Saturday, February 14, 2009

நான் கடவுள். (அப்ப நீங்க?)முக்கிய அறிவிப்பு: இந்த விமர்சனத்தைப் படித்தால், 'நான் கடவுள்' படம் பார்க்கும் போது சுவாரசியம் குறைந்துவிடும் என எண்ணி தயவுகூர்ந்து படிக்காமல் இருக்க வேண்டாம். கண்டிப்பாய் படியுங்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் எனப் படம் பார்த்தபின்னோ அல்லது இந்தப் பதிவைப் படித்த பின்னோ தெரியும்.

கதை: ஆர்யா (ருத்ரன்) என்ற அகோரி (காசியில் இருக்கும், பிணம் தின்னும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம்) தனது தந்தையின் வேண்டுதலை ஏற்று தாயைப் பார்க்க தமிழ்நாடு வருகிறார். அங்கு ஊனமுற்றவர்களை பிச்சையெடுக்கவைத்து பணம் பண்ணும் ஒரு வில்லன் இருக்கிறான். பூஜா(அம்சவள்ளி) அவனிடம் மாட்டிக்கொள்கிறார். பணத்துக்காக பூஜாவை ஒரு கொடூரமாய் இருக்கும் குரூரன் ஒருவனிடம் மனைவியாக விற்க பார்க்கிறான். ஆர்யா தடுக்கிறார். வில்லனைக் கொல்கிறார். பின் பூஜாவையும் கொல்கிறார்.

ஒரு பார்வை:
நல்ல கதை. அகோரி கிகோரியென புதுப் பெயர்கள். அட்டகாசமாய் உயரமாய் ஆர்யா. படம் பிய்க்கும் என நினைத்தால், தலையைப் பிய்க்க வைக்கிறது. படம் முழுவதும் ஆர்யா இந்தியில் பேசுகிறார் (திட்டுகிறார்) அல்லது சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறார்.கஞ்சா குடிக்கிறார். மொத்தம் எட்டு காட்சிகளில் வருகிறார் ஆர்யா. பாவம், விக்ரம் மாதிரி, சூர்யா மாதிரி 'பாலா படத்தில் நடித்தால் பெரியாளா ஆயிருவோம்!' என்ற கனவோடு நடித்தவரின் தலையில் கல்லைப் போட்டிருக்கிறார் பாலா. இந்தப் படம் பார்த்தால் தான் தெரிகிறது, விக்ரமையும் சூர்யாவையும் பெரிய நடிகர்கள் ஆக்கியது பாலா அல்ல, அவர்கள் தான் தெரியாத்தனமாய் பாலாவை பெரிய ஆள் ஆக்கித் தொலைத்திருக்கிறார்கள். (அந்தப் பாவம் அவர்களை விடவே விடாது!!)

ஆர்யாவுக்கு நடிக்க சுத்தமாய் வாய்பில்லை. கஞ்சா குடித்துவிட்டு கரகர குரலில் தொண்டைப் புற்றுநோய் வந்தவர் போல் கத்தவிட்டிருக்கிறார் பாலா. ஆர்யாவைப் பார்த்தாலே நமக்கு பாலா மீது கோபமும் ஆர்யா மீது பாவமும் வருகிறது. படத்தில் எங்கு காணினும் பிதாமகனின் அழுகிப்போன வாடை. பழைய பாடல்களைப் போட்டு பழைய நடிகர்கள் வேடத்தில் பிச்சையெடுக்கும் சிலரை காவல் நிலையத்தில் ஆடவிட்டுருக்கிறார், சிம்ரனும் சூர்யாவும் ஆடியதைப் போல. ஆர்யாவைக் கண்டு போலீசுகாரர்கள் மிரளுகிறார்கள், விக்ரமைக் கண்டு பிதாமகனில் மிரண்டதைப் போல. சண்டைகாட்சிகளும் பிதாமகனையே நினைவூட்டுகின்றன.


