Friday, June 26, 2009

ரஜினி. ரஜினி மட்டுமே.


ரஜினி! ரஜினியைப் பார்த்து, சுருட்டைமுடி இருந்தாலும், ரஜினி போல முடிவெட்ட வேண்டும் என்ற ஆசையோடு, முடி வெட்டுபவரிடமும், அப்பாவிடமும் சண்டை போட்ட பலரில் நானும் ஒருவன். இது ஒருபுறமிருக்க, ரஜினியை உள்ளுக்குள் பிடித்தாலும், படித்தவர்களும், உலக சினிமாக்களை அலசி ஆராய்ந்த மேதைகள் போல் நடிக்கும் மேதாவிகளின் கூட்டத்தால் கிண்டலடிக்கப்படுவோமோ எனப் பயந்து ரஜினியை பிடிக்காததுபோல வெளியில் காட்டிக்கொள்ளும் கூட்டம் ஒன்று உள்ளது. மிகச் சமீபம் வரையில் அக்கூட்டத்தில் இருந்தேன். பின் உலக ரசிகர்களால் போற்றப்படும் Clint eastwoodயின் திரைப்படங்களை சளைக்காமல் பார்த்து ரசித்தபோது என் மனதில் அடிக்கடி ஒரு உருவம் வந்துபோனது. அது ரஜினிகாந்த். குறிப்பு:Clint Eastwoodன் இயக்கும் திறமையோடு ரஜினியை நான் ஒப்பிடவில்லை. நடிப்பிலும், தனித்தன்மையிலும் மட்டுமே ஒப்பிடுகிறேன்) Clint Eastwoodஐ ரஜினி பின்பற்றவில்லை. ஆனால் இருவரிடமும் ஒரே மாதிரியான தனித்தன்மை உண்டு. அதை வெளிக்கொணரும் நோக்கிலேயே இந்தக் கட்டுரை. ரஜினியின் அரசியல் வாழ்க்கையையோ, அவரது ஆன்மீக வாழ்க்கையையோ நியாயப்படுத்த, ஏன் நான் தொடவே போவதில்லை. அவரது திரையுல வாழ்க்கையை அலசவே இதை எழுதுகிறேன். இந்தக் கட்டுரை ரஜினி ரசிகர்களுக்காக அல்ல. ரஜினியை ஒரு கோமாளி என்றும், "பல நடிகர்கள் மிகவும் உழைத்து சம்பாரிக்கும் காசை, ஒன்றுமே செய்யாமல், உடல் அசையாமல் சம்பாரித்துவிட்டுப் போகிறார் ரஜினி", இதுபோன்ற எத்தனையோ வசனங்களை புழக்கத்தில் விடும் ரஜினி வெறுப்பாளர்களுக்கும், சினிமாவின் சராசரி ரசிகர்களுக்கும் தான். மிகவும் முக்கியமாக, ரஜினியின் அரசியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை, இதர இதர போன்ற விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இதைப்படியுங்கள். இது ரஜினிக்கே மிகவும் பிடித்த ரஜினி என்ற நடிகரைப் பற்றியது. நடிகரை மட்டுமே பற்றியது!!!


