Thursday, October 23, 2008

தீபாவளி ஒழியட்டும். ஏன்?


தமிழன் யார்? புராணங்களில் அசுரன், ராட்சதன்.

தீபாவளி என்றால் என்ன? தீபாவளின்னா தமிழனோட கருமாதி, தமிழனோட திதி.

நரகாசுரன் யாரு? புராணங்களில் உள்ள ஆரிய, திராவிட போர்கதைகளில், திராவிடர்களின் பிரதிநிதி அவன். அவனை மோசமானவனாகவும், கொடூரனாகவும் சித்தரித்தது, அந்த புராணங்களையெல்லாம் படைத்த ஆரிய மிருகங்கள். இதை நான் சொல்லவில்லை. "புராணங்கள் எல்லாமே ஆரிய-திராவிட போரின் புனைவுக் கதைகளே" என நம் நாட்டின் முதல் பிரதமர் ஆரியர், சவகர்லால் நேரு சொல்லியிருக்கிறார். நரகாசுரன் யார்?? பூணூல் தரிக்கா திராவிட மன்னன். அவனின் மரணத்தை, திராவிட இன மன்னனின் சாவை, நம்மையே கொண்டாட வைத்த ஆரியர்களின் சூழ்ச்சிக்கு நாம் இன்னும் இரையாகத்தான் வேண்டுமா?? சுயபுத்தியுடன் சிந்தியுங்கள். உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உங்களிடம் ஏதெதோ சொல்லி உங்களை சிறு வயதில் இருந்து தீபாவளி கொண்டாட வைத்திருக்கலாம். ஆனால் சிந்திக்கவேண்டும் தோழர்களே. சற்று சிந்திக்கவேண்டும். தன் இனத்தின் தோல்வியை புராணத்தில் கண்டு, அதற்காக பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்திக் கொண்டாடும் ஒரே இனம் தமிழினம். இதை விட அசிங்கம் ஏதும் உள்ளதா? நாம் இதைத் தாங்கித்தான் ஆக வேண்டுமா? சுரணை என்ற ஓர் உணர்வேண்டும் தமிழர்களே. அதற்கு சுயமாய்ச் சிந்தித்தல் வேண்டும். சுயமாய்ச் சிந்திக்காத எதற்கும் சுரணை வந்ததாய் சரித்திரமில்லை தோழர்களே.
நீங்கள் இதைப் படிக்கலாம், உங்களுக்கு உறைக்கவும் செய்யலாம், ஆனால் தீபாவளியை நீங்கள் புறக்கணிக்க எத்தனிக்கும் போது உங்கள் தாயோ, தந்தையோ இப்படிச் சொல்வார்கள், "அதெல்லாம் வெட்டிப் பேச்சு. நமக்கு ஒத்துவராது. அதையெல்லாம் கேட்காதே" என்று. நீங்களும் சட்டென மாறிவிடுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், சுயமாய்ச் சிந்தியுங்கள் தோழர்களே. சிந்தியுங்கள். சிந்திப்பதால் தான் நீங்களும் நானும் மனிதர்கள். அது இல்லையேல்நாய் போல், தெருப் பன்றி போல் நாம் அடிமைகள். வெறும் அடிமைகள்.
தீபாவளியைப் புறக்கணிப்போம். எவனுக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லாதீர்கள். கருமாதிக்கு வாழ்த்துச் சொல்லுவீர்களா?? அதுபோல் தான் இதுவும். தீபாவளி அன்று தமிழகம் எழவு வீடு நண்பர்களே. தீபாவளி என்றால் தமிழன் வீட்டில் ஒரு துக்கநாள். தயவு செய்து கொண்டாடாதீர்கள். உங்கள் இனம் அழிக்கப்பட்டதாய்ச் சொன்ன ஆரியர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்.
தீபாவளி ஒழிக. தமிழினத்தின் சுயமரியாதையும், சுரணையும் வாழ்க.

8 comments:

Arul Kumar said...

Why our government(Tamil Nadu Government) announce a holiday for the Diwali.

