Sunday, June 21, 2009

விஜய் அவார்ட்சு. வரிசைல வா!!


தமிழில் எடுத்த 'தமிழ்' படத்தைக்கூட 'தமிழில்' டப்பிங் செய்து போடும் விஜய் டிவியின் மற்றுமொரு உற்பத்திதான் விஜய் அவார்ட்ஸ்। இதில் பல காமெடிகள் உண்டு. நடிகர்களுக்கான விருதை எடுத்துக்கொண்டால் பிடித்த நடிகருக்கான விருது (favourite actor award), சிறந்த நடிகருக்கான விருது (best actor), பின் special actor award என மூன்று விருதுகள் உண்டு. இதுமாதிரிதான் மற்ற துறைகளுக்கும்.

ஒருநாளு, "மாப்ள favourite actor, best actor, special actor, இது மூணுக்கும் என்னடா வித்தியாசம்?"னு என் நண்பன் ஒருத்தன் குறுந்தகவல் அனுப்பி கேட்டான்। என்னடா இப்படி பொசுக்குனு தமிழ்நாட்டுல எவனும் கேக்காதத கேக்குறானே, நம்ம என்னனு கண்டுபுடிப்போம்னு விஜய் டிவியோட இணையதளத்தை துளாவுனேன்। என் மேலதிகாரிகிட்ட முறைப்பு வாங்குனதுதான் மிச்சம்। அவன் கேட்டதுக்கு பதில் கிடைக்கல। சில விருதுகளைத் தவிர மற்ற எல்லாமே நேயர்கள்ன்ற வேலையில்லாதவைய்ங்க அனுப்புற மூன்று ரூபாய் மதிப்புள்ள குறுந்தகவல்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்குறாய்ங்களாம்। ஒருவர், தனக்குப் பிடித்த நடிகர் ஜெயிப்பதற்காக எத்தனை குறுந்தகவல் வேண்டுமானாலும் அனுப்பலாமாம்। இன்னொரு விசயமும் தெரிந்தது। விஜய் அவார்ட்சில் ஏறக்குறைய எல்லாருமே விருது வாங்கிறாய்ங்க। சென்றமுறை அஜீத்துக்கு ஓட்டெடுப்பு நடத்தி 'favourite actor' விருதை வழங்கிய விஜய் டிவி, நடிகர்(??) விஜய்க்கு மட்டும் தானாகவே 'அடுத்த சூப்பர் ஸ்டார்' என்ற விருதை வழங்கி சந்தோசப்பட்டது குறிப்பிடத்தக்கது!! இந்த முறை அஜீத்துக்கும் விருது கிடையாது, விஜய்க்கும் கிடையாது। ஏனெனில் அவங்களுக்குதான் போன தடவை கொடுத்தாச்சே, அதுனால புதுசா யாருக்காவது கொடுப்போம்னு சூர்யாக்கு கொடுத்திருக்காய்ங்க। அடுத்தமுறை சூர்யா என்னதான் நல்லா நடிச்சாலும், அவருக்கு விருது கிடைக்காது। ஏன்னா எல்லாருக்கும் சமமாக வாய்ப்பு வழங்குவதில் விஜய் டிவியை எவனும் அசைக்க முடியாது।

இப்படியே இன்னும் ரெண்டு வருசம் போனால் எல்லா நடிகர்களின் வீட்டிலும் விஜய் அவார்ட்ஸ் இருக்கும்। இதுல நமக்கு பிரச்சினை இல்ல। சிரித்துவிட்டு போய்விடலாம்தான்। ஆனா இந்த ரசிக சிகாமணிகள் மாற்றி மாற்றி குறுந்தகவல் அனுப்புவது பாவமாக உள்ளது। அவர்களை வைத்து விஜய் டிவி காமெடி பண்ணுவதைக் கூட உணராமல், சளைக்காமல் அனுப்புறாய்ங்கப்பா!! இனியாவது உங்க தொலைபேசி பேலன்சை விரயமாக்காமல், girl frendsகளுடன் பேசி உபயோகமா செலவழிங்கப்பா!!

