Monday, June 15, 2009

விபச்சாரி பேசுகிறேன்..

வணக்கம்..
நான் விபச்சாரி பேசுகிறேன்..

அறுவெருப்பு வேண்டாம்
எவர்க்கும்..!
எவரும் என் தொழில் 'முதல்'லால்
பிறந்தவரே..!

அவசரத்தில் என்னிடம் வந்த
எத்தனையோ பேரில் சிலர்,
நானும் என் தொழிலும் இல்லையெனில்
எதோ ஒரு அப்பாவியை கற்பழித்திருப்பர்..!
என் சுய கற்பழிப்பின் மூலம்
எத்தனையோ கற்பழிப்புகள் நிர்மூலம்..!!

எத்தனையோ மனைவிகள்
வாங்க வேண்டிய அடியை
அவர்கள் கணவர்கள்
என் பின்புறத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்..!

என் நிர்வாணம் தான்
என் குடும்பத்திற்கு
ஆடை வார்க்கிறது..!

என் அவமானங்கள் மட்டுமே
சன்மானங்களாய் மாறியுள்ளது!!

ஒவ்வொரு முறை எனை
எவனோ தழுவும் போது,
அவன் தாயின் கற்பிலும்
ஒரு சூடு விழுகிறது..!

திருட்டுக் காமம்
சொர்க்கத்தின் கொள்ளைப்புறமல்ல...
நரகத்தின் முன் வாசல்..!!

பலமுறை நான்
உடல் விற்றிருக்கிறேன்..
ஒருமுறை கூட
உடல் கொடுத்ததில்லை..!

காமம் இல்லாமல்
காதல் மட்டுமல்ல,
காதல் இல்லாமல்
காமமும் வர முடியது,
அப்படி வருவது
வெறியும், விபச்சாரமும் தான்..!

கவர்ச்சி நடிகையைப் பார்க்க
வரிசையில் நின்றதுண்டா?
அது பொருட்காட்சி..!!

என்னை தெருவோரம்
பார்ப்பதுண்டா?
இது விற்பனை..!!

பொருட்காட்சிக்கும், விற்பனைக்கும்
என்ன வித்தியாசம்?

வணக்கம்..
நான் விபச்சாரி பேசுகிறேன்....

18 comments:

deesuresh said...

பொருட்காட்சியில் பொருட்களைப் பார்க்கலாம், வாங்கும் அவசியமில்லை ஆனால் விற்பனை செய்யப்பட்டால் வாங்கப் பட்டே ஆகவேண்டும். ஹிஹி

tamizhanban said...

நம் காதில் விழுந்து விடாமல் எச்சரிக்கையுடன் இருக்கும் அவலையின் குரல்!

கொஞ்சம் மனது வலிக்கிறது!

ELKAY said...

என் நிர்வாணம் தான்
என் குடும்பத்திற்கு
ஆடை வார்க்கிறது..!///
NITHARSANAMANA ULLAK KUMARAL..

என் அவமானங்கள் மட்டுமே
சன்மானங்களாய் மாறியுள்ளது!!///
SOLLIL VILAKKA THARA IYALATHA UNARVU..

ஒவ்வொரு முறை எனை
எவனோ தழுவும் போது,
அவன் தாயின் கற்பிலும்
ஒரு சூடு விழுகிறது..!
IPPADI PATTA UNARVAI VELI PADUTHA NITCHAYAM KAVINGARUKKU NIRAYA PAKKUVAM THERIKIRATHU...UNARNTHU EZHUTHI IRUKKIRAR..


பலமுறை நான்
உடல் விற்றிருக்கிறேன்..
ஒருமுறை கூட
உடல் கொடுத்ததில்லை..!
UNARVAI ROMBA AZHAMA UNARNTHU EZHUTHI IRUKKENGA ASHOK....

G888888888....

ashok85in2003 said...

உலகில் அனைவரும் ஒரு விதத்தில் விபச்சாரிகளே ......... பலர் அறிவை விற்கின்றனர் சிலர் உடலை விற்கின்றனர்.

Kingsly Raj D said...

விபச்சாரிக்கும் உணர்வுகள்,வலிகள்,காயங்கள் உள்ளது என்பதை மனிதத்துடன் மனிதனாய் உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறார் நண்பர்...

சாஷீ said...

ரொம்ப அருமை ,

nathan said...

samantha patavargal padithal santhosha paduvargal, avargalium manathara parkum oru kuttam vudu enru.

nangalum karpulvargale udalukala - ulatuku. (vibacharigalin manasatchi)

kutty said...

nalla solli irukkanga

Subash Arunachalam said...

பலமுறை நான்
உடல் விற்றிருக்கிறேன்..
ஒருமுறை கூட
உடல் கொடுத்ததில்லை..!

பயணமும் எண்ணங்களும் said...

Fantastic..!!

விஜேந்திரன் said...

என் நிர்வாணம் தான்
என் குடும்பத்திற்கு
ஆடை வார்க்கிறது..


----- அருமை ...

மதுரை பாண்டி said...

very nice....

adangapidari said...

ஆபாசம்.. அய்ய்யோ.. கலாச்சாரம் கெட்டு போயிருச்சு.. எல்லாரும் வாருங்கோ.. எல்லாரும் வாருங்கோ.. சீ...த்தூ.. மானம் கெட்டு பொச்சு.. சீ போச்சு..

ஜெட்லி சேகர் said...

@அடங்காபிடாரி
டேய்.. நீ யாருனு தெரியும்... போக்கிரி வடிவேலு கொண்டை மாதிரி உன்ன காட்டிக்கொடுத்துட்டே இருக்குடா உன் கமெண்ட்டு!

Anonymous said...

நல்லாருக்கு

மாணவன் said...

அவர்களின் உணர்வுகளை மிகவும் வேதனையோடு பதிவு செய்துள்ளீர்கள் அருமை...

எனக்குத்தெரிந்த சில அவர்களின் உணர்வுகள்:

//ஒரு விலைமாதுவின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்: இன்றுதான் இவள் தனியாக உறங்குகிறாள்//

//நாங்கள் நிர்வாணங்களை விற்பனை செய்கிறோம்
ஆடை வாங்குவதற்காக//

karthick said...

The oldest business in the world.

சமுத்ரா said...

உணர்வுகளை மிகவும் வேதனையோடு பதிவு செய்துள்ளீர்கள் அருமை...

Related Posts Plugin for WordPress, Blogger...