Friday, August 8, 2008

நண்பர் ஞாநிக்கு.
மற்ற விஷயங்கள், விமர்சனங்கள் பற்றியெல்லாம் விட்டுவிட்டு, கலைஞரின் முதுமையை நீங்கள் விமர்சித்த அல்லது அக்கறை காட்டிய விதம் மற்றும் நிகழ்ச்சியைப் பற்றி மட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகள்.

கருணாநிதி என்பவரின் முதுமை, மூத்திரம் போகும் பழக்கம் பற்றியெல்லாம் படு பகிரங்கமாக ஆ.வியில் ஆவி பறக்க எழுதியிருந்தீர்கள். நல்லது. அத்தனையும் உண்மையாகக் கூட இருக்கலாம். கருணாநிதிக்கு முதுமை ஒரு பிரச்சினை தான். அதுபோல் ஜெ.வுக்கு உடல் பருமன் ஒரு பிரச்சினை. அதன் பக்க, மற்றும் பின் விளைவுகள் தான் அவர் பேசும் மேடையில் குளிர்சாதன கக்கூஸ் அமைக்கும் அளவிற்கு அவரைச் செல்ல வைக்கிறது. இன்றுவரை கருணாதிக்கு ஆகும் கூட்டச் செலவைவிட ஜெ.வுக்கு ஆகும் செலவு மிக மிக அதிகம். ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு அவர் நாட்டுக்காக உழைக்க வேண்டும்? ஓ.பியையே (ஓ.பன்னீர் செல்வத்தையே) ஓ.டி (ஓவர் டைம்) பார்க்க சொல்லியிருக்கலாமே?? இதெல்லாம் நீங்கள் எழுதவில்லை. ஒருவேளை ஜெ.வைப் பற்றி அக்கறைப்படும் அளவிற்கு அவர் முக்கியமானவரில்லை என நீங்கள் நினைத்து அவரை விட்டிருக்கலாம் என எதையும் நம்பும் என் இதயம் சொல்கிறது. ஒரு நாட்டின் முதல்வரின், தற்போதைய தமிழர்களின் பிரதிநிதியின் மூத்திரப் பழக்கத்தைக் கூட விட்டுவைக்காமல், உலகெல்லாம் வாசிக்கப்படும் ஆ.வியில் எழுதிய உங்கள் தன்மை என் 'எதையும் நம்பும் இதயத்தை'யே யோசிக்க வைக்கிறது. அதாவது, "ஞாநி ஸ்டாலினை சந்திக்க நினைத்தால் சந்திக்க முடியும், பேச முடியும், ஏனென்றால் ஞாநி ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அப்படியொரு சந்திப்பின் போது ஸ்டாலினிடம் கருணாநிதியைப் பற்றியும் அவர் உடல்நிலை பற்றியும் பேசியிருக்கலாமே??" என கேட்கிறது என் இதயம். இந்த வயதான காலத்திலும் உழைத்துக் கொண்டிருக்கும் தனது மூத்திரப் பழக்கத்தைப் பற்றி வெளிவந்த கட்டுரையைப் படித்த அந்த தலைவனுக்கு எப்படி வலித்திருக்கும்?? (ஆனால் இதெல்லாம் நகத்தைக் கடிக்கும் கொசு என அவருக்கு தெரியும் என்பது வேறு விஷயம்.) உங்களின் விசிறியாய் உங்களைப் படித்த எனக்கு 'அந்த' கட்டுரை ஆநாகரீகத்தின் உச்சமாகப் பட்டது.

நீங்கள் ஒரு அரசியல் விமர்சகர். ஒவ்வொரு விமர்சகனின் கையிலும் ஒரு தராசு உண்டு. உங்கள் கையில் உள்ள தராசு ஒரு பக்கம் மட்டும் எடை ஏறிக்கொண்டே போவதுதான் பிரச்சினை. தராசின் மறுபக்கம் எடை ஏற்ற எத்துணையோ விஷயங்கள் இருந்தும் நீங்கள் அவற்றை கையில் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது உங்களின் எழுத்தாற்றலை (ஆற்றலை மட்டும்) ரசிக்கும் என்னைப் போன்ற பலருக்கு வேதனை தருகிறது, எங்களை உங்களின் கொள்கைகள் பற்றி யோசிக்க வைக்கிறது. ஜெயா டிவியில் ரபி பெர்னாட் நடத்தும் நிகழ்ச்சி ஒரு 'தலையாட்டி பொம்மை' நிகழ்ச்சி. அதைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அதில் ஏன் பங்கு கொண்டீர்கள்?? இப்படி பல கேள்விகள் உண்டு. உங்கள் கையில் இருப்பது இரு பக்கம் கொண்ட தராசு என எண்ணிக்கொண்டிருக்கும் சிலரின் நம்பிக்கையின் மீது கல்லெறிகிறீர்கள். அதை விட்டுவிட்டு உங்கள் கையில் இருப்பது 'சிலரை' மட்டுமே ஆட்டிவிடும் ஒரு பக்கம் மட்டுமே கொண்ட தொட்டில் என சொல்லிவிடுங்களேன், சற்று தெளிவுபட...

