Saturday, February 28, 2009

தயிர் வடைனா என்ன?ஞாயிற்றுகிழமை இரவு. வழக்கமா போற உணவு விடுதிக்கு போகல இன்னிக்கு. சத்யா, அருண், நான் மூணு பேரும் வேற இடத்துக்கு போனோம். வாத்து பின்னாடி குட்டி வாத்து நீந்துற மாதிரி எங்க பின்னாடி, எங்க போனாலும் எங்களுக்குனு எதாவது நீந்தும். அப்படி அன்னைக்கு நீந்துனது...சீ... வம்பிலுத்தது ஒரு உணவுவிடுதி சர்வர். எங்ககிட்ட ஆர்டர் எடுக்குறப்ப சம்பந்தமேயில்லாம, தேவையில்லாம, காரணமேயில்லாம சிரிச்சுட்டே இருந்தான். என்னடா இது, இவன் நக்கல் பண்றானா, இல்ல இவன் கேரக்டரே இப்படியானு எங்களுக்கு ஒரு டவுட்டு. நாங்க மூணு பேரும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டு அந்த சர்வர பார்த்தோம்.... அப்பயும் அவன் சிரிச்சிட்டே தான் இருந்தான், அப்புறம் நாங்க ஆர்டர் பண்ண தயிர் வடையை கொண்டு வர போயிட்டான். நானும் சத்யாவும், "இருக்கு.. இந்த ஓட்டல்ல பிரச்சினை இருக்கு"னு சந்திரமுகி ஸ்டைல்ல சொல்லிகிட்டே ஒரு முடிவு பண்ணோம். அதாவது அவன் வேற டேபிள்ல ஆர்டர் எடுக்குறப்பயும் இதே மாதிரி சிரிக்கிறானானு பார்க்கனும். அப்படி அவன் சிரிச்சா பிரச்சினை இல்ல... அவன் மட்டும் சிரிக்கலேனா மவனே செத்தான்டா இன்னிக்குனு.

பார்த்தா, அவன் வேற எந்த டேபிள்லயும் சிரிக்கவேயில்ல.. சீரியசா ஆர்டர் எடுத்தான். தயிர் வடையை கொண்டு வந்துட்டு, "சார் மைசூர் போண்டா சூடா இருக்கு, வேணுமா?"ன்னான். அவன வம்பிலுக்கனும்னு, நான் உடனே "மைசூர் போண்டா வாங்குற அளவுக்கு பணம் இல்லப்பா, கொஞ்சம் பக்கத்துல 'கிண்டி' போண்டா, 'வடபழனி' போண்டா ஏதாச்சும் இருக்கா?"னு சிரிக்காம கேட்டேன். அவன் அதைக் கேட்டுட்டு கொஞ்சம் கூட பாதிக்கப்படவேயில்ல, ரொம்ப சாதாரணமா, ஏளனமா பார்த்தான் எங்கள.. பார்த்தா கூட பரவால்லீங்க.. சிரிச்சுத் தொலைச்சுட்டான்..!! எங்களுக்கோ கடுப்பு. கடுப்போட சாப்பிட்டு முடிச்சோம். பில் வந்துச்சு. நான் பில்ல கைல வச்சிகிட்டு, கொஞ்சம் கடுப்போடயும், கொஞ்சம் சிரிப்போடையும் அவன கூப்டேன். "இங்க வா.. நான் உன்கிட்ட 'தயிர் வடை' கேட்டேன். நீ என்ன பண்ண? உளுந்து வடையை தயிர்ல போட்டு எடுத்துட்டு வந்த.. சரி வயசுப்பையன் ஏதோ காத்துவாக்குல மறந்து எடுத்துட்டு வந்துட்டான், போனா போகுதுனு நானும் சாப்டேன்.. அதோட விட்டியா நீ? இப்போ பில்லுல "CURD VADAI"னு வேற எதையோ போட்டு 22ரூ பில் போட்டுருக்க!! என்ன பிரச்சினை உனக்கு?"னு பெருசா ஒரு வசனம் பேசுனேன் அவன்கிட்ட. அதுக்கு அவன் சிரிச்சுகிட்டே, "சார்.. தமாசு பண்ணாதீங்க சார்.. காச கொடுங்க.. நான் அடுத்த டேபிளுக்கு போகனும்"னு சொல்லிட்டு காச வாங்கிட்டுப் போயிட்டான் அடுத்த டேபிளுக்கு...................................................................................................................................

நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியும்!! நாங்களும் அத நினைச்சுதான் பக்கத்து டேபிளை பார்த்தோம்....... அவன் சிரிக்கல... ரொம்ப சீரியாசா மூஞ்சிய வச்சிகிட்டு "மைசூர் போண்டா சூடா இருக்கு சார்"னான்!!!!!!!!!!!!

Thursday, February 19, 2009

சுஜீத் G


தமிழில் ஒரு வலைப்பக்கம் வைத்துக்கொண்டு தமிழ் ராப் இசைக் கலைஞர் 'சுஜீத்'தை பற்றி எழுதாமல் போனால் அது மாபெரும் குற்றமென்றே நினைக்கிறேன், இவ்வளவு தாமதமாக எழுதுவதைக் கூடத்தான்! தமிழுக்காகப் பாடுபவன், தமிழைப் பாடுபவன், தமிழினத்தைப் பாடுபவன், தமிழ்நாட்டில் இல்லையே தவிர மற்ற இடங்களில் இருக்கத்தான் செய்கிறான். ஈழத்தமிழரான சுஜீத் இப்போது வசிப்பது லண்டனில். அவரைப் பற்றிய அறிமுகம் நம் தமிழ்நாட்டில் ஏறக்குறைய இல்லவே இல்லை என்பது என்னை மிகவும் வருத்துகிறது. அவரது ஒவ்வொரு பாடலும் தனிச் சிறப்புடையவை. காதல், வீரம், விடுதலை, ஈழம், உறவுகள் என வெவ்வேறு விஷயங்களைக் கொண்டுள்ளவை. அனைத்து பாடல்களையும் எழுதி, பாடியவர் சுஜீத் என்பது இன்னுமொறு சிறப்பு. புலம்பெயர் வாழ்கையில் இருக்கும் கொடுமைகளை 'விஷம்' என்ற பாடலில் அவர் கூறியுள்ள விதம் கண்ணீர் வரவழைக்கும் அளவு உண்மையும், உருக்கமும் கொண்டது. ஒவ்வொரு பாடலுக்காகவும் அவர் எடுத்துக் கொண்டுள்ள சிரத்தை அளப்பெரியது. உதாரணத்திற்கு அவரின் வரிகள் சிலவற்றை தருகிறேன்.

"சொந்த இனத்தை மறைக்கப்போனா மனுசன் நீயும் இல்லை கண்டதுக்கும் வளைஞ்சு கொடுக்க தமிழன் தண்ணி இல்லை - என்றும் குப்பை வாழ்க்கை வாழ நீயும் சேத்துப் பண்ணி இல்லை செந்தமிழா எழுந்து வா செந்தமிழைக் காக்க வா தமிழர் குடி மறவரடி மறவர் குடி தமிழரடி"

"ஆவதும் பரத்துள்ளே அழிவதும் பரத்துள்ளே போவதும் பரத்துள்ளே புதுவதும் பரத்துள்ளே தேவரும் பரத்துள்ளே திசைகளும் பரத்துள்ளே யாவரும் பரத்துள்ளே நீயும் அப்பரத்துள்ளே"

"வந்தாரை வாழவை வம்பிலுத்தா வாளை வை"

"சுயம் என்ற ஒன்று உனைச் சுடவேண்டும் - அதற்கு
சுரணை என்ற ஒர் உணர்(வு) வேண்டும்"

நீங்கள் கேட்க, அவரது பாடல்களில் பெரும்பான்மையை எனது இந்த வலைப்பதிவிலேயே அளித்துள்ளேன், பாடல்களை பதிவிறக்கம் செய்ய http://www.sujeethg.com/index.php?option=com_content&task=view&id=97&Itemid=191
என்ற சுட்டியை கிளிக் செய்யவும். சுஜீத்தின் முதல் வெளியீடான 'அடி மேல் அடி' மிகப்பெரும் வெற்றிபெற்றதை அடுத்து, மீண்டும் அய்ங்கரன் நிறுவனத்துக்கே தனது அடுத்த வெளியீடான 'இராவணன்'னின் உரிமைகளை வழங்கியுள்ளார். இராவணன் விரைவில் வெளிவருகிறது. சுஜீத் பாடல்கள் பற்றிய கருத்துக்களை எழுதிச்செல்லுமாறு வேண்டுகிறேன். நன்றி.