Why it does not oppose to celebrate the Diwali.

கிருபாகரன் said...

எனக்கு இதில் உடன்பாடு இல்லை அசோக்..
ஏன் பண்டிகையை புராணத்தின் அடிப்படையிலேயே பார்கிறிர்கள்.
நம்மில் எத்தனை பேர் நரகாசுரனை ஞாபகம் வைத்து பட்டாசு கொளுத்துகிறார்கள்??
நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியுடன் மக்கள் இருந்து விட்டு போகட்டுமே. அந்த சந்தோஷத்தை எப்போதோ சித்தரித்த புனைவுக் கதைகள் காரணம் காட்டி புறக்கணிக்க வேண்டாமே.
இதனால் நம் திராவிட இனம் இழிவுபடுத்தபடுகிறது என்று சொல்வது சரி அல்ல..
அது சரி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி மக்களை பிரித்து பார்த்து பேசுவிர்கள் என்று தெரியவில்லை.
திராவிடர்கள் எல்லாரும் தூய்மையனவர்களும் இல்லை ஆர்யர்கள் எல்லாரும் மிருகங்களும் இல்லை.
நானும் திராவிடன் தான்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

இளா, இன்னும் 500 வருஷத்தில 2009-ஆம் ஆண்டு ஈழத்தில் ஒரு அசுரனும் அவனது வானரப் படைகளும் அழிந்ததிற்கு தமிழன் இன்னொரு பண்டிகை கொண்டாடப் போறான். இன்னும் பழங்கதை பேசிக்கிட்டு...

mahi said...

எனக்கு இதில் உடன்பாடு இல்லை அசோக்..
ஏன் பண்டிகையை புராணத்தின் அடிப்படையிலேயே பார்கிறிர்கள்.
நம்மில் எத்தனை பேர் நரகாசுரனை ஞாபகம் வைத்து பட்டாசு கொளுத்துகிறார்கள்??
நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியுடன் மக்கள் இருந்து விட்டு போகட்டுமே. அந்த சந்தோஷத்தை எப்போதோ சித்தரித்த புனைவுக் கதைகள் காரணம் காட்டி புறக்கணிக்க வேண்டாமே.
இதனால் நம் திராவிட இனம் இழிவுபடுத்தபடுகிறது என்று சொல்வது சரி அல்ல..
அது சரி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி மக்களை பிரித்து பார்த்து பேசுவிர்கள் என்று தெரியவில்லை.
திராவிடர்கள் எல்லாரும் தூய்மையனவர்களும் இல்லை ஆர்யர்கள் எல்லாரும் மிருகங்களும் இல்லை.
நானும் திராவிடன் தான்.///


புராணத்தின் படி பார்க்காமல் எப்படி பார்ப்பது?,திராவிட இனம் இழிவுபடுத்த படவில்லை என்கிறீர்களா ? அப்படியே கண்ண மூடிட்டு எத சமுகம் செஞ்சாலும் அப்படியே செய் அப்படின்னு சொல்லவரிங்களா? சிந்திக்கவே வேணாம் அப்படின்னு சுருக்கமா சொல்லுங்க......

Anonymous said...

நீங்கள் சொல்வதோடு நான் மிகவும் கொஞ்சமாக ஒத்துப் போகிறேன். மக்கள் சந்தோசமாக இருப்பதை கெடுக்க எனக்கும் மனமில்லைதான். எனக்கும் மனம் வருவதற்கு நீங்கள் செய்யவேண்டியது நரகாசுரன் திராவிட மன்னன் என்பதையும், அவன் திராவிடனாய் புராணத்தில் உருவாக்கியதே அவனை கெட்டவனாய் சித்தரிக்கத்தான் என்பதையும் மக்களிடம் கொண்டு சேருங்கள். ஏன் சேர்க்க வேண்டுமென்றால் இன்னும் தீபாவளி வாழ்த்து சொல்லும்போது நம்மிடையே வாழும் ஆரியர்களில் பலர் நரகாசுரனை நியாபகப்படுத்தி வாழ்த்து சொல்கின்றனரே, அதை ஒழிக்க!! இனத்துக்கான வரலாற்றில் நம் திராவிட இனத்தை இழிவுபடுத்தி, அதை நம்மையே கொண்டாட வைத்த ஆரியர்களின் சூழ்ச்சியை நமக்குப் பிறகு வரும் தலைமுறையாவது புரிந்துகொண்டு மானம் மரியாதையுடன் வாழட்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கட்டுரை.