படத்தின் பிரதான பங்கேற்பாளர்கள் (நடிகர்கள் எனச் சொல்வதில் சற்றும் மனமில்லை எனக்கு) பிச்சைக்காரர்கள். அதுவும் சாதாரணமாய் தென்படுபவர்கள் இல்லை, பொதுவாக நாம் நூறு பிச்சைக்காரர்களைப் பார்த்தால் அதில் ஒரு இரண்டு பேர் மிகவும் கொரூரமாகவும், பார்க்கவே பயம் வரவழைப்பவர்களாகவும்,அருவெறுப்பாகவும் இருப்பார்களே அதைப்போலத்தான் இந்தப்படத்தில் பாலா காட்டியுள்ள அத்தனைப் பிச்சைக்காரர்களுமே இருக்கிறார்கள். மிகவும் கொடூரமான முறையில் மிகவும் 'க்ளோசப்' (CLOSE UP)யில் அவர்களை படம் முழுதும் காட்டியுள்ளார். அவர்களும் நகைச்சுவை என்ற பெயரில் பாலா சொல்லிக்கொடுத்த கருமங்களை பேசிக்கொண்டு தாங்களாகவே பல நிமிடங்கள் சிரித்துக்கொள்கிறார்கள், காமிரா அவர்கள் முகத்தில் மெதுவாக பயணிக்கிறது, நமக்கு வயிற்றை புரட்டுகிறது, பயமாய் இருக்கிறது. ஊனமுற்றவர்களை பல இல்லங்களில் இருந்து அழைத்துவந்து அசிங்கப்படுத்தியுள்ளார் பாலா. அவர்களைப் பார்த்தாலே காசு கொடுத்து படம் பார்க்க வந்த நம் மீதும், பாலாவை நம்பி வந்த அவர்கள் மீதும் பாவமாய் இருக்கிறது.

பூஜா பாவப்பட்ட நடிகை. ஒரு நடிகையை எவ்வளவு அருவெறுப்பாக, அசிங்கமாக காட்டமுடியுமோ அப்படிக்காட்டியுள்ளார்கள். படத்தில் அவர் மட்டுமே கொஞ்சம் நடித்திருக்கிறார். ஆனால் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட அவரின் 'மேக்கப்'ஆல் நம்மால் அவரின் நடிப்பை ரசிக்கமுடியவில்லை. அதுவும் கடைசி காட்சியில் வாந்தி வருகிறது. திடீர் திடீர் என்று பழைய படப் பாடல்கள் சம்பந்தமேயில்லாமல் படத்தில் ஒலிக்கின்றன. யாராவது பாடுகிறார்கள், அல்லது வானொலியில் ஒலிக்கிறது.

