவழியில் நடைபோட இயல்பான பாத்திரங்களில் தனது திறமையை ரஜினி வெளிப்படுத்திட வேண்டும்.

கிரி said...

உங்கள் ஒரு சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், சிறப்பாகவே எழுதி இருக்கிறீர்கள் ரஜினியை பாராட்டியதால் அல்ல..பல உண்மையை கூறியதால்.

//ரஜினியை உள்ளுக்குள் பிடித்தாலும், படித்தவர்களும், உலக சினிமாக்களை அலசி ஆராய்ந்த மேதைகள் போல் நடிக்கும் மேதாவிகளின் கூட்டத்தால் கிண்டலடிக்கப்படுவோமோ எனப் பயந்து ரஜினியை பிடிக்காததுபோல வெளியில் காட்டிக்கொள்ளும் கூட்டத்தில் ஒருவனாகத்தான் மிகச் சமீபம் வரையில் இருந்தேன்//

இது 100 க்கு 1000 உண்மை, பலர் இப்படி தான் இருக்கிறார்கள்.

robo sathya said...

neenga sonna athanaiyum correct !! unga karutha nan othukuren. adarkaga shankar enbavarai mattamana director endru kooruvadhai othukolla mudiyadhu !!
enna dan performance scope ulla padathil rajini nadithalum sivaji pondra oriru padangal vcandhal daan kadaikodi rasigargaluku sandhosham !!
shankar kum hero vai performance pannavida teriyum. take for example INDIAN. adhil kamal'ai weightana kadhapaathirathil nadika veikavillaya ? ungal edhirparpu nichayam endhiran il niraiverum !! padathil vazhakamana rajni pada style'um irukum, thalapathy pola performance'um irukum. double role kanna......

வெத்து வேட்டு said...

why didn't Rajni produce a film like Chak De...
can't he find a director?
in my opinion Rajni also didn't want to take risk in acting "good" film..

by the way I am a rajni fan too..i only watch Rajni movie..just for rajni.

அமுதன் said...

இப்போதெல்லாம், ரஜினியை பிடிப்பவர்கள் தாராளமாக ரஜினி Fan என்று ஒத்துக்கொள்கிறார்கள். இன்னும் சொல்லபோனால், பிரபலங்கள் பலர் தங்களுக்கு ரஜினி பிடிக்கும் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். உதாரணம்.. விஸ்வநாதன் ஆனந்த் (செஸ்), பாலாஜி (cricket), ஆமிர் கான், அமிதாப்.

ஒரு சமயம், சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். அதற்கு ரஜினி வந்தார். அரங்கில் நல்ல கூட்டம். கூட்டத்திற்கு பின் வரிசை வரை திரைப்பட கலைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ரஜினி மேடையில் நுழையும் போது, முன் வரிசையில் எல்லோரும் நன்றாக பார்க்க வேண்டி எழுந்து நின்றார்கள். பின் வரிசையில் இருப்போர்க்கு தெரியவில்லை. வேடிக்கை என்னவென்றால், ரஜினியை நன்றாக பார்க்கவேண்டி, தங்கள் இருக்கையின் மேல் ஏறி நின்று பார்த்து ரசித்தது ஞாபகம் வருகிறது. அப்படி பார்த்தவர்கள் பலர் திரை கலைஞர்கள்.

இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு பின், ரஜினி ரசிகன் என்று சொன்னால் கௌரவம் என்ற நிலை வந்து விடும். பாருங்களேன்.

deesuresh said...

நீ சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை அசோக்.ரஜினியின் நடிப்பு ஒரு விதமான ரசிக்கும் அலட்சியமான நடிப்பு.

ஆர்ப்பாட்டமான நெற்றிக்கண் சக்க்ரவர்த்தி பாத்திரத்தில் மற்ற யாரையும் கற்பனை செய்யக் கூட என்னால் முடியாது. அதுவும் சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நெற்றிக்கண்ணின் ரீமேக்கில் டாக்டர் ராஜசேகர் நடித்ததைப் பார்த்துக் கண்ணில் தண்ணீரே வந்தது சிரித்தும், அழுதும்,.

16 வயதினிலே, முள்ளும் மலரும்,புவனா ஒரு கேள்விக் குறி, சதுரங்கம்,எங்கேயோ கேட்ட குரல்,அவர்கள்,

கொடி பறக்குது என்ற மட்டமான படத்தில், தாதா படைப்பு, சந்திரமுகியின் ராஜா வேடம், சிவாஜி ( கோவிச்சிக்காதே அசோக், மொட்டை வேடம்) என்று ரஜினி பரிமளித்த வேடங்கள் சில தான்.