ஆசியாவில், அகில உலக நட்சத்திரம் 'ஜேக்கி சேனு'க்கு (Jackie Chan) அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குகிறார் ரஜினி. தென் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி எப்படி இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? வழக்கமாய் ரஜினிக்கு திரையுலகில் ஜால்ரா தட்டுவோரும், அவரின் அதிதீவிர ரசிகர்களும் சொல்லும் "அவரு ரொம்ப சிம்பிள். வெரி டெடிகேட்டட் ஆர்டிஸ்ட், இதர..இதர" விஷயங்களை நான் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவை உண்மையான காரணம் அது அல்ல. அவரை மக்களுக்கு பிடித்திருப்பதற்கு காரணம் அவருக்கு இயற்கையிலேயே, பிறப்பிலேயே அமைந்திருக்கும் தனித்தன்மையும், ஆங்கிலத்தில் charm, charisma எனப்படும் பார்ப்பவர்களை ஈர்க்கும் தோற்றமும் தான். என்னதான் உயிரைக் கொடுத்து வெறியாய் நடித்தாலும் இதெல்லாம் வராது, எனெனில் இது இயற்கையாய் அமையப் பெறுவது. இந்த விஷயங்கள் அமையப் பெற்ற நடிகர்கள் வெகுசிலர் தான். Clint Eastwood, Charlie chaplin, Al pacino மற்றும் இளைய தலைமுறையில் Johnny Depp.இந்தியாவில், ஏன் ஆசியாவில் ரஜினி மட்டுமே. Clint Eastwood தனது சமீபத்திய மிகப்பெரிய வெற்றிப் படம் 'Gran Torino'வரை தனது தோற்றத்தை மாற்றியோ, குரலை மாற்றியோ நடித்ததில்லை. தனது எழுபத்தெட்டாவது வயதில் கூட மிகப்பெரிய துப்பாக்கியைத் தூக்கி, வில்லன்களிடம், "I blow a hole in your face and then I go in the house... and I sleep like a baby. You can count on that." என பஞ்ச் டயலாக் பேசினாலும் திரையரங்கில் விசில் பறக்கிறது. இந்த ஸ்டைல் உள்ள நடிகர்களை Hollywoodயிலும் Mass Heroக்களாகவே பயன்படுத்துகிறார்கள். இந்த நடிகர்களையெல்லாம் அழுகவிட்டும், வில்லனிடம் கெஞ்சவிட்டும் படமெடுத்தால் அங்கே யாரும் பார்க்க மாட்டார்கள். clint Eastwood காவல்துறை அதிகாரியாக நமது கொடி பறக்குது பாணியில் அதிரடியாக நடித்த திரைப்பட வரிசைதான் 'Dirty Harry'. இதில் அவர் சொல்லும் "'Go on. Make my day" போன்ற வசனங்களை, மிகப்பெரும் நடிகர் De Niro சொல்வதுபோல் கற்பனை செய்தால் கூட மகாகேவலமாக இருக்கும். அதேபோல் ரஜினியின் "ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி" போன்ற வசனங்களை இந்தியாவில் வேறு யார் சொன்னாலும் பொருத்தமில்லாமல் தான் இருக்கும். ஆனால் ரஜினி அதை சொல்லும்போது அவரைப் பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடிக்கும். Al Pacinoவின் Scarface வசனமான "You wanna fuck with me? ok. Fuck. But remember, you're fucking with the best" என்ற வசனமும் இதே ரகம் தான். இப்படி பல ஆயிரம் puch dialogue எனப்படும் அதிரடியான வசனங்கள் Hollywoodயிலும் உண்டு. அடுக்கிக்கொண்டே போகலாம்.

ரஜினி, Clint Eastwood போன்றோர் மிகப்பெரும் நடிகர்கள் ஆகாமல் இருந்திருந்தால் கூட, அவர்களின் தனிப்பட்ட வட்டாரத்தில் அவர்கள் ஒரு Heroக்களாகவே போற்றப்பட்டிருப்பர். அவர்களின் தோற்றம், பேச்சு, செயல் அப்படி. அதை யாராலும் மறுக்க முடியாது.