படத்தில் தமிழ் மிகவும் கொஞ்சமாக வருகிறது. அப்படியே வந்தாலும் பின்ணணி இசை வசனங்களைத் தின்கிறது. ஆர்யா அதில் தனக்கு தமிழ் தெரிந்தாலும், என்ன கண்றாவிக்காக தமிழர்களான சக சாமியார்களிடமும் தன் குடும்பத்தாரிடமும் இந்தி பேசுகிறார் என விளங்கவில்லை. படத்தில் என்ன நடக்குது என சுதாரிக்கும் முன் இடைவேளை வந்துவிடுகிறது. எதற்காக பூஜாவை மட்டும் ஆர்யா காப்பாற்றுகிறார் எனத் தெரியவில்லை. பின் ஏன் தான் காப்பாற்றியவரையே கொல்கிறார் எனவும் தெரியவில்லை. இது ஒரு கிறுக்குப்பிடித்த, குரூரமான, வக்கிரமான படமென்றால் அது மிகையாகாது. பாலாவினுள் இருந்த கலைஞனின் தலையில் சேதுவுக்குப் பின் 'கணம்' புகுந்து விட்டது. தான் என்ன எடுத்தாலும் உலகம் பாராட்டும் என்ற நினைப்போ என்னவோ!! அந்த தலைக்கணம் தான் அஜீத்திடம், கந்துவட்டிக்காரர்களைக் கூட்டிக் கொண்டு வம்பிலுக்க வைத்திருக்கிறது. தான் நினைத்த போது மட்டும், பொழுது போகவில்லையென்றால் மட்டும் 'நான் கடவுள்' படப்பிடிப்புக்குப் போக வைத்திருக்கிறது. திரைக்கதையே எழுதாமல் மனதில் தோன்றிய கொடூரங்களையெல்லாம் கோர்வையேயில்லாமல் படமாய் எடுக்கவைத்திருக்கிறது. இனி தயவுசெய்து பாலா சினிமா எடுப்பதை மறுபரிசீலனை செய்வது நலம். அல்லது அவரை தேவையில்லாமல் புகழ்ந்து தொலைத்த பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்றவர்களுக்கெல்லாம் அசிங்கம். நான் கடவுள் படத்தைப் பார்த்துத் தொலைத்த கடுப்பில் தான் இளையராஜா, 'நான் கடவுள்' பாடல் வெளியீட்டிற்கு வரவில்லையோ என்னமோ! அஜீத்தை தாக்கவேண்டிய புயல், பாவம் ஆர்யாவை ஆட்கொண்டுவிட்டது. அஜீத் தப்பித்தார்.


ஆனால் மக்களே நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறேன், ஆனால் இந்தப் படத்தையும் புகழ்ந்து தள்ளி விமர்சனம் எழுதியுள்ள சில இணையங்களின் வக்கிர புத்தியை தான் என்னால் சகிக்க முடியவில்லை!!
தயவு செய்து பார்த்துவிடாதீர்கள் இந்தப் படத்தை. முக்கியமாக குழந்தைகளுடனும், வயதானவர்களுடனும், கர்ப்பிணிப் பெண்களுடனும், இதயம் பலவீனமானவர்களுடனுமோ போய்விடாதீர்கள்,. ஆபத்தில் முடியும்.

12 comments:

Balasubramanian said...

Great. You have written what i felt exactly. You are an excellent critic.

Ramar said...

kutram matum than ungal kangaluku therinthatha... antha kutram matra elavatraiyum maraithu vittatha....

Atleast kathai kalatha thernthedutha thaiyriyathukavathu bala oda dhill ke salute adikkalam..

aam periyavargal parka mudiyatha padam than... aana mathavanga kandippa parka vendiya padam.. apdi oru ulagam iruka nu theriyala but apdi iruntha atha therinchukalam unarvugala purinchukalam

Anonymous said...

அகோரிகளைப் பற்றி பாலா காட்டியுள்ள எல்லாமே சரியான புரிதலும், தெரிதலும் இல்லாமல் உள்ளன.. மேலும் வெறும் கதைக்களத்துக்காக பாராட்ட வேண்டும் என்பது தேவையற்றது என்பது என் கருத்து. கதைக்களத்தை ஒழுங்காக உபயோகப்படுத்தாமல், வெறும் வன்முறைக்கும், அருவெறுப்புக்கும் மட்டுமே பயன்படுத்தியுள்ளதைத்தான் நான் கண்டித்தேன்.

Shankar said...

உங்கள் விமர்சனம் ஒரு அஜீத் ரசிகனின் விமர்சனம் என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது...
குறிப்பாக "பின்னணி இசை வசனங்களை தின்கிறது" எனபது உச்சபட்ச அபத்தம்...
அகோரியை பற்றிய பாலாவின் புரிதலை கேள்வி எழுப்பும் நீங்கள், அகோரி பற்றி ஒரு சிறு விளக்கம் தந்திருக்கலாமே?
சில ஆண்டுகளுக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு படத்தை அரசியல் உள்நோக்கத்துடன் கேவலாக விமர்சித்திருந்தனர். இந்த விமர்சனத்தை படிக்கும் பொழுது அதுதான் நினைவுக்கு வந்தது...