Sunday, February 15, 2009

லேடீஸ் வர்றாங்க கிளம்பு!!"லேடீஸ் வராங்கள்ல நகருங்க!!"
"லேடீஸ் நிக்கிறாங்கல்ல.. இடம் கொடுங்க சார்!!""லேடீஸ்கு முதல்ல கொடுத்து அனுப்புங்கப்பா!!"
மேல இருக்க இந்த வரிகளை, பஸ்ல, தியேட்டர்ல, ரேசன் கடைல, இப்படி கண்ட கண்ட இடத்துலயும் கேட்டிருக்கோம்! இந்த வரிகளையெல்லாம் தமிழ்நாட்டுல அதிகமா உபயோகப்படுத்துறது 'லேடீஸ்' இல்ல என் மக்களே... நம்ம ஆண் தோழர்கள் தான்! எங்க பார்த்தாலும் எப்பப் பார்த்தாலும் எப்படிப் பார்த்தாலும் இவைய்ங்க தொல்ல தாங்க முடியாது.. நம்மலே பஸ்ல ஒரு கம்பிய புடிச்சு, கஷ்டப்பட்டு பேலன்ஸ் பண்ணி, ஓரமா நிப்போம், அப்ப ஒருத்தன் திடீர்னு பின்னாடி இருந்து கத்துவான், "ஏன் சார், லேடீஸ் வராங்கள்ல? கொஞ்சம் நகர்ந்தா என்ன சார்?"னு கேட்டுட்டு, நம்மல பார்த்து கடுப்பான ஒரு முறைப்பும், அந்த பொம்பளையப் பார்த்து ஒரு சிரிப்பும் வுடுவான். நமக்கு கேவலமா இருக்கும். அதுல அந்த அல்பத்துக்கு ஒரு பெருமை. என்னமோ த்ரெளபதிக்கு 'அன்லிமிடெட்' சேலை கொடுத்த கிருஷ்ணபரமாத்மா மாதிரி! இவய்ங்க தொல்ல பஸ்சு, தியேட்டர்லதான் அதிகம்னு பார்த்தா, கண்றாவி இப்போ இன்னொரு இடத்துலயும் ஆரம்பிச்சுட்டாய்ங்க...!!
நானும் என் நண்பர்களும் சாப்பிட்டுட்டு இருக்கப்ப ஒருத்தன் வேகமா வந்து, "ரெண்டு நூடுல்ஸ் பார்சல்"னு பில் வாங்குனான். பார்சல் பண்றவன்கிட்ட பில்ல கொடுக்குறப்ப அந்தப் பய ஒன்னு சொன்னான் பாருங்க, எங்களுக்கு சாப்டதெல்லாம் வெளிய வந்துருச்சு.... வாய் வழியா!!!
"அண்ணே.. லேடீஸ் சாப்பிடுறதுண்ணே. கொஞ்சம் நல்லா பண்ணிக் கொடுங்கண்ணே!!!!"ன்னான். நாங்க நாலு பேரும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டோம். நான் என் நண்பன் கிட்ட "என்ன மாப்ள இவய்ங்க? இப்படி ஆரம்பிச்சுட்டாய்ங்க? எது எதுக்கு 'இதை'ச் சொல்றதுனு இவய்ங்களுக்கு ஒரு விவஸ்தையே கிடையாதாடா?"னு நொந்து போய் சொன்னேன். அதுக்கு அவன் சொன்னான் "இது ஒன்னுலதான் நம்ம ஊருல வித்தியாசம் பார்க்காம இருந்தாய்ங்க, இப்ப இதுலயும் ஆரம்பிச்சுட்டாய்ங்கடா!!"னு. சாப்பிட்டு வெளிய வந்து ஒரு பெட்டிக் கடைக்கு போனோம். என் நண்பன், கடைக்காரன் கிட்ட ஒரு சிகரெட் வாங்குனான். அப்ப நான் சொன்னேன், "அண்ணே நல்லதா தாங்கண்ணே..லேடீஸ் அடிக்கிறது"னு!!!!! கடைக்காரன் கடுப்பாயிட்டான்.. நாங்க 'எஸ்' ஆயிட்டோம்!!!