ரஜினியின் மிகச்சில படங்களே அவரின் உண்மையான திறமையை வெளிக்கொண்டு வந்த படங்கள். எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், தளபதி, மூன்று முடிச்சு, தில்லு முள்ளு, இன்னும் சில மட்டுமே. தளபதியில் மம்முட்டி சாகும் தருவாயில் எதிரிகளால் அடித்துப் போடப்படும் போது மருத்துவமனையில் அவரிடம் ரஜினி அரற்றும் காட்சி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தளபதி போல சாரம் உள்ள, அதே நேரத்தில் ரஜினியை சரியாக உபயோகப்படுத்தும் வகையில் இன்னும் ஒரு பத்து படங்கள் வந்திருந்தால் கூட ரஜினியை விமர்சிக்கும் விமர்சகர்கள் வாயை, மூடியிருப்பர். நிறைய படங்கள் ரஜினியை exploit செய்து எடுக்கப்பட்ட படங்கள். சமீபத்தில் வந்த சிவாஜி, ரஜினையை மட்டுமே முதலாய் வைத்து எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். பலமான கதையே இல்லாமல், வெறும் ரஜினியால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்தமுடிகிறதெனில். சரியான கதையோடு ரஜினியை சரியாய் பயன்படுத்தி எடுக்கப்படும் படம் எப்படிப்பட்ட வெற்றிபெறும் என என்னால் நினைக்கவே முடியாது.
சங்கர் போன்ற இயக்குனருக்கு ரஜினி போன்ற ஒரு மாபெரும் நடிகர் தேவைப்படலாம். ஆனால் எந்த விதத்திலும் ரஜினிக்கு சங்கர் தேவையில்லை என்பது என் கருத்து. வெறும் தயாரிப்பாளரின் காசில் தெருவுக்கு வண்ணம் பூசி படமெடுப்பதில் என்ன பெரிய ஆளுமை இருந்துவிடப்போகிறது? எந்திரனில் ரஜினி நடிப்பது எனக்கு வருத்தமாகவே உள்ளது. மிக சமீபத்தில் எதோ ஒரு விருது நிகழ்ச்சியில் ரஜினிக்கு 'Year's best entertainer award' வழங்கப்பட்டபோது, ரஜினியே, தான் ஷாரூக்கான் நடித்த 'Chak de India' திரைப்படம் போன்ற கதையுள்ள படங்களில் நடிக்க விரும்புவதாகவும், ஆனால் எவரும் அதைச் செய்ய தயாராக இல்லையென்றும், தன் வாழ்க்கை முழுதும் 'Best entertainer' ஆகவே முடிந்துவிடுமோ என்ற பயம் தனக்கு உள்ளதாகவும் மிகவும் வருத்தப்பட்டு பேசினார். ரஜினி என்ற, திரைப்படக் கல்லூரியில் இணைந்து படிக்கும் அளவுக்கு சினிமாவைக் காதலித்த அந்த நடிகனுக்குள் இருக்கும் சினிமா தாகத்தையும் ஏக்கத்தையும் உணர்த்தியது ரஜினியின் அந்தப் பேச்சு. 'Chak De India'திரைப்படத்தில் படத்தின் கதாநாயகனான, அந்த ஹாக்கி பயிற்சியாளர் வேடத்தில் ரஜினியை கற்பனை செய்து பாருங்கள். நினைக்கவே புல்லரிக்கிறது. பிய்த்து உதறியிருப்பார். ஆனால் இங்கு ரஜினியை வைத்து சிவாஜி எடுக்கத்தான் இயக்குனர்கள் உள்ளனர். 'Chak de india' சீண்டப்படுவதேயில்லை.