Anonymous said...

படத்தைக் குற்றம் சொன்னால் அஜீத் ரசிகனா??!!! :-)) அகோரிகள் சாதாரண மனிதர்கள் தாம். காவல் நிலையத்தில் வந்து அமர்ந்து கொண்டு ஆர்யா செய்யும் அட்டகாசங்களையெல்லாம் செய்பவர்களல்ல. அவர்களும் social animals தான். இந்த படத்தில் அகோரியின் பாத்திரப்படைப்பே அபத்தம். பிதாமகன் மாதிரியே அகோரியையும் காட்டியுள்ளார். Check Youtube videos about agoris.

YUVA said...

Are you sick? Such crude way of writing. Before knowing anything about Aghori, know something about criticising an art. This is the first movie about both beggars as well as aghori's. There is nothing he can refer to picturise it. Everything is Bals's imagination. This is not a documentary about Aghori. If you want to it, dont search in Youtube goto Kasi and see for yourself. Please, please dont write blogs.

Anonymous said...

நேற்று ஒரு நண்பர் எனக்கு எனது 'நான் கடவுள்' விமர்சனத்தை கண்டித்து மிகவும் தரக்குறைவான, பொது இடத்தில் பிரயோகிக்க முடியாத வார்த்தைகளால் என்னை திட்டியிருந்தார். அதனால் என்னால் அதை இங்கே அனுமதிக்க இயவில்லை. எனது பதிவுக்காக என்னை திட்ட விரும்பும் நண்பர்கள் நாகரீகமாக, பொது இடத்தில் பிரயோகிக்க வல்ல கெட்ட வார்த்தைகளால் திட்டுமாறு வேண்டுகிறேன். நன்றி.

Pandian said...

Great review. y we r going to blame u unnecessarily? u r not at all aware about such art in particularly about tamil cinima industry.

ஒரு குத்தாட்டம், இரட்டை அர்த்த வசன வீச்சு, நடக்க இயலாத கட்சி அமைப்புகள், மலிவான வசனங்கள், பறந்து பறந்து சண்டை என யதார்த்தம் மீறிய வெறும் கேளிக்கை காட்சிக் கூடங்களாக இருக்கும் இன்றைய தமிழ் படங்களுக்கும் அதற்கு விழா எடுக்கும் நாயகர்களுக்கும், அதன் தீவிர ரசிகராகிய உங்களை போன்ற அதிக எண்ணிக்கை ரசனைவாதிகளுக்கும் மத்தியில் இப்படம் மட்ட கரமான படம் தான். வாழ்க உங்களை போன்ற தமிழர் ரசனை. நாசமாக போக நல்ல சிந்தனைகள்.

Anonymous said...

nee vettaikkaran,sura vuku vimarisan panrathoda nippaattiko.avlo than unakku theriyum.theriyaatha vishayathil thalai idathe

Jayadev Das said...

இப்போ அவன் இவன் படமே வந்திடிச்சு, இப்பத்தான் இந்த பதிவு பிரபலமாயிருக்கு போல, கொஞ்சம் லேட். உங்க தீர்க்க தரிசனம் உண்மையாயிருக்கு, பதிவர்கள் எல்லோரும் விழித்துக் கொண்டுவிட்டார்கள், அவன் இவன் படத்தை காரி உமிழ்ந்து விட்டார்கள்.

Bhargavi said...

whatever u r saying is true.... but there is always reality in every bala film... iam not bala's fan but i can say onething he stands away from others who takes the normal tamil film....

I think so... you are not a liker of real life characters... i like to see ur comments on avan evan........

arvind creats said...

if u know only to find faults and don know what is a complete cinema . do not do a crotic job, do something else.

Related Posts Plugin for WordPress, Blogger...