Saturday, February 14, 2009

நான் கடவுள். (அப்ப நீங்க?)முக்கிய அறிவிப்பு: இந்த விமர்சனத்தைப் படித்தால், 'நான் கடவுள்' படம் பார்க்கும் போது சுவாரசியம் குறைந்துவிடும் என எண்ணி தயவுகூர்ந்து படிக்காமல் இருக்க வேண்டாம். கண்டிப்பாய் படியுங்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் எனப் படம் பார்த்தபின்னோ அல்லது இந்தப் பதிவைப் படித்த பின்னோ தெரியும்.

கதை: ஆர்யா (ருத்ரன்) என்ற அகோரி (காசியில் இருக்கும், பிணம் தின்னும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம்) தனது தந்தையின் வேண்டுதலை ஏற்று தாயைப் பார்க்க தமிழ்நாடு வருகிறார். அங்கு ஊனமுற்றவர்களை பிச்சையெடுக்கவைத்து பணம் பண்ணும் ஒரு வில்லன் இருக்கிறான். பூஜா(அம்சவள்ளி) அவனிடம் மாட்டிக்கொள்கிறார். பணத்துக்காக பூஜாவை ஒரு கொடூரமாய் இருக்கும் குரூரன் ஒருவனிடம் மனைவியாக விற்க பார்க்கிறான். ஆர்யா தடுக்கிறார். வில்லனைக் கொல்கிறார். பின் பூஜாவையும் கொல்கிறார்.

ஒரு பார்வை:
நல்ல கதை. அகோரி கிகோரியென புதுப் பெயர்கள். அட்டகாசமாய் உயரமாய் ஆர்யா. படம் பிய்க்கும் என நினைத்தால், தலையைப் பிய்க்க வைக்கிறது. படம் முழுவதும் ஆர்யா இந்தியில் பேசுகிறார் (திட்டுகிறார்) அல்லது சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறார்.கஞ்சா குடிக்கிறார். மொத்தம் எட்டு காட்சிகளில் வருகிறார் ஆர்யா. பாவம், விக்ரம் மாதிரி, சூர்யா மாதிரி 'பாலா படத்தில் நடித்தால் பெரியாளா ஆயிருவோம்!' என்ற கனவோடு நடித்தவரின் தலையில் கல்லைப் போட்டிருக்கிறார் பாலா. இந்தப் படம் பார்த்தால் தான் தெரிகிறது, விக்ரமையும் சூர்யாவையும் பெரிய நடிகர்கள் ஆக்கியது பாலா அல்ல, அவர்கள் தான் தெரியாத்தனமாய் பாலாவை பெரிய ஆள் ஆக்கித் தொலைத்திருக்கிறார்கள். (அந்தப் பாவம் அவர்களை விடவே விடாது!!)

ஆர்யாவுக்கு நடிக்க சுத்தமாய் வாய்பில்லை. கஞ்சா குடித்துவிட்டு கரகர குரலில் தொண்டைப் புற்றுநோய் வந்தவர் போல் கத்தவிட்டிருக்கிறார் பாலா. ஆர்யாவைப் பார்த்தாலே நமக்கு பாலா மீது கோபமும் ஆர்யா மீது பாவமும் வருகிறது. படத்தில் எங்கு காணினும் பிதாமகனின் அழுகிப்போன வாடை. பழைய பாடல்களைப் போட்டு பழைய நடிகர்கள் வேடத்தில் பிச்சையெடுக்கும் சிலரை காவல் நிலையத்தில் ஆடவிட்டுருக்கிறார், சிம்ரனும் சூர்யாவும் ஆடியதைப் போல. ஆர்யாவைக் கண்டு போலீசுகாரர்கள் மிரளுகிறார்கள், விக்ரமைக் கண்டு பிதாமகனில் மிரண்டதைப் போல. சண்டைகாட்சிகளும் பிதாமகனையே நினைவூட்டுகின்றன.