அவரைப் பலர் பழிப்பதற்கு, மிகவும் கேவலமான ஒரு திரையுலகமான தமிழ் திரையுலகில் அவர் சிக்கியிருப்பதும், சங்கர், கவுத,ம் போன்ற மகா மட்டமான இயக்குனர்கள் இங்கு மிகப்பெரும் ஆட்களாக இருப்பதும் தான் காரணம். மேலும் சினிமா என்ற பொழுதுபோக்கு விஷயத்தையும் அரசியலையும் இங்கு கிண்டி கிளறி நடிகர்களைக் கெடுக்கும் ஜால்ரா கூட்டமும், ஊடகங்களும் முக்கிய காரணம். சும்மா இருப்பவனிடம் போய் "அரசியலுக்கு வருவீர்களா? உங்கள் ரசிகர்கள் விரும்புகிறார்களே?" என ஏற்றிவிட்டு அதை தலைப்புச் செய்தியாய் போடுவதுதான் பல பத்திரிக்கைகளின் பிழைப்பே. அதனால்தான் நேற்று மழையில் இன்று முளைத்த காளான்களுக்குக் கூட அரசியல் ஆசை வருகிறது. ஆலிவுட்டில் ஒரு மிகப்புகழ் பெற்ற நடிகர் இருந்தால் அவர் பெயரைச் சொல்லிச் சொல்லியே பிழைப்பை ஓட்டும் வழக்கம் அறவே கிடையாது. இங்கு மட்டுமே படத்துக்கு படம் "தலைவா..தலைவா" என பிதற்றுவதும், வேறு நடிகரின் பெயரைச் சொல்லி கைத்தட்டு வாங்குவதும் நடக்கிறது. ரஜினியை வைத்து ஒரு நடிகர் வேட்டையாடுகிறார், இன்னொருவர் ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜீத்தை வைத்து பிழைப்பை ஓட்டுகிறார். ரஜினியை அப்படியே பின்பற்றி பலர் முளைப்பதும், அடுத்த ரஜினி தான் தான் என கிளப்பிவிடுவதும் நடக்கிறது. இவர்களுக்கும் ஆர்குட் போன்ற தளங்களில் குழுமங்கள் இருப்பது வேதனையான விஷயம். அஜீத், சூர்யா, விக்ரம், மாதவன் போன்ற நடிகர்கள் எக்காலத்திலும் தங்கள் படங்களில் பிற நடிகர்களின் பெயரை பயன்படுத்தியதில்லை(சூர்யா-மாயாவி தவிர்த்து. அதில் கூட அவர் சக வயது நடிகரான அஜீத்தின் ரசிகராகத்தான் நடித்தாரேயொழிய, ரஜினியின் ரசிகராக அல்ல).

ரஜினியின், தரமான அதே நேரத்தில் அவருக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை தமிழ் திரையுலகம் சாகடிக்காமல் இருந்தால் நலம். சங்கர் போன்ற இயக்குனர்கள் தயவு செய்து அவரைவிட்டு விலகினால் நமக்கு தளபதி போல் பல படங்கள் கிடைக்கும். ரஜினிகாந்தும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்பதே என்னைப் போன்ற பல ரசிகர்களின் கோரிக்கை, கனவு, எல்லாமே. எதிர்வினைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.


Sunday, June 21, 2009

விஜய் அவார்ட்சு. வரிசைல வா!!


தமிழில் எடுத்த 'தமிழ்' படத்தைக்கூட 'தமிழில்' டப்பிங் செய்து போடும் விஜய் டிவியின் மற்றுமொரு உற்பத்திதான் விஜய் அவார்ட்ஸ்। இதில் பல காமெடிகள் உண்டு. நடிகர்களுக்கான விருதை எடுத்துக்கொண்டால் பிடித்த நடிகருக்கான விருது (favourite actor award), சிறந்த நடிகருக்கான விருது (best actor), பின் special actor award என மூன்று விருதுகள் உண்டு. இதுமாதிரிதான் மற்ற துறைகளுக்கும்.