மொத்தத்துல கடைசி வரைக்கும் ரெண்டு பேருக்கு மட்டும் விஜய் அவார்டு கிடைக்கவே கிடைக்காது!! அது யாருன்னா, இத எழுதுன எனக்கும், இதப் படிக்கிற உங்களுக்கும்தான்!!! அனா அதக்கூட உறுதியா சொல்லமுடியாது!! பிடித்த எழுத்தாளர்னு எனக்கும், சிறந்த படிப்பாளர்னு உங்களுக்கும் ஒரு விருதக்கொடுத்து நம்மளையும் ஆஃப் பண்ணாலும் பண்ணிருவாய்ங்க!!

ஹி ஹி ஹி!!!

6 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

நண்பன் வீட்டிற்கு சென்ற போது பார்க்க வேண்டியதாய் போயிற்று. :(

ஒவர் பில்ட் அப், ஒவர் செண்டி, ஒவர் சீன்... முடியல

முத்துசிவா said...

மச்சி நீ சொல்றதெல்லாம் கரெக்ட் தான். ஆனா இத விட பெரிய கொடும future ல நடக்க வாய்ப்பிருக்கு. எல்லாத்தையும் விஜய் டிவி லருந்து காப்பி அடிக்கும் சன் டிவி, அவங்க விஜய் அவார்ட்ஸ் குடுக்குறத பாத்து சன் அவார்ட்ஸ் நு ஆரம்பிச்சாங்கன்னா நம்மோட நிலைமை?

பிடித்த நடிகருக்கான விருத (favorite actor award) ஜீவா வாங்குவாரு . சிறந்த நடிகருக்கான விருத கருணாஸ் வாங்குவாரு. சிறந்த திரைப்படத்துக்கான விருத "தெனாவெட்டு" கு குடுப்பாங்க. சிறந்த பொழுதுபோக்காளர் விருது நகுல் கு குடுப்பாங்க. இதையெல்லாம் நெனச்சாதான் எனக்கு இன்னும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

deesuresh said...

இந்த ஒரு விஷயம் மட்டுமில்ல, பல விஷயங்களில் விஜய் டிவி, அப்படிக்கா நம்ம இ.வா. ரசிகனுங்க பாக்கெட்ல கை விடுது எஸ்.எம்.எஸ்ன்ற பெயரில்.
விஜய் சூப்பர் சிங்கர், சூப்பர் சோடி, சூப்பர் பாட்டி, கெடுக்கப் போவது யாரு, அப்படி இப்படின்னு எஸ்.எம்.எஸ்க்கே ஒரு பட்டியலே வச்சுருக்கு.

இருந்தாலும் நம்ம சோடைபோவாம, அனுப்பறோம்ல,
அதுக்கு "விஜய் சிறந்த குறுந்தகவல் அனுப்பாளர்" அப்படின்னு ஒரு அவார்டு குடுத்தாலும் குடுப்பாய்ங்க..!!!

Murali said...

இவனுக இப்டி பண்றத பாத்து தாங்க முடியாம தான் free sms ah எல்லா கம்பெனி காரனும் கட் பண்ணிட்டான்னு நெனைகறேன்....நமக்கு எல்லாம் பிகர்கு msg பண்ணவே பேலன்ஸ் இல்ல .....வாழ்க நமது ரசிக சிகாமணிகள் ....

Shankar said...

This post is a good one. What I felt after seeing the program is, its an award given by Vijay TV to itself by fooling the cinema artists.

குறுக்காலபோவான் said...

ஹா! ஹா! கொஞ்சம் சிரிச்சுறன். பொறுங்க. ஹா! ஹா!
நானே எழுதணும்ன்னு நினச்சேன். நீங்க எழுதி கிழிச்சுடீங்க.
சூப்பர்

Related Posts Plugin for WordPress, Blogger...