படத்தின் பிரதான பங்கேற்பாளர்கள் (நடிகர்கள் எனச் சொல்வதில் சற்றும் மனமில்லை எனக்கு) பிச்சைக்காரர்கள். அதுவும் சாதாரணமாய் தென்படுபவர்கள் இல்லை, பொதுவாக நாம் நூறு பிச்சைக்காரர்களைப் பார்த்தால் அதில் ஒரு இரண்டு பேர் மிகவும் கொரூரமாகவும், பார்க்கவே பயம் வரவழைப்பவர்களாகவும்,அருவெறுப்பாகவும் இருப்பார்களே அதைப்போலத்தான் இந்தப்படத்தில் பாலா காட்டியுள்ள அத்தனைப் பிச்சைக்காரர்களுமே இருக்கிறார்கள். மிகவும் கொடூரமான முறையில் மிகவும் 'க்ளோசப்' (CLOSE UP)யில் அவர்களை படம் முழுதும் காட்டியுள்ளார். அவர்களும் நகைச்சுவை என்ற பெயரில் பாலா சொல்லிக்கொடுத்த கருமங்களை பேசிக்கொண்டு தாங்களாகவே பல நிமிடங்கள் சிரித்துக்கொள்கிறார்கள், காமிரா அவர்கள் முகத்தில் மெதுவாக பயணிக்கிறது, நமக்கு வயிற்றை புரட்டுகிறது, பயமாய் இருக்கிறது. ஊனமுற்றவர்களை பல இல்லங்களில் இருந்து அழைத்துவந்து அசிங்கப்படுத்தியுள்ளார் பாலா. அவர்களைப் பார்த்தாலே காசு கொடுத்து படம் பார்க்க வந்த நம் மீதும், பாலாவை நம்பி வந்த அவர்கள் மீதும் பாவமாய் இருக்கிறது.

பூஜா பாவப்பட்ட நடிகை. ஒரு நடிகையை எவ்வளவு அருவெறுப்பாக, அசிங்கமாக காட்டமுடியுமோ அப்படிக்காட்டியுள்ளார்கள். படத்தில் அவர் மட்டுமே கொஞ்சம் நடித்திருக்கிறார். ஆனால் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட அவரின் 'மேக்கப்'ஆல் நம்மால் அவரின் நடிப்பை ரசிக்கமுடியவில்லை. அதுவும் கடைசி காட்சியில் வாந்தி வருகிறது. திடீர் திடீர் என்று பழைய படப் பாடல்கள் சம்பந்தமேயில்லாமல் படத்தில் ஒலிக்கின்றன. யாராவது பாடுகிறார்கள், அல்லது வானொலியில் ஒலிக்கிறது.

படத்தில் தமிழ் மிகவும் கொஞ்சமாக வருகிறது. அப்படியே வந்தாலும் பின்ணணி இசை வசனங்களைத் தின்கிறது. ஆர்யா அதில் தனக்கு தமிழ் தெரிந்தாலும், என்ன கண்றாவிக்காக தமிழர்களான சக சாமியார்களிடமும் தன் குடும்பத்தாரிடமும் இந்தி பேசுகிறார் என விளங்கவில்லை. படத்தில் என்ன நடக்குது என சுதாரிக்கும் முன் இடைவேளை வந்துவிடுகிறது. எதற்காக பூஜாவை மட்டும் ஆர்யா காப்பாற்றுகிறார் எனத் தெரியவில்லை. பின் ஏன் தான் காப்பாற்றியவரையே கொல்கிறார் எனவும் தெரியவில்லை. இது ஒரு கிறுக்குப்பிடித்த, குரூரமான, வக்கிரமான படமென்றால் அது மிகையாகாது. பாலாவினுள் இருந்த கலைஞனின் தலையில் சேதுவுக்குப் பின் 'கணம்' புகுந்து விட்டது. தான் என்ன எடுத்தாலும் உலகம் பாராட்டும் என்ற நினைப்போ என்னவோ!! அந்த தலைக்கணம் தான் அஜீத்திடம், கந்துவட்டிக்காரர்களைக் கூட்டிக் கொண்டு வம்பிலுக்க வைத்திருக்கிறது. தான் நினைத்த போது மட்டும், பொழுது போகவில்லையென்றால் மட்டும் 'நான் கடவுள்' படப்பிடிப்புக்குப் போக வைத்திருக்கிறது. திரைக்கதையே எழுதாமல் மனதில் தோன்றிய கொடூரங்களையெல்லாம் கோர்வையேயில்லாமல் படமாய் எடுக்கவைத்திருக்கிறது. இனி தயவுசெய்து பாலா சினிமா எடுப்பதை மறுபரிசீலனை செய்வது நலம். அல்லது அவரை தேவையில்லாமல் புகழ்ந்து தொலைத்த பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்றவர்களுக்கெல்லாம் அசிங்கம். நான் கடவுள் படத்தைப் பார்த்துத் தொலைத்த கடுப்பில் தான் இளையராஜா, 'நான் கடவுள்' பாடல் வெளியீட்டிற்கு வரவில்லையோ என்னமோ! அஜீத்தை தாக்கவேண்டிய புயல், பாவம் ஆர்யாவை ஆட்கொண்டுவிட்டது. அஜீத் தப்பித்தார்.