ஒருநாளு, "மாப்ள favourite actor, best actor, special actor, இது மூணுக்கும் என்னடா வித்தியாசம்?"னு என் நண்பன் ஒருத்தன் குறுந்தகவல் அனுப்பி கேட்டான்। என்னடா இப்படி பொசுக்குனு தமிழ்நாட்டுல எவனும் கேக்காதத கேக்குறானே, நம்ம என்னனு கண்டுபுடிப்போம்னு விஜய் டிவியோட இணையதளத்தை துளாவுனேன்। என் மேலதிகாரிகிட்ட முறைப்பு வாங்குனதுதான் மிச்சம்। அவன் கேட்டதுக்கு பதில் கிடைக்கல। சில விருதுகளைத் தவிர மற்ற எல்லாமே நேயர்கள்ன்ற வேலையில்லாதவைய்ங்க அனுப்புற மூன்று ரூபாய் மதிப்புள்ள குறுந்தகவல்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்குறாய்ங்களாம்। ஒருவர், தனக்குப் பிடித்த நடிகர் ஜெயிப்பதற்காக எத்தனை குறுந்தகவல் வேண்டுமானாலும் அனுப்பலாமாம்। இன்னொரு விசயமும் தெரிந்தது। விஜய் அவார்ட்சில் ஏறக்குறைய எல்லாருமே விருது வாங்கிறாய்ங்க। சென்றமுறை அஜீத்துக்கு ஓட்டெடுப்பு நடத்தி 'favourite actor' விருதை வழங்கிய விஜய் டிவி, நடிகர்(??) விஜய்க்கு மட்டும் தானாகவே 'அடுத்த சூப்பர் ஸ்டார்' என்ற விருதை வழங்கி சந்தோசப்பட்டது குறிப்பிடத்தக்கது!! இந்த முறை அஜீத்துக்கும் விருது கிடையாது, விஜய்க்கும் கிடையாது। ஏனெனில் அவங்களுக்குதான் போன தடவை கொடுத்தாச்சே, அதுனால புதுசா யாருக்காவது கொடுப்போம்னு சூர்யாக்கு கொடுத்திருக்காய்ங்க। அடுத்தமுறை சூர்யா என்னதான் நல்லா நடிச்சாலும், அவருக்கு விருது கிடைக்காது। ஏன்னா எல்லாருக்கும் சமமாக வாய்ப்பு வழங்குவதில் விஜய் டிவியை எவனும் அசைக்க முடியாது।

இப்படியே இன்னும் ரெண்டு வருசம் போனால் எல்லா நடிகர்களின் வீட்டிலும் விஜய் அவார்ட்ஸ் இருக்கும்। இதுல நமக்கு பிரச்சினை இல்ல। சிரித்துவிட்டு போய்விடலாம்தான்। ஆனா இந்த ரசிக சிகாமணிகள் மாற்றி மாற்றி குறுந்தகவல் அனுப்புவது பாவமாக உள்ளது। அவர்களை வைத்து விஜய் டிவி காமெடி பண்ணுவதைக் கூட உணராமல், சளைக்காமல் அனுப்புறாய்ங்கப்பா!! இனியாவது உங்க தொலைபேசி பேலன்சை விரயமாக்காமல், girl frendsகளுடன் பேசி உபயோகமா செலவழிங்கப்பா!!

மொத்தத்துல கடைசி வரைக்கும் ரெண்டு பேருக்கு மட்டும் விஜய் அவார்டு கிடைக்கவே கிடைக்காது!! அது யாருன்னா, இத எழுதுன எனக்கும், இதப் படிக்கிற உங்களுக்கும்தான்!!! அனா அதக்கூட உறுதியா சொல்லமுடியாது!! பிடித்த எழுத்தாளர்னு எனக்கும், சிறந்த படிப்பாளர்னு உங்களுக்கும் ஒரு விருதக்கொடுத்து நம்மளையும் ஆஃப் பண்ணாலும் பண்ணிருவாய்ங்க!!

ஹி ஹி ஹி!!!

Friday, June 19, 2009

இந்திய மண்ணின் தியாக தீபங்கள்.


இந்திய ராணுவத்தின் கிரிக்கெட் வீரர்கள் தோனி, யுவராஜ் சிங், ஆர்.பி.சிங் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக 20/20 போட்டியில் தங்கள் உடல்நிலையில் இருந்த கோளாறை, BCCIயுடன் சேர்ந்து, ஊடகங்களிடம் பொய் சொல்லி மறைத்து, நாட்டின் நன்மைக்காக அவர்கள் தென் ஆப்ரிக்கா சென்று விளையாடியதாகவும், அதனாலேயே இந்திய அணியால் வெல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அச்செய்தி சொல்கிறது.

