Sunday, April 12, 2009

காதல் காத்திருக்கிறது


1)நம் முதலிரவுக்குக் காரணமாய்,
தாலி மட்டுமே இருக்கக்கூடாது
என்பதும்,
நான் உன்னைக் காதலித்ததற்கு
ஓர் காரணம்..

2)திருமணம் முன்பே கூட,
நீ, என்னை முத்தமிட அனுமதித்திருப்பாய்
என்பது எனக்குத் தெரியும்..
அதேபோல்,
நீ முத்தமிட அனுமதித்தாலும்,
நான் முத்தமிடமாட்டேன் என
நீ நம்பியதும் எனக்குத் தெரியும்..
அதனாலேயே நான் முத்தமிடவில்லையென்பது
உனக்குத் தெரியுமா???

3)உன்னைக் காதலிப்பது
உனக்காக மட்டுமல்ல..
உன்னைப் போலவே
ஒரு மகளும் வேண்டும்
என்பதற்காகத்தான்...

4)எதோ ஒரு எண்ணிலிருந்து
நீ 'வெற்று குருந்தகவல்'
அனுப்பினால் கூட,
அனுப்பியது நீதான்
என கண்டுபிடிக்கும் சக்தியை
காதல் தந்திருக்கிறது!!

5)சென்னையில் இருக்கும் நீ
மதுரையில் இருக்கும் என்னிடம்,
சென்னையில் தொலைந்த
உன் கைக்கடிகாரத்தைக்
கண்டுபிடித்துத் தரும்படி அழுதாயே,
இதைவிட யார் காதலை
அழகாய்ச் சொல்ல முடியும்!!??

6)நதியில் குளித்து
தன்னை சுத்தமாக்கிக்
கொள்ளும் பெண்ணில்லை நீ...
நதியில் குளித்து
நதியை சுத்தமாக்கும்
பெண் நீ..!

7)கடவுள் இல்லை
என்பதற்கு
சரியான சாட்சி நம் காதல்..
இருந்திருந்தால்,
அவனை கும்பிடாத எனக்கு,
உன்னைப் போல் ஒருத்தியைக்
கொடுத்திருப்பானா??!!

8)நீ குழந்தை பெறும் முன்
நம் குழந்தையைப் பார்க்க
எனக்கு கோடி ஆசை எனினும்,
நீ குழந்தை பெற்ற பின்
உன்னை முதலில் பார்த்து
முத்தம் கொடுக்கவே
ஆசைப் படுகிறேன் நான்..

9)நீ தூங்கும் அழகை ரசித்து,
உனக்கு முத்தம் கொடுக்கலாம்
என நான் காத்திருக்கிறேன்..
நான் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டுத் தூங்கலாமென
நீ காத்திருக்கிறாய்..
நம் இருவருக்காகவும்
காதல் காத்திருக்கிறது..!!

10)நம் குழந்தைகளுக்கு
அப்பா நான்
அம்மா நீ..
நம் கவிதைகளுக்கு
அப்பா நீ
அம்மா நான்..!!

10 comments:

Vaish said...

Hai Ashok,
Everything is Superb...
I like 2,3,4,9 and 10 very much.
No words to express how I feel... Very nice lines...

haripriya said...

hi..
everything is very nice..
espcially those 2,6 n9 are great..
all the very best for ur love..

Nithi said...

ada ada its very niceeeeeeeee

Arul Kumar said...

All r very nice.

Anonymous said...

Ella Sinthanaium Bayangarama Iruku...Simply Super..........................

Kirubakaran said...

//திருமணம் முன்பே கூட,
நீ, என்னை முத்தமிட அனுமதித்திருப்பாய்
என்பது எனக்குத் தெரியும்..
அதேபோல்,
நீ முத்தமிட அனுமதித்தாலும்,
நான் முத்தமிடமாட்டேன் என
நீ நம்பியதும் எனக்குத் தெரியும்..
அதனாலேயே நான் முத்தமிடவில்லையென்பது
உனக்குத் தெரியுமா???//

sema lines Ashok..great..very nice feelings :)

Kirubakaran said...

sema Ashok..romba feel pannirukinga.. hmmm..very very nice.. :)

Om Santhosh said...

என்னால தாங்க முடியல !!! கவிதை மழலையில் நனைந்துவிட்டேன்

Nagasubramanian said...

//நீ தூங்கும் அழகை ரசித்து,
உனக்கு முத்தம் கொடுக்கலாம்
என நான் காத்திருக்கிறேன்..
நான் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டுத் தூங்கலாமென
நீ காத்திருக்கிறாய்..
நம் இருவருக்காகவும்
காதல் காத்திருக்கிறது..!!//

//நம் குழந்தைகளுக்கு
அப்பா நான்
அம்மா நீ..
நம் கவிதைகளுக்கு
அப்பா நீ
அம்மா நான்..!!//

ரொம்ப அழகா இருக்குங்க உங்க வரிகளும் , காதலும் !

//சென்னையில் இருக்கும் நீ
மதுரையில் இருக்கும் என்னிடம்,
சென்னையில் தொலைந்த
உன் கைக்கடிகாரத்தைக்
கண்டுபிடித்துத் தரும்படி அழுதாயே,
இதைவிட யார் காதலை
அழகாய்ச் சொல்ல முடியும்!!??//

அட போங்க பாஸு, நானும் மதுரை தான், என் ஆளும் சென்னை தான்! ஒரே பீலிங்க்சுங்க எனக்கும்!

சமுத்ரா said...

everything is nice..

Related Posts Plugin for WordPress, Blogger...