இமேஜ் என்ற மாயவலையில் மாட்டிக் கொண்டு தன்னை இழந்த நடிகர் ரஜினி.

மற்றபடி அவரது என்னெத்த கன்னையா வசனமான " அரசியலுக்கு வரூஊஊஊஊஊஊம்,ஆனா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆது" எனக்கும் பிடித்தமில்லாத சங்கதியே

காத்தவராயன் said...

இளவரசன்,
Rajinifans.com மூலம் உங்கள் வலைப்பூவை அறிந்து கொண்டேன்.

நன்றாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் எழுதியதில் சில கருத்துக்கள் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக இயக்குனர் ஷங்கர் (சங்கர் என்று 100 படங்களை இயக்கிய பழம் பெரும் இயக்குனர் ஒருவர் உள்ளார்) குறித்து எழுதியுள்ளது. நீங்கள் எழுதியதிலிருந்து உங்களுக்கு மணிரத்தினம் ரொம்ப பிடிக்கும் எனத்தெரிகிறது அதற்காக ஷங்கரை இந்த அளவிற்கு மட்டம் தட்டியிருக்க வேண்டியதில்லை.

உங்களைப்போன்ற "A" செண்டர் ரசிகர்களுக்கு தளபதியை பிடிக்கலாம் ஆனால் எங்களைப்போன்ற "C" செண்டர் ரசிகர்களுக்கு தளபதியை விட சிவாஜியைத்தான் ரொம்ப பிடிக்கிறது. தளபதியின் சமூக அக்கறையை விட சிவாஜியின் சமூக அக்கறை மேல்.அதற்காக "C"செண்டர் ரசிகர்களின் ரசனையை குறைத்து மதிப்பிட வேண்டாம்.... "A" செண்டரில் ஒரு படம் ரசிக்கப்பட்டால் அது நல்ல படம் அதே படம் "C" செண்டரிலும் ரசிக்கப்பட்டால் மிக மிக நல்லபடம்.

தளபதியை 4தடவை பார்த்து சிவாஜியை 8தடவை பார்த்த
ரஜினி ரசிகன்
காத்தவராயன்

pakutharivu said...

இந்தக் கட்டுரையையும் படித்து விட்டு ரஜினி சிரித்துக் கொள்வார். இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்புதுன்னு...தளபதி மாதிரி பத்து படம் வேண்டாம் ஒரு படம் சொந்தமா எடுக்க கூடவா ரஜினியிடம் காசு இல்ல? அவர் எடுக்க மாட்டார். ஏனெனில் அவர் சுத்தமான வியாபாரி. தன் ரசிகர்களை வைத்து பணம் பண்ணும் வியாபாரி. அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் அவருக்காக எழுதப் பட்ட இந்த கட்டுரையைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

Latha said...

Super kathavarayan. I agree to your comment about thalaivar.

I'm also an "A" centre fan but I love sivaji, Padayappa ,... more than thalapathi, netrikan,...

Because it is a unique style of Rajni. No one can recreate it.

GERSHOM said...

rajini the Great!!!! he really has charisma ,which even attracted Japanies...

Veera said...

Absolutely

நாய் சேகர் said...

அருமையான பதிவு அசோக் , இருந்தாலும் மக கல்யாணத்துக்கு நம்மள கூப்பிட்டு ஒருவாய் சோரு போட்டிருக்கலாம் .

Rajesh Pillai said...

Just leave him as a actor. he is just a common man. no mesmerism.. nothing. Will you like Thiyagaraja bhagavathar, NSK, MR Radha now? they were real heros like Rajni on that period. So just enjoy cinema.. love all good movies.. and actors... Just remember one thing.. THEY WILL BE SELLING THEMSELFS until we are fools.

எப்பூடி.. said...

@ நாய் சேகர்

//அருமையான பதிவு அசோக் , இருந்தாலும் மக கல்யாணத்துக்கு நம்மள கூப்பிட்டு ஒருவாய் சோரு போட்டிருக்கலாம் .//

'சேகர்' உங்க பேருக்கு முன்னாடி உள்ளதைபோலவே சோத்துக்கு அலையிற ஆசாமியா நீங்க. எல்லா ரசிகர்களையும் அழைத்து எங்குவைத்து திருமணத்தை நட்டத்துவது? மெரினாவிலா? அப்படி செய்தால் அது கல்யாணமா? இல்லை கட்சிகூட்டமா?