இந்திய அணியின் தலைவர் தோனி 'twenty-twenty' போட்டிகளில் விளையாடி 'சிறந்த TEST MATCH வீரர்' என்ற விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துடனான முக்கியமான போட்டியில் இவர் ஜடேஜா என்ற திறமைமிகு வீரரை 'சரியான' நேரத்தில் களமிறக்கிய துணிச்சலையும், அறிவையும் பாராட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் இவருக்கு 'சிறந்த இங்கிலாந்து வீரர்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ள இந்த வேளையில், நமக்கு இந்த செய்தி அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டியுள்ளது. தோனியை ஒரே ஒருமுறை கூட்டத்தில் நின்று பார்த்த தோனியின் காதலி லட்சுமிராய் நமக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இந்திய அணியினரின் இத்தியாகம் கண்ணீரை வரவழைப்பதாக ராஜபக்சேவின் செயலாளரும், இந்திய கவுரவ பிரதமருமான மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார். இந்திய ரசிகர்கள் இனியாவது வீரர்களின் தியாகத்தை மதித்து நடப்பார்கள் என எதிர்பார்ப்போம். நன்றி, வணக்கம்.

Monday, June 15, 2009

உனக்காக நானும், காதலும்..


*நாம் சந்திக்கப் போவதாய்
முடிவு செய்யும் இடத்துக்கு
நாம் வருகிறோமோ இல்லையோ...
சரியான நேரத்திற்கு
காதல் வந்துவிடுகிறது..!!

*ஐந்து மணிக்கு
நீ வருவதாய்ச் சொன்னால்,
ஐந்து மணிக்காக நானும்,
உனக்காக ஐந்து மணியும்
காத்திருக்கிறோம்...!

*உன்னை அடிக்கடி
வெளியே அழைத்துச் செல்வதெல்லாம்
நீ கிளம்பு அழகை ரசிப்பதற்காகத்தான்..
மனைவி கிளம்பும்போது
அவசரப்படுத்தும் கணவர்கள்
மடையர்கள்..!!

*நீ சாமி கும்பிடும்
அழகைப் பார்க்கையில்,
நாத்திகனாய் இருந்தாலும்
'சாமி இருந்துவிட்டுப் போகட்டுமே'
எனத் தோன்றுகிறது!!

*உன் வயதை மட்டும்
ஆண்டுகளில் அல்ல,
'ரிக்டரிலேயே' பதிவு
செய்கிறார்கள்!!

விபச்சாரி பேசுகிறேன்..

வணக்கம்..
நான் விபச்சாரி பேசுகிறேன்..

அறுவெருப்பு வேண்டாம்
எவர்க்கும்..!
எவரும் என் தொழில் 'முதல்'லால்
பிறந்தவரே..!

அவசரத்தில் என்னிடம் வந்த
எத்தனையோ பேரில் சிலர்,
நானும் என் தொழிலும் இல்லையெனில்
எதோ ஒரு அப்பாவியை கற்பழித்திருப்பர்..!
என் சுய கற்பழிப்பின் மூலம்
எத்தனையோ கற்பழிப்புகள் நிர்மூலம்..!!

எத்தனையோ மனைவிகள்
வாங்க வேண்டிய அடியை
அவர்கள் கணவர்கள்
என் பின்புறத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்..!

என் நிர்வாணம் தான்
என் குடும்பத்திற்கு
ஆடை வார்க்கிறது..!

என் அவமானங்கள் மட்டுமே
சன்மானங்களாய் மாறியுள்ளது!!

ஒவ்வொரு முறை எனை
எவனோ தழுவும் போது,
அவன் தாயின் கற்பிலும்
ஒரு சூடு விழுகிறது..!

திருட்டுக் காமம்
சொர்க்கத்தின் கொள்ளைப்புறமல்ல...
நரகத்தின் முன் வாசல்..!!

பலமுறை நான்
உடல் விற்றிருக்கிறேன்..
ஒருமுறை கூட
உடல் கொடுத்ததில்லை..!

காமம் இல்லாமல்
காதல் மட்டுமல்ல,
காதல் இல்லாமல்
காமமும் வர முடியது,
அப்படி வருவது
வெறியும், விபச்சாரமும் தான்..!

கவர்ச்சி நடிகையைப் பார்க்க
வரிசையில் நின்றதுண்டா?
அது பொருட்காட்சி..!!

என்னை தெருவோரம்
பார்ப்பதுண்டா?
இது விற்பனை..!!

பொருட்காட்சிக்கும், விற்பனைக்கும்
என்ன வித்தியாசம்?