நீங்கள் சொல்வது எப்படியுள்ளது என்றால் "கருமாதி அன்னிக்கு பிரியாணி சாப்பிட்டு மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் அதனால் சாவு நடந்தது நல்லதுக்குதான்" எனச் சொல்வதைப் போல் உள்ளது!!!! :-))

கிருபாகரன் said...

nice example, i appreciate ur humour sense..but somewat irrelevant here :)

மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் பெரிய மாற்றம் வரும்ன்னு நினைக்கறிங்களா..எல்லாரும் 'victory of gud over evil' nu தானே நினைச்சு கொண்டாடுறாங்க. நீங்க ஏன் நம்மளை தான் இழிவுபடுத்துறாங்க என்ற நோக்கத்துலேயே பாக்கறிங்கன்னு தான் கேட்கிறேன். சிந்திக்க வேணாம் ன்னு சொல்ல வரல, ஆனா இந்த பழைய கதை தேவை இல்லாததுன்னு சொல்றேன்.

//இன்றும் ஆரியர்களில் பலர் நரகாசுரனை நியாபகப்படுத்தி வாழ்த்து சொல்கின்றனர்//
அவங்க வெறும் 'நரகாசுரனை' மட்டும் தான் குறிப்பிட்டு இருப்பாங்க, நீங்க ஏன் அப்படி தப்பா நினைச்சுகறிங்க.
அந்த காலத்துல பெரும்பான்மையான ஆரியர்கள் அப்படி கேவலமா நடந்துகிட்டாங்க..இப்பவும் அதையே நினைச்சுக்கிட்டு அடுத்த தலைமுறை ஆரிய மக்களையும், நண்பர்களையும் புண்படுத்த வேண்டாமே. அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். ஒன்றாக பார்போமே.

Anonymous said...

நீங்க இதுல உள்ள விஷயத்தைப் புரிஞ்சுக்கவே இல்ல. தீபாவளியை கொண்டாட திராவிட மன்னனின் சாவை காரணமாய் சொல்வதுதான் தவறுனு சொல்றேன்! நீங்க தீப ஒளி திருநாள்னு கொண்டாடிட்டுப் போங்களேன். நாங்க என்ன சொல்லப் போறோம்? உங்களுக்கு கொண்டாடனும் அவ்வளவுதானே??!! காரணம் என்னவா இருந்தா என்ன? ஆனால், நேரு சொன்னது போல், ஒரு இனத்தையே இழிவுபடுத்துவதற்காக செய்யப்பட்ட அயோக்கியத்தனத்தை ஒருகாலும் தூக்கிப்பிடிக்க முடியாது, கூடாது. அதுவும் போக "ஆரியர் முன்னேற்ற கழகம்" ஆரம்பிக்கப் போறேன்னு சொல்ற எஸ்.வி.சேகர் மாதிரி ஆரியர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்! அவர்களை எதிர்க்க விரும்பவில்லை. எம்மைக் காத்துக் கொள்ளவே விரும்புகிறோம். நாளை நரகாசுரனுக்கு ஏற்பட்ட நிலை பெரியாருக்கு ஏற்படாமல் இருக்கவே இந்தக் கட்டுரைகளும், பிரச்சாரங்களும், விழிப்புணர்வு வார்த்தைகளும்!!!

கிருபாகரன் said...

பெரியார் பற்றியெல்லாம் எவனும் பேச முடியாது. அந்த அளவுக்கெல்லாம் போக விட மாட்டோம்.
உங்கள் கட்டுரைகளின் நோக்கத்திற்கு வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...