Friday, June 19, 2009

இந்திய மண்ணின் தியாக தீபங்கள்.


இந்திய ராணுவத்தின் கிரிக்கெட் வீரர்கள் தோனி, யுவராஜ் சிங், ஆர்.பி.சிங் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக 20/20 போட்டியில் தங்கள் உடல்நிலையில் இருந்த கோளாறை, BCCIயுடன் சேர்ந்து, ஊடகங்களிடம் பொய் சொல்லி மறைத்து, நாட்டின் நன்மைக்காக அவர்கள் தென் ஆப்ரிக்கா சென்று விளையாடியதாகவும், அதனாலேயே இந்திய அணியால் வெல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அச்செய்தி சொல்கிறது.

இந்திய அணியின் தலைவர் தோனி 'twenty-twenty' போட்டிகளில் விளையாடி 'சிறந்த TEST MATCH வீரர்' என்ற விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துடனான முக்கியமான போட்டியில் இவர் ஜடேஜா என்ற திறமைமிகு வீரரை 'சரியான' நேரத்தில் களமிறக்கிய துணிச்சலையும், அறிவையும் பாராட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் இவருக்கு 'சிறந்த இங்கிலாந்து வீரர்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ள இந்த வேளையில், நமக்கு இந்த செய்தி அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டியுள்ளது. தோனியை ஒரே ஒருமுறை கூட்டத்தில் நின்று பார்த்த தோனியின் காதலி லட்சுமிராய் நமக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இந்திய அணியினரின் இத்தியாகம் கண்ணீரை வரவழைப்பதாக ராஜபக்சேவின் செயலாளரும், இந்திய கவுரவ பிரதமருமான மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார். இந்திய ரசிகர்கள் இனியாவது வீரர்களின் தியாகத்தை மதித்து நடப்பார்கள் என எதிர்பார்ப்போம். நன்றி, வணக்கம்.

1 comment:

deesuresh said...

இவிய்ங்க சாதா தீபங்கள் இல்லை. தியாக தீப்பந்தங்கள். தக்காளி, இவனுங்க அடுத்த கப்பை வாங்கினா, கள்ளத்தோணில இருந்து இவரை நல்ல டோனி ஆக்கிருவானுங்க...!! இல்லாட்டி ஃபோட்டோக்கு செருப்பு மாலை போட்டு சந்தோசப் படுவாய்ங்க..!! வேற ஒன்னும் நடக்காது..!! அவரு அடுத்த வருசம் 200 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் போட்டுட்டு சந்தோசமா இருப்பாரு

Related Posts Plugin for WordPress, Blogger...