Friday, April 4, 2008

திருநங்கைகளும் நாமும்..
நான் பலமுறை அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளை கண்டதுண்டு. அவர்கள் என்னிடம் அடிக்காத குறையாக, கற்பழிக்காத குறையாக பிச்சை கேட்டதுண்டு. நான் அருவெறுப்புப் பட்டுக்கொண்டே கொடுத்ததும் உண்டு. இவர்கள் ஏன் கை ஒடிந்தவர்கள் போன்றோ, கால் ஒடிந்தவர்கள் போன்றோ அடக்கமாக, கெஞ்சிக் கதறி பிச்சை எடுப்பதில்லை? அரற்றி, மிரட்டி, உரசித் தேய்த்து பிச்சை(?) எடுக்கிறார்கள், அதாவது பிச்சையை பிடுங்குகிறார்கள்? யோசித்திருக்கிறோமா?? இல்லை அல்லது தெரியவில்லை. அரவாணிகள் என்பவர்கள் இந்த சமூகத்தில் யார்? தெரியவில்லை. அவர்களின் பங்கு என்ன? தெரியவில்லை. அவர்களின் வாழ்க்கையில் நம் பங்கு என்ன? தெரியவில்லை. அவர்களை பெண்கள் பகுதியில் சேர்ப்பதா, அல்லது ஊனமுற்றோர் என (அதாவது உளவியல் மற்றும் உயிரியல் ரீதியாக) எடுத்துக்கொள்வதா? தெரியவேயில்லை.
அரவாணிகள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத ஒரு பாலினம். சிலபேர் ஆண்களாக பிறந்து பெண்களாக ஆகிறார்கள். சிலர் நேர்மாறு. இதற்கு ஒரே காரணம் உரியியல் அல்லது மரபணு கோளாறு. இதற்கு யாரை குற்றம் சொல்வது? இயற்கையை அன்றி வேறு யாரையுமே சொல்ல முடியாது. ஆனால் குற்றவாளிகளாக சமூகத்தில் நிறுத்தப்படுபவர்கள் இயற்கையால் பாரப்ட்சம் பார்க்கப்பட்ட அரவாணிகள். தங்களின் மனநிலையோடு பருவ வயதில் ஒரு யுத்தமே நடத்தி தோற்று போன அப்பாவிகள். தன் குழந்தைக்கு கையில்லை, காலில்லை, வாயில்லை, கண்ணில்லை என்றால் தங்கள் கண் போல பாதுகாக்கும் பெற்றோர்கள் கூட, தங்கள் குழந்தைக்கு பாலினம் இல்லை என தெரியவந்தால் மிரண்டு போய் அரள்கிறார்கள். அந்த குழந்தையை குற்றவாளியாக்கி தண்டிக்கிறார்கள். சூழ்நிலை இப்படி இருக்கும் போது, சமூகத்தில் உடல் ஊனமுற்ற, வாழ தன்னம்பிக்கையில்லாமல் பிச்சையெடுக்கும் சிலரைப் போலவே 'இவர்களும்', அடங்கி ஒடுங்கி கெஞ்சிக் கதறி பிச்சையெடுக்க வேண்டும் என நாம் நினைப்பது எவ்வகையில் நியாயம்? இவர்களின் அரட்டல்களிலும், மிரட்டல்களிலும் ஒளிந்திருப்பது, தங்களுக்கு பாலின குறைபாடு ஒன்றை தவிர அனைத்து தகுதிகளும் இருந்தும் இந்த சமூகம் தங்களை பிச்சையெடுக்க வைத்துவிட்டதே என்ற கோவம் தான்.
இவர்கள் நம் சக மனிதர்கள். அன்பு, கோவம், அறிவு, நட்பு, கவுரவம், உழைப்பு, மொழிப்பற்று, இனப்பற்று, தேசப்பற்று என அத்தனையும் கொண்ட சாதாரண மனிதர்கள். ஆனால் இந்த சமூகத்தில் அவர்கள் அப்படி நடத்தப்படுகிறார்களா? ஒரு அரவாணிக்கு நம் அலுவலகத்தில் வேலைக்கு சிபாரிசு செய்ய, அல்லது நம் அடுமனையில் சமைக்கும் வேலை கொடுக்க, அல்லது ஒரு நண்பன் என சமூகத்தில் அறிமுகப்படுத்த நம்மில் எத்தனை பேருக்கு மனதில் துணிவும், தெம்பும் உண்டு??!!
இப்போது நான் முதலில் கேட்ட கேள்விகளை படித்துப் பாருங்கள். ஓரளவுக்கு விடை தெரியும். ஆனால் அவர்கள் என்னவிதமாக இந்த சமூகத்தில், அதாவது ஆணாகவா, பெண்ணாகவா, மூன்றாம் பாலினமாகவா அல்லது ஊனமுற்றவர்களாகவா அல்லது எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்பது என் கருத்து. உங்கள் கருத்து?!!

