Saturday, February 28, 2009

தயிர் வடைனா என்ன?



ஞாயிற்றுகிழமை இரவு. வழக்கமா போற உணவு விடுதிக்கு போகல இன்னிக்கு. சத்யா, அருண், நான் மூணு பேரும் வேற இடத்துக்கு போனோம். வாத்து பின்னாடி குட்டி வாத்து நீந்துற மாதிரி எங்க பின்னாடி, எங்க போனாலும் எங்களுக்குனு எதாவது நீந்தும். அப்படி அன்னைக்கு நீந்துனது...சீ... வம்பிலுத்தது ஒரு உணவுவிடுதி சர்வர். எங்ககிட்ட ஆர்டர் எடுக்குறப்ப சம்பந்தமேயில்லாம, தேவையில்லாம, காரணமேயில்லாம சிரிச்சுட்டே இருந்தான். என்னடா இது, இவன் நக்கல் பண்றானா, இல்ல இவன் கேரக்டரே இப்படியானு எங்களுக்கு ஒரு டவுட்டு. நாங்க மூணு பேரும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டு அந்த சர்வர பார்த்தோம்.... அப்பயும் அவன் சிரிச்சிட்டே தான் இருந்தான், அப்புறம் நாங்க ஆர்டர் பண்ண தயிர் வடையை கொண்டு வர போயிட்டான். நானும் சத்யாவும், "இருக்கு.. இந்த ஓட்டல்ல பிரச்சினை இருக்கு"னு சந்திரமுகி ஸ்டைல்ல சொல்லிகிட்டே ஒரு முடிவு பண்ணோம். அதாவது அவன் வேற டேபிள்ல ஆர்டர் எடுக்குறப்பயும் இதே மாதிரி சிரிக்கிறானானு பார்க்கனும். அப்படி அவன் சிரிச்சா பிரச்சினை இல்ல... அவன் மட்டும் சிரிக்கலேனா மவனே செத்தான்டா இன்னிக்குனு.

பார்த்தா, அவன் வேற எந்த டேபிள்லயும் சிரிக்கவேயில்ல.. சீரியசா ஆர்டர் எடுத்தான். தயிர் வடையை கொண்டு வந்துட்டு, "சார் மைசூர் போண்டா சூடா இருக்கு, வேணுமா?"ன்னான். அவன வம்பிலுக்கனும்னு, நான் உடனே "மைசூர் போண்டா வாங்குற அளவுக்கு பணம் இல்லப்பா, கொஞ்சம் பக்கத்துல 'கிண்டி' போண்டா, 'வடபழனி' போண்டா ஏதாச்சும் இருக்கா?"னு சிரிக்காம கேட்டேன். அவன் அதைக் கேட்டுட்டு கொஞ்சம் கூட பாதிக்கப்படவேயில்ல, ரொம்ப சாதாரணமா, ஏளனமா பார்த்தான் எங்கள.. பார்த்தா கூட பரவால்லீங்க.. சிரிச்சுத் தொலைச்சுட்டான்..!! எங்களுக்கோ கடுப்பு. கடுப்போட சாப்பிட்டு முடிச்சோம். பில் வந்துச்சு. நான் பில்ல கைல வச்சிகிட்டு, கொஞ்சம் கடுப்போடயும், கொஞ்சம் சிரிப்போடையும் அவன கூப்டேன். "இங்க வா.. நான் உன்கிட்ட 'தயிர் வடை' கேட்டேன். நீ என்ன பண்ண? உளுந்து வடையை தயிர்ல போட்டு எடுத்துட்டு வந்த.. சரி வயசுப்பையன் ஏதோ காத்துவாக்குல மறந்து எடுத்துட்டு வந்துட்டான், போனா போகுதுனு நானும் சாப்டேன்.. அதோட விட்டியா நீ? இப்போ பில்லுல "CURD VADAI"னு வேற எதையோ போட்டு 22ரூ பில் போட்டுருக்க!! என்ன பிரச்சினை உனக்கு?"னு பெருசா ஒரு வசனம் பேசுனேன் அவன்கிட்ட. அதுக்கு அவன் சிரிச்சுகிட்டே, "சார்.. தமாசு பண்ணாதீங்க சார்.. காச கொடுங்க.. நான் அடுத்த டேபிளுக்கு போகனும்"னு சொல்லிட்டு காச வாங்கிட்டுப் போயிட்டான் அடுத்த டேபிளுக்கு...................................................................................................................................

நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியும்!! நாங்களும் அத நினைச்சுதான் பக்கத்து டேபிளை பார்த்தோம்....... அவன் சிரிக்கல... ரொம்ப சீரியாசா மூஞ்சிய வச்சிகிட்டு "மைசூர் போண்டா சூடா இருக்கு சார்"னான்!!!!!!!!!!!!

2 comments:

Ram said...

Kadaisi varaikum yen sirichaanganne theriyaadha????

EKSI??

Raja said...

aiyo enakku konjam sollugalean... Server yean sirichaan????

Related Posts Plugin for WordPress, Blogger...