எப்பூடி.. said...

@ pakutharivu

//இந்தக் கட்டுரையையும் படித்து விட்டு ரஜினி சிரித்துக் கொள்வார். ஏனெனில் அவர் சுத்தமான வியாபாரி. தன் ரசிகர்களை வைத்து பணம் பண்ணும் வியாபாரி. அதில் தவறொன்றும் இல்லை.//

வந்திட்டாரையா சாலமன் பாப்பையா எங்களுக்கு நல்லது கெட்டதை சொல்ல, எல்லா கலைஞர்களும் தர்மத்துக்கு நடிக்கிறாங்க ரஜினிமட்டும் வியாபாரத்துக்காக நடிக்கிறார் பாருங்க, நல்லா வாயில வருகிது. அண்ணாத்தை எங்களுக்கு ரஜினியை பற்றி தெரியும் நீங்க கிளாஸ் எடுக்க தேவையில்ல, முதல்ல அடுத்தவன முட்டாளா நினைச்சு இந்த அட்வயிஸ் பண்ணுற பிக்காலிதனமான வேலைய நிறுத்துங்க.

Vaanathin Keezhe... said...

//வந்திட்டாரையா சாலமன் பாப்பையா எங்களுக்கு நல்லது கெட்டதை சொல்ல, எல்லா கலைஞர்களும் தர்மத்துக்கு நடிக்கிறாங்க ரஜினிமட்டும் வியாபாரத்துக்காக நடிக்கிறார் பாருங்க, நல்லா வாயில வருகிது. அண்ணாத்தை எங்களுக்கு ரஜினியை பற்றி தெரியும் நீங்க கிளாஸ் எடுக்க தேவையில்ல, முதல்ல அடுத்தவன முட்டாளா நினைச்சு இந்த அட்வயிஸ் பண்ணுற பிக்காலிதனமான வேலைய நிறுத்துங்க...///

-ஹாஹாஹாஹா... சூப்பர்!!! :)

-வினோ

kumaresan said...

ரஜினி காந்த்தின் திறமை, ஆளுமை, மக்களைக் கவரும் ஆற்றல் போன்றவை குறித்து நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. எழுபதுகளில் அவர் அறிமுகமாகிபோது மாறுபட்ட கலைவெளிப்பாடுகளை எதிர்பார்தவர்கள் பலரும் அவரது ரசிகர்களாய் ஆனதுண்டு.
இன்று அவரை ஷங்கர்களின் பிடியில் சிக்கியிருப்பவராக மட்டும் பார்ப்பது சரியல்ல. ஷங்கர்களே கலாநிதிகளின் பிடியில்தானே...
ஆன்மீகம், அரசியல் குழப்பம் அத்தனையையும் மீறி இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரத்தின் தேவையாகிய மக்கள் உணர்வுகளைத் திசைதிருப்பும் கைங்கர்யத்தை அவர் விரும்பியே செய்கிறார். கோடிகள் குவிவது சும்மாவா?
-அ, குமரேசன்

Jayadev Das said...

//சங்கர் போன்ற இயக்குனர்கள் தயவு செய்து அவரைவிட்டு விலகினால் நமக்கு தளபதி போல் பல படங்கள் கிடைக்கும். //பாலசந்தருக்கு அப்புறம், ஒரு டைரக்டரைப் பார்த்து அவர் திருப்தி படும் படி நடித்துல்லேனா என்று நான் பயந்த ஒரே ஒருத்தர் ஷங்கர் என ரஜினி சொல்லியுள்ளார், மேலும் ஷங்கர் மீது எனக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது என்றும் சொல்லியுள்ளார், என் தங்கள் அந்த கருத்தோடு முரண்படுகிறீர்கள்?

Vijay said...

பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்பா....

படம் : வான்மதி,
நடிகர் : அஜீத்.
அப்பாடலில் ரஜினியை(போஸ்டரில் வணங்கிப் பாடியிருப்பார்)

அப்போது அஜீத் வளரும் நிலையில் இருந்த நடிகர் என்ற காரணம் ஏற்க முடியாது !

Related Posts Plugin for WordPress, Blogger...