8 comments:

சாப்ளின் சரவணன் said...

நச்சுன்னு இருக்கு .. ஆனா இந்த word verification அ எடுத்து விட்டுருங்க...
indianchaplin.blogspot

Pradeep C said...

நேற்று தான் "Boys dont cry" என்ற திருநங்கைகளைப் பற்றிய படமொன்றைப் பார்தேன். நீங்கள் கண்டிப்பாக பார்க்கணும்.

tamil said...

திருனங்ககையர்கள் குறித்த மிக யதார்த்தமான பதிவு. அதட்டி பிச்சை எடுக்கும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சோகம் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. திருநங்கையர்களை எனக்கு சுத்தமாகவே பிடிக்காது அவர்கள் மீது சரியான புரிதல் இல்லாததே காரணம் இது போன்ற கட்டுரைகள் அவர்களையும் சக மனிதர்களாக பார்க்க உதவும் என்பதே எனது கருத்து.

Anonymous said...

இந்த அலிகளின் சோகம் என்ன இருந்தாலும் வரலாற்றில் இருந்து பார்த்தால் "ஓரினச்சேர்க்கை" உண்டானதே இவர்களால்தான். இயற்கைக்கு மாறான இந்த பழக்கம் உள்ளவர்கம் செய்யும் வக்கிரம் மிக மிகக் கொடுமையானது. குற்றம் செய்யும் அனைவருமே ஒரு நியாமான கதை கண்டிப்பாக சொல்வார்கள். ஆனால் குற்றம் குற்றமே. அலிகளும் குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும்.
அலி என்று சொல்வது தற்காலத்தில் தவறாக கருதபடுகிறது. "அலி" என்பது தரமற்ற வார்த்தை அல்ல. அதை அப்படி திரித்து விட்டார்கள். உதாரணம்.
முலை என்பது நல்ல தமிழ் சொல். ஆனால் அப்படி சொல்வது வக்கிரம் என் திறக்க பட்டு விட்டது. அதற்கு பதிலாக மார்பு என்று சொல்வது நாகரீகம் என்பது போலதான் "அலி" மற்றும் "திருநங்கை". இவ்விரு இடத்திலும் உண்மை மறைக்க பட்டுள்ளது.

Krishnan said...

இந்த அனானி போன்றவர்கள் இருக்கும் வரை திருநங்கையருக்கு விடிவு காலம் வராது. ஓரின சேர்க்கை என்பது ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் வைத்து கொள்வது. திருநங்கையரை இதனுடன் எவ்வாறு அனானி ஒப்பிட்டார் என்று தெரியவில்லை. ஓரின சேர்க்கைக்கு அவர்கள் ஆதரவு குரல் கொடுப்பது ஏன் என்றால் 377 சட்டம் மூலமாகவே ஓரின சேர்க்கையாளர்களும் திருநங்கையரும் தண்டிக்கப்படுகின்றனர். அதனால் மட்டுமே அவர்கள் ஆதரவு குரல் கொடுக்கின்றனரே அன்றி அவர்கள் ஒன்றும் ஓரின சேர்க்கையை தூண்டவில்லை. அது போலவே ஓரின சேர்க்கை செய்பவர்கள் என்ன வக்கிரம் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு அடிப்படை காரணம் இல்லாமல் குற்றம் சொல்ல கிளம்பி விட்டார் அனானி.

Anonymous said...

@கிருஷ்ணன்
சரியாக சொன்னீர்கள் நண்பா.

Nagasubramanian said...

உண்மை தான். ஆனால், சமூகத்தை மீறி வெகு சில அரவாணிகளாலே வாழ்கையை எதிர்க் கொள்ள முடிகிறது. சமூகம் தான் மாற வேண்டும்.

Anonymous said...

they should not be classified as physically disabled may be third gender anna

Related Posts Plugin for WordPress, Blogger...