ஆனால் மக்களே நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறேன், ஆனால் இந்தப் படத்தையும் புகழ்ந்து தள்ளி விமர்சனம் எழுதியுள்ள சில இணையங்களின் வக்கிர புத்தியை தான் என்னால் சகிக்க முடியவில்லை!!
தயவு செய்து பார்த்துவிடாதீர்கள் இந்தப் படத்தை. முக்கியமாக குழந்தைகளுடனும், வயதானவர்களுடனும், கர்ப்பிணிப் பெண்களுடனும், இதயம் பலவீனமானவர்களுடனுமோ போய்விடாதீர்கள்,. ஆபத்தில் முடியும்.

நான் HDFCல இருந்து பேசுறேன்...
ABCD பேங்க்ல (HDFCனு வெளிப்படையா சொல்லக்கூடாதுனு ABCDனு சொல்றேன்!!) வேலை பாக்குற ரமேசுனு ஒருத்தரு ரொம்பநாளா "சேவிங்ஸ் அக்கவுண்ட்டு ஓப்பன் பண்ணுங்க சார் சேவிங்ஸ் அக்கவுண்டு ஓப்பன் பண்ணுங்க சார்"னு சொல்லிட்டே இருந்தாரு. சரி நம்மகிட்டதான் சேலரி அக்கவுண்ட்டு இல்லையே ஒரு சேவிங்ஸ் அக்கவுண்டாவது இருக்கட்டுமேனு கடன உடன வாங்கி ஒரு 2500ரூபாய்க்கு ஒரு சேவிங்ஸ் அக்கவுண்டு ஓப்பன் பண்ணேன். ஒருவாரம் நல்லாத்தான் போச்சு. அதுக்கப்புறம் 2500ரூபாய் பேலன்சு 25ரூபாய் ஆயிப்போச்சு. உடனே நம்ம பிரகாசு எனக்கு ஃபோன் பண்ணி "சார். இன்னும் ஒரு ரெண்டு வாரம் மினிமம் பேலன்ஸ் மெயிட்டெயின் பண்ணுங்க சார், இல்லேனா எனக்கு இன்சென்ட்டிவ் போயிரும்"னு ரொம்ப ஃபீல் பண்ணாரு. சரி மனுசன் சந்தோசப்படட்டுமேனு நானும் "காசை போட்டுறேம்பா"னு சும்மா சொல்லிவச்சேன். அந்தாளு அத சீரியசாவே நம்பிட்டாரு போல்ருக்கு. அடுத்தநாளு ஃபோன் பண்ணி '' இன்னும் நீங்க பணம் போடலயே.. என் மேனேஜர் எனக்கு மெயில் அனுப்பிருக்காரு சார் பணம் போட சொல்லி''னு சொன்னாரு. நான் சொன்னேன் "தம்பி பிரகாசு, அது என் அக்கவுண்டு. பணம் போடுறதும் போடாததும் என் விருப்பம். உன் மேனேஜரை என்கிட்ட பேச சொல்லு"னு. "அதில்ல சார், நீங்க பணம் போட்டீங்கன்னா நல்லது சார்". என்னடா இது நம்ம நிலைமைய புரிஞ்சுக்காம பேசுறானேனு நினைச்சுட்டே, "நீ சொல்றது நல்லதுதாம்பா. எனக்கு வேணும்னா ஃபைன் போட சொல்லு. கட்டிறேன்"னு சொன்னேன். அப்படியும் அவன் கேக்காம பிடிவாதம் புடிச்சான். சரி வேற வழியே இல்லேனு ஒரு முடிவு பண்ணேன். "பிராகாசு, காசு போடச் சொல்லி உங்களுக்கு தான மெயில் வந்துச்சு?", "ஆமா சார்!", "அப்டினா நீங்களே போட்டுருங்களேன்"னு சொல்லிட்டு ஃபோன வச்சிட்டேன்!! அனேகமா மேல உள்ள ஃபோட்டோல இருக்குறது பிரகாசா தான் இருக்கனும்!!!