வணக்கம்..
நான் விபச்சாரி பேசுகிறேன்....

Tuesday, June 2, 2009

Tamil New Year. The contraversy ends here.


When should you,me and us celebrate Tamil New Year? Or when must you, me or us wish a tamil for a tamil new year? January 14th (Tamil month 'thai' 1st) or April 14th (Tamil month Chithirai 1st)? Here is the answer for both when and why? Before seeing this, we gotta peep briefly into the history, through some religious literature.

According to the 60 years cyclic calendar, which says chithirai 1st is the start of a new year, of Salivaahana, an aryan who ruled in the north of India and obviously not a tamil, the cycle starts with 'BARAVA' as the first year and ends with 'ATCHAYA' as the last year. Then, the cycle rotates again. This calendar, was installed in north india by salivahana in the year 78 A.D. Not a single year off the 60 different years in this salivahana's cycle has a TAMIL NAME. NOTHING IS TAMIL. Then how come these years are tamil years? And how come a tamil year would start on chithirai 1st or April 14th according to salivahana's calendar?

It is very usual for a race to spread its religion, culture, religious rites, stories or puranas and in this case it was everything along with the salivahana's calendar . After the aryan invasion into both the cultural and dynastic arenas of south india, the calendar they invented came into existense overthrowing the previously used Tamil Calendar about which we are going to see. Before that its very much essential to see the story behind Salivahana's calendar. As stated in an ancient, religious book Abithana Chinthamani (page 1392), Once Naratha went to Lord krishna, who was involved with his 60000 women, asked "Lord. Why wouldnt you give me a woman while you've got 60000 women for yourself?" The Lord answered "Dear Naratha. Go to those 60000 women and pick one who doesnt love me." Naratha went , but he couldnt find even a single woman who doesnt love Krishna. So he came back and told krishna "Lord am amazed to see the love that women have for you. Now i wish to be your woman and experience it." Krishna accepted his proposal and asked him to bath in Yamuna, after which Naratha turned into a beautiful woman. Then they both lived together for 60 years and had 60 sons. ROP 1 per year i.e Rate of Reproduction is 1 child per year. These 60 sons are the 60 years in salivahana's cyclic calendar of 60 years!!'..
It was very romanatic!! Ain't it? So this is the story behind salivahana's calendar.

Now lets see how the very ancient Tamil calendar was formed. Tamils, as stated by western reasearch scholar Slater, had their own unique way of astronomical science. Based on this they had their own calendar contingent upon the monthly climatic conditions.

The six climatic conditions and the respective months are as follows,

1)'Ilavenil' (Pre-Sun)- From Thai to Maasi

2)'Mudhuvenil'(Summer)- From Panguni-chithirai


3)'Kaar'(Rainy Season)- From Vaigaasi to Aani.

4)'Kudhir'(Autumn)- From Aadi to Aavani.


5)'Munpani'(Pre-Winter)- From Purattasi to Aipasi.


6) 'Pinpani'(Winter)- From Kaarthigai to Maargazhi.

If we take into acount, the different Races that exist in the world, they all celebrate the Pre-Summer season as their new year, since it is when the agricultural yieldings cherish. But why did tamils changed in it? It happened just in the middle when the aryans invaded. Note: The aryans never indulged in Agriculture. Their proffession was cattle rearing. So obviously there was no need for them to celebrate agriculture!

Even the japanese celebrate new year and a festival like our pongal for their agricultural yieldings in the month of january. Theri tradition of worshipping nature coincides with that of tamils. Not only japanese, but every race that has a pre-ancient civilisation does it.

Its our duty to roll things back and save our traditional, SCEINTIFIC calendar that does not depend on any obscene or off the record stories as that of the Aryans. So lets celebrate Tamil New Year on every Thai 1st i.e january 15th. If you find anything contradictory to this post, feel free to discuss.

To read thsi post in Tamil click here 'தமிழ்ப் புத்தாண்டு எப்போது?'

Thanks: www.tamilnation.org
Related Posts Plugin for WordPress, Blogger...