5 comments:

K.R.அதியமான் said...

this is nothing when compared to your personal attacks or comments about JJ and Sasi temple cermonies, which was a totally private function. you are talking about decency and privacy. nonsense.

Anonymous said...

i came to your site from Sivaji TV! good post! did Gnani respond?

Anonymous said...

this is nothing when compared to your personal attacks or comments about JJ and Sasi temple cermonies, which was a totally private function. you are talking about decency and privacy. nonsense.//

Thank adhiyaman. you yourself have told that "THIS IS NOTHING WHEN COMPARED". So you mean that when this is not compared, then it means SOMETHING! Am talking about 'that' something. When someone writes, have the proper manners to deal with what he has written. Dont shove your tongue into a writer's previous works, that too specially when those are no way related to the current content. IF u have guts, lets discuss about my writings on jayalaitha-sasikala issue. If u read my blog properly you will clearly know that am not a blind follower of karunanithi, like u do with the so called GNANI. FIRST remember that. Then come to discussions.

Ravikutty said...

இளவரசன் (எ) அசோக் அவர்களுக்கு,

சிவாஜி டிவியில் ஞானியின் பேட்டியை காணும்ப் போது அதில் உங்களில் சுட்டி கண்டு அதை தொடர்ந்து உங்களின் கருத்தை கண்டேன். நீங்கள் எழுதிய விதம் மிகவும் நாகரீகமாக இருந்தது.
உங்களின் கருத்தில் நான் சிறிதே மாறுபடுகிறேன்.

அதாவது ஒரு முதிய தலைவரின் தனிப்பட்ட உடல் உபாதையினை விமர்சிப்பது (அந்த கட்டுரையை நான் பார்க்கவில்லை..சுட்டி இருந்தால் அனுப்பவும்) நாகரிகமல்லத்தான். ஆனால் உங்களின் கேள்வியினை பார்க்கும் போது உங்களின் கோபம் ஞானி கருணாநிதியைப் பற்றி எழுதியதை விட ஜெயலலிதாவைப் பற்றி எழுதவில்லையே என்ற காரணத்தால் எழுந்ததோ என்று தோன்றுகிறது. மேலும் ஞானி செய்ததாக வருத்தப்படும் அதே தவற்றை நீங்களும் செய்துள்ளீர்களே. ஜெயா குண்டாக இருப்பதும் அவருக்கு மேடையிலேயே பாத்ரும் தேவைப் படுவதும் ஒரு தனிப்பட்ட நபரின் விஷயமல்லவா? அதைப் பற்றி நீங்கள் இந்த சந்தர்ப்பத்தில் விளக்கி நீங்களும் அதே தவறையல்லவா செய்கின்றீர்கள். கருணாநிதிக்கு ஒரு நியாயம் ஜெயா வுக்கு ஒரு நியாயம் என்று இருக்கலாகாதே.

எனவே திரு. ஞானியின் நாகரிகத்தை கேள்வி கேட்கிறீர்களா அல்லது அவரது நடுநிலையை கேள்வி கேட்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்தவும். நாகரீகத்தை அல்ல நடுநிலையைத்தான் என்றால் அது அவரவர் பார்வையைப் பொறுத்தது என்பது என் கருத்து. நாகரீகத்தை என்றால் நீங்களும் அதே தவற்றை செய்கறீர்கள் என்பது என் நிலை.

Anonymous said...

ஞானி அவர்களின் நடுநிலையையும், நாகரீகத்தையும் ஒருசேர விமர்சிப்பதே என் நோக்கம். மேலும் மேடையில் ஒருவருக்கு கழிவறை தேவைப்படலாம், ஆனால் குளிர்சாதன வசதியுள்ள கழிவறை தேவையா? கருணாநிதியை விமர்சிக்கத் தெரிந்த ஞாநிக்கு, இது ஏன் நினைவுக்கு வரவில்லை? அவர் எப்போதும் எங்கும் தனது நடுநிலையை உயர்த்திப் பேசுவதால் இந்தக் கேள்வியை கேட்க நேர்ந்தது. மற்றபடி அவர் ஜெயாவை தாக்கி எழுத வேண்டும் என்பது என் நோக்கமல்ல. சரியான காரணங்கள் இருந்தும் அவர் ஏன் ஜெயாவை விமர்சிப்பதில்லையென்பதே என் கேள்வி. என் பதிவில் அநாகரீகமான சொல்லாடல்கள் ஏதும் இருப்பின் மன்னிக்கவும். என் பதிவின் பொருளை புரிவீர் என நம்புகிறேன். நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...