Friday, February 13, 2009

When girls do that..this!


This topic you know, its something no one speaks or writes about, the reason is its not at all a topic!! But why iam designedly speaking about it is because i came across a lot funny and a bit weird incident. Me and one of my life long buddy, arun were passing by a bus station in a drizzly evening. There, this beautiful girl was sitting alone like an angel!! (You will know why am using this term angel from the lines to come!) You know, a beautiful girl, romantic evening, lovely costume, a handsome chap (huh forget arun for now!!) it looked more like a dream scene than a real one. That was the minute i believed in bollywood directors..ok..thats an other story. Lets come here.. This fellow arun was sitting in the pillion and we were waiting for a friend to come, in my bike. Suddenly he hissed "Machan bus stopla paaruda, sema figure(Look buddy, a beautiful girl is in the bus stop)". I hastened the normal move of my neck, and looked out!! Yup she was beautiful. She was comfortably sitting in the bus stop and iam sure that she must've had a thought that nobody was looking at her. So i couldnt see the rigidness that girls usually show off in public when they are aware that people are watching them. This girl was totally out of it. Suddenly she started picking her nose very unconsciously. Her facial reaction showed she was really enjoying doing that, being herself in public. When i turned to arun, his face went in all directions trying to avoid that girl's action! He urged me to take the bike! It took me two seconds to realise what was actually the problem! The problem is, girls really have to sacrifice a lotta things to maintain their angelic image, i suppose! Thats why they act very rigid in public! Then i took my bike went somewhere, did something, but i couldnt get the girl out of my mind, because she looked very naturally beautiful to me, when she did what she was doing! She was just enjoying the place, her loneliness, and thats why she did what she did. And i learnt, sometimes being not angelic makes you a bit more angelic!! he he he!

Its a low hip (butt) World!
Before posting this i gotta say something. Am really doubting there are people who can really understand this!! This topic may end up projecting me as a chauvinist!!! Because this is about the Low hip jeans that gals wear or 'try' to wear!!

A week back i was browsing some books in landmark and eventually i found this, not so attractive girl sitting in a beautiful pose and reading a novel kinda thing seriously. You know i got a bit curious to see what she was reading and suddenly i realised most of the men were watching her. Especially a, some >60 aged guy was constantly watching over her. But to my astonishment, those guys were not seeing her book, her face, her more womanish areas, but her waist!!!!! So automatically i lost interest in knowing what she was reading, but my interest turned towards knowing what made her waist soooo attractive and i saw and gotcha!!

I assumed, the following must've happened. Actually this innocent girl, what she has done is, she has decided to buy a 'low hip jean', but the shopkeeper or whoever, has cheated this girl by giving her a 'Low Buttocks jean'! You know you cannot check your butt often, so may be this girl was not aware that she was showing off her butt to people!!!! Gals with cool sexy hip size seem to be more sexier in a low hip jean, but i dont know what kind of sexier look is THIS to show off your butt to everyone!!


All i want to know is, whether these kinda girls really dont know where their pants are or they really love to show off their butts in public places in the name of some fashion stuffs or something??? See am not trying or really thinking some very own indian cultural blabberings like 'Oh god what will happen to indian culture? Or something of that kind!!' What am thinking is why these girls have no shame to show off their butts in public? Has the basic human instint to cover some body parts has gone or the power of the fruit of knowledge that Eve ate has gone down? I really wonder!!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...